எழுப்புதலை எதிர்க்கும் சாத்தான்

எழுப்புதலை எதிர்க்கும் சாத்தான்

எழுப்புதலை எதிர்க்கும் சாத்தான்

ஏனென்றால், கடைசிக்காலத்தின் முடிவில் ஏழுவரு உங்கள் அகில உலகம் முழுவதையும் சாத்தான் ஆளுமை செய்யப்போகிறான் என்கிறது வேதம்.

இயேசுகிறிஸ்து எப்படி அகில உலகத்தையும் தாம் ஒருவராக ஆளுமை செய்யப்போகிறாரோ அதைப் போலவே சாத்தானும் அகில உலகத்தையும் தான் ஒருவனாகவே ஆளுமை செய்யப்போகிறான். பூமியின் ஒருமுனை துவங்கி மறுமுனை வரைக்கும் அவன் ஆளுமையின் கீழிருக்கும். பொல்லாத விஞ்ஞானத்தையும், பிசாசின் வல்லமைகளை யும் தனக்கு பக்கபலமாக வைத்துக்கொண்டு ஒரு கொடூர ஆட்சியை அந்நாட்களில் அவன் அரங்கேற்றுவான்.

வித்தியாசம் என்னவென்றால் இயேசு இந்த பூமியை ஆயிரம் வருடங்கள் ஆளுவார். சாத்தானோ வெறும் ஏழு வருடங்கள் மட்டுமே ஆளுவான். ஆயினும் அந்த வருடங் கள் கொடுமைகளாலும், தீமைகளாலும் நிறைந்ததாயிருப்பதால் ஜனங்களுக்கு அது ஏழுயுகம் போலத்தோன்றும்.

முதலாவது, இந்த சாத்தானின் ஆட்சிதான் தோன் றும். அதன் ஏழுவருட முடிவில்தான் இயேசு பூமியின் ஆட்சி யைக் கைப்பற்றி, சாத்தானையும் அவனைச் சார்ந்தவர்களை யும் பாதாளத்தில் காவல் வைப்பார். சாத்தான் ஏழுவருடம் முழுஉலக ஆளுமையை நடத்திக்கொள்ள கர்த்தர் அனுமதிப் பார். சாத்தானுக்கு ஏன் இந்த அனுமதியைக் கொடுக்க வேண் டும் என்பது தேவனுடைய நீதியின் அடிப்படையிலான இரக சியம். நமக்கு அது விளங்காது.

முழுஉலக அரசாங்கத்தை ஆளும் சாத்தானுக்கு அந்திக்கிறிஸ்து என்று பெயர். வேதம் அவனை இப்ப டித்தான் குறிப்பிடுகிறது. இந்த அந்திக்கிறிஸ்து சாத்தானின் திரித்துவத்தில் குமாரன் ஸ்தானத்திலிருப்பவன். சாத்தான் எல்லாவற்றிலும் தன்னை தேவனைப் போலவே காண்பித் துக்கொள்ள விரும்புவதால் தன்னையும் அவன் திரித்துவ முள்ளவனாகக் காட்டிக்கொள்கிறான். சாத்தானின் திரித்து வம் என்பது வலுசர்ப்பம்,அந்திக்கிறிஸ்து. கள்ளத்தீர்க்க தரிசி என்பதாகக் காட்டப்பட்டுள்ளது.

தேவனுடைய திரித்துவத்தில் குமாரனாகிய கிறிஸ் துவே பூமியை ஆளும் அதிகாரத்தைப் பெறுகிறார் என்பதை போலவே, சாத்தானும் அதற்கொப்பாக தன்னுடைய குமாரன் ஸ்தானத்தில் எண்ணப்படும் அந்திக்கிறிஸ்துவையே முழு உலகத்தை ஆளும் இராஜாவாக ஏற்படுத்துவான்.

அந்திக்கிறிஸ்து முழுஉலகத்தையும் ஆளுமை செய் யப்போவது வெறும் ஏழுவருடங்கள்தான். ஆனாலும் தனக்கு இந்த ஏழுவருடங்களே போதுமானது. இதை வைத்தே தன்னுடைய ஆளுமைக்காலத்தை விஸ்தாரமாக் கிக் கொள்ளமுடியும் என்பது அவன் எண்ணம்.

எப்படியெனில், தன் கைகளில் கிடைக்கும் இந்த ஏழுவருடங்களில் பூமியில் ஒருமனிதனையும் கிறிஸ்துவை இராஜாவாக ஏற்றுக்கொள்ளும்படி விட்டுவிடக்கூடாது. அப்படி எல்லா மனிதரையும் தன்னுடைய கட்டுப்பாட்டிற் குள் கொண்டுவந்துவிட்டால், இயேசு மறுபடியும் திரும்பி வரும்போது, அவரை இராஜாவாக ஏற்றுக்கொண்ட யாரும் இருக்கமாட்டார்கள். அப்படி யாரும் இல்லாமல் போய்விட் டால் தன்னுடைய வருகையினால் பயனில்லை என்று கருதி அவர் தம் வருகையின் நாட்களைத் தள்ளிப்போட்டுவிடுவார் அல்லது வராமலேயே இருந்து விடுவார் என்பது அவன் எண்ணம்.

இதன் காரணமாக, தான் ஆளுமை செய்யப்போகும் ஏழு ஆண்டுகளும் கிறிஸ்தவர்களை கிறிஸ்துவில் நிலைக்க விடாதபடிக்கு பல்வேறு விதமான நெருக்கடிகளையும் இன் னல்களையும் ஏற்படுத்துவான். யாரும் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாமலும், அவரைப் பின்பற்றாமலும் இருக்கும்படி மனிதர் யாவரையும் நிர்ப்பந்திப்பான். நிர்ப்பந்தம் என்றால் சாதாரணமானது அல்ல. யாராலும் தாங்கக்கூடாத நிர்ப்பந்தங்கள்.

இந்தக் கொடிய காலகட்டத்தை எதிர்கொண்டு ஜெயம்பெற்று நிற்கத் திராணியுள்ள பலமான கிறிஸ்தவர் களை எழுப்புவதுதான் கடைசிக்கால எழுப்புதலின் நோக்கம். ஆகவே இந்த எழுப்புதல் காலத்தில்தான் ஆவியானவரின் செயல்பாடுகள் பலமானதாக, இதுவரையிலும் வெளிப்பட்டிராத வண்ணமாக இருக்கிறதைக் காணலாம்.

அதேபோல, இந்த எழுப்புதலில் பிறக்கும் ஜனங் களும் இதுவரை கண்டிராத அளவில் கிறிஸ்துவுக்காக வைராக்கியம் பாராட்டுகிறதையும், முழுமையான தேவ பலத்தினால் இயக்கப்படுகிறவர்களாகவும் இருப்பதைக் காணலாம். மாத்திரமல்ல, இக்காலத்தின் ஊழியர்கள் இது வரை உலகம் கண்டறியாத வண்ணம் கர்த்தருடைய பலத்த வல்லமையையும், வரங்களையும் வெளிப்படுத்துவதைக் காணலாம்.

வேதம் சொல்லும் இந்தக் கடைசிக்கால நிகழ்வுகளை வைத்துப் பார்த்தால், இரண்டு பெரும் உலக ராஜ்ஜியங்க ளுக்கான ஆயத்தப்பணிகள் இப்போது நடைபெற்றுக் கொண் டிருப்பதைப் புரிந்துகொள்ளலாம். ஒன்று அந்திக்கிறிஸ்து வுக்கானது. இரண்டாவது இயேசுகிறிஸ்துவுக்கானது.

அந்திக்கிறிஸ்து முழுஉலக அரசாங்கத்தை ஆள வேண்டியிருப்பதால் இப்போதிருந்தே அதற்கான ஆயத் தப்பணிகளில் தீவிரம் காட்டிக் கொண்டிருப்பதைக் காண லாம். இதற்காக உலகை ஒருங்கிணைக்கும் தீவிரமான திட் டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. கொரோனா போன்ற உலகப் பேரிடர் காலங்களைப் பயன்படுத்தி உலகம் முழுவதிலும் ஒருங்கிணைப்புப் பணிகள் தீவிரம் காட்டப் படுவதை நாம் கண்கூடாகப் பார்க்கமுடிகிறது.

இதற்காக உலகம் தழுவிய ரீதியில் ஜனங்களை ஒரு விதப் பதட்டத்திலேயே வைத்திருப்பதற்கான காரியங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேவரும். கொள்ளை நோய், பஞ்சம், யுத்தங்கள் என்று ஒன்று மாற்றி ஒன்று ஏற்படுத்தப்பட்டு ஜனங்களை ஒருவிதப் பதட்டத்திலேயே வைத்திருப்பார்கள்.

இந்தப் பதட்டம்தான் உலக ஒருங்கிணைப்புக்கு சாத்தான் கொண்டுவரும் திட்டங்களுக்கும், சட்டங்களுக் கும் ஜனங்களைக் கீழ்ப்படிய வைக்கப் பயன்படும். அது இப்போதே நம்மைச் சுற்றி நடந்து வருவதைப் பார்க்க முடிகிறது.

உலகத்தின் முக்கியமான செயல்பாடுகளையெல் லாம் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விடு வதன் மூலம் ஒட்டுமொத்த மனிதகுலத்தையுமே தன்னு டைய கண்காணிப்பிலும், கட்டுப்பாட்டிலும் கொண்டுவந்து விட வேண்டும் என்பதே அந்திக்கிறிஸ்துவின் திட்டம். இதில் அவனுக்கு இரண்டு ஆதாயங்கள் இருக்கின்றன. ஒன்று, ஒட்டுமொத்த மனிதர்களையும் தானே ஆளலாம். இரண்டாவது, இயேசுவின் ஆளுமையை ஏற்கக் கூடாதபடி. ஒட்டுமொத்த மனிதர்களையும் நிர்ப்பந்திக்கலாம்.

இந்தமுறை சாத்தான் ஒரு தனிமனிதனைக் கூட கிறிஸ்துவின் பக்கம் போய்விடாதபடிக்கு தன் கட்டுப் பாட்டுக்குள் வைத்துக்கொள்ள மிகுந்த தீவிரம் காட்டுவான். அதற்காக கொடிய மனிதர்களையும், கொடூரமான திட்டங் களையும், மனிதர்களை நிர்ப்பந்திக்கும் சட்டங்களையும் தீவிரமாக பயன்படுத்திக் கொள்வான். இதை நடைமுறைப் படுத்த நவீன விஞ்ஞானத்தை எல்லா விஷயத்திலும் உட் புகுத்தி பயன்படுத்துவான். யாரையும் தன் கண்ணிலி ருந்தோ, கட்டுப்பாட்டிலிருந்தோ தப்பவிடாதபடிக்கு தீவிர மான சட்டங்களை நடைமுறைப்படுத்துவான். இதற்கான ஆயத்தங்கள் இப்போதிருந்தே நடப்பதை கொஞ்சம் நுணுக்கமாகக் கவனித்தால் விளங்கிக்கொள்ள முடியும். இதற்கு உங்களைச் சுற்றிலும் நடக்கும் காரியங்களைக் கவனித்தாலே போதும். சாத்தானின் ஆயத்தம் பற்றிய காரியங்களை விளங்கிக்கொள்ளலாம்.

மனிதர்கள் என்ன உண்ண வேண்டும். எதை உடுக்க வேண்டும், எதைப் பேசவேண்டும், எதைச் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் அவனே தீர்மானிப்பான்.

ஒட்டுமொத்த மனிதகுலமும் ஒரு நவீனமயமாக் கப்பட்ட அடிமைத்தனத்திற்குள் போய்விடும். ஒவ்வொரு தனிமனிதனும் தீவிரமாகக் கண்காணிக்கப்படுவான். கார ணம், ஒரு சின்னக் கூட்டம் விடுபட்டு கிறிஸ்துவின் கைக்குள் போய்விட்டால் போதும். அதைக் கொண்டு கர்த்தர் ஒரு புதிய உலகத்தையே ஏற்படுத்திவிடுவார். நோவாவின் காலத்தில் அப்படித்தான் நடந்தது. வெறும் எட்டுப்பேரைக் கொண்டு மீண்டும் ஒரு முழுஉலகத்தையே ஏற்படுத்திவிட அவரால் முடிந்தது. இது சாத்தானுக்கும் தெரியும். இதன் காரணமாகத் தான், இதுபோல மீண்டும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக தனிமனிதன் ஒருவனைக் கூட விட்டுவிடாமல் தன்னுடைய கண்காணிப்பிலும், கட்டுப்பாட்டிலும் வைத்துக்கொள்ளத் தீவிரம் காட்டுவான்.

இதையெல்லாம் தாக்குப்பிடித்து, கர்த்தருக்காக நிலைநிற்கும் ஒரு பலமான சந்ததியைப் பிறப்பிப்பதே இந்த எழுப்புதலின் நோக்கம்.

வரப்போகும் எழுப்புதல் நிச்சயம் இதைச் செய்யும்!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *