காலங்களும், எழுப்புதல்களும்
எழுப்புதலைப் பற்றி சிந்திக்கும்போது, நாம் இன் னொரு காரியத்தையும் கவனித்துப் பார்ப்பது நல்லது. வேதா கமத்தின் காலங்கள் ஒவ்வொன்றும் துவங்கும்போது, ஒரு மாபெரும் எழுப்புதலுக்குப் பிறகாகவே துவங்கியிருக்கிறது. இது கொஞ்சம் நமக்கு ஆச்சரியத்தைத் தருகிறது.
வேதாகமம் காலங்களை மூன்று பெரும் பிரிவுகளா கப் பிரித்துப்பேசுகிறது. ஒன்று பழைய ஏற்பாட்டின் காலம். இரண்டாவது புதிய ஏற்பாட்டுக் காலம். மூன்றாவது கடைசிக் காலம். வேதாகம நிபுணர்களைக் கேட்டால் வேதாகமக் காலங் களில் இன்னும் நிறையப் பிரிவுகளைச் சொல்வார்கள். படைப் பின் காலம். மனசாட்சியின் காலம், முற்பிதாக்களின் காலம், பழையஏற்பாட்டின் காலம், புதியஏற்பாட்டின் காலம், கடைசிக் காலம், வருகையின்காலம் என்றெல்லாம் கிட்டத்தட்ட ஏழு இருக்கிறதே என்பார்கள்.
நாம் அது பற்றியெல்லாம் இங்கே பேசப்போவதில்லை. கர்த்தர் மனிதர்களோடு தன்னை இணைத்துக் கொண்டு அவர்களை நடத்த ஆரம்பித்த காலங்களிலிருந்தே காலங்களைக் கணக்கிடுகிறோம். அப்படிப் பார்த்தால் வேதா கமத்தின் பிரதான காலங்கள் மூன்று என்பதுதான் சரி.
இந்தப் பிரதான காலங்களில் ஒவ்வொன்றும் துவங் கும் முன்பாக ஒரு எழுப்புதல் ஏற்பட்டிருக்கிறது. அந்த எழுப்புதலுக்குப் பின்பாகத்தான் புதிய காலப்பரிமாணம் உண்டாகியிருக்கிறது. எழுப்புதல்கள் வரும்போதெல்லாம் காலப்பரிமாண மாற்றங்கள் தோன்றுகிறதா என்றால், அது அப்படியல்ல.
எழுப்புதல்கள் வரும்போதெல்லாம் காலப்பரிமா ணங்கள் மாறவேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால், காலப்பரிமாண மாற்றங்கள் வருவதற்கு முன்பதாக கட்டா யம் ஒரு எழுப்புதல் உண்டாகியிருக்கவேண்டும் என்பது அவசியம்.
காலப்பரிமாண மாற்றம் என்று எதைச் சொல்லுகி றேன் தெரிகிறதா? பழைய ஏற்பாட்டுக்காலம் ஒரு பரிமா ணம் என்றால், புதிய ஏற்பாட்டுக்காலம் இன்னொரு பரிமா ணம். பழைய ஏற்பாட்டிலிருந்து புதிய ஏற்பாட்டுக் காலத் துக்கு மாறுவதே காலப்பரிமாண மாற்றம். அப்படி ஒன்றிலி ருந்து மற்றொன்றுக்கு காலம் மாறவேண்டுமானால் அந்தக் காலத்தின் துவக்கத்தில் ஒரு எழுப்புதல் கட்டாயம் தோன்ற வேண்டும்.
நாம் இதுபற்றி விளக்கமாகப் பேசுவதற்கு முன் பாக, எழுப்புதல் என்றால் என்ன என்பதை நாம் கவனத்தில் கொள்ளுவது அவசியம். வாருங்களேன், எழுப்புதல் என் றால் எதைச் சொல்லலாம் என்று ஒரு நாலைந்து வரிகளில் பார்த்துவிடலாம். எழுப்புதல் என்று எதைச் சொல்லலாம்?
திரளான ஜனங்கள் ஒரே சமயத்தில் உணர்வடைந்து தாங்கள் வாழ்ந்திருக்கும் பழைய வாழ்க்கையிலிருந்து விலகி தங்களை உண்டாக்கின தேவனிடத்தில் வந்து சேர்வதே எழுப்புதல் என்று சொல்லலாமா? கட்டாயம் சொல்லலாம். இந்த உணர்வடையும் அனுபவம் ஒரு தனிமனிதனுக்குள் மாத்திரம் தோன்றினால் அதை மீட்பு அல்லது இரட்சிப்பு என்று சொல்கிறோம். அதுவே ஒரு பெருந்திரள் கூட்டம் ஜனங்களுக்கு நடுவில் உண்டானால் அதை எழுப்புதல் என்று சொல்லலாம். அதுவே தொடர்ச்சியாக திரள்திரளான ஜனங்களுக்கிடையில் உண்டாகிக் கொண்டேயிருந்தால் அதை யும் நாம் எழுப்புதல் என்று சொல்லலாம்.
அதேபோல, ஒரு காலத்தில் கர்த்தருடன் இணைந்தி ருந்து, பின்னர் ஏதாவது காரணங்களால் அவரை விட்டு வில கிப்போன ஒரு கூட்டம் ஜனங்களும், ஏதோ ஒரு சந்தர்ப்பத் தில் திடீரென உணர்வடைந்த பெருங்கூட்டமாய் மனந் திரும்பி தங்கள் தேவனிடத்தில் மறுபடியும் வந்து சேர்ந்தால், அதையும் எழுப்புதல் என்று சொல்லலாமா என்றால், கட்டா யம் அதையும் எழுப்புதல் என்றே சொல்லலாம்.
யேசபேல் ராணியின் காலத்தில் இஸ்ரவேலர்கள் பயமுறுத்தல், மற்றும் தங்கள் சொந்த விருப்பத்தின் அடிப் படையில் பாகால்களைச் சேவிக்க ஆரம்பித்து, தங்கள் தேவனை விட்டு விலகியிருந்த சமயத்தில் எலியாவின் மூலம் கர்த்தர் நடப்பித்த அற்புதத்தைக் கண்டு. கர்த்தர்தான் மெய் யான தெய்வம், பாகால் அல்ல என்பதைப் புரிந்துகொண்டு நொடிப்பொழுதில் மனம்மாறி கர்த்தரே தெய்வம் என்று விண்ணதிரக் கோஷமிட்டு, தங்கள் தேவனிடத்தில் மறு படியும் திரும்பினார்களே அந்தச் சம்பவத்தை எழுப்புதல் என்று சொல்வது சரிதான்.
அதுபோலவே, கர்த்தருடைய ஆவியானவர் தங்கள் மேல் இறங்குகிறதினால் மனம்திரும்பி ஒரு கூட்டம் ஜனங் கள் கர்த்தரிடத்தில் சேர்க்கப்பட்டால் அதை எழுப்புதல் என்று சொல்லலாமா? கட்டாயம் சொல்லலாம்.
அப்போஸ்தலர் காலத்தில் மேலறை வீட்டில் அப்படி தான் நடந்தது. ஒரே சமயத்தில் மூவாயிரம் பேர் கர்த்தரிடத் தில் சேர்க்கப்பட்டார்கள். அதைத் தொடர்ந்து ஆவியானவர் மனிதர்களைத் தொட்ட இடங்களில் எல்லாம் ஜனங்கள் பாவத்தை விட்டுவிலகி கர்த்தரிடமாய் சேர்க்கப்பட்டார்கள். அதுவும் எழுப்புதல்தான்.
இவைகளை எல்லாம் எழுப்புதல்கள் என்று ஒப்புக் கொண்டால், ஒவ்வொரு காலபரிமாண மாற்றத்தின் போதும், முதலாவது ஒரு எழுப்புதல் உண்டாகியிருந்தது என்பதை ஏற்றுக்கொள்ள நமக்குத் தடையில்லை. ஆனால், அதே சம யத்தில் எழுப்புதல்கள் வரும்போதெல்லாம் காலப்பரிமாண மாற்றங்கள் வரவேண்டும் என்பதும் அவசியமில்லை.
உதாரணத்துக்குச் சொல்லப்போனால், எலியாவின் காலத்தில் பின்மாறிப் போயிருந்த இஸ்ரவேலர்கள் எல்லோ ரும் வானத்திலிருந்து இறங்கின அக்கினி அற்புதத்தைக் கண்டு ஒருசேர கர்த்தரே தெய்வம் என்று ஒப்புக்கொண்டு கர்த்தரி டத்தில் திரும்பிய சமயத்தில் காலப்பரிமாணமாற்றம் எது வும் ஏற்படவில்லை. அதாவது பழைய ஏற்பாட்டுக் காலத்திலிருந்து இன்னொரு காலத்துக்கு அந்த எழுப்புதல் ஜனங் களைக் கொண்டுபோய்விடவில்லை. அது பழைய ஏற்பாட் டுக் காலத்துக்குள்ளேயே நிகழ்ந்த ஒரு எழுப்புதல்.
இதைத்தான் நான் சுருக்கமாகச் சொன்னேன். காலங் கள் துவங்கும்போது ஒரு எழுப்புதல் வந்துதான் துவங்க வேண்டும் என்பது அவசியம். ஆனால், எழுப்புதல்கள் வரும் போதெல்லாம் காலங்கள் மாறவேண்டும் என்பது அவசிய மில்லை என்று.
நாம் ஏற்கனவே பார்த்த மாதிரி, வேதாகமக் காலங் களின் துவக்கம் என்பது கர்த்தர் மனிதர்களோடு தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதிலிருந்து கணக்கிடப் படுகிறது. பழைய ஏற்பாட்டுக்காலம் துவங்கும் முன்பாக கர்த்தர் தனிப்பட்ட மனிதர்கள் சிலரோடு பேசி அவர்களை வழி நடத்தியிருப்பதைக் காண முடியும்.
ஆனால், கர்த்தர் ஒரு சமுதாயத்தையே தன்னுடன் இணைத்துக்கொண்டு, அவர்களுடன் பேசி அவர்களைத் தன் ஜனங்களென்று பிரகடனம் பண்ணி அவர்களை நடத்த ஆரம் பித்தது பழைய ஏற்பாட்டுக் காலத்தில்தான் ஆரம்பிக்கிறது.
பழைய ஏற்பாட்டுக்காலம் எங்கேயிருந்து ஆரம்பிக்கிறது?
பழைய ஏற்பாட்டுக்காலத்தின் ஆரம்பம் மிகவும் ஆச் சரியமானது. பஞ்சகாலத்தில் எகிப்துக்குப் போன இஸ்ரவேல் கோத்திரத்தார் நாளடைவில் அங்கேயே குடியேறி, பின்னர் அந்த தேசத்தில் அடிமைகளாக மாற்றப்பட்டார்கள்.
அவர்களுடைய அடிமைத்தனக்காலம் சுமார் நானூறு வருடகாலம் நீடித்தது. நானூறு வருடம் என்றால் எவ்வளவு பெரிய கால இடைவெளி என்று யோசித்துப் பாருங்கள். நாற் பது வருடம் ஒரு தலைமுறை எனக்கொண்டால், சுமார் பத்து தலைமுறை வருகிறது. நம்முடைய பத்துத் தலைமுறைக் காலம் நமக்கு ஞாபகம் இருக்க வாய்ப்பில்லை.
அதேதான் இங்கேயும். சுமார் நானூறு வருடங்களில் இஸ்ரவேலர்கள் ஏறத்தாழ தங்கள் அடையாளங்களைத் தொலைத்திருந்தார்கள். தங்கள் தனித்துவத்தை இழந்திருந் தார்கள். அவர்கள் பிறக்கும்போதே அடிமைகள் என்று கற் பிக்கப்பட்டிருந்தார்கள். படிக்கிற பிராயத்தில் அடிமைத்தன வேலைகளுக்குத்தான் பழக்குவிக்கப்பட்டார்கள். வேலைக ளைத் தாண்டி அவர்கள் உலகம் சூனியமாக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு அதைத் தாண்டி எதையும் கவனிக்க அறிவும் இல்லை, நேரமும் இல்லை.
தங்கள் முற்பிதாக்கள் ஒரு தேவனை ஆராதித்தார் கள் என்பதைச் செவிவழிச் செய்தியாகவே கேட்டிருந்திருக் கலாம். ஆனாலும், அதைக்குறித்து மேலதிகமாக யோசிக்க அவர்களுக்கு இந்த நானூறு வருட காலத்தில் அவகாசம் கிடைக்காதபடியினால் ஏறத்தாழ அவர்கள் தேவநம்பிக் கையை இழந்திருப்பார்கள்.
எச்சரித்துச் சொல்ல தீர்க்கர்களும், வழிபடக் கற்பிக்க ஆசாரியர்களும், தேவனைப் பற்றிச் சொல்ல போதகர்களும் இல்லாத நானூறு வருடங்கள் எப்படியிருந்திருக்கும் என் பதைக் கற்பனை பண்ணிப்பாருங்கள். நம் சமீபகாலத்தில் இரண்டு வருடங்கள் நீடித்த கதவடைப்புக் காலங்களே நமக்கு இவ்வளவு கஷ்டங்களைக் கொடுத்திருக்க நானூறு வருடங்கள் எத்தனை அதிகமான விளைவுகளை அவர்க ளில் ஏற்படுத்தியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.
ஏறத்தாழ அவர்கள் தங்களைத் தொலைத்துவிட்டு. தங்களைச் சார்ந்த எல்லாவற்றையும் மறந்திருந்த நிலையில் தான் மறுபடியும் அவர்களுக்கு தங்கள் தேவனைக்குறித்த விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.
கர்த்தர் மோசேயை வனாந்திரத்தில் சந்தித்தார். ஆபிரகாமுக்கு அவருடைய சந்ததியைப் பற்றிச் சொன்ன காரியங்களை நிறைவேற்றும் காலம் வந்திருந்ததால் அவர் மோசேயைக் கொண்டு அதைச் செய்ய திட்டம் செய்தார். மோசேயைக் கர்த்தர் பலப்படுத்தி, தன் திட்டத்தை முழுமை யாக வெளிப்படுத்தி, ஆபிரகாமின் சந்ததியை மீட்கப் போவதை அவர்கள் அறியச் சொல்லும்படிக் கட்டளையிட் டார். அவர்கள் அதை நம்பாதபட்சத்தில் தம்முடைய வல்ல மையை அவர்களும், அவர்களை அடிமைப்படுத்தினவர்க ளும் காணும்படி வெளிப்படுத்திக் காட்டவும் கட்டளை யிட்டார்.
தங்கள் அடிமைத்தனத்திலிருந்து கர்த்தர் தங்களை விடுவிக்கப்போகிறார் என்ற செய்தியும், அதைத் தொடர்ந்து நிகழ்ந்த கர்த்தருடைய அற்புதங்களையும் கண்டபோது. ஒட்டுமொத்த இஸ்ரவேலரும் கர்த்தரை ஏற்றுக்கொண்டு அவரைப் பின்பற்றச் சம்மதித்தார்கள்.
தாங்கள் போகிற இடம் அவர்களுக்குத் தெரியாது. ஆனாலும் அதை விசுவாசித்தார்கள். அந்த இடத்தை அடைய எவ்வளவு காலம் பிரயாணப்பட வேண்டும் என்று தெரிகர்த்தரே இவைகளை எல்லாம் அவர்கள் நடுவில் ஏற்படுத் தினார். அடிமைகளாக இருந்தவர்கள் ஒரு தேசத்தின் குடி மக்களாக மாற்றப்பட்டார்கள்.
அவர்கள் அதுவரை வாழ்ந்து வந்த கலாச்சாரத் திலிருந்து புதிய கலாச்சாரத்துக்கு மாற்றப்பட்டார்கள். அவர் கள் அதுவரை கீழ்ப்படிந்து வந்த கட்டளைகளிலிருந்து அவர் கள் கீழ்ப்படியத்தக்கதான புதிய கட்டளைகளுக்கு மாற்றப் பட்டார்கள். அவர்கள் எப்படித் தொழுதுகொள்ள வேண்டும் என்றும், யாரைத் தொழுதுகொள்ள வேண்டும் என்றும் கற் பிக்கப்பட்டார்கள். சட்டங்களும், தண்டனைகளும் கூட வரையறுக்கப்பட்டது. எல்லாமே மனிதர்களால் உண்டாகா மல் தேவனால் ஏற்படுத்தப்பட்டது. இதைத்தான் வேதாக மக் காலமாற்றம் என்கிறோம். இக்கால மாற்றம் ஏறத்தாழ ஆயிரத்து அறுநூறு வருடங்கள் நீடித்தது.
இக்காலத்தின் சட்டதிட்டங்களும், கலாச்சார முறை களும், பிரமாணங்களும், ஊழியர்கள் மற்றும் ஊழியங்க ளும் இஸ்ரவேல் கோத்திரத்தாரை மையப்படுத்தியே ஏற் படுத்தப்பட்டிருந்தன. அவர்களுக்காக மாத்திரமே அவை யெல்லாம் கொடுக்கப்பட்டிருந்தன. அதை மற்ற இனத்தா ருக்கும் கொண்டுபோகவும், சொல்லவும், பரவச் செய்யவும் கூட அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை.
இக்காலங்களுக்குப் பிறகு கர்த்தர் இஸ்ரவேலரை மாத்திரமல்ல, பிற இனத்தாரையும் தம்முடன் சேர்த்துக் கொள்ளத் திட்டம் செய்தார். அதை இயேசு கிறிஸ்துவின் இரத் தத்தினால் துவக்கம் செய்தார். இப்போது இஸ்ரவேலர்கள் மாத்திரமல்ல, இஸ்ரவேலர்கள் உட்பட இயேசுவின் இரத்தத்தை ஏற்றுக்கொண்டவர்கள் அத்தனைபேரும் அவரு டைய பிள்ளைகளாக மாறும் அதிகாரத்தைக் கொடுத்தார். இப் போது உலகத்தின் எல்லா இனத்தாருக்குமான பிரமாணங்க ளும், சட்டங்களும், ஊழியங்களும் ஏற்படுத்தப்பட வேண் டிய அவசியம் உண்டாயிற்று.
எனவே முந்தி ஏற்படுத்தப்பட்டிருந்த எல்லாவற்றி லும் எல்லா இனத்தாருக்குமான பொதுவான மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்தக் காலத்தைப் புதிய ஏற்பாட்டின் காலம் என்கிறோம். பழைய சட்டங்கள் மாற்றியமைக்கப் பட்டு உலகத்தார் யாவருக்குமான பொதுவான சட்டங்க ளும், பிரமாணங்களும் கர்த்தரால் கொடுக்கப்பட்டன. அவற்றை ஜனங்களுக்குக் கொண்டு செல்லவும், புதிதாக கர்த்தரில் இணைக்கப்பட்ட ஜனங்களைக் கர்த்தருக்குள் நடத்தவும், புதிய காலத்திற்கான ஊழியர்களும், ஊழியங்க ளும் ஏற்படுத்தப்பட்டன. ஆராதனை ஒழுங்குகள் திருத்திய மைக்கப்பட்டன. இதைத்தான் புதிய ஏற்பாட்டின் காலம் என் கிறோம்.
முந்தின பழைய ஏற்பாட்டின் காலத்திலிருந்து புதிய ஏற்பாட்டின் காலத்திற்குள் நுழைவதற்கு முன்பாக உலகம் ஒரு எழுப்புதலைச் சந்தித்தது. இந்த எழுப்புதலை புதிய ஏற்பாட்டுக் காலத்தின் நுழைவுவாயில் எனலாம்.
இந்த எழுப்புதலில்தான் புதிய ஏற்பாட்டுக் காலத்திற் கான ஜனங்கள் தோன்றினார்கள். புதிய ஏற்பாட்டுக்கான சபைகளும், புதிய ஏற்பாட்டுக் காலத்துக்கான ஊழியங்களும் தோன்றின. இக்காலத்திற்கான ஊழியர்களும் ஏற்படுத்தப்பட் டார்கள். புதிய ஏற்பாட்டுக் காலத்திற்கான சட்டங்களும், பிரமாணங்களும் கொடுக்கப்பட்டன.
இந்தக் காலமும் பழையஏற்பாட்டின் காலம் போலவே ஒரு எழுப்புதலுக்குப் பின்பாகவே தோன்றியது. இந்த எழுப் புதலானது எருசலேமிலே ஆரம்பித்தது. இந்த எழுப்புதல் என்பது பழையஏற்பாட்டுக் காலத்தின் துவக்கத்தில் தோன் றிய எழுப்புதலைப் போல ஒரே சமயத்தில் தோன்றிவிடா மல், எருசலேமில் ஆரம்பித்து தொடர்ந்து உலகத்தின் பல பகுதிகளிலும் பரவிக் கொண்டேயிருந்தது.
காரணம் நீங்கள் அறிந்ததுதான். பழைய ஏற்பாட் டுக் காலம் என்பது இஸ்ரவேல் கோத்திரத்தாருக்கானது. புதிய ஏற்பாட்டின் காலம் என்பது எல்லா உலகத்தாருக்குமா னது.
அன்று இஸ்ரவேலர்கள் ஒரு இடத்தில் இருந்ததால் அவர்களுக்கான எழுப்புதல் ஒரே சமயத்தில் உண்டாகியது. இரண்டாவது எழுப்புதலோ உலகத்தார் யாவருக்குமானது என்பதால் அது பல தேசங்களிலும் தொடர்ந்து பரவிக் கொண்டேயிருந்தது. இன்னும் பரவிக்கொண்டேயிருக்கிறது.
இந்தப் புதிய ஏற்பாட்டுக்காலம் எங்கேயிருந்து ஆரம்பிக்கிறது?