எழுப்புதலின் ஏழு வகைகள்
புதிய ஏற்பாட்டுக்காலத்தில் எழுப்புலடைந்தவர் கள் உடனடியாகச் சபையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். சபைக்கு அவர்களை கிறிஸ்துவுக்குள் வளர்ப்பதற்கான உத்திரவாதம் கொடுக்கப்பட்டிருந்தது. சபைக்குக் கொடுக் கப்பட்ட உத்திரவாதத்தைக் குறித்து எபேசியர் 4:11-15 வரைக்கும் உள்ள வசனங்கள் விளக்குகிறதைக் கவனியுங் கள்.
மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும், அறி விலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவி னுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக் குத்தக்க பூரண புருஷராகும் வரைக்கும்.
பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும் பொருட்டு. சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தியடைவதற்காகவும்,
அவர் சிலரை அப்போஸ்தலராகவும், சில ரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவி சேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் ஏற் படுத்தினார்.
நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷ ருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுள்ள போதகமாகிய பலவித காற்றி னாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகி றவர்களாயிராமல்,
அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு. தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றி லேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படி யாக அப்படிச் செய்தார்.
புதிய ஏற்பாட்டுச் சபைகளில் புதிதாக இரட்சிக்கப் பட்டவர்களுக்குச் செய்வதற்கான பலவிதமான பணிகள் கொடுக்கப்பட்டிருந்தன. சின்னப் பட்டியல் தருகிறேன். வாசித் துப் பாருங்கள்.
- குமாரனைப் பற்றும் அறிவிலும், விசுவாசத்தி லும் ஒருமனப்பட வேண்டும்.
- கிறிஸ்துவின் நிறைவான வளர்ச்சியின் அளவை அடைய வேண்டும்.
- 3.பரிசுத்தவான்கள் சீர்பொருந்த வேண்டும்.
- சுவிசேஷ ஊழியம் நிறைவேற்றப்பட வேண்டும்.
- 5.சபையார் பக்திவிருத்தியடைய வேண்டும்.
- 6.கள்ளபோதகங்களிலிருந்து தப்புவிக்கப்பட வேண்டும்.
- 7. சத்தியத்தைக் கைக்கொள்ளப் பண்ண வேண்டும்.
இதற்கொப்பாகவே, கடைசிக்கால எழுப்புதலில் எழுப்பப்பட்ட ஜனங்களுக்குச் செய்வதற்கான இன்னும் பல பணிகள் சபைக்கு கொடுக்கப்படும்.
அவர்கள் உலகை ஜெயிக்கவும், சாத்தானை எதிர்க் கவும் திராணியுள்ளவர்களாக உருவாக்கப்பட வேண்டும். ஆவிக்குரிய ஆயுதங்களைப் பயன்படுத்தக் கற்பிக்கப்பட வேண்டும். காலங்கள் வரும்போது கர்த்தர் அவைகளைக் குறித்தும் சபைகளுக்கு அதிகம் வெளிப்படுத்துவார்.
எழுப்புதலை மையமாக வைத்து இத்தனை பணி கள் சபைக்கு இருக்குமானால், சபையானது இனி வரப் போகும் எழுப்புதலைப்பற்றி சரியாக புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
இனி வரப்போகும் எழுப்புதலும் சரி. இந்த எழுப்பு தலின் நோக்கமும் சரி, முன்னெப்போதிலும் வெளிப்பட்ட எல்லா எழுப்புதல்களை விடவும் வித்தியாசமானது என்று பார்த்தோம்.
அப்படியானால் அந்த எழுப்புதலைக் கையாள போகிற சபையானது, ஒரு சாதாரண எழுப்புதலைக் கையாள் கிறதைப் போலக் கையாளாமல் அதைச் சரியான விதத்தில் கையாளவேண்டும். அதற்கு முதலாவதாக அந்த எழுப்புதலைப் பற்றிய சில விபரங்கள் தெரிந்திருக்க வேண்டும்.
வரப்போகும் எழுப்புதலுக்கு ஏழுவிதமான பரிமா ணங்கள் இருக்கிறது. எழுப்புதல் ஒன்றுதான். ஆனால் அது ஏழுவிதங்களில் வெளிப்படும். முதலாவதாக அந்த ஏழு விதமான எழுப்புதல்கள் என்னவெல்லாம் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
இரட்சிப்பின் எழுப்புதல், சுத்திகரிப்பின் எழுப்புதல், வசன எழுப்புதல், வல்லமையின் எழுப்புதல், சுவிசேஷ எழுப்புதல், தொழுகை மற்றும் ஆராதனைகளின் எழுப்பு தல், திருச்சபைகளின் எழுப்புதல் என்பவையே அந்த ஏழு விதமான எழுப்புதல்கள்.
1. இரட்சிப்பின் எழுப்புதல் :
எழுப்புதலில் பிரதான மானது இரட்சிப்புதான். இரட்சிப்பு இல்லாவிட்டால் எழுப்பு தல் என்பதற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும். வெறு மனே திரள் ஜனங்கள் கூட்டம் கூடுவது எழுப்புதல் ஆகி விடாது. கூடிவந்த ஜனங்கள் இரட்சிக்கப்பட்டால் மாத்தி ரமே அது எழுப்புதல் ஆகும்.
கடைசிக்கால எழுப்புதலில் இந்த பிரதானமான எழுப்புதல் எல்லா இடங்களிலும் தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டேயிருக்கும். கர்த்தருடைய வார்த்தையைக் கேட்கிற வர்கள் அதை ஆவலுடன் ஏற்றுக்கொண்டு, தங்களைக் கர்த் தரின் இரட்சிப்புக்கு ஒப்புக்கொடுப்பார்கள். இதைச் செய்ய ஒரு பிரம்மாண்டமான மேடையோ, ஞானார்த்தமான பிரசங் கங்களோ, புகழ்பெற்ற போதகர்களோ தேவைப்படமாட்டார் கள். இக்காலத்தில் இரட்சிப்பு எவர் மூலமும், எவ்விடத்திலும் உண்டாகும்.
ஜனங்கள் பாவ உணர்வடைந்து மனம்திரும்பிக் கொண்டேயிருப்பார்கள். வீதிகளில், வீடுகளில், சந்தை வெளிகளில், சபைகளில் என்று எல்லா இடங்களிலும் கூட இந்த எழுப்புதல் உண்டாகலாம். திரளாக இரட்சிக்கப்படு கிறவர்கள் பெருகிக்கொண்டேயிருப்பார்கள். கடைசிக்கால எழுப்புதலில் உண்டாகும் இரட்சிப்பின் எழுப்புதல் பற்றி ஏசாயா 52:10ல் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது.
எல்லா ஜாதிகளின் கண்களுக்கு முன்பாக வும் கர்த்தர் தம்முடைய பரிசுத்த புயத்தை வெளிப்படுத்துவார்: பூமியின் எல்லைகளில் உள்ளவர்களெல்லாரும் நமது தேவனு டைய இரட்சிப்பைக் காண்பார்கள்.
இந்த தீர்க்கதரிசன வார்த்தை உரைக்கப்பட்ட காலத் தில், தேவனும், அவருடைய இரட்சிப்பும், வல்லமையும் தங்க ளுக்கு மாத்திரமே உரியது என்று இஸ்ரவேலர்கள் சொந்தம் கொண்டாடிக் கொண்டிருந்த காலம். அந்த நாட்களில் இரட் மீட்பும் எல்லா உலகமக்களுக்கும் பொதுவானவை என்ற சிந்தனைக்கே வாய்ப்பில்லை.
கர்த்தரும் அவருடைய நன்மைகளும் தங்களுக்கு மாத்திரமே உரியது என்ற எண்ணம் அப்போஸ்தலர்கள் காலம் வரைக்கும் கூட இருந்தது. அப்போஸ்தலர்கள் காலத் தில் புறஜாதியர் மேல் அபிஷேகம் இறங்கியதைக் கூட அவர் கள் ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்கள். (அப்போ 11:1-3)
இப்படிப்பட்ட காலகட்டத்தில் ஏசாயா துணிந்து இந்த தீர்க்கதரிசன வார்த்தைகளைச் சொல்லியிருக்கிறார். கர்த்தர் தம்முடைய பரிசுத்த புயத்தை வெளிப்படுத்துவார். பூமி யின் எல்லைகளில் உள்ளவர்கள் எல்லாரும் நமது தேவனு டைய இரட்சிப்பைக் காண்பார்கள் என்று அவர் சொன்ன இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் புதிய ஏற்பாட்டுக் காலத்தி லேயே நிறைவேற ஆரம்பித்து விட்டாலும் இதின் தீவிரமான நிறைவேறுதல் கடைசிக்கால எழுப்புதலில்தான் உண்டாகும்.
2. சுத்திகரிப்பின் எழுப்புதல்:
இந்த மாபெரும் எழுப்பு தல் காலத்தில் சுத்திகரிக்கும் ஆவியானவர் பலமாகக் கிரியை செய்வார்.
ஒரு பெரிய சுத்திகரிப்பின் அலை தேசமெங்கும் பர வும். இன்றைக்குக் கறைப்பட்டுப் போன பல காரியங்களில் ஆவியானவரின் வல்லமையால் பலமான சுத்திகரிப்பு உண் டாகும். ஜனங்கள் எல்லாருடைய மனதிலும் சுத்திகரிப்பைப் பற்றிய எண்ணம் மேலோங்கியிருக்கும். தனிநபர் சுத்திகரிப் பில் ஆரம்பித்து, வீடுகள், சமுதாயம், சபைகள் என்று அரசி யல் வரைக்கும் கூட இந்தச் சுத்திகரிப்பு உண்டாகும்.
கர்த்தர் இந்த எழுப்புதலில் தம்மைச் சுத்திகரிக்கிறவ ராகவே வெளிப்படுத்துகிறார். வேதம் இதைக் குறித்து சொல்லியிருப்பதைக் கவனியுங்கள். மல்கியா 3:2-3 ஆகிய வசனங்களில் இது சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனாலும் அவர் வரும்நாளைச் சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்ப வன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப் போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப் போலவும் இருப்பார்.
அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட் டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார். அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர் கள் கர்த்தருடையவர்களாக இருக்கும்படிக் கும், நீதியாய் காணிக்கையைச் செலுத்தும் படிக்கும் அவர் பொன்னைப் போலவும் வெள்ளியைப் போலவும் புடமிடுவார்.
அவர் தம்முடைய ஜனங்களை ஏன் சுத்திகரிக்கிறார் என்பதற்கான பதில் இங்கேயே சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் கர்த்தருடையவர்களாக இருக்கும்படிக்கே அப்படிச் செய்கிறார் என்று.
அந்திக்கிறிஸ்து எப்படித் தன் ஜனங்களை அடையா ளப்படுத்த முத்திரையைப் பயன்படுத்துகிறானோ, அவ்வி தம் கர்த்தர் தம் ஜனங்களுக்கு வைத்திருக்கும் அடையாளம் பரிசுத்தமே. பரிசுத்தமுள்ளவர்கள் மாத்திரம்தான் கர்த்தரு டைய ஜனங்களாக நிலைக்க முடியும். பரிசுத்தமுள்ளவர்கள் மாத்திரமே அவர் இராஜ்ஜியத்தைச் சுதந்தரிக்க முடியும். எழுப்புதலில் இரட்சிப்பை அடைந்துவிட்டு அதன்பின்பாக பரிசுத்தம் பற்றிக் கவலைப்படாவிட்டால் நாம் கர்த்தரு டைய ஜனங்களாக நிலைக்க முடியாது.
கடைசிக்கால எழுப்புதலில் அவருக்கு தம்மில் நிலைக்கிறதும், தம் இராஜ்ஜியத்தை சுதந்தரிக்கவுந்தக்கதான மனிதர்கள் தான் வேண்டும். அது பரிசுத்தமுள்ளவர்களுக்கு மாத்திரமே சாத்தியம்.
அப்போஸ்தலர்களின் காலத்திலும் ஒரு பெரிய சுத்திகரிப்பின் எழுப்புதல் நடைபெற்றது. இரட்சிக்கப்பட்ட மந்திரவாதிகள் கூட, தங்களிடத்திலிருந்த மாந்திரீகப் புத்த கங்களையெல்லாம் வெளியே கொண்டு வந்து வீதியில் வைத்துக் கொளுத்தினார்கள்.
இப்படியே தாங்கள் இரட்சிக்கப்பட்டதோடு நின்று விடாமல் தங்களை அவர்கள் சுத்திகரித்துக்கொண்டார்கள். இரட்சிக்கப்பட்டவர்கள் பாவத்தில் நிலைக்க முடியாது. இந்தச் சுத்திகரிப்பின் எழுப்புதல் பற்றி அப்போஸ்தலர் 19:18-19 ல் சொல்லப்பட்டிருப்பதைக் கவனியுங்கள்.
விசுவாசித்தவர்களில் அநேகர் வந்து தங் கள் செய்கைகளை வெளிப்படுத்தி அறிக் கையிட்டார்கள்.
மாயவித்தைக்காரராயிருந்தவர்களில் அநேகர் தங்கள் புஸ்தகங்களைக் கொண்டு வந்து எல்லாருக்கும் முன்பாகச் சுட்டெ ரித்தார்கள். அவைகளின் கிரயத்தைத் தொகை பார்த்து, ஐம்பதினாயிரம் வெள்ளிக் காசாகக் கண்டார்கள்.
இரட்சிக்கப்பட்டவர்கள் சுத்திகரிப்பை முக்கியத்து வப்படுத்துவார்கள். பரிசுத்த ஆவியானவர் அவர்களை சுத்திகரிப்புக்கு நேராகவே வழிநடத்துவார். இதனால் மனி தர்களில் துவங்கும் சுத்திகரிப்பைப் பற்றிய இந்த உணர்வு நாளடைவில் சமுதாயத்தின் ஒவ்வொரு காரியங்களிலும் ஏற்படத்துவங்கும்.
சபைகள் சுத்திகரிப்படையும், ஆராதனைகள் சுத்தி கரிப்படையும், குடும்பங்கள் சுத்திகரிப்படையும், பிறகு சமுதாயம், அரசியல் என்று எல்லாவற்றிலும் இவர்கள் வழியாக சுத்திகரிப்பின் அலை பரவும்.
03.வசன எழுப்புதல் :
இனிவரும் எழுப்புதல் காலத்தில் எழும்பும் ஜனங்கள் கர்த்தருடைய வார்த்தைக்கு திரும் புவார்கள்.
வசனத்தை அறிந்துகொள்ளும் ஆர்வமும், வேக மும் ஜனங்களுக்குள் காட்டுத்தீ போலப் பரவும். இரட்சிக்கப் பட்ட ஜனங்கள் தங்களுக்குள் சாதாரணமாகப் பேசிக் கொள் ளும் சமயங்களில் கூட வேத வசனங்களை மையப்படுத் தியே பேசிக்கொள்வார்கள். வசனத்தை ஆழமாய் வாசிக்க வும், வேதத்தின் அதிசயங்களைக் கற்றறியவும் அதீத ஆர் வம் காட்டுவார்கள். இக்காலத்தில்தான் பரிசுத்த ஆவியான வரும் வேதத்தின் உள்ளான அர்த்தங்களையும், மர்மங்க ளையும் அவர்களுக்கு வெளிப்படுத்துவார்.
தேவனுடைய வார்த்தையே பிரதானமானது என்றும், அதுவே இறுதியான முடிவு என்றும் கருதி, தங்கள் வாழ்க் கையிலும் தேவனுடைய வார்த்தைகளை மையப்படுத்திக் கொள்வார்கள். சாதாரணமான நண்பர்கள் கூடிக்கொள் ளும் சமயங்களில் கூட கர்த்தருடைய வசனங்களையே பற் றிப் பேசிக்கொள்வார்கள். வேதத்தை தேடி வாசிக்க அவர் கள் எத்தனை தூரமானாலும் பயணிப்பார்கள்.
சபைகளில் கர்த்தருடைய வார்த்தைகள் பிரதானப்படுத்தப்பட்டு நேர்மையாக அவைகள் போதிக்கப்படும். ஒரு சாதாரண விசுவாசி கூட வேதத்தின் ஆழங்களை அறிந்திருப்பான். இதுதான் வசன எழுப்புதல்.
சமீபகாலமாக, கர்த்தரின் வேதவசனத்தை பிரதானப் படுத்துகிற பாங்கு வெகுவாகக் குறைந்திருக்கிறதைப் பார்க்க முடிகிறது. சபை ஆராதனைகளில் கூட கர்த்தருடைய வார்த் தைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறதைப் பார்க்க முடி கிறது.
ஆராதனைகளில் வெறும் சத்தங்களும், கூச்சல்க ளுமே மிகுந்திருக்கிறது. ஜனங்களிடத்திலும் வசனத்தைத் தேடும் ஆர்வம் வெகுவாகக் குறைந்திருக்கிறதைக் காண முடிகிறது. கட்டுக்கதைகளும், தங்களை உயர்த்திக்கொள் ளும் அனுபவங்களுமே பெரும்பான்மையான செய்திக ளில் நிறைந்திருக்கின்றன.
இந்த நிலை எல்லாம் இந்த எழுப்புதலில் மாறி விடும். வெகுஜனங்களே கர்த்தருடைய வார்த்தையை விருப்பமாக வாசித்தறிந்து, அதில் ஆழங்களைத் தேட ஆர் வம் காட்டுவதால் வசனங்களில் பழக்கமில்லாத ஊழியர் களை அவர்கள் புறக்கணித்துவிடுவார்கள். இக்காலத்தில் வேதாகமங்கள் எல்லாருடைய கைகளிலும் எல்லாச் சம யங்களிலும் இருக்கும்.
காத்திருக்கும் சமயங்களில் இன்றைய ஜனங்கள் தங்கள் கைகளில் தங்கள் மொபைல் போன்களை பார்த்துக் கொண்டிருப்பதைப்போல, இந்தக் காலத்தில் ஜனங்கள் வேதத்தைப் படித்துக் கொண்டிருப்பார்கள். கர்த்தருடைய வசனத்தைத் தேடும் ஆர்வம் எழுப்புதலடைந்த எல்லாரி டத்திலும் மிகுந்திருக்கும். இந்த வசன எழுப்புதலைக் குறித்து ஏசாயா தீர்க்க தரிசி சொல்லுவதைக் கவனியுங்கள். ஏசாயா 2:2-3 ஆகிய வசனங்களில் ஜனங்கள் கர்த்தருடைய வசனத்தைத் தேடு வார்கள் என்பதைப் பற்றிப் பேசியிருக்கிறார்.
ஏசாயா 2:2-3
கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமா கிய பர்வதம் பர்வதங்களில் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்: எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள்.
திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள். அவர் தமது வழிகளை நமக் குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள். ஏனெனில் சீயோனி
லிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த் தரின் வசனமும் வெளிப்படும். கர்த்தருடைய வசனத்தை ஜனங்கள் எவ்விதம் ஆர்
வமாய்க் கேட்பார்கள் என்றும் ஏசாயா சொல்லியிருக்கிறார்.
ஏசாயா 29:18
அக்காலத்திலே செவிடர் புஸ்தகத்தின் வசனங்களைக் கேட்பார்கள்: குருடரின் கண்கள் இருளுக்கும், அந்தகாரத்துக்கும் நீங்கலாகிப் பார்வையடையும்.
இதே அதிகாரத்தில் முந்தின காலங்களில் வாசிக்கத் தெரிந்தவனிடத்தில் வேதத்தைக் கொடுத்தால் அவன் அதை வாங்கி நான் இதை வாசிக்க அறியேன். காரணம் இது எனக்கு முத்திரிக்கப்பட்டிருக்கிறது என்பான். வாசிக்க அறி யாதவன் அதை வாங்கி நான் வாசிக்க அறியேன் என்பான் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனால் எழுப்புதல் காலம் வரும் சமயமோ செவி டர்கள் கூட இந்த வசனங்களுக்கு செவிகொடுப்பார்கள் என்பதாக சொல்லப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். இது தான் வசன எழுப்புதல்.
அப்போஸ்தலர்கள் ஊழியம் செய்த முதல் நூற் றாண்டு எழுப்புதல் காலத்திலும் இந்த வசன எழுப்புதல் வெளிப் பட்டதைக்குறித்து வேதம் சொல்கிறதையும் கவனியுங்கள்.
அப்போ 13:48-49
புறஜாதியார் அதைக் கேட்டு சந்தோஷப் பட்டு, கர்த்தருடைய வசனத்தை மகிமைப் படுத்தினார்கள். நித்திய ஜீவனுக்கு நியமிக் கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசு வாசித்தார்கள்.
கர்த்தருடைய வசனம் அத்தேசமெங்கும் பிரசித்தமாயிற்று.
04.வல்லமையின் எழுப்புதல்:
வரப்போகும் எழுப்பு தலில் ஐந்தாவதாக நாம் பார்க்கப்போவது வல்லமையின் எழுப்புதல் பற்றி. இந்த எழுப்புதலில் கர்த்தரின் பெரிதான வல்லமை பகிரங்கமாக வெளிப்படும்.
இதுவரையிலும் கண்டறியாத அற்புதங்களும், கர்த் தருடைய வல்லமையான செயல்களும் யாவரும் காணும் படியாக பகிரங்கமாக வெளிப்படும். இன்னும் சொல்ல போனால், முதல் நூற்றாண்டின் காலத்தில் கூட இப்படிப் பட்ட அற்புதங்கள் நடந்திருக்காது என்கிற அளவுக்கு மகி மையான வல்லமை வெளிப்படுகிறதைப் பார்க்கமுடியும்.
இயேசு தம் காலத்தில் அற்புதம் செய்தபோது, அதை கண்டு வியந்தவர்களிடத்தில் என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற இந்த அற்புதங்களைத் தானும் செய்வான். இதைக் காட்டிலும் பெரிய காரியங்களையும் செய்வான் (யோவான் 14:12) என்று சொன்னது இந்த நாட்களில் பிரத் தியட்சமாய் நிறைவேறுகிறதைக் காண முடியும்.
கர்த்தர் ஏன் இவ்விதம் தம்முடைய வல்லமையை வெளிப்படுத்தும் எழுப்புதலைக் கட்டளையிட வேண்டும்?
காரணம் இருக்கிறது. நாம் வாழ்கிற இந்தக் காலமும் சரி. இனிமேல் வரப்போகிற காலங்களும் சரி. விஞ்ஞானத்தி னால் பல அதிசயங்களை நிறைவேறப்பண்ணுகிற காலங் கள். விஞ்ஞானத்தினால் இன்றைக்கு பல அதிசயமான காட் சிகளும், காரியங்களும் சாத்தியமாகிக் கொண்டிருக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் கர்த்தருடைய வல்லமை சாதாரண விதத்தில் வெளிப்பட்டால், அது ஒவ்வொன்றிற்கும் விஞ்ஞான விளக்கங்களைக் கொடுத்து அதை மட்டுப்படுத்த வாய்ப்பிருக்கிறது.
அதேபோல, கர்த்தர் செய்வதாக நாம் சொல்லும் அதிசயங்களை விஞ்ஞானத்தினால் அவர்களும் சாத்தியப் படுத்திக் காட்டவும் வாய்ப்பிருக்கிறது. மோசே அற்புதங் களை பார்வோனுக்கு முன்பாகச் செய்தபோது, அரண்மனை யிலிருந்த மந்திரவாதிகளும் அதேபோன்ற அற்புதங்களைச் செய்து காட்டியதைப் போல. கடைசிக்கால எழுப்புதலில் கர்த்தர் இவைகளையெல்லாம் மிஞ்சும்படியானதும், அந்த அற்புதங்களையெல்லாம் விழுங்கிப்போடுகிறதைப் போன்ற அற்புதங்களையும் வெளிப்படுத்துவார். மோசேயின் கைக் கோல் மந்திரவாதிகளின் கைக்கோல்களை விழுங்கிப் போட் டதைப்போல விஞ்ஞான சாகசங்களைக் கர்த்தருடைய வல்லமை விழுங்கிப்போடும்.
இந்த வல்லமையின் எழுப்புதலில் கர்த்தர் தம்மு டைய வல்லமையை வெளிப்படுத்தும்போது யாரும் அதற்கு எந்தவிதமான எதிர்விளக்கங்களும் கொடுத்துவிட முடியாது. அந்த அளவில் கர்த்தருடைய வல்லமை பலமாக வெளிப்ப டும். ஞானத்தையும், அறிவையும் நம்பும் கடைசிக்கால மனிதர்கள் இவைகளைக் காணும்போதும், விஞ்ஞான அதிசயங்களால் ஜனங்களைத் திகைக்கப்பண்ணும் விஞ்ஞா னிகள் இதைக் காணும்போதும் கர்த்தரிடத்தில மாத்திரம்தான் வல்லமை உண்டென்று சொல்வார்கள்.
கடைசிக்கால எழுப்புதலில் தோன்றப்போகும் இந்த வல்லமையின் எழுப்புதலைப்பற்றி வேதம் குறிப்பிட்டுச் சொல்லியிருப்பதைப் பாருங்கள்.
ஏசாயா 45:22-24
பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே. என்னை நோக்கிப்பாருங்கள்.அப்பொழுது இரட்சிக்கப்டுவீர்கள். நானே தேவன். வேறொருவரும் இல்லை.
முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங் கும். நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் என்று நான் என்னைக் கொண்டே ஆணையிட்டிருக்கிறேன். இந்த நீதியான வார்த்தை என் வாயிலிருந்து புறப் பட்டது. இது மாறுவதில்லை என்கிறார்.
கர்த்தரிடத்தில் மாத்திரம் நீதியும்,வல்லமை யுமுண்டென்று அவனவன் சொல்லிக் கொண்டு அவரிடத்தில் வந்து சேருவான்: அவருக்கு விரோதமாய் எரிச்சல்கொண்டி ருக்கிற யாவரும் வெட்கப்படுவார்கள்.
இங்கே பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே என்ற வார்த்தையும், முழங்கால்கள் யாவும் எனக்கு முன் பாக முடங்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிற வார்த்தை களும் கடைசிக்காலத்தின் எழுப்புதலைப்பற்றிச் சொல்லி யிருக்கிறதைக் காட்டுகிறது.
காரணம், இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் உரைக்கப் பட்ட காலத்தில் இஸ்ரவேலர்கள் தவிர பூமியில் வேறு யாருக்கும் என்பது சாத்தியமாகாத காரியம். அதேபோல, கர்த்தரிடத்தில் மாத்திரம் வல்லமையுண்டென்று அவனவன் அவரிடத்தில் வந்து சேருவான் என் கிற வார்த்தையும் வல்லமையின் எழுப்புதலைத்தான் குறிக்கிறது.
கடைசிக்கால எழுப்புதலில் தோன்றப்போகும் இந்த வல்லமையின் எழுப்புதல் அநேகரை ஆச்சரியப்பட வைப்ப தோடு, கர்த்தரே தெய்வமென்று அவர்களை ஏற்றுக்கொள்ள வும் வைக்கும்.
05. தொழுகையின் எழுப்புதல்:
கடைசிக்கால எழுப் புதலில் அடுத்ததாக வருவது தொழுகையின் எழுப்புதல். அதாவது, ஜனங்கள் திரளாக தேசமெங்கும் தேவனைத் தொழுதுகொள்ளுவார்கள். பரலோகத்தில் எப்படி இடை விடாமல் தேவனைத் தொழுதுகொள்ளுகிறார்களோ அதே போல பூமியிலும் ஜனங்கள் எல்லா இடங்களிலும், எல்லாச் சமயங்களிலும் தேவனைத் தொழுதுகொள்ளுவார்கள்.
சபைகளிலும், ஆராதனை ஸ்தலங்களிலும் மாத்திரமல்ல, வீதிகளிலும், வெளிகளிலும் கூட தேவனைத் தொழுதுகொள்ளுகிற ஆர்வம் ஜனங்களுக்குள் மிகுந்து காணப்படும். பரலோகத்தில் இடைவிடாமல் தேவனைத் தொழுதுகொள்ளுகிறார்கள். இந்த தொழுகையின் எழுப்புதல் காலத்தில் இன்னநாள், இன்ன இடங்களில் இருந்துதான் தொழுது கொள்ளவேண்டும் என்கிற நிலையெல்லாம் மாறி, தேவனை எங்கும், எல்லா சமயங்களிலும் தொழுதுகொள்வதால் பூமியிலிருந்து எழும்பும் தொழுகையின் சத்தம் நாள்முழுவதும் இடைவிடாமல் பரலோகத்திலும் கேட்டுக் கொண்டேயிருக்கும்.
பரலோகத்தின் இடைவிடாத தொழுகைகளோடு, பூமி யிலிருந்து எழும்பும் தொழுகைகளும் நாள் முழுவதும் எழும்புவதால் இரண்டு தொழுகைகளும் இணைந்து மகி மையான விளைவுகளை உண்டாக்கும்.
இதனால், பூமியில் பரலோகத்தின் சாயலும், பரி சுத்தமும் பெருக உண்டாகும். இது இங்கே நிகழ்ந்துகொண் டிருக்கும் எழுப்புதலை மென்மேலும் பலப்படுத்திக் கொண் டேயிருப்பதாயும், அது அணைந்து விடாமலும், தளர்ந்து விடாமலும் தொடர்ந்து பற்றியெரியத்தக்கதாகவும் செய் யும். இதனால் தேவனுடைய மகிமையும், வல்லமையும் பர லோகத்தில் நிறைந்திருக்கிறதைப் போல பூமியிலும் மகிமை யாய் வெளிப்படும்.
ஒருகாலத்தில் ஜனங்கள் தேவாலயத்தில் தொழுது கொண்டார்கள். பிறகு சபைகளில் கர்த்தரைத் தொழுது கொண்டார்கள். ஆனால் இனி வருகிற எழுப்புதலில் அவரை எங்கும் தொழுதுகொள்ளுவார்கள். கர்த்தரை எங்கும் தொழுது கொள்ளப்பண்ணும் தொழுகையின் எழுப்புதல் பற்றி வேதம் சொல்லுவதைக் கவனியுங்கள்.
வெளி 15:4
கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும். உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்தாம லும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரி சுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்ளுவார்கள். உம்முடைய நீதியான செயல்கள் வெளி யரங்கமாயின என்றார்கள்.
இதில் எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்ளுவார்கள் என்ற வார்த்தையைக் கவனியுங் கள். இது உலகம் முழுவதிலும் உண்டாகப்போகிற தொழு கையின் எழுப்புதலைக் குறிக்கிறது. இதேபோல, இயேசு கிறிஸ்துவும் இந்த தொழுகையின் எழுப்புதலைப் பற்றிப் பேசியிருக்கிறதைக் கவனியுங்கள்.
யோவான் 4:21
அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகி றதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எரு சலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதா வைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது என்றார்.
06.சுவிசேஷ எழுப்புதல் :
வரப்போகும் கடைசிக்கால எழுப்புதலில் பிரதானமான எழுப்புதலாக சுவிசேஷ எழுப் புதல் வருகிறது.
இரட்சிக்கப்பட்ட தேவனுடைய பிள்ளைகள் யாவ ரும் சுவிசேஷ பாரமுள்ளவர்களாக கர்த்தருடைய சுவிசே ஷத்தை அறிவிக்கப் புறப்படுவார்கள். எல்லாருடைய மனதி லும் அறிவிக்கப்படாதவர்களுக்கு கர்த்தரின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டும் என்கிற பாரம் நிறைந்திருக்கும். ஆவி யானவர் இவர்களை சுவிசேஷ பாரத்தினால் நிரப்பி வழி நடத்துவார். அறிவிக்கப்படாத ஜனங்களை நோக்கிப் புறப்படு வார்கள். ஒரு காலத்தில் இங்கிலாந்தில் தோன்றிய எழுப்பு தல் சமயத்தில் ஏராளமான மிஷினரி இயக்கங்கள் தோன்றி, அறிவிக்கப்படாத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிப்ப தற்கு ஆட்களை அனுப்பினார்கள். அடிக்கடி உலக வரைபடங்களை விரித்து வைத்துக்கொண்டு எங்கெல்லாம் சுவி சேஷம் கேள்விப்படாத ஜனங்கள் இருக்கிறார்கள் என்று தேடினார்கள். அந்தச் சமயத்தில் ஏராளமான மிஷினரிகள் உலகமெங்கும் புறப்பட்டுப் போய் அறிவிக்கப்படாத இடங் களில் சுவிசேஷத்தை அறிவித்தார்கள்.
ஆனால், இப்போது சமீபகாலமாக சுவிசேஷம் அறி விப்பது மிகவும் குறைந்துவிட்டது. சுவிசேஷகர்களைக் காண் பதும் அரிதாகிவிட்டது. பல இடங்களில் சுவிசேஷ அழைப் புப் பெற்றவர்கள் கூட, சபை ஊழியம் செய்வதுதான் தங்கள் எதிர்காலத்துக்குப் பாதுகாப்பு என்று கருதி, சபை ஊழியங் களை ஆரம்பித்துவிட்டார்கள்.
சுவிசேஷப் பணிகள் இப்போதெல்லாம் உலகளவில் மிகவும் அருகிக்கொண்டே வருகிறதைப் பார்க்க முடிகிறது. மற்ற ஊழியங்கள் தவறல்ல, ஆனால் எல்லா ஊழியங்களுக் கும் அடிப்படை சுவிசேஷ ஊழியம்தான் என்பதுதான் உண்மை.
புதிய ஏற்பாட்டுக்காலத்தில் சொல்லப்பட்டுள்ள எல்லா ஊழியங்களுமே சுவிசேஷ ஊழியத்தின் அஸ்திபா ரத்திலிருந்துதான் ஆரம்பிக்கிறது. முதலில் சுவிசேஷம் அறி விக்கப்படுகிறது. சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்டவர்களுக் காக சபை ஆரம்பிக்கப்படுகிறது. சபையில் ஊழியம் செய் வதற்காக தீர்க்கதரிசிகளும், மேய்ப்பர்களும், போதகர்களும் ஏற்படுத்தப்படுகிறார்கள். அதனால் இவையெல்லாவற் றிற்கும் அடிப்படை சுவிசேஷ ஊழியம்தான்.
முதல் நூற்றாண்டுக்கால எழுப்புதலில் சபை ஏற்பட்ட பிறகு எழுப்புதலில் இரட்சிப்படைந்த ஜனங்கள் சபைக்குள்ளேயே முடங்கிவிட்டார்கள். சபையைக் கண்கா ணிப்பதும், அதை விசாரிப்பதுமே பிரதான வேலைகளாக ஆகிப்போனது. இக்காலத்தில்தான் கர்த்தர் சபையை வெளியே புறப்படப்பண்ண, சபைகளின் மேல் உபத்திரவங் களை அனுமதித்தார்.
சபையின் மேல் உபத்திரவங்கள் பெருகியது. சபை சிதறியது. இப்போது சிதறியவர்கள் எங்கும் சுற்றித் திரிந்து சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்கள். கர்த்தருடைய இரட்சிப் பும் எல்லா இடங்களிலும் பரவியது.
இனிவருகிற எழுப்புதல் காலத்தில் சுவிசேஷம் அறிவிக்கிறவர்கள் எங்கும் திரிந்து சுவிசேஷம் அறிவிக்கப் புறப்படுவார்கள். சபைகள் சுவிசேஷப்பணியை ஆதரவு செய்யும். தங்கள் சபையிலிருந்து எழும்பும் சுவிசேஷத் தலைமுறையினரை சபையானது ஊக்குவிக்கும். அவர்கள் சுவிசேஷம் அறிவிக்கப் புறப்படுகையில் அவர்களைத் தாங் கும். ஒரு தீவிரமான சுவிசேஷ அலை இந்த எழுப்புதலில் உண்டாகும். கடைசிக்கால சுவிசேஷ எழுப்புதலைப் பற்றி வேதமும் சொல்லியிருப்பதைக் கவனியுங்கள்.
மத்தேயு 24:14
இராஜ்ஜியத்தின் இந்த சுவிசேஷம் பூமி யின் சகல ஜாதியாருக்கும் சாட்சியாகப் பிர சங்கிக்கப்படும். அப்போது முடிவுவரும்.
அப்போது முடிவுவரும் என்ற வார்த்தை உலகத்தின் கடைசிக்காலத்தில் நடக்கும் காரியம் என்பதை நமக்குப் புலப்படுத்துகிறது. சுவிசேஷம் அறிவிக்கும் எழுப்புதல் கடைசிகாலத்து எழுப்புதலின் பிரதான அங்க மாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இப்படி ஏற்படுத் தப்பட்டால்தான், எழுப்புதலானது தீவிரமாக உலகமெங்கும் பரவும். சுவிசேஷப்பணிகள் இல்லாவிட்டால் எவ்வளவு பெரிய எழுப்புதலும் தேங்கிப்போய் நின்றுவிடும்.
கடைசிக்கால சுவிசேஷ எழுப்புதல் பற்றிப் பேச இன்னும் நிறையக் காரியங்கள் இருக்கின்றன. கர்த்தருக்குச் சித்தமானால் நாம் இன்னொரு சந்தர்ப்பத்தில் அதை ஒரு தனிப்புத்தகமாக பெற்றுக்கொள்ளலாம்.
7. திருச்சபைகளின் எழுப்புதல்:
எழுப்புதலில் பிரதா னமான தேவை திருச்சபைகளின் பணிகளே. திருச்சபையை தவிர்த்துவிட்டு ஏற்படும் எந்த எழுப்புதலும் நிலைக்க வாய்ப் பில்லை. அப்படி ஒருவேளை சபையைத் தவிர்த்து விட்டு எழுப்புதல்கள் வந்தாலும் அவை சில நாட்களுக்குள்ளாகவே மறைந்து போய்விடும்.
முதல் நூற்றாண்டின் எழுப்புதல் ஆரம்பித்த அன்றே சபையும் துவங்கிவிட்டது. அப்போஸ்தலர் நடபடிகள் இரண் டாம் அதிகாரத்தின் துவக்கத்தில் வாசிக்கும் போது சீஷர் கள் ஓரிடத்தில் கூடிவந்திருந்தார்கள் என்றுதான் ஆரம் பிக்கிறது.
அந்த இடத்துக்கு ஒரு பெயரோ, அமைப்போ எது வும் இல்லை. ஆனால் அந்த அதிகாரம் முடியும்போது சபை என்று முடிகிறது. எழுப்புதல் ஏற்பட்ட அன்றைய தினமே மூவாயிரம்பேர் இரட்சிக்கப்பட்டு விட அன் றைக்கே சபை பிறந்துவிட்டது. ஏன் இத்தனை அவசரமாக சபையைக் கர்த்தர் ஏற்படுத்துகிறார்? என்று யோசித்தால் காரணம் புரிகிறது. சபை ஏற்படுத்தாவிட்டால் அன்றைய தினம் சந்திக்கப்பட்ட ஜனங்கள் எல்லாரும் இரவே கலைந்து போயிருந்திருப்பார்கள். பிடிக்கப்பட்ட மீன்கள் உடனடியாக கூடைக்குள் பத்திரப்படுத்தப்படாவிட்டால் பயனில்லை என்பது கர்த்தருக்குத் தெரியாதா என்ன?
பழைய ஏற்பாட்டுக்காலத்தில் கூடப் பாருங்கள். இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரை ஏற்றுக்கொண்டு தேசத்தை விட்டுப் புறப்பட ஆயத்தமானபோது, இன்னும் தேசத்தை விட்டுக்கூட புறப்படாதிருக்கும்போதே, கர்த்தர் அவர்களை சபை என்று பிரகடனம் பண்ணிவிட்டார். யாத்திராகமம் 12:3ல் நீங்கள் இதை வாசிக்கலாம்.
யாத்திராகமம் 12:16ல் எப்பொழுதெல்லாம் சபை கூடிவரவேண்டும் என்ற கட்டளையையும் கொடுக்க ஆரம் பித்துவிட்டார். அவர்கள் இன்னும் கானானையே சென்ற டையாத நிலையில் வழியில் வனாந்திரத்திலேயே தேவனை ஆராதிக்கும் ஸ்தலத்தை ஆசரிப்புக் கூடாரம் என்ற பெயரில் அவர்கள் நடுவில் ஏற்படுத்திவிட்டார். காரணம் அதுவே தான். எழுப்புதலடைந்து கர்த்தரைப் பின்பற்றுகிற பிள்ளை கள் சபையாக ஏற்படுத்தப்படாவிட்டால் அதிககாலம் அந்த எழுப்புதலில் அவர்களால் நிலைக்க முடியாது.
கடைசிக்காலத்தில் ஏற்படப்போகும் எழுப்புதல் மிக வும் முக்கியத்துவம் வாய்ந்தது. அது கடைசியில் கர்த்தர் வருகிற நாள்வரைக்கும் நீடிக்க வேண்டும். எனவே இந்த எழுப்புதலுக்கு சபையானது மிகவும் அவசியம். எனவே கடைசிக்காலத்தில் திரளான ஜனங்கள் எழும்பிக்கொண்டே யிருக்க கர்த்தர் அவர்களையெல்லாம் வழிநடத்த சபைகளையும் திரளாக எழுப்பிக் கொண்டேயிருப்பார். சபைகள் இடங்கொள்ளாமல் போகுமட்டும் நிரம்பும்.
கடைசிக்கால எழுப்புதல் சபையானது வெறுமனே ஜனங்களை ஆராதிக்க வைக்கிற பொறுப்பை மாத்திரம் பெற்றிராமல் அவர்களை கர்த்தருக்குள் வளர்க்கவும், பலப் படுத்தவும், அவர்களுடைய அழைப்புகளைப் புரிந்து கொண்டு அவர்களை பயன்படுத்தவும், அவர்களை ஊழி யத்திற்காக ஆயத்தம் செய்து அனுப்பவும், அவர்களுக்கு தேவத்துவத்தின் ஆழங்களையும், வரங்களின் பயன்பாடுக ளையும் கற்பிக்கவும் என்று ஏராளமான உத்திரவாதங்களை பெற்றிருக்கும். எனவே, இத்தனை பணிகளை விடாமல் செய்ய, திரளான சபைகள் எழும்ப வேண்டியது அவசிய மாயிருக்கிறது.
எனவே, இந்த எழுப்புதல் காலத்தில் தேசத்தின் மூலைமுடுக்குகள் எல்லாவற்றிலும் சபைகள் எழுப்பப் படுவதைக் காண்போம். சாத்தானுக்கு எழுப்புதல் காலத்தின் முக்கியத்துவம் தெரியும். எனவேதான், எழுப்புதல் வரப் போகும் காலத்தை அறிந்து இப்போதிருந்தே சபைகளைக் குறிவைத்துத் தாக்குதல்களை நடத்திவருகிறான். சபைகளை இடிப்பதும், தாக்குவதும் இந்தியாவில் மாத்திரமல்ல, சமீபகாலமாக பல தேசங்களிலும் நிகழ்ந்து வருகிறது. கார ணம் இதுதான்.
சீனாவில் ஆயிரக்கணக்கான சபைகளும், சிலுவைச் சின்னங்கள் பொறித்த இடங்களும் தகர்க்கப்பட்டு வருகின் றன. இதுவரைக்கும் இல்லாத அளவில் பலதேசங்களிலும் சபைகள் குறிவைத்துத் தாக்கப்படுவது எழுப்புதல் காலம் நெருங்கிவிட்டது என்பதைத்தான் நமக்குக் காட்டுகிறது.
சாத்தானின் பயம் சபைகளைப் பற்றியதுதான். சபைகள் இல்லாமல் எழுப்புதல் வந்தால் கூட அது நிலை நிற்காது என்று நினைத்துத்தான் இன்றைக்கு சபைகளை தாக்கிவருகிறான்.
ஆனால் ஒன்று.நீங்கள் வேண்டுமானால் பாருங் கள், தகர்க்கப்பட்ட ஒவ்வொரு சபைக்கும் பதிலாக கர்த்தர் இனிவரப்போகும் எழுப்புதல் காலத்தில் நூற்றுக்கணக்கான சபைகளை எழுப்பப்போகிறார். உங்கள் சபைகள் கூடகிளை பற்றிப் படரப்போகிறது. ஒரு சாதாரண அளவிலான சபைக் குக் கூட நூறு கிளைகள் இருந்தால் ஆச்சரியப்படுவதற் கில்லை.
எழுப்புதல் காலத்தில் சபைகளின் பணிகள் அவசி யமானது. எனவேதான், கர்த்தர் சபைகளை இக்காலத்தில் திரளாக எழும்பப்பண்ணுவார். இதுவே சபைகளின் எழுப்பு தல் எனப்படும்.
கடைசிக்கால எழுப்புதல் பொதுவாக எழுப்புதல் என்று சொல்லப்பட்டாலும், அது ஏழுவிதமான பரிமாணங் களைக் கொண்டிருக்கிறது. ஏழுவிதமான எழுப்புதல் தோன் றப்போகிறது.
இந்த ஏழுவிதமான எழுப்புதலிலும் பிறக்கும் விசு வாசிகள் கர்த்தருக்குக் கடைசிக்காலத்தில் தேவை. அவர் கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணியிருக்கிறது. அவர்கள் செய்வதற்கு ஒவ்வொருவிதமான சித்தமும் இருக் கிறது. ஏழுவிதமான எழுப்புதல்களிலும் பிறக்கும் ஜனங்களை வழிநடத்த சபைகளுக்கு உத்திரவாதம் கொடுக்கப் படும். அந்தச் சமயத்தில் அவர்கள் ஒவ்வொருவரையும் அவரவர் வகைக்கு ஏற்றபடி வழிநடத்த வேண்டும். பல வானை பலத்திலும், சுவிசேஷகனை ஆத்துமபாரத்திலும், வார்த்தையை நாடுகிறவனை வசனத்தின் ஞானத்திலும் வளர்க்கவும், வனையவும் சபைகளுக்குத்தான் அதிகாரம் கொடுக்கப்படும்.
இதை வைத்துப் பார்த்தால் கடைசிக்கால எழுப்பு தல் காலத்தில் சபைகளிலும் கூட பலவிதமான வகைகள் இருக்கும்போலத் தோன்றுகிறது. ஒன்று இரட்சிப்பை பிரஸ் தாபப்படுத்துகிற சபை என்றால், இன்னொன்று சுவிசேஷத் தைப் பிரஸ்தாபிக்கும். ஒன்று வல்லமையை பிரதானப்படுத் துமானால், இன்னொன்று வார்த்தையைப் பிரதானப்படுத் தும். இப்படி ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு விதமான சபைகள் ஏற்படும் என்று எண்ண இடமிருக்கிறது.
எது எப்படியோ, கடைசிக்காலத்தின் எழுப்புத லுக்கு சபைகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. சபை யையும், எழுப்புதலையும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கவே முடியாது.