எழுப்புதலின் ஆயத்தங்கள்

எழுப்புதலின் ஆயத்தங்கள்

எழுப்புதலின் ஆயத்தங்கள்

சாத்தானின் ஆளுமைக்கான ஆயத்தங்கள் இப்படி யாயிருக்கிறதென்றால், இயேசுவின் இராஜ்ஜியத்துக்கான ஆயத்தங்கள் இன்னும் தீவிரமாயிருக்கிறது.

இந்த பூமியின் மேல் ஆயிரம் வருடங்கள் நீடித் திருக்கப்போகும் தம்முடைய இராஜ்ஜியத்தின் ஆயத்தப் பணிகளுக்காக அவர் தீவிரமாகக் கிரியை செய்கிறார். தம் ராஜ்ஜியத்தை பூமியின் மேல் ஸ்தாபிக்க வேண்டுமானால் அதற்கு அவருக்கு தன்னை ஏற்றுக்கொண்ட ஜனங்கள் வேண்டும். அவருடைய இராஜ்ஜியம் பூமியெங்கும் வியாபித் திருக்கப் போவதால், அவருக்கு தம்மை ஏற்றுக்கொண்ட ஜனங்கள் உலகத்தின் எல்லா இனங்களிலிருந்தும், பாஷைக் காரர்களிலிருந்தும், தேசத்தாரிலிருந்தும் எழும்பவேண்டும்.

இதற்கான வழிதான் எழுப்புதல். கடைசிக்கால எழுப் புதல். இந்த எழுப்புதலானது அகில உலகத்திலும் ஏற்பட் டால்தான் நாம் மேற்சொன்ன மாதிரி எல்லா இனங்களிலிருந்தும், பாஷைக்காரரிலிருந்தும், தேசத்தாரிலிருந்தும் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எழும்பமுடியும். எனவே, கடைசிக்கால எழுப்புதல் என்பது ஒரு உலகம் தழுவிய எழுப்புதலாயிருக்கும்.

இந்த கடைசிக்கால எழுப்புதலானது இந்தியாவி லிருந்து தோன்றி, உலமெல்லாம் வியாபிக்கும் என்று சொல் லப்படுகிறது. உலகளவில் புகழ்பெற்ற பல ஊழியர்களும், தீர்க்கதரிசிகளும் இந்த எழுப்புதலைப் பற்றி முன்னுரைத் திருக்கிறார்கள்.

உலகத்தின் முதல் எழுப்புதல் எகிப்தில் தோன்றி யது. இரண்டாவது புதிய ஏற்பாட்டுக்கால எழுப்புதல். இது எருசலேமில் தோன்றி, பின்னர் உலகளவில் பரவியது. கடை சிக்கால எழுப்புதலோ, இந்தியாவில் தோன்றி, உலகமெல் லாம் பரவப்போகிறது.

இந்த எழுப்புதலுக்கு மிக முக்கியமான நோக்கமி ருப்பதால், அதாவது இயேசுவை உலகத்தின் மேல் இராஜா வாக அமரப்பண்ணும் நோக்கமிருப்பதால், இந்த எழுப்புதல் மற்றெல்லா எழுப்புதலிலிருந்தும் மிகவும் வித்தியாசப்பட்டி ருக்கும். இந்த எழுப்புதலில் எழும்பும் ஜனங்களும் மற் றெல்லா எழுப்புதல்களில் எழும்பின ஜனங்களை விடவும் மாறுபட்டிருப்பார்கள். அதீத வல்லமையிலும், அபரிமித மான வரங்களினாலும் நிறைந்திருப்பார்கள்.

இயேசுவின் இராஜ்ஜியம் பூமியின் மேல் வருவ தற்கு முன்பாக ஏழுவருடம் பூமி முழுமையும், சாத்தானின் ஆளுமைக்கு உட்பட்டிருக்கும். கடைசிக்கால எழுப்புதலில் எழும்பின கர்த்தருடைய பிள்ளைகள், சாத்தானின் ஆட்சிக்காலத்தைக் கடந்தே இயேசுவின் ஆளுமைக்காலத்துக்கு வரவேண்டியிருப்பதால். அவர்கள் சாத்தானின் சகல அதி காரங்களையும் எதிர்க்கவும். மேற்கொள்ளவும், ஜெயிக் கவும் திராணியுள்ளவர்களாக இருக்கவேண்டியது அவசி யம். இவர்கள் வெறுமனே எழுப்புதலடைந்து கர்த்தரைப் பின்பற்றி வழிநடக்கிற கூட்டமோ, தேவனை ஆராதித்து சபை நடத்திவிட்டுக் கலைகிற கூட்டமோ அல்ல.

இவர்கள் ஜெயிக்கிற கூட்டம்.

சாத்தானையும், அவன் திட்டங்களையும் முறிய டித்து மேற்கொள்ளுகிற கூட்டம். கர்த்தரின் வருகையில் சாட்சியாக நிற்கவும், சாட்சிகளை எழுப்பவும் கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்ட கூட்டம்.

இப்படிப்பட்ட கர்த்தருடைய பிள்ளைகளை பிறப் பிப்பதுதான் இந்தக் கடைசிக்கால எழுப்புதலின் நோக்கம். இந்தக் கடைசிக்கால எழுப்புதல் காலத்தில் கர்த்தருடைய ஆவியானவர் வித்தியாசமாக கிரியை செய்கிறதைப் பார்க்க முடியும்.

கடைசிக்கால எழுப்புதல் நல்ல விஷயம்தான். ஆனால் நாம் ஏன் இப்போது அதைப் பேசிக்கொண்டிருக் கிறோம் என்று நீங்கள் நினைக்கலாம். காரணம் இருக்கிறது.

முதலாவது நாம் கடைசிக்கால எல்லைகளுக்குள் நுழைய ஆரம்பித்து விட்டோம். மழை வருவதற்கு முன் பாக தூவானம் பெய்கிறதைப் போல, கடைசிக்காலத்தின் நிகழ்வுகள் இங்கொன்றும், அங்கொன்றுமாக அரங்கேறத் துவங்கியிருப்பதைக் கண்கூடாகக் காணமுடிகிறது. எந்த நேரத்திலும் இந்த எழுப்புதல் தேசத்தின் மேல் வந்துவிட லாம் என்று தோன்றுகிறது. கடைசிக்காலத்தின் மகாப் பெரிய நிகழ்வே கடைசிக்காலத்தின் எழுப்புதல்தான். இத்தனை வருட ஆயத்தங்கள். இத்தனை கோடிப்பேரின் ஜெபங்களின் ஆயத்தத்தில் வெளிப்படும் இந்த எழுப்புதல் உண்மையிலேயே மகிமையானதாகத்தான் இருக்கும்.

இரண்டாவதாக இந்த எழுப்புதலில் உங்களுக்கும் எனக்கும் ஒரு பிரதான பங்கிருக்கிறது. இதை வாசிக்கும் நீங்கள் ஒரு சபைத் தலைவராகவோ, சபையின் போதகரா கவோ இருக்கும்பட்சத்தில் உங்களுக்கு இரண்டத்தனை யான பங்கிருக்கிறது.

காரணம், எழுப்புதலானது சபைகளில்லாமல் சாத் தியமாகாது. எழுப்புதலில் சபைகளின் பங்குதான் அதிகம். கடைசிக்கால எழுப்புதல் சபைகளின் வழியாகத்தான் பிறக் கும். முதல் நூற்றாண்டு காலத்தின் எழுப்புதலுக்கும். கடைசிக்கால எழுப்புதலுக்கும் வித்தியாசமிருக்கிறது.

முதல் நூற்றாண்டு எழுப்புதல் வெளியில் ஆரம் பித்து, சபையில் வந்து முடிந்தது. ஆனால் கடைசிக்கால எழுப்புதல் சபையில் ஆரம்பித்து வெளியில் வந்துமுடியும். சபையில் ஆரம்பிக்கும் என்பது புரிகிறது. ஆனால் வெளி யில் வந்து முடியும் என்பதுதான் புரியவில்லை என்பீர்களா னால் அதற்கான விடை கொஞ்சம் கருகலானது. எழுப்பு தலைத் துவக்கின சபைகள். இடையிலேயே காணப்படா மல் போய்விடும். ஆனால் எழுப்புதல் பின்னும் தொட ரும். அதுபற்றி பின்னால் விபரம் இருக்கிறது. பொறுமை யாய் வாசியுங்கள்.

கடைசிக்கால எழுப்புதலில் சபைகளின் பங்குதான் பிரதானமானது. சபைகளைத் தாண்டி வெளியிலிருந்து ஏற் படும் எழுப்புதல்களோ, சபைக்கு சம்மந்தப்படாமல் தனித்து இயங்கும் எழுப்புதல்களோ நிலைக்க வாய்ப்பில்லை. எழுப்புதல்களில் சபையின் பங்கு இன்றியமையாதது. சபை கள் இல்லாமல் எழுப்புதல் என்பது கூடையில்லாமல் மீன் பிடிக்கச் செல்வதற்கு சமம்.

எழுப்புதலில் சந்திக்கப்பட்ட மனிதர்களைப் பாது காக்கவும், அவர்களை கர்த்தர் விரும்புகிற வண்ணமாக வளரச் செய்யவும், தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றும் வைராக்கியமுள்ளவர்களாக பலப்படுத்தவும் சபைகள் அவசியம்.

கடைசிக்கால எழுப்புதலில் எழுப்பப்பட்டவர்களை பாதுகாப்பது சபைக்கு முக்கியமான கடமை. இந்தக் காலத் தில்தான் கள்ளத் தீர்க்கதரிசிகளும், கள்ளவேலையாட்களும், கள்ளக்கிறிஸ்துக்களும் திரளாக எழும்பி கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதான பெரிய அடையாளங்களைச் செய்வார்கள். இந்த மாயங்களினால் எல்லாம் மயங்கிவிடாமல் எழுப்புதலில் புதிதாக கர்த்தருக் குள் இணைக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பது சாதாரண மான வேலையல்ல. அதற்கு பலமான சபைகள் வேண்டும். கள்ளர்களுக்குத் துணைபோகிற சபைகள் அல்ல. கர்த்தருக் காக கிரியை செய்கிற சபைகள் வேண்டும்.

எழுப்புதல் என்று தோன்றிவிட்டால் அந்த இடங் களைக் குறிவைத்துக் கள்ளவேலையாட்கள் படையெடுப் பது முதல் நூற்றாண்டுக் காலத்திலேயே ஏற்பட்ட நிகழ்வு தான். காரணம், அங்கே புதிதாக கர்த்தரை ஏற்றுக்கொண்ட ஜனங்கள் திரளாக இருப்பார்கள். அவர்கள் புதியவர்கள் ஆனபடியினால் வேதத்திலோ, தேவனுக்கடுத்த காரியங்க ளிலோ ஆழமான புரிதல் இருக்காது. புதிதாகப் பிறந்த ஒரு குழந்தையின் மனோபாவத்திலேயே இருப்பார்கள். இவர் களை அதை, இதைச் சொல்லி வஞ்சிப்பது சுலபமான காரி யம்.

ஆகவே, எழுப்புதல்கள் எங்கே நடக்கிறது என் பதை இப்படிப்பட்ட கள்ளவேலையாட்கள் மிகவும் கவன மாக கண்காணித்து வருவார்கள். சமீபத்தில் நைஜீரியா தேசத்தில் எழுப்புதல் உண்டா கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஜனங்கள் கூட்டம் கூட்டமாக கர்த்தரை ஏற்றுக்கொள்கிறார்கள் என்கிறார்கள். இது கடைசிக்கால எழுப்புதல் இல்லை. காலங்களுக்கு இடையில் உண்டாகிற எழுப்புதல்களில் ஒன்று.

ஒரு ஆராதனையில் ஜனங்கள் சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரத்துக்கு அமர்ந்திருப்பதாகச் சொல்கிறார்கள். புதிதாக எழுப்புதலடைந்தவர்கள் ஒருவிதப் பரவச நிலை யிலேயே இருப்பார்கள். இந்தச் சமயத்தில் அவர்களைச் சரியாக முறைப்படுத்தி வழிநடத்தாவிட்டால் அவர்கள் பின்மாறிப்போகவோ, கள்ளர்களால் வஞ்சிக்கப்பட்டுப் போகவோ வாய்ப்பிருக்கிறது. இவர்களைக் குறிவைத்து வஞ்சித்தால் சுலபமாக அவர்களை வஞ்சித்துவிடலாம்.

இப்போது சில தேசங்களிலுள்ள கார்ப்பரேட் ஊழி யர்களும், கள்ள ஊழியக்காரர்களும் நைஜீரியாவைக் குறி வைத்து களமிறங்க ஆரம்பித்திருக்கிறார்கள். அநேகருடைய ஊழியத்திள் கிளை அலுவலகங்கள் நைஜீரியாவில் திறக்கப்படுகின்றன. நைஜீரியாவில் இவர்கள் பரபரப்பாக இயங்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

நைஜீரியா கர்த்தரை அறியாதிருந்த காலத்தில் இவர்களில் யார் ஒருவரும் அந்த தேசத்தை நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். அதற்காக தங்கள் வாழ்க் கையில் ஒரு நிமிஷம் கூட ஜெபித்திருக்க மாட்டார்கள். ஆனால் இப்போது தேசம் கனிகொடுக்கிறது என்று தெரிந்த வுடன் அதைக் குறிவைத்துப் புறப்பட ஆரம்பித்து விட்டார் கள்.

இதே நிலைதான் நாளைக்கு எழுப்புதல் உண்டாகிற காலத்திலும் நடக்கும். கள்ளர்களும், கபட்டு வேலையாட்க களும் திரளாக எழும்பி, புதிதாக எழுப்புதலடைந்தவர்களைக் குறிவைத்து வஞ்சிக்கப் புறப்படுவார்கள். இப்படிப்பட்ட ஆபத்திலிருந்து அவர்கள் காக்கப்பட வேண்டுமானால் நல்ல சபைகளின் பணிகள் அத்தியாவசியம். கர்த்தருடைய வசனத்திலும், அபிஷேகத்திலும் நிறைந்திருக்கிற சபைத் தலைவர்கள் வேண்டும்.

 

Leave a Reply