இனிவரும் நிகழ்வுகள்

இனிவரும் நிகழ்வுகள்

இனிவரும் நிகழ்வுகள்- ஒரு கண்ணோட்டம்

இனிவரப்போகும் கடைசிக்காலத்தில் தேவனு டைய திட்டங்களை வரிசைப்படி பார்த்துவிடுவது நம்மு டைய தெளிவான புரிந்துகொள்ளுதலுக்கு வழிநடத்தும். நாம் நிற்கிற இடத்திலிருந்தே இனி வரப்போகும் காரியங் களை ஆராயலாம்.

இப்போது நாம் கடைசிக்காலத்தின் ஆரம்பத்தில் நிற்கிறோம். கடைசிக்காலத்தின் கிரியைகள் சில காலங்க ளுக்கு முன்பாகவே தெளிவாகக் காணப்பட்டாலும், சென்ற 2020ல் உண்டான உலகம் தழுவின கொள்ளைநோயிலிருந் துதான் ஒட்டுமொத்த உலகத்திலும் காலமாற்றம் உண்டாகி யிருப்பதை மிகவும் தெளிவாகக் காணமுடிந்தது.

இந்தக் கொள்ளைநோய் முன்னெப்போதும் வந்தி ருந்த கொள்ளைநோய்களைப்போல் இல்லாமல். ஒரே சம யத்தில் உலகம் முழுவதிலும் பரவியதாகக் காணப்பட்டது. மாத்திரமல்ல, உலக அளவில் எல்லாருடைய வாழ்க்கையிலும் நிறைய மாற்றங்களையும் நடைமுறைப்படுத்தியது. முகக்கவசங்கள் அணியக் கற்றுக்கொண்டோம், வீட்டிலிருந்தே கல்வி கற்க, வீட்டிலிருந்தே அலுவலகப் பணிகள் செய்ய வீட்டிலிருந்தே ஆராதனை செய்ய என்று இதுவரை நாம் பார்த்தறியாத பலமாற்றங்களை நம்முடைய வாழ்க்கையில் ஏற்படுத்தியிருக்கிறதைக் கண்டோம்.

இதெல்லாம் கடைசிக்காலத்தின் அறிகுறிகள். அதா வது மழைக்கு முன்பாகப் பெய்யும் தூவானம் மாதிரி. இனி தொடர்ந்து நாம் கடைசிக்காலத்திற்குள் கடந்துபோக வேண்டி யிருக்கும். இதுபோல இன்னும் நிறையப் பார்க்கவேண்டி யிருக்கும்.

வேதத்தில் சொல்லியிருக்கும் கடைசிக்கால நிகழ்வு கள் ஒவ்வொன்றாக உலகம் தழுவின அளவில் நடைபெறு வதைக் காண்போம். இந்தக் கடைசிக்காலம் எத்தனை வரு டங்கள் நீடிக்கும் என்று நமக்குத் தெரியாது. இந்தக் கடைசிக் காலத்தில்தான் கர்த்தர் சொல்லியிருக்கும் இந்த கடைசிக் கால எழுப்புதலும் சம்பவிக்கும். உலகம் ஒருபுறம் கடைசிக் கால நிகழ்வுகளால் கலங்கிக்கொண்டிருக்கும். ஆனால் அதேசமயம் கர்த்தர் சொன்ன எழுப்புதலும் பற்றியெரியும்.

இது சாத்தியமா என்று நினைப்பீர்கள். உலகம் முழுவதும் நெருக்கடியிலும், பயங்கரங்களிலும் சிக்கிக் கொண்டிருக்க எழுப்புதல் எப்படி சாத்தியப்படும் என்ற நம் கேள்வி நியாயமானதுதான். ஆனாலும், நீங்கள் கடந்த காலங்களின் எழுப்புதல்கள் எல்லாவற்றையும் பார்த்தால் அவையெல்லாமே ஒரு இடுக்கமான காலத்தில்தான் உண்டா கியிருக்கிறது என்பதைக் அறிந்துகொள்ளலாம்.

பழைய ஏற்பாட்டுக்கால எழுப்புதல் பார்வோனால் கர்த்தருடைய ஜனங்களுக்கு உண்டாயிருந்த இடுக்கத்தின் காலத்தில்தான் ஏற்பட்டது. அதுவும் மோசேயின் செயல்க ளால் எரிச்சலடைந்த பார்வோன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கடுமையான பணிச்சுமையையும், கடுமையான தண்டனை களையும் கொடுத்திருந்த காலத்தில்தான் அந்த எழுப்புதல் உண்டானது.

புதிய ஏற்பாட்டுக்கால எழுப்புதலும் அப்படித்தான். ரோமர்களின் கொடுமையான ஆட்சிக்கு நடுவில், ஆசாரி யர்களின் எதிர்ப்புகளுக்கு நடுவில்தான் இந்த எழுப்புதல் உண்டானது. ரோம ஆட்சியாளர்கள் கடுமையான சட்டங் களை எழுப்புதலுக்கு எதிராக நடைமுறைப்படுத்தின போதும் அது தீவிரமாகக் பற்றியெரிந்தது. எல்லைகளைத் தாண்டி பரவியது. இவைகளைப் போலத்தான் கடைசிக்கால எழுப் புதலும் இருக்கும். கடைசிக்கால நிகழ்வுகள் உலகை ஒரு புறம் அச்சுறுத்திக்கொண்டிருக்க அதன் நடுவில் எழுப்புதல் தடையில்லாமல் பற்றிப்படரும்.

இந்த எழுப்புதல், இப்போதிருக்கும் உண்மையான சபைகள், மற்றும் உண்மையான ஊழியர்களைக் கொண்டே ஏற்படும். இவர்களைக் கொண்டு கர்த்தர் திரளான ஜனங் களை இரட்சிப்பார். தம் மந்தையில் சேர்த்துக்கொள்ளுவார்.

இந்த எழுப்புதல் இந்தியாவில் தோன்றும், பின்னர் உலகம் எல்லாம் பரவும். இந்த எழுப்புதலுக்கு காரணமான ஊழியர்களும், சபைகளும் பலதேசங்களுக்குள்ளும் தங்கள் ஊழியங்களை நிறைவேற்றுவார்கள். பழைய ஏற்பாட்டுக் கால எழுப்புதல் எகிப்தில் தோன்றியது. புதிய ஏற்பாட்டுச்கால எழுப்புதல் எருசலேமில் தோன்றியது. கடைசிக்கால எழுப்புதல் இந்தியாவில் தோன்றும் என்பது ஆச்சரியமான விஷயம் மாத்திரமல்ல, இந்தியர்களான நமக்குச் சந்தோஷ மான விஷயமும் கூட.

இந்தியாவில் தோன்றிய இந்த எழுப்புதல் பல தேசங்களிலும் பற்றிக்கொள்ளும். அந்தந்த தேசங்களிலும் இந்த தீயைக் கொண்டு எழுப்புதலைப் பரவச்செய்யும் ஊழி யர்களும், சபைகளும் எழும்புவார்கள். இந்தக் கடைசிக்காலம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது நமக்குத் தெரியாது. ஆனாலும், இந்த எழுப்புதல் உலகம் எல்லாம் பரவி தன் விளைச்சலைக் கொடுக்கும் வரைக்கும் நீடிக்கும் என்று கருத இடம் இருக்கிறது.

இந்தக் கடைசிக்காலத்தின் முடிவில் வேதாமத்தின் முக்கியமான அந்தச் சம்பவம் நடைபெறும்.

திடீரென்று வானத்தில் நெடுந்தொனியாய் ஒலிக் கும் ஒரு எக்காள சத்தம் கேட்கும். இந்தச் சத்தம் எல்லாரு டைய காதுகளிலும் கேட்காது. தேவனுடைய சித்தத்தின்படி தன் விளைச்சலைக் கொடுத்து முடித்த விதைகளின் காதுகளில் மாத்திரம் கேட்கும்.

இந்த விதைகள் குறைந்தபட்சம் முப்பது சதவீதம் விளைச்சலையாவது கொடுத்திருக்க வேண்டும். மத்திய மாக அறுபது, உச்சமாக நூறு என்று அதின் விளைச்சல்கள் இருக்கலாம்.இத்தனை விளைச்சல்களைக் கொடுத்த விதை கள் மாத்திரமே இந்த எக்காளத்தின் அழைப்பைக் கேட்கும்.

இந்தச் சத்தம் முந்திக் கர்த்தருக்குள் மரித்த பரிசுத்தவான்களின் கல்லறைகளிலும் கேட்கும். அப்பொழுது கல் லறைகள் திறந்துகொள்ளும் கர்த்தருக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். அப்பொழுது கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மேகங்களுடன், தம்முடைய தூதர்கள் சூழ மத்திய வானத்தில் வந்து நின்றுகொண்டிருப்பார்.

இது இயேசுவின் இரண்டாம் வருகையல்ல. இரண் டாம் வருகை என்பது கர்த்தர் பூமிக்கு வருவது. இது இரகசிய வருகை. இதில் கர்த்தர் பூமிக்கு வருகிறதில்லை. வானத்தில் வந்துநிற்பார். அப்பொழுது கல்லறைகள் திறக்கப்பட்டு, கர்த் தருக்குள் மரித்தவர்கள் உயிர்த்தெழுந்து அப்படியே வானத் துக்கு எடுத்துக் கொள்ளப்படுவார்கள். மேகங்களைத் தாண் டிப் பறந்துபோவார்கள். அதேசமயம், விதைகளாக இருந்து தன் விளைச்சலைக் கொடுத்து முடித்தவர்களும் ஒரு இமைப் பொழுதிலே மறுரூபமடைவார்கள். மறுரூபம் என்றால் நம் முடைய இந்த சரீரம் உயிர்த்தெழுந்த கர்த்தருடைய சரீரத் தின் சாயலுக்கு மாற்றப்படுவது.

அப்படி மாறுவதற்கு ஒரு இமைப்பொழுது நேரமே ஆகுமாம். உடனடியாக இவர்களும் வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அங்கே மத்திய வானத்தில் நின்றுகொண்டி ருக்கும் இயேசுவை சந்திப்பார்கள்.

இவர்கள் யாவரையும் தம்முடன் அழைத்துக் கொண்டு கர்த்தர் பரலோகத்துக்குப் போய்விடுவார். அங்கே ஆட்டுக்குட்டியானவரின் திருமணவிழா நடைபெறும். திரு மணம் என்பது நாம் அறிந்திருக்க மாதிரியான திருமணம் அல்ல. பரிபூரணமடைந்து கர்த்தரால் எடுத்துக்கொண்டு வரப்பட்ட அவருடைய ஜனங்கள், (இவர்களுடைய கூட்டத்துக்கு வேதம் மணவாட்டி சபை என்று பெயர் சொல்லுகி றது) இவர்கள் கிறிஸ்துவோடு இணைக்கப்படுகிறார்கள். அங்கே இவர்களுக்கு புதிய காரியங்கள் கொடுக்கப்படுகி றது. இதைக்குறித்துப் பேசவேண்டுமானால் நிறையப் பேச வேண்டிவரும். இப்போதைக்கு நமக்கு இதுபோதும்.

இந்த நிகழ்வுகள் உலகத்தின் கால அளவின்படி ஏழு வருடங்கள் நீடிக்கும். இந்த ஏழுவருட காலத்தில்தான் பூமி யில் அந்திக்கிறிஸ்துவின் ஆட்சி நடைபெறும். அந்திக் கிறிஸ்து இயேசுவுக்கென்று பூமியில் ஒருவரையும் மிச்சமாக வைத்துவிடக்கூடாது என்று தீவிரமாகச் செயல்படுவான். எல்லா ஜனங்களையும் சர்வாதிகாரமாகக் கொடுமைப்படுத்து வான். அவனுக்கு உதவி செய்ய மனிதாபிமானமற்ற உலக ஐசுவரியவான்களும், பிரபுக்களும், வர்த்தகர்களும், விஞ் ஞானிகளும் முன்வருவார்கள்.

இராணுவங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒருஉலக இராணுவம் அமைக்கப்படும். வர்த்தகங்களும், வியாபாரங் களும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே உலக வர்த்தகம் நடை முறைப்படுத்தப்படும். எல்லா மதங்களும் ஒருங்கிணைக் கப்பட்டு சர்வ மதஇயக்கம் ஏற்படுத்தப்படும். இவையெல் லாவற்றின் கட்டுப்பாடும் இந்த அந்திக்கிறிஸ்துவின் கைக் ளில் இருக்கும். இவைகளைக் கொண்டு அவன் எல்லா உலக மனிதர்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவான்.

இந்தச் சமயத்தில் கைவிடப்பட்டவர்களும், அதா வது கர்த்தரின் திட்டங்களை ஏற்றுக்கொள்ளாமலும், அதற் காக கிரியை செய்யாமலும் இருந்து தங்கள் சுயவிருப்பத்தின்படி ஊழியம் செய்தவர்களும், எழுப்புதல் திட்டத்தை ஏற்றுக்கொள்ளாமல் பரியாசம் பண்ணி அதைக் கைவிட்ட வர்களும், எழுப்புதல் வந்த சமயத்தில் உள்ளே புகுந்து அதை வியாபாரமாக்கிக் கொள்ள தந்திரம் செய்தவர்களும் இந்த பட்டியலில் வருகிறார்கள்.

இவர்கள் கைவிடப்பட்டிருக்கும் இந்தக் காலத்தில் சிலர் சாத்தானின் ஆட்சிக்கு இணங்கிப் போய்விடுவார்கள். அவர்களில் சிலர் இத்தனை பெரிய காரியத்தை இழந்து விட் டோமே என்று உணர்வடைந்தவர்களாய் வைராக்கியம் டைந்து அந்திக்கிறிஸ்துவின் ஆட்சியில் அவனை எதிர்த்து இரத்தசாட்சிகளாக மரிப்பார்கள்.

எழுப்புதல் காலத்தில் எழுப்புதலடைந்து கர்த்தருக் கென்று வைராக்கியமாக காத்திருக்கும் ஒரு கூட்டத்தார். இவர்கள்தான் கர்த்தரால் விளைச்சல்கள் என்று சொல்லப் பட்டவர்கள்.

இவர்கள் இந்த அந்திக்கிறிஸ்துவின் ஆட்சிக்காலத் தில் சாத்தானின் எந்தவிதமான அச்சுறுத்தல்களுக்கும் பயப் படாமல் தங்கள் விசுவாசத்தினாலே அவனுக்குக் கீழ்ப்படி யாமல் தங்களை கர்த்தரின் வருகைக்காக காத்துக்கொள் வார்கள். இவர்கள் கைவிடப்பட்டவர்கள் அல்ல. கர்த்தருக் காக மீதமாக வைக்கப்பட்டிருக்கிறவர்கள்.

சாத்தானின் இந்த ஏழுவருட ஆட்சிக்காலத்திலும், கர்த்தர் இவர்களை ஆச்சரியமாகப் பிழைப்பூட்டுவார். கர்த் தரே இவர்களைப் பாதுகாத்துக்கொள்ளுவார். வனாந்திர யாத்திரைக் காலத்தில் முப்பது லட்சத்திற்கும் அதிகமான இஸ்ரவேல் ஜனங்கள் விதைக்கவுமில்லை, அறுக்கவுமில்லை ஆனாலும் அவர்கள் திருப்தியாகப் புசித்தார்கள். அவர்கள் எதையும் விற்கவுமில்லை. எதையும் வாங்கவு மில்லை. ஆனாலும் அவர்களைக் கர்த்தர் நடத்தினார்.

அதுபோலவே இந்த ஜனங்களைக் கர்த்தர் இந்தக் காலகட்டங்களில் இயற்கைக்கு மேற்பட்ட விதத்தில் அதிசய மாய் நடத்திவருவார். சாத்தானின் எந்தவிதமான தந்திரங்க ளுக்கும் இவர்களை விலக்கிக் காத்துக்கொள்ளுவார். எத்த னைதான் சாத்தான் விஞ்ஞான உபகரணங்களைக் கொண்டு ஜனங்களைக் கண்காணிக்கும் திட்டங்களை வகுத்திருந்தா லும், கர்த்தர் இவர்களைக் அவன் கண்களுக்கு தட்டுப்படா மல் தப்புவித்துக் காத்துக்கொள்ளுவார்.

இந்த ஏழுவருட அந்திக்கிறிஸ்துவின் உபத்திரவ காலங்களின் முடிவில் கர்த்தர்தாமே இந்தப் பூமிக்குத் திரும்ப வருவார். அப்படி அவர் திரும்பவரும்போது, அவருடன் அவருடைய பிரதான தூதர்கள், அவருடைய தூதர்களின் சேனைகள் மற்றும் அவருடன் கூட எடுத்துக்கொள்ளப்பட்ட பரிசுத்தவான்கள் யாவருமே திரும்பி வருவார்கள்.

அவரை எதிர்க்கவும், அவரோடே யுத்தம் செய்ய வும் சாத்தானும் தன்னுடைய படையை அவருக்கு எதிராகக் கூட்டுவான். அதில் அவனோடு கூட இருந்து அவனுடைய ஆட்சிக்கு உதவிசெய்த பொல்லாத மனிதர்கள், பெரும் பணக்காரர்கள், ஒருங்கிணைக்கப்பட்ட ஒரே உலக இராணுவ சேனை, மற்றும் சாத்தானின் படைகள், பாதாளத்தின் பொல் லாத ஆவிகள் என்று ஒரு பெரிய திரள் கூட்டமே அவரை எதிர்த்து நிற்கும்.

இந்தச் சந்திப்பு மெகிதோ என்ற பள்ளத்தாக்கில் நடைபெறும் என்று கர்த்தருடைய வேதம் சொல்லுகிறது. இந்த யுத்தத்தின் முடிவில் கர்த்தர் சாத்தானையும் அவன் தூதர்களையும், அவனுக்கு உதவி செய்தவர்களையும், அவன் ஆளுமையை ஏற்றுக்கொண்ட யாவரையும் சிறைப் பிடிப்பார். அவர்களை பாதாளத்தின் சங்கிலிகளில் கட்டி பாதாளத்தில் சிறைவைப்பார். வெளிப்படுத்தின விசேஷம் 19:11-21 வரைக்குமுள்ள வசனங்களில் இந்த நிகழ்வு சொல் லப்பட்டிருக்கிறது. வாசித்துப் பாருங்கள்.

இந்த யுத்தத்திற்குப் பிறகு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியின் மேல் தன்னுடைய ஆட்சியை அமைப் பார். அவருடைய சிங்காசனம் தாவீதின் நகரத்திலிருக்கும். ‘அவருடைய தேவாலயம் சீயோன் மலையின் மேலிருக்கும். அவர் அதில் பிரதான ஆசாரியராயுமிருப்பார்.

விதைகளாக இருந்து ஒரு மகாப்பெரிய எழுப்புத லுக்கு காரணமாக இருந்தவர்களை கர்த்தர் தம்மோடு கூட ஆளுமை செய்யும்படிக்கும், ஆசாரியத்துவ ஊழியத்திற்கும் நியமிப்பார். இவர்கள் அவருடனேகூட ஆளுமை செய்வார் கள். அவரவர் கிரியைகளுக்குத்தக்கதாக அவர்களுக்கு அவருடைய ஆட்சியில் ஸ்தானங்கள் வழங்கப்படும்.

எழுப்புதலில் விளைச்சல்களாக அறியப்பட்டவர்கள். சாத்தானின் ஆட்சிக்காலத்திலும் அவன் தந்திரங்களுக்குள் சிக்கிவிடாமல் பாதுகாக்கப்பட்டவர்கள் கர்த்தருடைய ஆட்சி யில் குடிமக்களாக இருப்பார்கள். அவர்களுக்கு இந்தப் பூமி யின் மேல் வாழ்க்கை அமைந்திருக்கும். அவர்களுடைய வம்சம் விருத்தியாகும். இவர்கள் நடுவில் மரணம் இருக்காது. ஆனால் பிறப்பு இருக்கும். இந்த ஆட்சி ஆயிரம் டங்கள் இந்த பூமியின் மேல் நீடிக்கும். கர்த்தர் ஒழுங்கற்றுப் போன எல்லாவற்றையும் சீராக்குவார். இந்தக் காலகட் டத்தில் பூமியின் மேல் தீங்குசெய்வார் யாரும் இருக்க மாட் டார்கள். இன்னும் ஆயிரம்வருட அரசாட்சி பற்றி நிறையப் பேசலாம். ஆனால் நமக்கு இங்கே சமயமில்லை. இந்தக் காலகட்டத்தில் பூமியில் குடிமக்களாக இருக்கிற இவர் களால் பூமியில் ஜனங்கள் கடற்கரை மணலத்தனையாய் பெருகுவார்கள். 

ஆயிரம் வருட முடிவில் சாத்தான் கொஞ்சக்காலம் விடுவிக்கப்படுவான். அந்தச் சமயத்தில் அவன் பூமியின் மேல் ஏறிவந்து இங்கே பெருகியிருக்கும் ஜனங்களில் திர ளானவர்களை வஞ்சிப்பான்.

அவனுக்குக் கொடுக்கப்படும் கொஞ்சக்கால விடு தலை நாட்களின் முடிவில் கர்த்தர் அவனை நிரந்தரமாக அழிப்பார். அவனை இரண்டாம் மரணமாகிய அக்கினியும், கந்தகமும் எரிகிற கடலில் தள்ளிப்போடுவார். அதோடு சாத் தானின் சரித்திரம் முற்றுமாக முடிகிறது.

அதற்குப் பின்பாக கர்த்தர் புதிய வானத்தையும், புதிய பூமியையும் உண்டாக்குவார். அந்த பூமியை பரலோ கத்தோடு இணைப்பார். இந்தப் புதிய வானத்திலும், புதிய பூமியிலும் கிறிஸ்துவே அதிகாரம் பெற்றிருப்பார். இவையி ரண்டும் மனிதர்களுக்கானது. இங்கே மனிதர்களின் இராஜா வாக கர்த்தர் நித்தியகாலமாக வீற்றிருப்பார்.

இந்தப் பூமியில் இரண்டாம் முறை சாத்தானுடைய வஞ்சகம் பூமியில் வந்தபோது அவனுடைய வஞ்சகத்தில் விழுந்துபோகாதவர்கள், மற்றும் கிறிஸ்துவோடு கூட ஆயிரம் வருட அரசாட்சியில் ஆளுமை செய்தவர்கள், ஆசாரி யத்துவம் செய்தவர்கள் யாவரும் பங்குபெறுவார்கள்.

சாத்தான் இரண்டாம் முறையாக பூமியின் மேல் ஏறி வந்து ஜனங்களை வஞ்சிக்கும்போது கூட, உயிர்த்தெ ழுந்து கிறிஸ்துவோடு திரும்பி வந்த ஒருவர் கூட அவனால் வஞ்சிக்கப்பட மாட்டார்கள். அந்த வஞ்சகம் பூமியின் குடி கள்மேல்தான் நடைபெறும். அதிலும் எழுப்புதலில் எழுப் பப்பட்ட விளைச்சலின் முதற்பலனானவர்களும் வஞ்சிக்கப் பட மாட்டார்கள்.

இதுதான் இனிவரப்போகும் காரியங்களின் பட் டியல். எத்தனை மகாப்பெரிய திட்டங்கள் என்று கவனி யுங்கள். இந்த மகாப்பெரிய திட்டத்திற்கு இனிவரப்போகிற எழுப்புதல் எத்தனை இன்றியமையாதது என்பதையும் கவ னியுங்கள். இந்தத் திட்டங்களுக்கு அஸ்திபாரமே இந்த எழுப்புதல்தான்.

இத்தனை பெரிய ராஜரீகத் திட்டத்தில் உங்களுக் கும் எனக்கும் ஒரு பங்கைக் கர்த்தர் நியமித்திருக்கிறார் என்பதுதான் சிறப்பான விஷயம்.

நாம் இதை ஏற்றுக்கொண்டு, கர்த்தரின் இந்தத் திட் டத்திற்காக நம்மை ஒப்புக்கொடுத்து அவர் சித்தம் நிறைவே றச் செயல்பட்டால் நாம் பாக்கியவான்களாக இருப்போம். இந்தப் பெரிய பாக்கியத்தை நீங்களும் அடையக் கருதித் தான் இந்தப் புத்தகத்தை உங்கள் கைகளில் தந்திருக்கிறேன்.

நீங்கள் ஞானமுள்ளவர்கள். நன்மையானதையும், நித்தியமானதையும் தெரிந்துகொள்ளுவீர்கள் என்று உங்க ளைக் குறித்து எனக்கு எப்பொழுதும் நம்பிக்கையுண்டு.. தேவனுடைய திட்டத்தை வாசிக்கும் உங்கள் அனைவரை யும் இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்படுகிறவர் களாக மத்தியவானத்திலும், கர்த்தரோடு கூட ஆளுகை செய்கிறவர்களாக ஆயிரம்வருட அரசாட்சியில் பங்குபெறு கிறவர்களாகவும், நித்திய, நித்தியமாய் கர்த்தருக்குள் நிலைத் திருக்கிறவர்களுமாய் சந்திப்பேன் என்று கர்த்தருக்குள் நிச்ச யித்திருக்கிறேன்.

உலகம் தன்னுடைய ஓட்டத்தின் கடைசிச் சுற்றில் இருக்கிறது. இதுவரை ஜெயமாய் ஓடின நாம் பூரணமடைய இன்னும் கொஞ்சம்தான் இருக்கிறது. இந்தக் கடைசிச் சுற்றில் நாம் செய்வதற்கு இறுதிகட்டப் பணிகள் மாத்திரம் மீதியாயிருக்கிறது. முன்னானவைகள் விரைவாகவும், தீவிர மாகவும் நெருங்கி வருகிறது. எனவே

எதையும் விட்டுவிடாதீர்கள். 

எதையும் இழந்தும் விடாதீர்கள்.

-கர்த்தராகிய இயேசு வருகிறார்.

மாரநாதா! கர்த்தராகிய இயேசுவே சீக்கிரம் வாரும். ஆமென்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *