அழைப்பு

அழைப்பு

தேவனின் அழைப்பு 

ஆண்டவராகிய கிறிஸ்துவை விசுவாசிக்கும் ஒவ் வொரு விசுவாசியின் வாழ்க்கைக்கும் தேவன் ஒரு திட்டத்தை வைத்திருக் கிறார். அவரது அழைப்பு நித்திய காலத்துக்குமாக நமக்கென ஓர் அற்புதமான நோக்கத்தைக் கொண் டிருப்பது மட்டுமின்றி, இன்றே இந்த உலகத்திலேயே நாம் அந்த அழைப் பின் வெளிப்பாட்டைப் பெறு கிறோம்.

…தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப் பினாலே அழைத்தார்” (2தீமோ. 1:9).

“நாம் பிள்ளைகளானால் சுதந்தரரு மாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே… அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவ னிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகல மும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிற தென்று அறிந்திருக்கிறோம்” (ரோமர் 8:17,28), 29,30 வசனங்களையும் பார்க்கவும்.

A. தேவன் நம்மை அழைத் திருக்கிறார்

1.உலகத் தோற்றத்திற்கு முன்பிருந்தே…

“தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமல்லாத வர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத் தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே…

தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலமாய்த் தமக்குச் சுவிகார புத்திர ராகும்படி முன்குறித்திருக்கிறார்” (எபே. 1:4-6), 2:10 வசனத்தையும், மத்தேயு 25:34 வசனங்களையும் பார்க்கவும்.

2. அவருக்காகப் பிரித்தெடுக்கப் படுவதற்காக… 

“நீங்களோ, உங்களை அந்தகாரத் தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக் கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்” (1பேதுரு 2:9). ரோமர் 9:23-26 வசனங் களையும் பார்க்கவும்.

3. அவரது நோக்கத்தை நிறை வேற்றுவதற்காக…

“….நம்முடைய கர்த்தரைப் பற்றிய சாட்சியைக் குறித்தாவது…. நீ வெட்கப் படாமல்… அவர் நம்முடைய கிரியை களின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும்…. கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்” (2தீமோ. 1:8,9). ரோமர் 8:28, பிலிப் பியர் 3:14 வசனங்களையும் பார்க் கவும்.

B. இந்த உலகில் நமது அழைப்பு

“இயேசுகிறிஸ்துவின் ஊழியக் காரனும் (அடிமை), அப்போஸ்தல னாகும்படி அழைக்கப்பட்டவனும், தேவனுடைய சுவிசேஷத்திற்காகப் பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய பவுல்” (ரோமர் 1:1).

பவுல் அப்போஸ்தலன் தனது ஊழியத்தைப் பற்றி விவரிக்கும் போது, ஒவ்வொரு விசுவாசியும் பெற்றுள்ள அழைப்புக்கு ஓர் எடுத்துக்காட்டைக் கொடுக்கிறார்.

இந்த அழைப்பு மூன்று அம்சங்களைக் கொண்டது:

1.பொதுவான அழைப்பு “கிறிஸ்துவினுடைய அடிமை”

இயேசுவானவர் நமக்காக உயர்ந்த கிரயத்தை – தமது சொந்த ஜீவனை – செலுத்தியுள்ளார்.

“கர்த்தருக்குள் அழைக்கப்பட்ட அடிமையானவன் கர்த்தருடைய சுயாதீனனாயிருக்கிறான்; அப்படியே அழைக்கப்பட்ட சுயாதீனன் கிறிஸ்து வினுடைய அடிமையாயிருக்கிறான். நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர் கள்…” (1கொரி. 7:22,23). 1 கொரிந் தியர் 6:19,20 வசனங்களையும் பார்க் கவும்.

பவுல் பவுல் அப்போஸ்தலன் தன்னைக் கிறிஸ்துவின் அடிமை என்று குறிப்பிடும்போது, அவர் மேலும் ஆழமான ஓர் அர்த்தத் தையே சுட்டிக் காட்டுகிறார். அவரது நாட்களின் வழக்கப்படி, ஓர் அடிமை தனது அடிமைத்தனத்திலிருந்து விடு தலை பெறும் போதிலும், மீதுள்ள காலம் வந்த தனது எசமானின் அன்பின் காரணமாக, தனது சுயாதீனத்தைப் பெற விரும்பா விட்டால், அவனது காதில் அடை யாளமாக துளை போடப்படும். அவன் தனது வாழ்நாள் முழுவதும் தனது எசமானனுக்கு “அன்பின் அடிமையாக” இருப்பான் (யாத். 21:5,6; உபா. 15:16,17). பவுல் அப் போஸ்தலன் தாமாகவே முன்வந்து, தன்னை ஆண்டவராகிய இயேசு வின் அன்பு – அடிமையாக அறி வித்தார்.

2.தனிச்சிறப்பான அழைப்பு

“அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்படுதல்”

பவுல் அப்போஸ்தலன் தனது வாழ்க்கைக்காக சிறப்பான ஓர் அழைப்பைப் பெற்றதுபோல ஒவ்வொரு விசுவாசிக்கும் அழைப்பு உண்டு. அப்போஸ்தலனாகும்படி பவுல் அழைக்கப்பட்டார்; கிறிஸ்து வின் சரீரமாகிய திருச்சபையில் பல்வேறு வகைப்பட்ட அழைப்புக் கள் உண்டு. ரோமர் 12:3-8,எபேசியர் 4:7-16 வசனங்களையும் பார்க்கவும். நாம் உண்மையாய் ஆண்டவ ருடைய அழைப்பை நாடும்போது, நமக்கென அவர் திட்டமிட்டுள்ள பங்கு நமக்கு வெளிப்படுத்தப்படும்.

3.குறிப்பான அழைப்பு “தேவனுடைய சுவிசேஷத்திற் காகப் பிரித்தெடுக்கப்படுதல்”

ஒவ்வொரு சிறப்பான அழைப் பிலும், ஒரு குறிப்பான அழைப்பும் காணப்படுகிறது. எடுத்துக்காட் டாக, பேதுரு, பவுல் இருவருமே அப்போஸ்தலராகும்படி சிறப்பான அழைப்பைப் பெற்றிருந்தனர்; ஆனால் ஒருவர் யூதருக்கும், மற்றவர் புறஜாதியாருக்கும் அப்போஸ்தல னாகும்படி குறிப்பான அழைப்பை யும் பெற்றிருந்தனர். ரோமர் 11:13, 1 தீமோத்தேயு 2:7, 1 கொரிந்தியர் 12:4-11 வசனங்களையும் பார்க்கவும்.

நாம் நம்மை “அன்பின் அடிமைகளாக” உறுதிப்படுத்தும் போதுதான் நாம் நமது சிறப்பான மற்றும் குறிப்பான அழைப்புக் களைப் பெறுகிறோம்; ஏனெனில் நாம் கிறிஸ்து வால் அனுப்பப்படு முன்னர் அவரது அதிகாரத்தின்கீழ் முழுமையாக வரக் கற்றுக்கொள்ள வேண்டும். மத்தேயு 28:18,19 வசனங் களைப் பார்க்கவும்.

C.அவர் ஏன் நம்மை அழைக்கிறார்? 

1.ஏனெனில் உலகம் இருளில் இருக்கிறது

“நாம் தேவனால் உண்டாயிருக்கிறோ மென்றும், உலக முழுவதும் பொல்லாங் கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்” (1யோவான் 5:19). எபேசியர் 6:12, கொலோசெயர் 1:13 வசனங் களையும் பார்க்கவும்.

2. ஏனெனில் மக்கள் பட்டினி யிலும் தேவையிலும் இருக் கிறார்கள்

“அவர் திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில் லாத ஆடுகளைப் போலத் தொய்ந்து போனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மன துருகி…” (மத். 9:36).

3. அவரது ஞானத்தை நிரூபிப்பதற்காக

“தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் கொண்டிருந்த அநாதி தீர்மானத்தின்படியே, உன்னதங் களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அநந்த ஞானமானது சபையின் மூலமாய் இப்பொழுது தெரியவரும் பொருட்டாக…” (எபே. 3:9,10)

4. காலம் குறுகிவிட்டபடியால்

“அறுப்புக் காலம் வருகிறதற்கு இன்னும் நாலுமாதம் செல்லும் என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா? இதோ, வயல் நிலங்கள் இப்பொழுதே அறுப் புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப் பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்” (யோவான் 4:35). யோவான் 9:4 வச னத்தையும் பார்க்கவும்.

D. நாம் அழைக்கப்படும்போது என்ன நடக்கிறது?

1. நாம் அவரால் உருவாக்கப்படுகிறோம் 

“என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர் களாக்குவேன் என்றார் (இயேசு)” (மத். 4:19). எரேமியா 18 :1-10 வசனங்களையும் பார்க்கவும்.

2.நாம் அவரால் போதிக்கப் படுகிறோம்

“என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்க ளுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்” யோ வான் 14:26). 1 கொரிந்தியர் 2:12, 1யோவான் 2:27 வசனங்களையும் பார்க்கவும்.

3. நாம் அவரால் அனுப்பப்பட் டிருக்கிறோம்

“நீர் என்னை உலகத்தில் அனுப் பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன்” (யோவான் 17:18). மாற்கு 16:15 வசனத்தையும் பார்க்கவும்.

ஆண்டவர் நம்மை அழைக்கும் போது, அவரே வந்து, நமது வாழ்க் கையில் குறுக்கிடுகிறார். 

வேத வசனங்கள்மூலம் இதற்குச் சில எடுத்துக்காட்டுகளைக் காண்போம்:

மோசே (வனாந்தரத்தில் ஒரு மேய்ப்பன்); “போ, போய் என் மக்களை விடுவி” (யாத். 3:1-12),

சாமுவேல் (ஆலயத்தில் பணிபுரி யும் ஒரு சிறுவன்): “எழுந்து, எனக்காகப் பேசு” (1சாமு. 3:1-19).

எசேக்கியேல் (அந்நிய நாட்டில்

ஒரு கைதி): “எழுந்து நில், நான் உன்னை அனுப்புகிறேன்” (எசே. 2:4-7), 

சீடர்கள் (மீனவர்கள், வணிகர் கள்): “வா, என்னைப் பின்பற்று” (லூக்கா 5:27,28; மத். 4:18-22).

சவுல் (சபைக்கு விரோதமானவன்): “நீ செய்ய வேண்டியது உனக்குச் சொல்லப்படும்” (அப். 9:1-9).

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *