எழுப்புதல் பற்றி கர்த்தர் உரைத்த தீர்க்கதரிசனம்
கடைசிக்கால எழுப்புதலில் சபைக்கு இன்றியமை யாத பங்கிருக்கிறது என்று பார்த்தோம். இதன் காரணமாகத் தான் வரப்போகிற எழுப்புதலைக் குறித்து சபையானது தெளிவாக விளங்கிக் கொள்ளவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். இதன் காரணமாகவே கர்த்தரும் எழுப்புதலை குறித்து பல்வேறு விதமான சமயங்களிலும் நிறைய வெளிப் பாடுகளைக் கொடுத்துக்கொண்டே வருகிறார்.
அவ்விதமாக நாங்கள் சிலராகக் கர்த்தருடைய பாதத் தில் அவர் வார்த்தைகளுக்காகக் காத்திருந்து ஜெபித்த சமயத் தில் கர்த்தர் பேசிச் சொன்ன சில தீர்க்கதரிசன வார்த்தைகளை யும் உங்கள் பார்வைக்குத் தரலாம் என்று நினைக்கிறேன். நாங்கள் காத்திருந்த அந்த நாளில் கர்த்தர் இன்னும் அநேகம் காரியங்களைக் குறித்துப் பேசியிருந்தாலும் நமக்கு இங்கே தேவையான காரியங்களை மாத்திரம் தொகுத்துத் தந்திருக்கிறேன்.
தேசங்களை முழுமையான இருள் பற்றிக் கொள்ளும் முன்பாக நீங்கள் கிரியை செய் யும்படி நான் கதவுகளையும், வாசல் களையும் திறந்து வைப்பேன். அவை உங்களுக்குரியது. இது விதைகளுக்கான எழுப்புதல் காலம். விளைச்சல்களுக்கான எழுப்புதல் காலம்வரும் முன்பாக விதை களுக்கான எழுப்புதல் காலம் வரும்.
இந்த எழுப்புதலில் எழும்பும் விதைகள் விதைக்கப்படும்போது களஞ்சியங்கள் நிரம்பத்தக்கதாக அதின் விளைச்சலைக் கொடுக்கும்.
இது விளைச்சலுக்கான எழுப்புதல் அல்ல. விதைகளுக்கான எழுப்புதல். விதைகள் முந்தியெழும்பும். அவை விதைக்கப்படு கிறதினால் விளைச்சல் பிந்தி உண்டா கும். விதைகள் ஒவ்வொன்றும் நூறும் ஆயிரமுமான கனிகளைத் தரும். கனிகள் தனித்திருக்கும். விதைகள் கனி கொடுக் கும். விளைச்சல் உணவாகும். விதையோ விளைச்சலாகும்.
எனவே, விதைகளைக் குறித்து கவனமாய் செயல்படவேண்டும். அவை மிகுந்த கனி களைக் கொடுக்கும்படி அவை பலமூட் டப்பட வேண்டும். அவைகள் கவன மாய்க் கையாளப்பட வேண்டும்.
விருட்சங்களுக்கான விதைகளும், செடிக ளுக்கான விதைகளும், பயிர்களுக்கான விதைகளும், பற்றிப்படரும் கொடிகளுக் கான விதைகளும் தேசத்தில் உண்டு. விதை கள் ஒவ்வொன்றும் நூறும் ஆயிரமுமான கனிகளைத் தரும். கனிகள் தனித்திருக்கும். விதைகள் கனிகொடுக்கும். விதைகளோ விளைச்சலாகும்.விளைச்சல் உணவாகும்.
விருட்சங்களுக்கான விதைகளும், செடிக ளுக்கான விதைகளும், பயிர்களுக்கான விதைகளும், பற்றிப்படரும் கொடிகளுக் கான விதைகளும் தேசத்தில் உண்டு. நான் அவைகளைக் கூட்டிச் சேர்ப்பேன்.
மண்ணுக்கு மேலே விளைகிறதும், மண் ணுக்குக் கீழே விளைகிறதும், ஓங்கி வளரு கிறதும், கொடியாய் பற்றிப்படருகிறதும், செடியாய் செழித்து வளருகிறதும், கன்று களை ஈனுகிறதும், ஒருமுறை கனிதருகிற தும், பலமுறை கனிதருகிறதும், கிளைக ளில்கனிதருகிறதும், வேர்களில்கனிகளை தருகிறதும், தன் இலைகளைப் புசிக்கத் தருகிறதுமானதாவரங்களின் விதைகளை நான் என்னிடமாய்க் கூட்டிச்சேர்ப்பேன்.
அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான ஆயத்தம் உண்டு. ஒன்று மண் ணிலே பொதியப்பட வேண்டும். ஒன்று உரத்திலே பொதியப்பட வேண்டும். ஒன்று தண்ணீரிலே நனைக்கப்பட வேண்டும். ஒன்று நசுக்கி தீட்டப்பட வேண்டும். அவை களை வகை பிரிக்கவும், அவற்றின் வகை யின்படியே அவைகளை ஆயத்தப்படுத்த வும் செய்வேன்.
விதைகளில் மலடானவைகளைக் கண்டு பிடித்து அவைகளை நீக்கிப்போடவும், விதைகளானது விதைக்கப்பட்டவுடனேயே தன்பலனைக் கொடுக்கும்படி வீரியமடை யத்தக்கதாயும், பலனைக் கொடுக்கத்தக்க விதைகள் அதிக பலனைக் கொடுக்கவும் அவைகளை ஆயத்தம் செய்வேன். அதற் கானகாலம் இதோ, சீக்கிரம் வருகிறது என்று கர்த்தர் சொல்லுகிறார்.
கர்த்தர் தீர்க்கதரிசனமாக உரைத்துச் சொன்ன இந்த வார்த்தைகளைக்குறித்து என்ன நினைக்கிறீர்கள்? நான் இதைக்குறித்து என்ன நினைக்கிறேன் என்பதை சொல்லட்டுமா?
கடைசிக்கால எழுப்புதலைக் கர்த்தர் இரண்டு பிரிவு களாகப் பிரித்திருக்கிறார். ஒன்று எழுப்புதலைப் பிறப்பிக் கப்போகிற. அல்லது எழுப்புதலுக்குக் காரணமாக பயன் படுத்தப் போகிறவர்களுக்கான எழுப்புதல். இதைத்தான் விதைகளின் எழுப்புதல் என்கிறார். இரண்டாவது இவர்க ளைக் கொண்டு கர்த்தர் உருவாக்கப் போகிற எழுப்புதல். இதை விளைச்சல்களின் எழுப்புதல் என்கிறார்.
இதை வாசிக்கிற நீங்கள், எழுதிக்கொண்டிருக்கிற நான், உங்கள் சபை ஆகிய நாம் எல்லாருமே எழுப்புதலுக் கான விதைகள் என்றழைக்கப்படுகிறோம். நம்மைக் கொண்டு தான் கர்த்தர் கடைசிக்காலத்தில் எழும்பப் போகிற புதிய தலைமுறையினரைப் பிறப்பிக்கும் எழுப்புதலைக் கொண்டு வரப்போகிறார்.
நம் மூலம் கொண்டுவரப்படும் எழுப்புதலில் பிறக் கப்போகிற தலைமுறையினர்தான் விளைச்சல்கள் என்ற ழைக்கப்படுகிறார்கள். இவர்கள்தான் சாத்தானை எதிர்த்து தங்கள் இரட்சிப்பைக் காத்துக்கொண்டு கர்த்தருடைய இரண் டாம் வருகை வரைக்கும் காத்திருக்கப் போகிறவர்கள்.
இவர்கள் சாத்தானின் சகல சவால்களையும் எதிர் கொண்டு கர்த்தரின் வருகைவரை கறைபடாமல் காத்திருப் பார்கள். இவர்களைக் கர்த்தர் பயன்படுத்தும் விதமே தனி யாக இருக்கும். உபத்திரவகாலத்திலும், மகா உபத்திரவ காலத்திலும் சாத்தானின் ஆளுமையை ஏற்றுக்கொள்ளாமல் கர்த்தருடைய வருகைக்காகக் காத்திருப்பார்கள்.
இவர்கள் சரி. எழுப்புதலுக்கான விதைகளாக பயன் படுத்தப்பட்டவர்களின் நிலை என்ன என்ற கேள்வி நமக்குள் எழும்புகிறதல்லவா? அதையும் பார்த்துவிடலாம்.
சரி. நீங்கள் சொல்லுங்கள். ஒரு இடத்தில் நீங்கள் ஒரு விதை விதைக்கிறீர்கள். அந்த விதை நல்ல விளைச்சலை கொடுக்கிறது. இப்போது அந்த விதையைத் தேடுகிறீர்கள். அதை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? நீங்கள் விதைத்த அதே இடத்தில் தேடினாலும் அந்த விதையைக் கண்டுபிடிக்க முடியுமா? கண்டிப்பாக முடியாது. அந்த விதைக்கு என்னாயிற்று? அது தன் விளைச்சலைக் கொடுத்தவுடன் மறைந்து போய்விட்டது.
அதேதான். எழுப்புதல் விதைகளுக்கும் சம்பவித் கும். இந்த விதைகள் தங்கள் விளைச்சலைக் கொடுத்து முடித்தபிறகு இதுவும் காணப்படாமல் போய்விடும்.
ஆம். கர்த்தர் பகிரங்கமாக வந்து உலகத்தின் ஆளு மையைப் பிடிக்கும் முன்பாக, இந்த விதைகளை எடுத்துக் கொண்டுபோக ஒருமுறை மத்திய வானத்தில் வந்து நிற்பார். அப்போது, தன் விளைச்சலைக் கொடுத்து முடித்த சபையா னது அவரோடு கூட வானத்தில் எடுத்துக்கொள்ளப்படும். இதை இரகசிய வருகை என்கிறார்கள். இதைக் குறித்து வேதம் சொல்லுவதைக் கவனியுங்கள்.
1 கொரிந்தியர் 15:51
இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறி விக்கிறேன்: நாமெல்லாரும் நித்திரையடை வதில்லை: ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூப மாக்கப்படுவோம்.
எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித் தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப் பார்கள். நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.
இதே காரியம் இன்னும் தெளிவாக 1 தெசலோனிக் கேயர் 4:16-17 ல் சொல்லப்பட்டிருக்கிறதைக் கவனியுங்கள்.
1 தெசலோனிக்கேயர் 4:16-17
ஏனெனில், கர்த்தர்தாமே ஆரவாரத்தோ டும். பிரதான தூதனுடைய சத்தத்தோடும். தேவ எக்காளத்தோடும், வானத்திலிருந்து இறங்கிவருவார். அப்பொழுது கிறிஸ்துவுக் குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப் பார்கள்.
பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள் மேல் அவர் களோடே கூட ஆகாயத்தில் எடுத்துக் கொள் ளப்பட்டு, இவ்விதமாய் நாம் எப்பொழு தும் கர்த்தருடனே கூட இருப்போம்.
இந்த வருகை சபையைக் கர்த்தர் தம்மோடு எடுத்துக் கொண்டுபோகிறதற்கான வருகை. எந்த சபைகளை? தம் விளைச்சல்களைக் கொடுத்த சபைகளை. தன் விளைச்சல் களைக் கொடுக்காமல் தனித்திருக்கும் சபைகளையும், ஊழி யர்களையும், ஜனங்களையும் கர்த்தர் இந்த வருகையில் எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிடுவார். இவர்கள்தான் கைவிடப்பட்டவர்கள் என்றழைக்கப்படுகிறார்கள்.
இந்த இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்பட் டவர்கள் தவிர, விளைச்சல்களைக் கொடுக்காமல் கைவிடப் பட்டவர்கள் தவிர, எழுப்புதலில் விளைந்த விளைச்சல்க ளான தலைமுறையினரும் பூமியில் இருப்பார்கள். இவர் கள் கைவிடப்பட்டவர்கள் இல்லை. இவர்கள் கர்த்தருக்கென்று மீதமாக வைக்கப்பட்டிருப்பவர்கள்.
இதன்பின்பு ஏழுவருட முடிவில் இயேசுகிறிஸ்து வானவர் மறுபடியும் பூமிக்குத் திரும்பிவரும் வருகைக்கு இரண்டாம் வருகை என்று பெயர். இந்த வருகையில் மீத மாக விடப்பட்ட எழுப்புதலின் விளைச்சல்கள் கர்த்தரை எதிர் கொண்டு வரவேற்பார்கள்.
இவர்கள்தான் கர்த்தரின் ஆயிரம் வருட அரசாட்சி யில் குடிமக்களாக இருப்பார்கள். இவர்களைத்தான் கிறிஸ்து வானவர் இந்தப் பூமியில் ஆளுமை செய்வார்.
இப்போது நாம் என்ன ஆகிறோம்? இயேசுவுடனே கூட மத்திய வானத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட நாம், அவர் ஏழுவருட முடிவில் திரும்ப வரும்போது, நாமும் அவருடன் கூட திரும்பவருவோம். அவருடனே கூட நாமும் இந்த பூமியில் ஆளுமை செய் வோம். தம்முடைய ஆட்சியில் நம்மெல்லாருக்கும் கர்த்தர் அதிகாரங்களைக் கொடுப்பார். சிலரை ஆசாரியர்களாகவும், சிலரை ஆளுமை செய்கிறவர்களாகவும் நியமிப்பார். கர்த் தரோ பிரதான இராஜாவாகவும், பிரதான ஆசாரியராகவும் இருந்து ஆயிரம்வருடம் இந்த பூமியை ஆளுமை செய்வார்.