புதிய ஏற்பாட்டுக்கால எழுப்புதல்

எழுப்புதல்

புதிய ஏற்பாட்டுக்கால எழுப்புதல்

புதிய ஏற்பாட்டுக்காலத்தின் எழுப்புதல் பற்றி நீங் கள் அறியாதது எதுவுமில்லை. இயேசுவின் சீஷர்களிடத் தில் இயேசு பரமேறுவதற்கு முன்பாக அவர்கள் பெற வேண்டிய வாக்குத்தத்தம் பற்றி நினைவுபடுத்தினார். பிதா வினால் சொல்லப்பட்ட அந்த வாக்குத்தத்தம் நிறைவேறும் வரைக்கும் அவர்கள் யாரும் எருசலேமை விட்டு நீங்காமல் காத்திருக்கும்படிச் சொல்லிச் சென்றார்.

அதன்படியே இயேசுவின் சீஷர்களில் நூற்றிருபது பேர் எருசலேமிலிருந்த ஒரு வீட்டின் மேலறையில் சுமார் பத்துநாளளவும் காத்திருந்தனர். காத்திருப்பது என்றால் பஸ் சுக்குக் காத்திருப்பது போன்ற காத்திருப்பு அல்ல. ஜெபத்தி லும், ஆராதனையிலும் கர்த்தருடைய பாதத்தில் காத்திருந்தார் கள். அப்படி அவர்கள் காத்திருக்கையில் பத்தாவது நாள், அவர்கள் கூடியிருந்த இடம் அசைக்கப்பட்டது. ஒரு பல மான காற்று அறை முழுவதையும் நிரப்பிற்று. அன்றியும் வானத்திலிருந்து அக்கினிமயமான நாவுகள் அங்கு கூடியி ருந்த யாவருடைய கண்களும் பார்க்கும்படி இறங்கி வந்து அவர்கள் தலையின்மேல் அமர்ந்தது.

அப்பொழுது அவர்கள் பலமான அபிஷேகத்தினால் நிரம்பினார்கள். அவர்கள் தாங்கள் அறியாத பற்பல பாஷை களில் கர்த்தருடைய நாமத்தை பலமான சத்தத்தில் சொல்லி துதிக்க ஆரம்பித்தார்கள். அவர்களுடைய சத்தம் மிகுந்த பல மானதாக இருந்ததால் அதைக் கேட்டு வீதியில் சென்ற அநேகர் அந்த வீட்டின் மேல் ஏறினார்கள். அங்கே இவர்கள் நூற்றிருபதுபேர் தாங்கள் அறிந்திராத பற்பல பாஷைகளில் பெரும் சத்தமாய் தேவனைத் துதிப்பதைப் பார்த்து, காரியம் இன்னதென்று விளங்காத ஜனங்கள் குழம்பினார்கள்.

அந்தச் சமயத்தில் இயேசுவின் பிரதான சீடரான பேதுரு, தம் உடன் சீடர்களோடு எழுந்திருந்து காரியத்தை விளங்கப் பண்ணினார். அது கர்த்தரால் உண்டான அபிஷே கம் என்பதை உணர்ந்து கொண்ட ஜனங்கள் அந்த நிமி ஷமே இயேசுவை தங்கள் சொந்த தெய்வமாக ஏற்றுக்கொண் டார்கள். அப்படி ஏற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை அந்தசமயத்தில் மாத்திரம் மூவாயிரம். பிறகும் அது தொடர்ந் தது.

இரண்டாவது எழுப்புதல் இப்படித்தான் ஆரம்பித் தது. அப்போது தொடங்கி தொடர்ச்சியாக எழுப்புதல் பற்றி யெரிந்தது. இயேசுவை ஏற்றுக்கொள்பவர்களின் எண்ணிக் கை நாளுக்குநாள் பெருகிக் கொண்டே போயிற்று. இந்த எழுப்புதல் இஸ்ரவேல் கோத்திரத்தார் நடுவில் மாத்திரம் என்றில்லாமல் எல்லா இனத்தார் நடுவிலும் பரவியது. புறவினத்தாரும் கர்த்தரிடத்தில் சேர்க்கப்பட்டார்கள்.

இந்த எழுப்புதலில் கர்த்தரோடு இணைக்கப்பட்ட வர்களுக்கான சட்டங்களும், பிரமாணங்களும் புதிதாகக் கொடுக்கப்பட்டது. அது பழைய ஏற்பாட்டுக் காலத்தில் கர்த் தருடைய ஜனங்களுக்குக் கொடுக்கப்பட்ட சட்டதிட்டங்கள் மற்றும் பிரமாணங்களிலிருந்து சற்றே வேறுபட்டிருந்தது. இவர் களுக்குக் கொடுக்கப்பட்ட புதிய ஏற்பாட்டுக் கலாச்சாரமும், பழைய ஏற்பாட்டுக் கலாச்சாரங்களிலிருந்து சற்று மாறுபட்டி ருந்தது.

பழைய ஏற்பாட்டில் ஒரு இனத்தார் மாத்திரமே கர்த் தருடைய ஜனங்களாயிருந்தார்கள். புதிய ஏற்பாட்டின் காலத் தில் இயேசுவை ஏற்றுக்கொண்ட எல்லா உலக இனத்தாரும் கர்த்தருடைய ஜனங்களாக மாறினார்கள். ஆகவேதான், சட்ட திட்டங்களும், கலாச்சாரமும் எல்லா இனத்தாருக்கும் பொது வானதாக மாற்றப்பட்டிருந்தது. கர்த்தரே அதை மாற்றினார்.

புதிய ஏற்பாட்டுக் காலத்தின் ஜனங்களை நடத்துவ தற்காகவும், இன்னும் அநேகரை கர்த்தரிடத்தில் சேர்ப்பதற் காகவும் இந்தக் காலத்தின் பணிகளுக்கான ஊழியர்களும் எழுப்பப்பட்டார்கள். இவர்களும் பழைய ஏற்பாட்டுக் காலத் தின் ஊழியர்களிலிருந்து சற்றே மாறுபட்டிருந்தார்கள். இவர் கள் செய்யவேண்டிய வேலைகளும் பழைய ஏற்பாட்டு ஊழி யர்களின் பணிகளிலிருந்து மாறுபட்டிருந்தது.

இந்தப் புதிய ஏற்பாட்டின் காலம் ஏறத்தாழ இரண் டாயிரம் வருடங்களாக நீடித்து வருகிறது. இதற்கு அடுத்து இன்னொரு காலத்தைப் பற்றியும் வேதத்தில் சொல்லப்பட் டிருக்கிறது. அது கடைசிக்காலம்.

நாம் ஏற்கனவே பார்த்ததைப் போல ஒவ்வொரு வேதாகமக் காலமும் துவங்குவதற்கு முன்பாக ஒரு எழுப் புதல் ஏற்பட்டு, அதிலிருந்துதான் அந்தந்தக் காலங்கள் ஆரம் பிக்க வேண்டும். அப்படிப் பார்த்தால் கடைசிக்காலமும் துவங்குவதற்கு முன்பாக ஒரு எழுப்புதல் தோன்றித்தான் ஆக வேண்டும். அதைத்தான் நாம் இனி வரப்போகும் கடைசிக் கால எழுப்புதல் என்கிறோம்.

தேவனுடைய திட்டங்களையும், கிரியைகளையும் நுணுக்கமாக ஆராய்ந்து பார்க்கிறவர்கள் கடைசிக்கால எழுப் புதலை மறுக்க முடியாது.

எழுப்புதல் என்கிற வார்த்தையே இல்லை. கடைசிக் காலத்தில் ஒரு எழுப்புதல் என்பதும் சாத்தியமில்லை என்ப வர்கள் தேவனைப்பற்றியும், அவர்கள் கிரியைகளைப் பற்றி யும், வேதத்தைப் பற்றியுமான தங்கள் அறியாமையையே வெளிப்படுத்துகிறார்கள் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

இன்னும் சிலர் எதிர்மறையான கருத்துக்களை எதை யும் யோசிக்காமல் பேசினால் நிறைய ஜனங்களால் தாங்கள் கவனிக்கப்பட முடியும் என்கிற காரணத்தினாலும் இப்படிப் பட்ட கருத்துக்களை இக்காலங்களில் பேசி வருவதையும் காணமுடிகிறது.

அவர்கள் நோக்கம் முழுவதும் ஆரோக்கியமான உபதேசங்கள் அல்ல. பிறர் கவனத்தை தங்கள் பக்கம் திருப் பும் உபதேசங்களே. இவர்களுக்கு நாம் கவனமாயிருக்க வேண்டும்.

எதிர்மறைக் காரியங்களுக்கு இடம் கொடுத்து அதை நம்ப ஆரம்பித்தால், தேவனுடைய திட்டங்கள் வெளிப்படும் போது நாம் அதை தவறவிட்டு விட நேர்ந்துவிடும்.

காலம் மாறப்போவதை அறியாமல், தங்கள் பழைய கொள்கைகளையே விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டி ருந்த காரணத்தினால்தான் யூதப் பாரம்பரியவாதிகள் புதிய ஏற்பாட்டுக்காலத்திற்குள் பிரவேசிக்க முடியவில்லை. காலமும் அவர்களைக் கைவிட்டுக் கடந்துபோய்விட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *