மதங்களை ஒருங்கிணைக்கும் சாத்தான்
ஒரே உலக ஆட்சிக்கு ஜனங்களை ஒருங்கிணைக்க சாத்தான் எடுத்துக்கொள்ளும் மூன்றாவது விஷயம் மதம்.
இப்போதே மதநல்லிணக்கம் பற்றி உலக மதத் தலைவர்கள் தீவிரமாகப் பேசிவருகிறார்கள். மதங்களை ஒருங்கிணைக்கும் அமைப்புக்கு இக்யுமினிக்கல் மூவ் மெண்ட் என்று பெயர். இதில் உலகமகாப் பணக்காரர்கள் அங்கத்தினர்களாயிருக்கிறார்கள். இவர்கள் மதங்களை ஒருங்கிணைக்கத் தீவிரம் காட்டுகிறார்கள்.
மதங்களையெல்லாம் ஒருங்கிணைத்து, அதின் மேல் தன்னை உயர்த்திக் கொண்டு தேவனைப் போலத் தன்னைக் காண்பித்துக் கொள்வதே சாத்தானின் நோக்கம். அதற்கு உதவிசெய்யத்தான் இந்த இயக்கங்கள்.
தன் ஆட்சிக்காலத்தில் ஆராதிக்கப்படுவது எதுவோ, தேவனெனப்படுவது எதுவோ அவைகள் எல்லாவற்றின் மேலும் தன்னை உயர்த்திக்கொள்கிறவனாகவும், தேவால் யத்தில் அமர்ந்து தன்னை தேவன் போலக் காண்பித்துக் கொள்கிறவனாகவும் இருப்பான் என்கிறது வேதம். வாசித் துப் பாருங்கள் 2 தெசலோனிக்கேயர் 2:4.
அவன் எதிர்த்து நிற்கிறவனாயும், தேவனென் னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெ துவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனு டைய ஆலயத்தில் தன்னைத்தான் தேவ னென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்.
அந்திக்கிறிஸ்துவின் ஆட்சிக்காலம் ஏழு வருடங் கள் நீடிக்கும் என்று பார்த்தோம். அந்த ஏழுவருடத்தின் முதல் மூன்றரை வருடங்களுக்கு உபத்திரவகாலம் என்றும், மீதியிருக்கும் மூன்றரை ஆண்டுக் காலங்களுக்கு மகா உபத் திரவகாலம் என்றும் வேதம் பெயர் சொல்லுகிறது.
இதன் முதல் மூன்றரை ஆண்டுக்காலங்களில் யூதர் கள் இந்த அந்திக்கிறிஸ்துவுக்கு துணையாக நிற்பார்கள். அவனை ஆட்சியில் பலமுள்ளவனாக அமரப்பண்ணி, ஒட்டு மொத்த உலகத்துக்கும் இராஜாவாக அமரப்பண்ணுவதில் யூதர்களுக்குப் பெரும் பங்கிருக்கும்.
யூதர்கள் அந்நாட்களில் அவனை தங்கள் மேசியா என்று நினைப்பார்கள். அவனும் தன்னை யூதர்களுக்கு மேசியாவாகக் காண்பித்துக்கொண்டு யூதர்களின் நம்பிக் கையான எருசலேம் தேவாலயத்தை மறுபடியும் கட்டிக் கொடுப்பான். இதுவரை கட்டமுடியாமலிருந்த தேவாலயத்தை அவன் கட்டுவிக்கிறதினால் யூதர்கள் அவனை பல மாக நம்புவார்கள். அவனுக்கு எல்லா விதங்களிலும் துணை யாகவும் நிற்பார்கள்.
ஆனால், அவனுடைய ஆட்சிக்காலத்தில் எருசலேம் தேவாலயம் கட்டி முடிந்தபிறகு, அதாவது முதல் மூன்றரை யாவது ஆண்டின் முடிவில் அவன் தேவாலயத்தில் தன்னை தேவனாகக் காண்பித்துக்கொண்டு, யாவரும் தன்னை தேவ னாக ஆராதிக்க வேண்டும் என்று கட்டளையிடுவான்.
அந்திக்கிறிஸ்துவின் இந்தச் செய்கை யூதர்களுக்கு உச்சகட்ட அதிர்ச்சியைக் கொடுக்கும். காரணம், யூதர்களைப் பொறுத்தவரையில் மேசியா என்பவர் தங்களுக்கு ராஜா வாக வருகிறவர் மாத்திரமே, ஆராதனைக்குரியவர் அல்ல. அவர்கள் யெகோவா தேவனைத் தவிர வேறு யாரையும் ஆராதிப்பதில்லை, மேசியா உட்பட
எனவே, அந்திக்கிறிஸ்துவின் இந்தச் செய்கையை அவர்கள் எதிர்க்க, அதினால் யூதர்களுக்கும், அந்திக்கிறிஸ் துவுக்கும் இடையில் பகை உண்டாகி, அவன் அவர்களை எதிர்த்து வேட்டையாடத் துவங்குவான். இதில் தேவாலயத் தில் தேவன் போல அமர்ந்து தன்னை ஆராதிக்க நிர்ப்பந்திப் பான் என்பதைத்தான் வேதம் இந்த வசனத்தில் குறிப்பிட்டுச் சொல்கிறது.
அந்திகிறிஸ்துவுக்கு இராஜா என்கிற ஸ்தானத்தை விட, தேவன் என்கிற ஸ்தானம்தான் மிகவும் பிரியம். அவன் ஒருகாலத்தில் பரலோகத்தில் ஒரு பிரதான தூதனாக இருந்தவன். தேவனையும், அவரை ஆராதிப்பதையும் அருகி லிருந்து கவனித்தவன். துவக்கமுதலே தானும் இவ்விதம் ஆராதிக்கப்பட வேண்டும் என்கிற எண்ணத்துக்கு இடம் கொடுத்து, அந்த ஆசையின் காரணமாகவே பரலோகத்தி லிருந்து துரத்தப்பட்டவன். அவனுடைய ஆதிநிலை சரித்தி ரம் பற்றி ஏசாயா 14ம் அதிகாரம் மற்றும் எசேக்கியேல் 28 ம் அதிகாரங்களில் வாசித்தறியலாம். எனவே அவனுக்கு தன்னை தேவனென்று சொல்லி ஆராதிப்பதே விருப்பம்.
இதற்காகத்தான் மத ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, எல்லா மதங்களையும் ஒருங்கிணைத்து அவை யாவற்றின் மேலும் தன்னை தேவனென்று பிரகடனப்படுத்தி, தன் குடிமக்கள் யாவரும் தன்னை ஆராதிக்கும்படி செய்யவேண் டும் என்று தீவிரமாகக் கிரியை செய்கிறான்.
இதற்கான முதல்கட்டப் பணியாக மதங்களை ஒருங் கிணைக்கும் முயற்சியில் அவன் கவனம் செலுத்தி வருகி றான். அவனுடைய காரியமாக செயல்படும் அவனுடைய மனிதர்கள் இதற்கான தீவிரப் பணியில் ஈடுபட்டு வருகிறார் கள். இதற்கான ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் சமீபமாக பதின்மூன்று முறைகள் நடந்தேறியிருப்பதாக சில தகவல் கள் தெரிவிக்கின்றன. இதற்கு மேலும் இருக்கலாம்.
இதற்கான தலைவர்கள் கூடிக்கொண்டு, உலகத்தில் உலகப்போர்களில் கொல்லப்பட்டவர்களை விட, மதத்தின் பெயரால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கைதான் அதி கம். ஆகவே, இனிவரும் நாகரீக உலகத்தில் மதத்தின் பெய ரால் கொலைகளை அனுமதிக்க முடியாது. அடிப்படையில் எல்லா மதங்களுமே ஒரே மாதிரியான கருத்தையே கொண் டிருக்கின்றன. எனவே, அவற்றின் மேற்போக்கான வேற்று மைகளைக் களைந்து அவற்றை ஒருங்கிணைக்க முயற்சிக்க வேண்டும் என்று பேசிவருகிறார்கள்.
அதின் முதல்கட்டமாக உலகத்தின் பெரிய மதங் களை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் உலகத்தின் மிகப் பெரிய மதங் களாகக் கருதப்படும் கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதங் களை ஒருங்கிணைக்க முயற்சிக்கிறார்கள். இந்த இரண்டு மதங்களுக்குமிடையில் நிறைய ஒற்றுமைகள் இருக்கின் றன. இவை இரண்டுமே யூதமதத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்டவை என்று கருதுகிறார்கள். எனவே, இந்த மூன்று மதங்களையும் இணைப்பது. பெருவாரியான மத நம்பிக்கையாளர்களை ஒருங்கிணைக்க உதவியாயிருக்கும் என்று கருதுகிறார்கள்.
இதற்காக மூன்று மதங்களையும் ஆராய்ந்து அவர்கள் ஒருவருக்கொருவர் ஒருங்கிணைய முடியாதபடி இருக் கும் வேற்றுமைகள் என்னென்ன என்று ஆராய்ந்தபோது. அவர்கள் கண்டறிந்த வேற்றுமை ஆச்சரியமானது. இயேசு கிறிஸ்துதான் அந்த தடை.
கிறிஸ்துவை கடவுளின் திரியேகத்தில் ஒருவர், அவ ரும் கடவுளே என்கின்றனர் கிறிஸ்தவர்கள். இதில் யூதர் களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் சம்மதமில்லை. இஸ் லாமியர்கள் இயேசுவை ஒரு பரிசுத்தமான மனிதராகவும், ஒரு இறைத்தூதராகவும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், அவர் கடவுள் என்பதில்தான் வேறுபடுகிறார்கள். கிறிஸ் துவை மாத்திரம் தவிர்த்துவிட்டால், இந்த மூன்று மதங்க ளும் இணைக்கப்படுவதில் எந்த தடையுமில்லை.
தவிர்ப்பது என்றால் அவரை முற்றிலும் நீக்கிவிடு வது அல்ல. அவருடைய கர்த்தத்துவத்தை நீக்கிவிடுவது. அவரை ஒரு தீர்க்கதரிசியாகவோ, தூதராகவோ கூட அங்கீ கரித்துக்கொள்ளலாம். அதற்குத் தடையில்லை.
இதற்கான ஆயத்தங்கள் துரிதகதியில் நடைபெற் றுக்கொண்டிருக்கின்றன. ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டு களாக இயேசுவைக் கடவுள் என்றே வழிபட்டு வந்த கிறிஸ் தவர்கள் மனதிலிருந்து இயேசுவை நீக்குவது உடனடியாக இயலாத காரியம். எனவே இதைக் கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறைப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.
எப்படியெனில், கிறிஸ்தவர்கள் மனதில் கிறிஸ்து வைப் பற்றிக் கொண்டிருக்கும் கர்த்தத்துவத்துக்கடுத்த எண் ணங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி, இயேசுவின் கடவுள்தன்மையைக் குறைத்துக் காட்டுவது. அவரை மனி தர்களில் கொஞ்சம் உயர்ந்தவர் என்று மாத்திரம் காட்டுவது. அவர் மனிதத்தன்மையைத்தான் கொண்டிருந்தார் என்று கிறிஸ்தவர்கள் நடுவில் போதிப்பது.
இப்படிக் கிறிஸ்தவர்களைத் தொடர்ந்து கருத்தேற் றம் பண்ணுவதன் மூலம், அவர்கள் மனதில் கிறிஸ்துவைக் கடவுள் என்கிற ஸ்தானத்திலிருந்து இறங்கப்பண்ணுவது என்ற தீவிரமான கிரியைகளில் இறங்கியிருக்கிறார்கள். இதற்காக பணத்துக்கு விலைபோகும் கார்ப்பரேட் மனநிலை கொண்ட ஊழியர்களைத் தயார் செய்து நவீன உபதேசங் களை கிறிஸ்தவர்கள் நடுவில் விதைத்து அவர்களை இயேசு கடவுள் என்கிற எண்ணத்திலிருந்து விலகச் செய்ய முயற் சிக்கிறார்கள்.
கிறிஸ்துவுக்குள் கடவுளுக்கான சுபாவங்கள் இருந் தன. ஆயினும் அவர் முழுமையான கடவுள் அல்ல என்கிற உபதேசங்களும், இயேசு மாத்திரமல்ல, நாம் ஒவ்வொருவ ரும் கடவுளர்கள்தான் என்கிற உபதேசங்களும், இயேசு வும் நம் போலவே பாவசுபாவங்களைக் கொண்டிருந்தார். உலகத்திலிருந்த காலம் முழுவதிலும் பாவத்துடன் போராடிக் கொண்டிருந்தார் போன்ற செய்திகள் இன்றைக்கு எங்கும் பரவி வருவதெல்லாம் யதேச்சையாக நடக்கும் காரியங் கள் அல்ல.
இவையெல்லாவற்றிற்கும் பின்னால் அந்திக் கிறிஸ்துவின் தந்திரங்களும், அவனுக்கு உதவிசெய்யும் கார்ப்பரேட்டுகளின் பணமும் இருக்கிறது. ஊழியர்களின் பகட்டான வாழ்க்கையையும், ஆடம்பரமான மேடைகளில் பேசும் சொல்லாடல்களிலும் மயங்கிப்போகும் மனிதர்கள் இவர்களுக்கு இணங்குகிறார்கள்.
உலக அரசியல், உலக வர்த்தகம் என்று பல்வேறு காரியங்களில் அந்திக்கிறிஸ்து கவனம் செலுத்தி வந்தாலும் அவன் கண்கள் முழுவதும் இயேசுகிறிஸ்துவின் மேலும், அவருடைய பிள்ளைகள் மேலும்தான் இருக்கிறது என்பதை மறந்துபோய்விடக் கூடாது. ஏனென்றால் அவனுடைய முழு முதல் எதிரி கிறிஸ்துவும், அவருடைய வரப்போகும் இராஜ் ஜியமும், அதற்காக வேலைசெய்யும் அவருடைய பிள்ளை களும்தான். மற்ற எதிரிகள் எல்லாம் அவனுக்கு இரண்டாம் பட்சம்தான்.
கிறிஸ்துவின் வரப்போகும் இராஜ்ஜியத்தை தடுத் தால் மாத்திரமே, தான் நீண்டகாலம் பூமியில் ஆளுமை செய்ய முடியும். இதை இழந்தால் வெறும் ஏழு வருடங்க ளுக்குள் தன் கதை முடிந்துவிடும் என்பதை அவன் அறி வான். அதினால்தான் அவன் தன் இராஜ்ஜியத்தை நிரந்தர மாக்கிக் கொள்ள இத்தனை தீவிரமாகப் பிரயாசப்படு கிறான்.
அந்திக்கிறிஸ்துவை எல்லாவற்றிலும் முன்னிலைப் படுத்துவதற்கு வேலை செய்கிறவர்களை வேதம் அந்திக் கிறிஸ்துக்கள் என்று சொல்லுகிறது. 1 யோவான் 2:18
பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது. அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள் விப்பட்டபடி இப்பொழுதும் அந்திக்கிறிஸ்துக்கள் இருக்கிறார்கள். அதினாலே இது கடைசிக்கால மென்று அறிகிறோம்.
இங்கே வரப்போகிற அந்திக்கிறிஸ்துவைப் பற்றி யும், இப்போதே இருக்கிற அந்திக்கிறிஸ்துக்களையும் பற் றிச் சொல்லப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். வரப்போகிற அந்திக்கிறிஸ்துதான் சாத்தானின் அங்கமானவன். இப் போதே இருக்கிற அந்திக்கிறிஸ்துக்கள், வரப்போகிற அந்திக் கிறிஸ்துவுக்காக வேலை செய்கிறவர்கள்.
இவர்கள் இப்போது மிகவும் தீவிரமாக அவனுக் காக ஆயத்தப்பணிகளில் செயல்பட்டு வருகிறார்கள். நாம் இவர்களைக்குறித்து மிகவும் கவனமாக செயல்பட வேண் டும்.