அந்திகிறிஸ்து வின் ஆயத்தங்கள்
முழுஉலக அரசாங்கத்தை ஏற்படுத்துவதில் அந்திக் கிறிஸ்துவின் தீவிரம் இன்றைக்கு வெளிப்படையாகத் தெரிகிறது.
இன்றைக்கு எல்லா தேசத்தின் தலைவர்களும் முழு உலக அரசாங்கம் பற்றிப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். முழுஉலக அரசாங்கம் ஏற்படுத்தப்பட வேண்டிய கட்டா யத்தை உலகப் பொதுவான பேரிடர்களைக் கொண்டு ஏற்ப டுத்துகிறார்கள். தேசங்களுக்கிடையில் ஏற்படும் கடுமை யான நெருக்கடிகள் தேசங்களை ஒருங்கிணைய மறைமுக மாக வற்புறுத்துகின்றன.
இதையும் தாண்டி, சில தேசங்களுக்கிடையில் போர் களை ஏற்படுத்துவதன் மூலம் உலக ஒருங்கிணைப்புக்கு நேராக அந்த தேசங்களை நடத்தமுடியும்.
முழுஉலக அரசாங்கம் ஏற்படுத்துவதன் நோக்கமே, உலகத்தின் ஒட்டுமொத்த மனிதர்களையும் ஒருங்கிணைத்து. அவர்களை ஒரே கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவேண் டும் என்பதுதான். அந்தக் கட்டுப்பாடு அந்திக்கிறிஸ்துவின் கைகளில் இருக்கும்.
இதற்காக மனிதர்ளைப் பெருவாரியாகக் கட்டுப்ப டுத்தும் காரியங்களையெல்லாம் ஒருங்கிணைப்பதில் சாத்தான் தீவிரம் காட்டிவருகிறான். அப்படி மனிதர்களைக் கட்டுப்படுத்தும் மூன்று பிரதான விஷயங்கள் என்னவென்று கவனியுங்கள்.
அரசியல், வர்த்தகம், மதம். இந்த மூன்று விஷயங் கள்தான் மனுக்குலத்தைப் பெருவாரியாக கட்டுப்படுத்தியி ருக்கும் முக்கியமான விஷயங்கள்.
இந்த மூன்றையும் ஒருங்கிணைப்பதன் மூலம் ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் ஒருங்கிணைத்துவிட லாம். அப்படி ஒருங்கிணைத்தவைகளைத் தன் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவருவதன் மூலம் ஒட்டுமொத்த மனுக் குலத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம். இது சாத்தானின் மாஸ்டர் பிளான்.
இதில் அரசியல் முதலாவதாக வருகிறது. அரசிய லில் சம்மந்தப்படாத மனிதர்கள் யாரும் இருக்க முடியாது. அரசியல் என்றால் கொடி வைத்துக்கொண்டு கட்சி வளர்ப் பவர்களை மாத்திரம் சொல்லவில்லை. அரசியல் என்பது ஓட்டுக்கேட்பவர்களை மாத்திரமல்ல, ஓட்டுப்போடுபவர் களையும் உள்ளடக்கியது. அரசியலுக்கு அப்பாற்பட்டு வாழ இங்கே யாருக்கும் சாத்தியமில்லை. அரசியலில் ஆர்வம் இல்லை என்று சொன்னாலும் நீங்கள அரசியலுக்கு உள்ளே தான் இருக்கிறீர்கள். அரசியல் என்றால் என்னவென்றே தெரியாது என்று காட்டுக்குள் இருக்கிற இனங்கள் கூட தங்களை அறியாமலேயே அரசியலுக்குள்தான் இருக்கி றார்கள்.
அரசியலில் இருந்து பிறப்பதுதான் அரசாங்கம். அந்த அரசாங்கம் ஒரு சட்டத்தை இயற்றினால் அது எல் லோரையும்தான் கட்டுப்படுத்துகிறது. நாம் அரசாங்கங்க ளுக்குள்தான் கட்டப்பட்டிருக்கிறோம். அரசாங்கங்கள் அரசியலில்தான் உருவாகின்றன. எனவே நாம் எல்லாருமே அரசியலுக்கு உட்பட்டுத்தான் இருக்கிறோம். உலக அள வில் இதுதான் நிலைமை.
இன்றைக்கு உலக அரசாங்கங்களை ஒருங்கிணைக் கும் பணிகள்தான் மிகவும் தீவிரமாக திட்டமிடப்பட்டு ஆயத்தம் செய்யப்பட்டு வருகின்றன. இதை முழு உலக அரசாங்கம் என்கிறார்கள். இதற்கான அடையாளங்கள், முத் திரைகள், பணப்பரிவர்த்தனை போன்றவையெல்லாம் தீவிர மாக ஆயத்தம் செய்யப்பட்டு வருகின்றன.
இரண்டாவது வர்த்தகம். வர்த்தகத்திற்கும் உட்படாத மனிதர்கள் இல்லையெனலாம். நாங்கள் எல்லாம் வர்த்த கத்துக்கு சம்மந்தப்படாதவர்கள். எந்தப் பொருளையும் இது வரை விற்பனை செய்ததில்லை என்று நீங்கள் சுலபமாகச் சொல்லிவிடமுடியாது. வர்த்தகம் என்பது விற்பனை செய் வதை மாத்திரம் குறிப்பிடும் விஷயம் அல்ல. அதில் வாங்கு வதும் அடங்கியிருக்கிறது. விற்பது, வாங்குவது என்ற இரண்டுவிதமான செயல்பாடுகளையும் உள்ளடக்கியது தான் வர்த்தகம். ஒன்று நீங்கள் விற்பவராக இருந்தாலோ, அல்லது நீங்கள் வாங்குபவர்களாக இருந்தாலோ நீங்கள் வர்த்தகத்துக்கு உட்பட்டிருக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்.
கொள்ளைநோய்ப் பேரிடர் காலத்தில் கதவடைப்புச் சட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்ட சமயத்தில் எதுவொன்றை யும் வாங்க முடியாமல் நாம் எத்தனை சிரமப்பட்டோம் என் பதை மறந்திருக்க மாட்டீர்கள். அந்த நிகழ்வுகள், நாம் எத் தனை தூரம் வர்த்தகத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை நமக்கு கண்டிப்பாக உணர்த்தியிருக்கும்.
இன்றைக்கு வர்த்தகத்தில் கைவைத்தால் ஒட்டு மொத்த மனிதர்களின் இயக்கத்தையுமே பாதித்துவிடலாம். வர்த்தகம் அத்தனை தூரம் நம்மோடு பின்னிப் பிணைந்தி ருக்கிறது. வர்த்தகத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிற ஒருவர், இதைச் செய்தால்தான் நீங்கள் வர்த்தகத்தில் ஈடுபட முடியும் என்று வற்புறுத்தினால், எதிர்ப்பில்லாமல் அவர் சொல்வதற்குக் கீழ்ப்படிந்துதான் ஆகவேண்டும். முடியாது என்றால் ஒரு கப் காபிக்குக் கூட அல்லாட வேண்டியிருக் கும்.
இதை வைத்தே, தான் செய்ய விரும்புகிற எல்லாத் திட்டங்களுக்கும் ஜனங்களைக் கீழ்ப்படிய வைக்க வியா பாரங்களைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒருவரால் இயலும்.
சென்ற கொள்ளைநோய்ப் பேரிடர் காலத்தில், கொள்ளைநோய்க்கான தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் திட்டம் உலகம் முழுவதிலும் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டபோது, எல்லா தேசங்களிலும் அதை வர்த்தகம் சார்ந்த நடைமுறைகளோடு சம்மந்தப்படுத்தியே மறைமு கமாக வற்புறுத்தினார்கள் என்பது கவனிக்கத்தகுந்த விஷயம்.
இரண்டு தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டவர்கள் தான் வணிக வளாகங்களுக்குள் பிரவேசிக்க முடியும், வாடகை டாக்சிகளில் பயணம் செய்ய முடியும். இரயிலில் பிரயாணம் செய்ய பதிவு செய்யமுடியும் போன்ற பல காரி யங்கள் வணிகம் சார்ந்த விஷயங்களோடு சம்மந்தப்படுத் தியே தடுப்பூசித் திட்டம் உலக தேசங்களில் அமல்படுத்தப் பட்டது. தேசிய அளவிலான இந்தத் திட்டத்தை தவிர்த் தாலோ, சந்தேகித்தாலோ அவர்கள் வர்த்தகத்திற்குட்பட முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டது. இவையெல்லாம் இனி வரப்போகும் கடுமையான நாட்களுக்கான முன்னோடி மாத் திரமே.
வேதத்தில் இதேபோன்ற எதிர்கால நிகழ்வு ஒன்று சொல்லப்பட்டிருக்கிறது பாருங்கள். அந்திக்கிறிஸ்துவின் ஒரு திட்டம் எல்லா ஜனங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று வர்த்தகம் சார்ந்து மனிதர்களிடத்தில் கட் டாயப்படுத்தப்படுவதைப் பற்றி.
வெளிப்படுத்தின விசேஷம் 13:15-17 ல் இந்தச் சம்பவம் சொல்லப்பட்டிருக்கிறது.
பூமியிலிருந்து ஏறிவந்த வலுசர்ப்பம் போன்ற மிரு கம் அந்திக்கிறிஸ்துவுக்கு ஒரு சொரூபத்தைச் செய்யும் படிக்கு ஜனங்களுக்குச் சொல்லுகிறது. பின்னர் அந்த சொரூ பத்தை பூமியின் குடிகள் யாவரும் வணங்க வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்கிறது. அப்படி அந்த சொரூபத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களும், வணங்காதவர்களும் கொடூர மான முறையில் கொலைசெய்யப்படவும் சட்டமியற்றுகிறது. அதைத் தவிரவும், தங்கள் ஆட்சிக்குட்பட்ட குடிமக் கள் யாவரும் தாங்கள் அந்திக்கிறிஸ்துவை சார்ந்தவர் என் பதைத் தெரிவிக்கும் விதமாக ஒரு அடையாளத்தை தங்கள் சரீரத்தில் பொறித்துக்கொள்ள வேண்டும் என்றும் கட்டாயப் படுத்துகிறது.
இந்தச் சட்டத்தை ஜனங்கள் யாவரும் ஏற்றுக்கொள் ளத்தக்கதாக இதை வர்த்தகத்தோடு சம்மந்தப்படுத்துகிறது. எப்படியெனில் இந்த அடையாளத்தைத் தங்கள் சரீரங்களில் பொறித்துக்கொள்ளாதவர்கள் தவிர, வேறு யாரும் எந்தப் பொருளையும் விற்கவோ, வாங்கவோ முடியாது என்று அதைச் சட்டமாக்குகிறது. வாசித்துப் பாருங்கள். வெளி 13:14-17
மிருகத்தின் முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம் போக்கி, பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ண வேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று.
மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக் கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங் காத யாவரையும் கொலை செய்யத்தக்கதா கவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியை கொடுக்கும்படி அதற்குச் சத்துவம் கொடுக் கப்பட்டது.
அது பெரியோர், சிறியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர்,அடிமைகள் இவர் கள் யாவரும் தங்கள் தங்கள் வலது கைகளி லாவது, நெற்றிகளிலாவது ஒரு முத்திரையை பெறும்படிக்கும்,
அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக் கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும், விற்க வும் கூடாதபடிக்கும் செய்தது.
இந்த இடத்தில் மிருகம் என்று சொல்லப்பட்டிருப் பது அந்திக்கிறிஸ்துவைக் குறிக்கிறது. மனிதர்களை ஒருங் கிணைக்கவும், அவர்களைக் கட்டுப்படுத்தவும் வர்த்தகத் தால் அதிக சாத்தியமிருக்கிறது. வர்த்தகத்தின் பெயரால், தான் கொண்டுவரும் எந்த திட்டத்திற்கும் மனிதர்களை உடன்பட வைக்கமுடியும் என்பதுதான் அதன் திட்டம்.
இன்றைக்கு உலகளவில் வர்த்தகங்களை ஒருங்கி ணைக்கும் பணிகள் தீவிரமாக்கப்பட்டிருக்கின்றன. ஆன் லைன் வர்த்தகம், வர்த்தக ஒருங்கிணைப்புக்கு அதிக உதவி கரமாக இருக்கிறது. இதன் காரணமாகவே இன்றைக்கு ஜனங்கள் யாவரும் ஆன்லைனில் வர்த்தகம் செய்ய ஊக்கு விக்கப்படுகிறார்கள்.
ஆன்லைன் வர்த்தகத்தில், நேரடி வர்த்தகத்தில் பொருட்களை வாங்குவதை விட விலைகள் மலிவு செய் யப்பட்டிருக்கின்றன. அதேபோல, அதை இருந்த இடத்தி லிருந்தே விரைவாகப் பெறவும் வழிகள் செய்யப்பட்டிருக் கின்றன. இதன் காரணமாக, கொஞ்சம் கொஞ்சமாக சில்லறை மற்றும் நேரடி விற்பனையாளர்கள் முடக்கப்பட்டு வருகிறார்கள். பலர் தங்கள் வியாபாரங்களை விட்டு விலக் ஆரம்பித்திருக்கிறார்கள்.
இந்த ஆன்லைன் வர்த்தகங்கள் கார்ப்பரேட் என்ற சில தனிநபர் முதலாளிகளின் கைவசம் இருக்கிறது. இதை உலகளவில் நடைமுறைப்படுத்தவும், உலக வர்த்தகத்தை ஒருங்கிணைக்கவும் இவர்கள் தீவிரமாக முயற்சித்து வருகி றார்கள்.
தாங்கள் சொல்லுகிற திட்டங்களுக்கு இணங்க வில்லையானால் நாம் ஒரு சிறிய குண்டூசியைக் கூட வாங்க முடியாமல் முடக்கப்பட்டுப் போகிற அபாயம் இருக்கிறது.
குறிப்பாக, வெளிப்படுத்தின விசேஷத்தில் சொல் லப்பட்டிருக்கும் காரியத்தில் அந்திக்கிறிஸ்துவின் சொரூ பத்தை வணங்க ஜனங்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அதை வணங்காவிட்டால் கொலைசெய்யப்படுகிறார்கள். எந்த ஒரு பொருளையும் விற்கவும், வாங்கவும் முடியாமல் கட்டுப்ப டுத்தி விடுகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் ஒரு உண்மை யான கிறிஸ்தவன் என்ன செய்ய முடியும். துணிந்து நிற்பதா, அல்லது பணிந்துபோவதா?
அந்திக்கிறிஸ்து பெற்றுக்கொள்ள வற்புறுத்தும் மிரு கத்தின் முத்திரை, அதைப் பெற்றுக்கொண்டவர்களை சாத்தா னின் குடிமக்கள் என்பதாக அடையாளப்படுத்துகிறது. அதைப் பெற்றுக்கொண்டவர்கள் பரலோகத்தில் பிரவேசிக்க முடியாது. மாறாக, சாத்தானுக்கும் அவன் தூதர்களுக்கும் ஆயத்தம்பண்ணி வைத்திருக்கும் அக்கினிக்கடலில்தான் அவர்கள் பங்கடைய முடியும். (வெளி 19:20)
அதாவது, அந்திக்கிறிஸ்துவின் ஆட்சிக்காலத்தில் அவன் முத்திரையைப் பெற்றுக்கொள்ள சம்மதிக்காவிட் டால் நாம் எதையும் வாங்க முடியாது.
முத்திரையைப் பெற்றுக்கொண்டால் நித்திய ஜீவ னைப் பெற்றுக்கொள்ளமுடியாது. ஒரு மெய்யான கிறிஸ்த வன் இந்த நிலையை எப்படி எதிர்கொள்ளமுடியும்? இப் படிப்பட்ட இக்கட்டான நிலையிலும் கிறிஸ்துவை மறுதலிக் காமல் சாத்தானின் அதிகாரங்களை எதிர்த்து நின்று தங்கள் விசுவாசத்தைக் காத்துக்கொள்கிற அளவுக்கு விசுவாசத்தில் பலமுள்ளவர்களாக இருக்கவேண்டும். இப்போதிருக்கிற சூழ்நிலையில் அப்படிப்பட்ட கிறிஸ்தவர்களைப் பார்ப்பது கடினம்.
அப்படிப்பட்ட பலவான்களை பிறப்பிக்கத்தான் இந்த எழுப்புதல்.
கடைசிக்கால எழுப்புதல்!