வரப்போகும் எழுப்புதலுக்கான ஜெபக்குறிப்புகள்

எழுப்புதலுக்கான ஜெபக்குறிப்புகள்

வரப்போகும் எழுப்புதலுக்கான ஜெபக்குறிப்புகள்

இனிவரப்போகும் கடைசிக்கால எழுப்புதலைப் பற்றி நீங்கள் வாசித்த இந்தப் புத்தகம் நிச்சயமாகவே, கடைசிக்கால எழுப்புதலைக் குறித்த ஒரு தெளிவான புரிந்து கொள்ளுதலையும், கடைசிக்கால எழுப்புதலில் சபைகளின் இன்றிமையாத பங்கைப் பற்றிய ஒரு தெளிவான கண் ணோட்டத்தையும் தந்திருக்கும் என்று நம்புகிறேன். கர்த்தரு டைய ஊழியக்காரரும், மந்தைக் காவலாளிகளுமான உங் களுக்கு நம்முடைய பிரதான மேய்ப்பர் தந்திருக்கும் அழைப்பும், எழுப்புதல் திட்டத்திலான உங்கள் பங்கும் சாதாரணமானதல்ல. இப்படிப்பட்ட மேலான தேவதிட்டத் தில் நாமும் பயன்படுத்தப்பட்டு, நம்முடைய பிரதான மேய்ப்பர் வெளிப்படும் நாளில் அவர் சித்தத்தை நிறை வேற்றி முடித்தவர்களாக அவரை எதிர்கொள்ளப் பாத்திர வான்களாயிருக்கும்படிக்கு நாம் அதிகதிகமாக ஜெபித்து நமக்கான சித்தத்தை நிறைவேற்ற பலப்படுவது அவசியம். மாத்திரமல்ல, வரப்போகும் எழுப்புதலுக்காகவும் நாம் கிரமமாக ஜெபிக்கவேண்டியதும் முக்கியமானதாகும். இனி வரும் சில பக்கங்களில் எழுப்புதலுக்காக நாம் ஜெபிக்க வேண்டிய சில முக்கிய ஜெபக்குறிப்புகளின் மாதிரி வடி வங்கள் இருக்கின்றன. நீங்கள் கர்த்தருடைய ஊழியர்களா யிருப்பதினால் இந்த ஜெபக்குறிப்புகளின் அடிப்படையில் இன்னும் மேலான ஜெபக்குறிப்புகளை ஏற்படுத்தி அவை களுக்காக ஜெபிக்கமுடியும். எழுப்புதலுக்கான இந்த ஜெபக் குறிப்புகளுக்காக உங்கள் தனி ஜெபங்களிலும், விசேஷித்த ஜெபக்கூடுகைகள் மற்றும் சபை ஆராதனைகளிலும் ஜெபிப் பது எழுப்புதலை நாம் விரைவாகப் பெற்றுக்கொள்ள உதவும்.

01.மகிமையான எழுப்புதல் விரைவில் வெளிப்பட ஜெபியுங்கள்

கர்த்தர் தம் மனதில் வைத்திருக்கிற இந்த மகிமையான எழுப் புதல் சீக்கிரமாக நம் தேசத்தில் துவங்கப்படவும், அது வேக மாக பற்றி எரியவும், பூமியின் கடையாந்தரம் வரைக்கும் பர விடவும், தேசங்கள் யாவும் இந்த மகிமையின் எழுப்புதலி னால் நிறைந்திருக்கவும் ஜெபிப்போம்.

கடைசிக்காலத்தில் பிறக்கப்போகிற எழுப்புதலில் கர்த்தர் வாக் குத்தத்தம் பண்ணின அவருடைய பரிபூரண வல்லமை தேசங் களுக்குள்ளும், ஜனங்களுக்குள்ளும் பகிரங்கமாக வெளிப்பட வும், கர்த்தரிடத்தில் மட்டுமே வல்லமையும், நீதியும் உண் டென்று எல்லா ஜனங்களும் உணர்ந்து மனந்திரும்பவும் ஜெபிப்போம்.

மேன்மையானதும் மகிமையானதுமான இந்த கடைசிக்கால எழுப்புதலின் மூலமாக பிறக்கப்போகிற தேவ ஜனங்களை வழி நடத்தும்படி சபைகள் துரிதமாக தகுதிப்படுத்தப்பட்டு ஆயத்த மாக்கப்படவும், கர்த்தரே தேவன் என்று நிரூபிக்கும் வல்லமை யுள்ளவர்களாய் தேவ ஜனங்கள் மாற்றப்படவும் ஜெபிப்போம். 

02. எழுப்புதலுக்கு முன்னான உபத்திரவ காலத்தினால் சபைகளும், விசுவாசிகளும் தளர்ந்துவிடாதபடிக்கு ஜெபிப்போம்.

எழுப்புதல் தேசத்தை பற்றி பிடிப்பதற்கு முன்னர் சிறிய அளவி லான ஒரு உபத்திரவக்காலம் தேசத்தில் உண்டாகும் என்று கர்த்தர் முன்னறிவித்திருக்கிறார். தேசமெங்கிலும் தேவ ஜனங் களை உபத்திரவத்திற்குள்ளாக்கும் தீமைகள் ஆங்காங்கே நிறைவேறி வருகிறது. இவைகள் தேசத்தில் இன்னும் தீவிர மாய் கிரியை செய்துவிடாதபடி திறப்பில் நின்று கண்ணீரோடு ஜெபிப்போம்.

உபத்திரவத்தை, துன்பத்தை, அச்சுறுத்தல்களை சந்திக்கிற தேவ ஊழியர்கள் இனி ஊழியம் செய்யவும், ஜனங்களை சந்திக்க வும் வாய்ப்பில்லை என்று சோர்ந்து ஊழியம் செய்வதை விட்டு பின்வாங்கிவிடாதபடி தேவன் அவர்களின் இருதயங் களில் விசுவாசத்தையும், வைராக்கியத்தையும் பெருகப்பண் ணும்படி ஜெபிப்போம்.

தேவஜனங்களுக்கு எதிராக உபத்திரவங்கள் திரளாக பெருகி னாலும், ஊழியர்கள் விடுதலையாய் ஊழியம் செய்யக்கூடா தபடி சட்டங்கள் இயற்றப்பட்டாலும் குறுகிய காலத்தில் இதன் கிரியைகள் அற்றுப்போகும் என்பதை உணர்ந்து சபைகளும், ஊழியர்களும் தீவிரமாய் கர்த்தருக்காய் எழும்பி ஊழியம் செய்திட ஜெபிப்போம்.

தேவ பிள்ளைகள், சபைகள் நடுவில் பொல்லாதவர்களின் கால் கள் நுழைவதும், அதிகாரத்திலிருப்பவர்கள் அவர்களுடன் கரம் கோர்த்து தேவஜனங்களை ஒடுக்க நினைப்பதுமான சகல தீமை யான திட்டங்களும் தடை செய்யப்பட ஜெபிப்போம்.

தேவநாமத்தை தூஷிக்கிறவர்கள் ஊழியங்களை, தேவ ஊழி யர்களை பகைத்து, தேவனின் ஸ்தலங்களை பாழாக்கும்படி கிரியை செய்கிற தந்திரங்கள் தடைசெய்யப்படவும், கர்த்தரு டைய வாசஸ்தலங்கள் பாதுகாக்கப்படவும் ஜெபிப்போம்.

03.சபையின் ஓட்டத்தை தடைசெய்யப் புறப்பட்டி ருக்கும் கள்ள ஊழியர்களும், கள்ள உபதேசங்களும் கட்டப்பட ஜெபியுங்கள்.

கர்த்தரின் மந்தையை விசுவாசத்திலிருந்தும், அவர்களின் ஆவிக்குரிய வாழ்க்கையை ஆயத்த நிலையிலிருந்தும் பின்வாங் கிப் போகும்படிக்குக் கள்ள உபதேசங்களைக் கற்பிக்கிற கள்ள ஊழியர்கள் நம் தேசத் தில் கிரியை செய்ய முடியாதபடி முடக் கப்பட ஜெபிப்போம்.

ஜெபம் செய்வது வீண் என்றும், எழுப்புதல் என்பது கிடை யாது என்றும் கற்பிக்கிற கள்ளஊழியர்கள் இந்நாட்களில் திரளாய் எழும்பி ஜனங்களுக்கு கற்பிக்கிறதை காணமுடிகிறது. தவறான வார்த்தைகளை கற்பிக்கும் இவர்களை ஜனங்கள் இனங்கண்டுகொள்ள ஜெபிப்போம்.

ஜனங்களை கர்த்தரை விட்டு பிரிக்கும் இப்படிப்பட்ட கள்ள உபதேசங்களை போதிக்கிறவர்கள் சமூகவலைதளங்களில் திரளாக இன்றைய நாட்களில் பெருகியிருக்கிறார்கள். இந்த கள்ள வார்த்தைகள் திரளாக ஜனங்கள் நடுவில் பரவாதபடி இப் படிபட்ட ஊடகங்கள் முடக்கப்பட ஜெபிப்போம்.

போதிக்கப்படுகிற எந்த வார்த்தைகளையும் அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் அதை வேதத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கிற ஆவிக் குரிய விழிப்புணர்வு கர்த்தருடைய பிள்ளைகள் நடுவில் உண் டாகவும், கர்த்தருடைய வார்த்தைகளோடு ஒத்துப்போகாத எதையும் முற்றிலும் புறக்கணிக்கும் வைராக்கியம் தேவபிள்ளை கள் நடுவில் காணப்படவும் ஜெபிப்போம்.

04.எழுப்புதலில் எழும்பப்போகும் புதிய தலை முறை ஊழியர்களுக்காக ஜெபிப்போம்.

கடைசிக்கால எழுப்புதலில் எழும்பப்போகும் புதிய ஊழியர் தலைமுறையினரை தேவன் விரும்புகிற வண்ணம் உருவாக்கி தமது வல்லமையால் பலப்படுத்தவும், அவர்களைக் கொண்டு தேவன் வைத்திருக்கிற திட்டங்களும், சித்தமும் பரிபூரணமாக நிறைவேற்றப்படவும் ஜெபிப்போம்.

சாத்தானின் தந்திரங்களை. திட்டங்களை, எழுப்புதல் தலை முறையினரைக் கொண்டு தேவன் வெளிப்படுத்தவும், இது வரை செய்யப்பட்ட இருளான காரியங்கள் எல்லாம் வெளிச்ச த்திற்கு வரவும், இதனிமித்தம் சாத்தானின் பலம் குறைக்கப்பட வும் ஜெபிப்போம்.

எழுப்புதல் காலத்தில் செய்யப்போகிற திட்டங்களை இவர்க ளுக்கு முன்கூட்டியே வெளிப்படுத்தவும், எழுப்புதலின் அக் கினி குறைந்துவிடாதப்படிக்கு அவைகளை பகுத்தறிந்து தேவ னுடைய கிரியைகளை அந்தந்த வேளையில் இவர்கள் செய்து முடிக்கவும். அதற்கேற்ற தெளிந்த புத்தியையும், ஆலோசனை யையும் தேவன் தரவும் ஜெபிப்போம்.

இயேசுகிறிஸ்து தேவனுடைய விரலினால் அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்தது போல, எழுப்புதல் தலைமுறை ஊழியர்களின் கைகளைக் கொண்டு தேவன் பெரிய காரியங் களைச் செய்திடவும், இவர்கள்மூலம் தேவ வல்லமை வெளிப் பட்டு தேவநாமம் மகிமைப்படவும் ஜெபிப்போம்.

05.எழுப்புதலுக்கு எதிரான சாத்தானின் தந்திரங்கள் கட்டப்பட ஜெபியுங்கள்.

எழுப்புதலுக்காக முன்குறிக்கப்பட்டிருக்கிற சபைகள், ஊழியங் கள் மற்றும் ஊழியர்கள் நடுவில் பிரிவினைகளும், குழப்பங்க ளும் உண்டாகும்படி கிரியை செய்கிற சாத்தானின் தந்திரங்கள் வெளியரங்கமாக்கிக் காட்டப்படவும், சாத்தானின் திட்டங்க ளுக்கு தேவபிள்ளைகள் இடங்கொடாதபடி தங்களை கர்த்தருக் குள் பலப்படுத்திக் கொள்ளவும் ஜெபிப்போம்.

போதிக்கிறவர்கள் நடுவிலும், ஊழியர்களுக்கு நடுவிலும், யார் ஐக்கியத்தில் பெரியவன் என்கிற எண்ணம் உண்டாகாதபடி, கர்த் தருக்கு முன்பாக அவர்கள் தங்களை தாழ்த்தி சத்துருவை மேற் கொள்ளும்படியாகவும், சபைகளில் சாத்தானின் தந்திரமாகிய ஜாதிப் பிரிவினைகள் அகன்றுபோகவும் ஜெபிப்போம்.

அதிகாரத்தை துஷ்பிரயோகம் பண்ணும்படி மேட்டிமை யான எண்ணங்களை ஊழியர்கள் மனதில் விதைக்கிற பொல் லாத ஆவியின் கிரியைகள் கட்டப்படவும், எழுப்புதலை தடை செய்து, தாமதம் பண்ணவேண்டுமென்று சாத்தான் குறிவைத்து கிரியை செய்யும் தந்திரங்களை ஜெபிக்கிறவர்களுக்கு தேவன் வெளிப் படுத்தி காண்பிக்கவும், அவர்களை உத்தரவாதம் பண்ணுகிற வர்களாக எழுப்பிடவும் ஜெபிப்போம்.

தேவன் விரும்புகிற ஐக்கியமும், ஒருமனமும் தேவ ஜனங்கள் மத்தியில் பெருகிடவும், கர்த்தரின் நாமம் தூஷிக்கப்படும்படி அவர்கள் சாத்தானுக்கு இடங்கொடுக்காதபடிக்கு தங்களை காத்துக்கொள்ளவும், எழுப்புதலுக்காக தீவிரமாக கிரியை செய் கிறவர்களாக மாறிடவும் ஜெபிப்போம்.

06.எழுப்புதலுக்காக செயல்படும் எழுப்புதல் செயல்வீரர்கள் எழும்பி செயல்பட ஜெபியுங்கள்.

எழுப்புதலுக்காக ஜெபிக்கிற தேவபிள்ளைகள் தங்களின் ஜெபங்களை இன்னும் துரிதப்படுத்தவும், திறப்பிலே நின்று கண்ணீரோடு மன்றாடவும், இந்த தீமையின் நாட்களில் கர்த்த ருக்காய் வைராக்கியமாய் கிரியை செய்கிறவர்களாய் காணப் படவும் ஜெபிப்போம். எழுப்புதலுக்கான பிரதானமான கிரியை

ஜெபம்தான். மழைக்காலம் வருமுன் தண்ணீரை தேக்கி வைக்கவும். ஓடும் பாதைகளை செவ்வைபண்ணவும் ஆயத்தம் செய்வதைப்போல இக்காலத்தில் தேவ ஜனங்கள் எழுப்புதலைப் பெற்றுக்கொள்ள வும், பெற்றுக்கொள்ளும் எழுப்புதலை பரவ செய்வதற்கு தேவை யான ஆயத்தங்களையும் இப்போதிருந்தே தீவிரமாய் செய் யும்படி ஜெபிப்போம்.

தேசத்தில் தீமைகள் திரளாய் பெருகும்போது, அந்த நாட்கள் மீறி போகாமலும், காலங்கள் குறைக்கப்படவும், கர்த்தர் எதிர் பார்க்கிற சுத்திகரிப்பு தேசத்திலும், சபைகளிலும், ஊழியர்கள் மத்தியிலும் உண்டாகவும் ஜெபிப்போம். எழுப்புதலுக்கான ஆயத்தங்களை செய்கிற செயல்வீரர்கள் தேவஜனங்களின் சுத்திகரிப்பிற்கான கிரியைகளை தீவிரமாக நிறைவேற்ற ஜெபிப் போம்.

மரணங்கள் தேசத்தில் பெருகும் போதும், உபத்திரவங்கள் அதிகரிக்கும்போதும், தேசம் செயலற்றிருக்கும்போதும் அவர் களை ஆறுதல்படுத்தவும், கர்த்தருடைய திட்டங்களைச் சொல்லி அவர்களை ஊக்கப்படுத்தவும், அவர்கள் தளர்ந்து விடாமல் பாதுகாக்கப்படவும் கிரியை செய்கிற செயல்வீரர்கள் எழும் பும்படியாக ஜெபிப்போம்.

07. ஆவியானவரின் பலத்த கிரியைகள் சபைகளி லும், ஊழியங்களிலும் வெளிப்பட ஜெபியுங்கள்.

கடைசிக்கால எழுப்புதலில் ஆவியானவரின் அசைவாடுதல் பலமாய் இருக்கும். சபைகளுக்குள்ளும், தேவ ஜனங்களுக்குள் ளும் அவர் பலமாய் கிரியை செய்வார். ஜனங்கள் பரிசுத்தமாக் கப்பட்டு. தேவசித்தம் நிறைவேறப் பிரயாசப்படுகிறவர்க ளாய் மாறுவார்கள். இப்படிப்பட்ட கிரியைகளை ஆவியான வர் சபைகளில் செய்ய ஜெபிப்போம்

ஆவியானவர் ஜனங்களுக்குள் வல்லமையாய் கிரியை செய்யவும், பசியுள்ளவன் ஆகாரத்தையும், தாகமுள்ளவன் தண் ணீரையும் வாஞ்சிப்பது போல ஜனங்கள் தேவனின் வார்த்தை களை வாஞ்சிக்கவும், வேதம் அவர்களைச் சுத்திகரிக்கவும், அதை மனமகிழ்ச்சியாய் ஏற்று சாட்சியாய் வாழவும் ஆவியா னவர் அவர்களை வழிநடத்த ஜெபிப்போம்.

இதுவரை உலகத்துக்கும் அதின் ஆசைகளுக்கும் இடம் கொடுத்து, வேதத்தை அந்நிய காரியமாய் எண்ணின சூழ்நிலை சபைகள் நடுவில் மாறவும், இதினிமித்தம் தேவ ஜனங்கள் இழந்த ஆவிக்குரிய நன்மைகள் இந்த எழுப்புதல் நாட்களில் இரட்டிப் பாய் பெற்றுக் கொள்ளவும், சபைகள் ஆவியானவரின் வழி நடத்துதலுக்குள் முழுமையாக கொண்டு வரவும் ஜெபிப்போம்.

எழுப்புதலுக்காக கிரியை செய்கிறவர்கள் பரிசுத்த ஆவியின் பலத்த அபிஷேகத்தைப் பெற்றவர்களாய், ஸ்தேவான்போல விசுவாசத்திலும் வல்லமையிலும் நிறைந்தவர்களாய் பெரிய காரியங்களைச் செய்யவும், அதனிமித்தம் ஜனங்கள் திரளாய் இரட்சிக்கப்பட்டு. வசனம் விருத்தியடையவும் ஆவியானவர் அவர்களை பலப்படுத்த ஜெபிப்போம்.

கடைசிநாட்களில் வேதஅறிவு பெருகும் என்று தானியேல் சொன்னபடி, இந்நாட்களில் மறைக்கப்பட்ட வேதத்தின் இரக சியங்கள், ஆழங்கள், வேதத்தின் முழுமை, கிறிஸ்து எப்படிப் பட்டவர், அவர் இராஜ்யம் எப்படி இருக்கும் என்கிற முத்தி ரிக்கப்பட்ட ரகசியங்களை ஆவியானவர் வெளிப்படுத்தி, வரப் போகிற எழுப்புதலுக்கும் கர்த்தரின் வருகைக்கு யாவரையும் ஆயத்தமாக்கிட ஜெபிப்போம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *