கடைசிக்கால எழுப்புதலின் நோக்கம்
அடுத்து நாம் பார்க்கப் போவது கடைசிக்கால எழுப் புதலின் நோக்கம் பற்றி வேதாகமக் காலங்களை உற்றுக் கவனித்தால் ஒவ் வொரு காலத்துக்கும் ஒவ்வொரு நோக்கம் இருப்பதைப் புரிந்துகொள்ள முடியும். அந்த நோக்கங்களை மையமாக வைத்தே அந்தந்தக் காலங்களின் இயக்கம் இருந்தது.
குறிப்பாக, பழைய ஏற்பாட்டுக் காலத்தின் நோக்கம், கர்த்தராகிய இயேசுகிறிஸ்து இந்த பூமிக்கு வருவதற்கு வாசலாக ஒரு இனத்தை ஆயத்தப்படுத்துவதே.
வானத்தையும், பூமியையும் உண்டாக்கின தேவன் இந்த உலகத்துக்கு மனிதனாக இறங்கி வருவது என்பது சாதா. ரணமான ஒரு விஷயம் அல்ல. உலகத் தோற்றம் முதல் உண் டாயிராத ஒரு முக்கியமான நிகழ்வு அது. அதுவும் நேரடியாக வானத்திலிருந்து இறங்கி வந்துவிடாமல், மனிதர்களின் வழியாக மனிதரைப் போல வருவதானால் அது இன்னும் விசேஷம்.
மனிதன் பாவத்தில் விழுந்து தனக்கான மேன் மையை இழந்துபோனதினிமித்தம், அதை மனிதருக்கு மீட் டுக் கொடுக்கும் பொருட்டாக கர்த்தர்தாமே மனிதனாக பூமிக்கு இறங்கிவர நேர்ந்தது. இதில் முழுக்க முழுக்க பரி சுத்தம் நிறைந்த பரலோகத்திலிருந்து கர்த்தர் இறங்கி, பாவங் கள் நிறைந்த பூமிக்கு வரவேண்டும். மாத்திரமல்ல. பூமிக் குரிய மனிதரின் சாயலையும் பெற்றுக் கொள்ளவேண்டும்.
அந்த சாயலுக்கான சரீரம் இந்த உலகத்திலிருந்தே பெறப்பட வேண்டும். பாவத்தில் உழன்று கிடக்கும், தேவ பயமற்ற, தங்கள் மனம்போனபடி ஜீவித்துக்கொண்டிருக்கும் மனிதர்களிடத்திலிருந்து பரிசுத்தமான சரீரத்தைப் பெறுவது இயலாத காரியம்.
எனவே இதற்காக அவர் ஒரு இனத்தைத் தனக் கென்று தெரிந்துகொண்டு, அந்த இனத்துக்கு கட்டளைகளை யும், கற்பனைகளையும், பிரமாணங்களையும் கற்றுக்கொடுத்து அவர்களை, தான் வெளிப்பட வேண்டிய சாயலுக்கொப்பான இனமாக மாற்றினார்.
அப்படி தேவனுடைய ஜனங்களாக மாற்றப்பட்ட இனத்திலிருந்துதான் தனக்கான சரீரத்தையும், தான் வருவதற் கான பாதையையும் பெற்றுக்கொள்ள முடியும். அதுதான் இந்தப் பழைய ஏற்பாட்டுக் காலத்தின் நோக்கம். அவர் வெளிப்படுகிற வரைக்கும் அந்த இனம் தேவநியமங்களில் காக்கப்பட்டதாகவும், தேவனால் நடத்தப்படுகிறதாகவும் இருக்க வேண்டும்.
அவர் தாம் மனிதராய் வெளிப்பட யூத இனத்தைத் தெரிந்துகொண்டார். யூத இனத்தாரின் நிமித்தம் அதோடு தொடர்புடைய சகோதர இனங்களான இஸ்ரவேல் இனத்தா ருக்கும் கர்த்தருடைய ஜனமாகும் கிருபை கிடைத்தது. கர்த்த ராகிய இயேசு வெளிப்பட்டு, தனக்கான காரியங்களை நிறை வேற்றித் தீர்ந்தபிறகு பழைய ஏற்பாட்டுக் காலத்துக்கான நோக்கம் முழுமையடைந்து விட்டது. எனவே பழைய ஏற் பாட்டுக் காலமும் முடிவுக்கு வந்துவிட்டது.
புதிய ஏற்பாட்டுக் காலத்தின் நோக்கம் வித்தியாச மானது. அது கர்த்தருக்கான ஜனங்களை உலகத்திலிருந்து பிரித்தெடுத்து அவர்களை கர்த்தருக்காக ஆயத்தப்படுத்து வதை நோக்கமாகக் கொண்டது.
இந்த நோக்கத்தை நிறைவேற்ற இப்போது ஒரு இனத்துக்கு மாத்திரமல்ல. எல்லா இனங்களுக்கும் கர்த்தர் அழைப்புக் கொடுக்கப்பட்டது. அவர் அழைப்பை ஏற்றுக் கொண்டவர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்குச் சபை என்று பெயரும் கொடுத்தார். இந்த சபையை பரலோகத்தில் வாழும் வாழ்க்கையின் சாயலைப் பெற்றுக் கொள்ளத்தக்க தாக உருவாக்கவும், உலகத்தினால் வழிமாறிவிடாதபடிக்கு அவர்களைப் பாதுகாக்கவும் ஏற்றதான கற்பனைகளையும், பிரமாணங்களையும் கற்பித்தார். இக்காலத்துக்கான ஊழி யங்களையும், ஊழியர்களையும் எழுப்பினார். அவர்கள் இந்த சபையினரை பரலோகத்தில் வாழும் வாழ்வைப் பெற் றுக்கொள்ளத்தக்கதாக உருவாக்கும் ஊழியத்தையும் அவர் களுக்குக் கொடுத்தார்.
சபையைக் கர்த்தர் மணவாட்டி என்று உருவகப்படுத்தினார். மணவாட்டி எப்படி தன் மணவாளனோடு எப்போ தும் இசைந்திருப்பாளோ அப்படியே சபையானது எப்போ தும் தன்னோடு இருக்கும் என்பதையும், மணவாளனின் சுதந்திரவீதத்தில் மணவாட்டி எப்படி பங்குள்ளவளாயிருப் பாளோ அப்படியே தன்னிலும் தன் ஜனங்கள் சுதந்திரவீதப் பங்குகளை அடைந்திருப்பார்கள் என்பதையும் அடையாளப் படுத்தவே மணவாட்டி என்று சபையை உருவகப்படுத்தினார். இந்த மணவாட்டியை ஆயத்தப்படுத்துவதும், அவரோடு சபை இணைக்கப்படும் காலம் வரைக்கும் பாதுகாக்கப்படுவ துமே இந்தப் புதிய ஏற்பாட்டுக் காலத்தின் நோக்கம். இதற்கா கத்தான் சபை, ஊழியர்கள், வரங்கள், அபிஷேகம் எல்லா முமே.
இதன் காரணமாக, இந்தப் புதியஏற்பாட்டுக் காலத் தின் ஊழியங்களானாலும், ஊழியர்களானாலும், கட்டளைக் ளானாலும், சட்டங்களானாலும் எல்லாமே சபையை மையப் படுத்தியே ஏற்படுத்தப்பட்டிருந்தது.
இந்த சபைக்கு இதைத்தாண்டி இன்னொரு பிரதான மான கடமையிருக்கிறது. தான் மணவாளனோடு சேர்க்கப் படும்படி தான் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பாக கடை சிக்காலத்துக்கான எழுப்புதலை நிறைவேற்றுவதே அந்தக் கடமை.
இந்தக் கடைசிக் கடமையை நிறைவேற்றித் தீர்ந்த பிறகு சபையானதுதான் தன் மணவாளனோடு இணைக்கப் பட எடுத்துக்கொள்ளப்படும். அதைக் குறித்து நாம் பிந்திப் பார்க்கலாம்.
முந்தின இரண்டு காலங்களுக்கான கர்த்தருடைய நோக்கத்தைப் பார்த்துவிட்டோம். இப்போது கடைசிக்காலம் பற்றிய கர்த்தருடைய நோக்கம் பற்றிப் பார்க்கலாம்.
கடைசிக்காலத்தின் இறுதியில் கர்த்தர் இந்தப் பூமிக் குத் திரும்பவும் வருவார். முதலில் அவர் பழையஏற்பாட் டின் இறுதியில் இந்த பூமிக்கு மனிதனாய் வந்திருந்தார் என் பது நாம் அறிந்த செய்திதான்.
இப்போது இரண்டாவது முறையாக அதே இயேசு பூமிக்குத் திரும்பவும் வருகிறார். இதைக்குறித்து வேதத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
இயேசு சிலுவையில் மரித்து, அடக்கம் பண்ணப் பட்ட பிறகு, மூன்றாவது நாளில் உயிரோடு எழுந்தார். அதன் பின்பாக நாற்பது நாளளவும் தம்முடைய சீடர்களுக்கு அவர் தம்மை உயிருள்ளவராக காண்பித்துக் கொண்டேயி ருந்தார். கடைசியாக அவர் பரலோகத்துக்கு ஏறிப்போகும் முன்பாக ஒலிவமலையில் தம்முடைய சீஷர்களைச் சந்தித் தார். அந்தச் சமயத்தில் அவர் இறுதியாக தம் சீஷர்களிடத்தில் பேசவேண்டிய காரியங்களைப் பேசித் தீர்ந்தபிறகு அவர்கள் கண்கள்காண அவர் வானத்துக்கு எழுந்தருளிப்போனார்.
சீஷர்கள் அந்தக் காட்சியைக் கண்டு அதிசயித்துக் கொண்டிருக்கையில், வெள்ளை உடையணிந்த இரண்டுபேர் அவர்கள் அருகாமையில் தோன்றி, ‘உங்களிடத்திலிருந்து வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந் தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார்” என் றார்கள். (அப் 1:11) அந்த முன்னுரைப்பின்படியே இயேசு இந்தப் பூமிக்குத் திரும்பவும் வருவார்.
இந்தமுறை அவர் திரும்பவும் வரப்போவதின் நோக்கம், இந்தப் பூமியில் தம்முடைய ஆளுமையை ஸ்தா பிப்பதே. அவர் ஸ்தாபிக்கப்போகும் அவருடைய ஆளுகை இந்தப் பூமியில் ஆயிரம் வருடம் நீடித்திருக்கும் என்று வேதம் குறிப்பிட்டுச் சொல்லுகிறது. அவர் பூமியின் ஏதோ ஒரு பகு தியை மாத்திரமல்ல, ஒட்டுமொத்த பூமியையுமே தம்மு டைய ஆட்சிக்குக் கீழே கொண்டுவரப்போகிறார். உலகத்தின் ஒருமுனை தொடங்கி மறுமுனை வரைக்கும் இயேசுவே சகல தேசங்களுக்கும் இராஜாவாக இருப்பார்.
இதுதான் கடைசிக்காலத்தின் இறுதியில் நடைபெற போகும் காரியம். அவருடைய வரப்போகும் இராஜ்ஜியத் தின் ஆளுகைக்காக இந்த பூமியை ஆயத்தப்படுத்துவதே கடைசிக்காலத்தின் நோக்கம். இந்த நோக்கத்தை நிறைவேற் றவே கர்த்தர் ஊழியங்களையும், ஊழியர்களையும் ஏற்படுத்தப்போகிறார்.
இந்தக் கடைசிக்கால எழுப்புதல் மற்றெல்லா எழுப் புதல்களையும் விட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்குக் காரணம் என்ன தெரியுமா?
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து இந்தமுறை பூமிக்கு வருவதன் நோக்கம் இந்தப் பூமியை ஆளுமை செய்வதே. அவர் ஆளுகையில் பூமியின் ஒருமுனை தொடங்கி மறுமுனை வரைக்கும் இயேசுவின் ஆளுமையே பூமியில் வியாபித்தி ருக்கும். வேறொரு இராஜா இந்த பூமியில் இருக்கமாட்டார். இயேசு பூமியின் ஆளுமையைப் பெற்றுக்கொள்ளவே இந்த முறை பூமிக்கு வரப்போகிறார்.
அப்படி இயேசு பூமியில் தம்முடைய ஆளுமையை ஸ்தாபிப்பதற்கு சில முக்கியமான ஆயத்தங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. அவை என்னவென்று பார்க்கலாம்.
ஒரு இராஜாவுக்கு பிரதானமான தேவை என்னவென்று யோசித்துப் பாருங்கள். அவர் ஆளுகை செய்வதற்கான ஜனங்கள்தான் அவருக்குப் பிரதானமான தேவை.
ஆளுமை செய்வதற்கு ஜனங்களே இல்லாமல் வெறும் கல்லையும், மண்ணையும் ஆளுமை செய்பவரை நாம் இராஜா என்று சொல்லமுடியாது. எண்ணற்ற ஆஸ்தியும், வல்லமையும், ஆற்றலும் இருந்தாலும் ஒருவரை நாம் இராஜா என்று சொல்லிவிட முடியாது.
ஒருவர் இராஜாவானால் அவருக்கு ஆளுமை செய் வதற்கு ஜனங்கள் வேண்டும். அப்படி இயேசுவை தங்கள் இராஜாவாக ஏற்றுக்கொள்ளும் ஜனங்களைத் திரளாகப் பிறப் பிப்பதே இந்தக் கடைசிக்கால எழுப்புதலின் நோக்கம்.
இயேசுவை இராஜாவாக ஏற்றுக்கொள்ள யாருக்கா வது கசக்குமா என்ன? எல்லாருமே ஏற்றுக்கொள்ள தயாரா கத்தான் இருப்பார்கள். கடைசிக்கால எழுப்புதல் சுலபம் தான் என்பீர்கள்.
ஆனால், நீங்களும் நானும் நினைப்பது போல அது அத்தனை சுலபமல்ல. ஏனெனில், கடைசிக்கால எழுப்புத லில் இயேசுவை இராஜாவாக ஏற்றுக்கொள்ளத் துணியும் ஒவ்வொருவரும் அதற்காக ஒரு பெரிய விலைக்கிரயத் தைக் கொடுக்க வேண்டிவரும். எழுப்புதல் என்றவுடன், ஜனங் கள் ஏதோ பெருங்கூட்டமாய் பரவசமடைந்து கைதட்டிப் பாட்டுப்பாடிக்கொண்டிருப்பார்கள். சபைகள் எல்லாம் நிரம்பிவழியும் என்றெல்லாம் மாத்திரம் நினைத்துக்கொண்டிருந் தால் அது தவறு, கடைசிக்கால எழுப்புதல் வித்தியாசமானது.
இந்த எழுப்புதலில் எழும்புகிற தலைமுறையினர் சவால்களைச் சந்திக்க வேண்டிவரும். அதிகாரங்களை எதிர்த்து நிற்க வேண்டிவரும். கொடுமைகளையும், தீமைக ளையும் எதிர்கொள்ள வேண்டிவரும். தலைமறைவு ஜீவியம் பண்ண வேண்டிவரும். தந்திரங்களையும், வஞ்சகங்களையும் எதிர்க்க வேண்டிவரும். அதிகபட்சமாக தங்கள் ஜீவனைக் கூட இழக்க வேண்டிவரும்.
காரணம், ஏற்கனவே உலகத்தைத் தன் கட்டுப்பாட் டில் வைத்திருக்கிறவன் இன்னொரு இராஜா வர எப்படிச் சம்மதிப்பான்? ஜனங்கள் வரப்போகும் புதிய ராஜாவை இராஜாவாக ஏற்றுக்கொள்ள எப்படி அனுமதிப்பான்?
இங்குதான் பிரச்சனை ஆரம்பிக்கிறது!