கடைசிக்கால எழுப்புதல் உண்மையா?
எழுப்புதல்….!!
ஒரு மகத்தான எழுப்புதலுக்குப் பிறகுதான் கிறிஸ் தவர்கள் திரளாகப் பெருகினார்கள் என்றும், கிறிஸ்தவம் வேகமாகப் பரவியது என்றும், சபைகள் உலகெங்கிலும் தோன்றின என்பதும் நமக்குத் தெரியும்.
ஒருபுறம் உபத்திரவங்கள்! அன்றைய அரசர்களும், அரசாங்கங்களும் எதிர்த்துக்கொண்டு கிளம்பி கிறிஸ்தவர் களையும், கிறிஸ்தவத்தையும் அழிக்க தீவிரமாய் கிரியை செய்துகொண்டிருந்தன. இன்னொருபுறம் பழைமை மதவாதி கள் புறப்பட்டு கிறிஸ்தவர்களை அழிக்க அவர்கள் கூடி வரும் இடங்களுக்குள் எல்லாம் புகுந்து உபத்திரவப்படுத் திக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் இந்த எழுப்புதலானது நாளுக்குநாள் பெருகிக்கொண்டே இருந்தது. இண்டு இடுக்கி லெல்லாம் பரவிக்கொண்டிருந்தது. தளரவும் இல்லை. குறை யவும் இல்லை.
இதற்கொப்பான அல்லது அதைவிடத் தீவிரமான இன்னொரு எழுப்புதல் உலகத்தின் கடைசிநாட்களில் உண் டாகும் என்கிறார்கள். இந்த எழுப்புதலானது உலகமெல்லாம் வியாபிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த எழுப்புத லைப் பற்றிப் பேசுகிறவர்களும், இந்த எழுப்புதல் வரக் காத் திருக்கிறவர்களும் சமீபக்காலமாக உலகளவில் பெருகிவரு கிறார்கள்.
சிலர் இதற்காக ஜெபிக்கிறார்கள். இன்னும் சிலர் இதைக்குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வரப்போகிற இந்த எழுப்புதலைப் பற்றிப் பிரசங்கிக்கிறார்கள். இன்னும் சிலர் இதற்காக ஆயத்தப்படுகிறார்கள்.
இது ஒருபுறம் என்றால், இன்னொருபுறத்தில் இந் தக் கடைசிக்கால எழுப்புதல் உண்மையிலேயே வரச் சாத்தி யமிருக்கிறதா என்று சிலர் சந்தேகப்படுகிறார்கள். எழுப்பு தல் என்பதே கற்பனைதான் அப்படியெல்லாம் ஒன்று மில்லை என்று இன்னும் சிலர் போதிக்கிறார்கள். இப்படிப் பட்ட எதிர்மறைச் சிந்தனைக்காரர்கள் எல்லாக் காலங்களி லும் எழும்புவது வாடிக்கையான ஒன்றுதான். இந்தப் புத்த கம் அவர்களுக்கானதோ, அவர்களுக்குப் பதில் சொல்வதற் கானதோ அல்ல. இது எழுப்புதல் வரக்காத்திருக்கிறவர் களுக்கானது. கர்த்தரின் வார்த்தைகளை விசுவாசிக்கிறவர் களுக்கானது. வர்த்தக ஊழியம் செய்யாமல் விசுவாச ஊழி யம் செய்கிறவர்களுக்கானது.. அதாவது, உங்களுக்கானது!
வேதத்தைக் கொஞ்சம் நுணுக்கமாக ஆராய்ந்து பார்த்தால், கடைசிக்காலத்தில் இன்னுமொரு எழுப்புதல் வரும் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
சிலருக்கு கடைசிக்கால எழுப்புதலின் மேல் சந்தே கம் வரக்காரணமே, கடைசிக்காலம் என்பது தீமைகள் நிறைந்தகாலம். ஒருவரும் கிரியை செய்யக் கடினமான காலம். அதில் எழுப்புதல் வர எப்படிச் சாத்தியம் என்ற எண்ணம் தான். ஆனால், கடைசிக்காலம் எத்தனைதான் கொடியதாக இருந்தாலும், கிரியை செய்யக் கடினம் என்று வேதத்தில் கூட காட்டப்பட்டிருந்தாலும், இந்தக் காலத்தில்தான் இராஜ்ஜியத் தின் சுவிசேஷம் பூமியெங்கிலுமுள்ள சகல ஜாதியாருக்கும் பிரசங்கிக்கப்படும் என்றும் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கி றது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
மத்தேயு 24:14ல் இயேசுவே சொன்ன இந்தக் காரி யம் நிச்சயம் நிறைவேறும் என்பதில் நமக்கு மாற்றுக்கருத்து இல்லை. இந்த வசனத்தில், இராஜ்ஜியத்தின் இந்தச் சுவிசே ஷம் பூமியெங்கிலுமுள்ள சகல ஜாதியாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும். அப்போது முடிவுவரும் என்று சொல்லப் பட்டிருக்கிறது. அப்படியானால் இந்தச் சுவிசேஷப்பணி கடைசிக்காலத்தில் தீவிரமாகச் செயல்படும் என்றும், முடி வுக்கு முந்தினநாள் வரைக்கும் கூட இந்தப் பணி நடந்தேறும் என்றும்தானே அர்த்தமாகிறது?
தீமைகளும், கொடுமைகளும் நிறைந்த கடைசிக் காலத்தில் கூட இடைவிடாமல் உலகமெங்கிலும் சுவிசேஷம் அறிவிக்கப்படுகிறது என்றால், அது எழுப்புதல் அடைந்தவர் களால் மட்டும்தானே செய்யப்பட முடியும்? அப்படியானால் கடைசிக்காலத்தில் திரள்கூட்டம் பேர் இரட்சிக்கப்பட்டு எழும்புவார்கள் என்றும். அப்படி எழும்பினவர்களில், பெருவாரியானோர் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பார்கள். என்றும், அவர்கள் பிரசங்கிப்பதைக் கேட்டு இன்னும் திரள்கூட்டம் பேர் இரட்சிப்படைந்து எழும்புவார்கள் என் றும், அவர்களிலும் பெருவாரியானோர் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பார்கள் என்றும், இப்படியே ஒரு சக்கரச் சுழற்சி பயாய் சுவிசேஷ பணிகள் தொடர்ந்து கடைசிக்காலத்தில் நடந்துகொண்டேயிருக்கும் என்பதாகத்தானே தெரிகிறது?
உண்மைதான். எழுப்புதல நாட்களில் இப்படித்தான் நடக்கும்.
அதாவது, கடைசிக்காலத்தில் சுவிசேஷம் அறிவிக் கப்படுவது மாத்திரமல்ல, அறிவிக்கப்பட்ட அந்த சுவிசே ஷம் அநேகரை இரட்சிக்கவும் செய்கிறது, அப்படி இரட்சிக் கப்பட்டவர்களை அது சுவிசேஷப்பணி செய்யவும் தூண்டு கிறது.
ஆம். இதைத்தான் நாம் எழுப்புதல் என்கிறோம். கடைசிக்கால எழுப்புதல்!
அப்படியானால், கடைசிக்காலத்தில் இராஜ்ஜியத் தின் இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்கிலுமுள்ள யாவருக் கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும். அப்போது முடிவு வரும் என்று இயேசு சொன்னதுகூட, கடைசிக்காலத்தில் வரப்போகும் எழுப்புதலைப் பற்றிய முன்னறிவிப்புப் பற்றி யதுதான் இல்லை?
இயேசு சொன்னதிலேயே எழுப்புதல் இருக்குமா னால் எழுப்புதலே இல்லை என்று நாம் எப்படிச் சொல்ல முடியும்?
One comment on “கடைசிக்கால எழுப்புதல் உண்மையா?”
AMUDAVALLI ANNAH
September 2, 2022 at 11:21 amIts very useful for my spiritual life pastor