மோசேக்குக் கொடுக்கப் பட்ட ஐந்து கொள்கைகள் – பாகம் 2
2. அவர்களுக்கு வேதாகமத்தைப் போதியுங்கள்
சபைத் தலைவர்களுக்கு நாம் எத்தகைய பயிற்சியை அளிக்க வேண்டும்? “கட்டளைகளையும் பிர மாணங்களையும்” (யாத்.18:20) அவர்களுக்குப் போதிக்க வேண்டும்.
திருச்சபையின் இறையியல் கல்லூரிகளையும், வேதாகமப் பள்ளி களையும் பற்றி அறிந்தவர்கள் இவற்றில் பெரும்பான்மையான பள்ளிகளில் வேதாகமத்தைத் தவிர அநேகமாக மற்ற அனைத்தையும் பற்றியே போதிக்கிறார்கள் என் பதையும் அறிந்திருக்கிறார்கள். அநேக இறையியல் கல்லூரிகள் “கல்லறைகளாகவே” மாறிவிடு கின்றன சபைத் தலைவர்களாக ஆகக்கூடிய நூற்றுக்கணக்கானவர் களின் ஆவிக்குரிய வாழ்க்கை இங்கே அடக்கம் செய்யப்படுகிறது.
ஏதேன் தோட்டத்தின் அடிப் படையில் இரண்டில் ஒன்றைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு ஆதா முக்கும் ஏவாளுக்கும் கொடுக்கப்பட்டது.
“….தோட்டத்தின் நடுவிலே ஜீவ விருட்சத்தையும், நன்மை தீமை அறியத் தக்க விருட்சத்தையும்….” (ஆதி. 2:9), நன்மை தீமை அறியத்தக்க விருட் சத்தின் கனியைப் புசிப்பதின் விளை வாக பாவமும், மரணமும் ஏற்படு கின்றன. வேதாகமம் கூறும் இந்த எச்சரிப்புக்கு நேர் எதிர்மாறாக, திருச்சபையானது தனது பயிற்சித் திட்டங்களுக்காகத் தொடர்ந்து இந்த விருட்சத்தை நோக்கியே திரும்புகிறது.
இதன் விளைவு என்ன? பவுல் அப்போஸ்தலன் தெளிவாக விளக்கு கிறார்: “அறிவு இறுமாப்பை உண் டாக்கும், அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும்” (1 கொரி. 8:1).
வேதாகமத்தை அடிப்படை யான ஆதாரமாகப் பயன்படுத்தாத பயிற்சித் திட்டங்கள், கர்வமுள்ள, ஆவிக்குரிய ஜீவனும் செயல்திறனு மற்ற தலைவர்களையே உருவாக்கு கின்றன; பட்டம் பெற்றபிறகு இவர் கள் ஒரு சபையின் போதகராக ஆகிறார்கள்; அந்தச் சபை ஒவ் வொரு ஆண்டும் இன்னுமதிகமாகத் தேய்ந்து வருகிறது.
ஜீவனற்ற எதுவும் வளர்ச்சி பெறாது; வளர்ச்சி பெறவும் முடியாது. நன்மை தீமை அறியத்தக்க விருட்சம் மரணத்தையே விளைவிக்கிறது.
“இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தர மாக: நீங்கள் வேத வாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளு கிறீர்கள்” (மத். 22:29) என்றார். வேத வசனமானது தப்பான எண்ணங் களிலிருந்து நம்மை விலக்கிக் காத்து, ஜீவனை உருவாக்குகிறது. “ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்க ளுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவி யாயும் ஜீவனாயும் இருக்கிறது” (யோவான் 6:63).
வேதாகமத்தில் பதிவு செய்யப் பட்டுள்ள பிதாவாகிய தேவனுடைய வார்த்தைகளும், குமார னாகிய ஆண்டவருடைய (இயேசு) வார்த்தைகளுமே நமக்கு ஜீவனைக் கொண்டுவருகின்றன.
“ஜீவவிருட்சத்தின்மேல் அதிகார முள்ளவர்களாவதற்கும்… அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்” (வெளி. 22:14).
a. கற்பதில் சாதனை படைப் பது இறுதி நோக்கமல்ல.
பட்டங் களைப் பெறுவதற்கு முக்கியத்துவம் காடுக்கும் அறிவுபூர்வமான கொ சாதனைகளை அடிப்படையாகக் கொண்ட பயிற்சித் திட்டங்கள், இழந்துபோன ஆத்துமாக்களைக் கிறிஸ்துவுக்காக ஆதாயப்படுத்து வதற்கும், வளர்ச்சி பெறக்கூடிய சபைகளை உருவாக்குவதற்கும் அவ சியமான தலைமைத்துவத்தை உரு வாக்க முடியாது. எவ்வளவு தூரம் கல்வித் திறனுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்படு கிறதோ அவ்வளவுக்கவ்வளவு தலைமைத்துவத்தில் குறைவான திறனே காணப்படும். வேதா கமத்தைப் போதியுங்கள். திருச் சபைத் தலைவர்களுக்கு வேதாகமத் தில் பயிற்சியளியுங்கள். வேதாகமமே உங்கள் பயிற்சிப் பாடத் திட்டத்தின் மையமாக இருக்கவேண்டும்.
இயேசுவானவரைப் பற்றி, “இவர் கல்லாதவராயிருந்தும் வேத எழுத்துக் களை எப்படி அறிந்திருக்கிறார்” (யோவான் 7:15) என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இயேசுவானவர் சமயத் துறை யிலோ அல்லது உலகப் பிரகார மான முறையிலோ பாராட்டைப் பெறும்படி எந்தவித கல்வித் தகுதியையும் பெறாதவராக இருந்த படியால், வேதாகமத்தைப் பற்றிய அவரது அறிவைக் குறித்து யூதர்கள் வியப்படைந்தார்கள்.
இந்த முன்மாதிரியிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். கல்வி யில் சாதனை புரிவது இறுதி நோக்க மல்ல. சபைத் தலைவருக்குத் தேவை யானது வேத வசனங்களைப் பற்றி யும் தேவனுடைய வல்லமையைப் பற்றியும் உள்ள அறிவே (மத். 22:29).
b. “உழைக்கும் தலைவர்களைத்” தேடுங்கள்.
துவக்க கால அப்போஸ்தலர்கள் கல்வியறிவில் பேர்பெற்றவர்களாக வில்லை. “பேதுருவும் இருக்க யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறிவில்லாதவர் களென்றும் பேதமையுள்ளவர்களென் றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்த வர்களென்றும் அறிந்துகொண்டார்கள்” (அப். 4:13).
இயேசுவானவரின் அப்போஸ் தலர்களில் எவருமே பரிசேயர் அல்லது சதுசேயரின் இறையியல் கல்லூரியில் பட்டம் பெற்றிருக்க வில்லை. சபைத் தலைவர்களுக்குரிய தகுதியாக அவர் கொண்டிருந்தது இதுவே: “அறுப்பு மிகுதி, வேலையாட் களோ கொஞ்சம்; ஆகையால் அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக் கொள்ளுங்கள்” (லூக்கா 10:2). கடினமாக உழைப்பது எப்படி என்பதைத் தான் அறிந் தவன் என்பதை நிரூபிக்கக் கூடிய வனே செயல்திறனுள்ள சபைத் தலைவனாவான். உழைப்பினால் அவன் கரங்கள் கரடு தட்டிப் போயிருக்கும். செயலாக்கம் பெறும் படி கடினமாக உழைக்கும் ஒழுக் கத்தை அவன் கற்றுத் தேறியிருக்கிறான்.
இதற்கு நேர் எதிர்மாறாக, இறையியல் கல்லூரியில் பட்டம் பெற்று வருபவன் பெரும்பாலும் கர்வமுடையவனாகக் காணப்படு கிறான்; உழைப்பதற்கு அவன் அகம் பாவம் தடை போடுவதால் அவன் சோம்பேறியாகவும், செயலாக்கம் பெறாதவனாகவும் இருக்கிறான். தமது சீடர்களின் பாதங்களைக் கழுவிய ஒருவரைப் பிரதிநிதித்துவம் செய்ய இப்படிப்பட்டவர்கள் தகுதியற்றவர்களாகவே இருக்கிறார் கள். ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவின துண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக் கடவீர்கள்” (யோவான் 13:14). ‘உழைக்கும் தலை வனைத் தெரிந்துகொண்டீர் களானால், பெரும்பாலும் செய லாக்கம் பெற்றுள்ள சபைத்தலை வனைக் கண்டடைவீர்கள்.
எனவேதான் இயேசுவானவர் பேதுருவையும், யோவானையும்
போன்ற மீனவர்களையும், ஆயக்கார னான மத்தேயு மற்றும் மருத்துவ னான லுக்கா இவர்களைப் போன்ற தொழில்புரிபவர்களையும் தெரிந்து கொண்டார். செயல் திறனைப் பெற் றிருந்த அவர்கள் கடினமாக உழைப்பது எப்படி என்பதையும் அறிந்திருந்தார்கள். இப்படிப்பட்ட வர்களுக்கு வேதாகமத்தைக் கற்றுக் கொடுக்க முடியும்; அவர்கள் கனி கொடுக்கும் தலைவர்களாகவும் விளங்குவார்கள்.
3. அவர்கள் செய்யவேண்டிய பணியைச் சுட்டிக்காட்டுங்கள்
….அவர்கள் நடக்க வேண்டிய வழியையும், அவர்கள் செய்ய வேண்டிய காரியத்தையும் அவர்களுக்குத் தெரியப் படுத்தும்” (யாத். 18:20). அப்போஸ் தலருடைய நடபடிகள் நூலின் துவக்கத்தில் லூக்கா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: “அவர் எடுத்துக் கொள்ளப்பட்ட நாள்வரைக்கும் செய்ய வும் உபதேசிக்கவும் தொடங்கின எல்லா வற்றையுங் குறித்து, முதலாம் பிரபந் தத்தை உண்டுபண்ணினேன்” (அப். 1:1).
a.அவர்கள் ஈடுபாடு கொள்ளும்படி செய்யுங்கள்.
பயிற்சி பெறுபவருக்குப் போதனை கொடுப் பது மட்டுமே போதுமானதல்ல. அந்த மாணவன் உடனடியாக கிரியை செய்வதிலும், உபதேசிப் பதிலும் ஈடுபடும்படி தூண்டுதல் அளிக்க வேண்டும்.
“ஆத்துமாக்களை ஆதாயப் படுத்துவதைப் பற்றி நீங்கள் போதிப் பீர்களானால், உடனடியாக அந்த மாணவர்களை ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தும் முயற்சியில் அனுப்புங்கள். நோயுற்றவர்களைக் குணமாக்குவது எப்படியென்றும் கற்றுக் கொடுப்பீர்களானால், உடனடியாக அவர்கள் இதைச் செய்யும்படி அனுப்புங்கள். இயேசு வானவர் அதையே செய்தார்.
“அப்பொழுது, அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
….இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்ன வென்றால்:…..போகையில்…..
“பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள். வியாதியுள்ள வர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்ட ரோகிகளைச் சுத்தம் பண்ணுங்கள், மரித் தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் இலவசமாய்ப் பெற்றீர்கள், துரத்துங்கள்; இலவசமாய்க் கொடுங்கள்” (மத். 10:1-8).
“அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ள வர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கிக்கவும், பிணியாளிகளைச் சொஸ்தமாக்கவும் அவர்களை அனுப்பி னார்….. அவர்கள் புறப்பட்டுப்போய், கிராமங்கள்தோறும் பிரசங்கித்து, பிணி யாளிகளைக் குணமாக்கினார்கள்.” (லூக்கா 9:1,2,6).
“இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறே எழுபது பேரை நியமித்து, தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங் களுக்கும் அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார்.
….புறப்பட்டுப் போங்கள்; ஆட்டுக் குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்பு கிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்.
“ஒரு பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கும்போது… அவ்விடத்திலுள்ள பிணியாளிகளைச் சொஸ்தமாக்கி: தேவ னுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறது என்று அவர் களுக்குச் சொல்லுங்கள்.
“பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பி வந்து; ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள்.
“அவர்களை அவர் நோக்கி: சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்.
“இதோ, சர்ப்பங்களையும் தேள் களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ள வும் உங்களுக்கு அதிகாரங் கொடுக் கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்த மாட்டாது.
……அந்த ஆவியிலே வேளையில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்வி மான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது” (லூக்கா 10:1-21 வேத பகுதியிலிருந்து எடுக்கப்பட்டது). 6
b. குறுகிய காலப் பயிற்சியே சிறப்பானது.
இயேசுவானவரால் அனுப்பப்பட்ட பன்னிரு அப் போஸ்தலரும் எழுபது பேரும் குறுகிய காலப் பயிற்சியே பெற் றிருந்தார்கள் என்பதைக் கவனி யுங்கள். அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்பதை அவர் செய்து காட்டினார்; அவர் செய்த கிரியை களைச் செய்யும்படி அவர்களை அனுப்பினார். “மெய்யாகவே மெய் யாகவே நான் உங்களுக்குச் சொல்லு கிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால் என்னை விசுவாசிக் கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்” (யோவான் 14:12).
பயிற்சித் திட்டத்தின் காலக் கெடு எவ்வளவு தூரம் அதிக மாகிறதோ அவ்வளவுக்கவ்வளவு பட்டம் பெறுபவர்கள் செயல் திறனில் குறைவுபட்டவர்களாக இருப்பார்கள். அதிகபட்சமாக ஆறுமாத கால அளவே பயிற்சி கொடுக்கப்பட வேண்டும். அதன் பிறகு பயிற்சி பெறுபவர்கள் முழு நேரப் பணிபுரியும்படி அனுப்பப்பட வேண்டும். தேவைப்பட்டால் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மேலும் பயிற்சி பெறும்படி அவர்கள் அழைக்கப்படலாம்.
c. செயல்முறைப் பயிற்சிக்கு முக்கியத்துவம் அளியுங்கள்
குறுகிய காலப் பயிற்சியில் 50 சத வீதம் போதிப்பதற்கும், 50 சத வீதம் கிரியை செய்வதற்கும் ஒதுக்கப்பட வேண்டும். போதிக்கப் படும் எந்தக் காரியமும் உடனடியாக செயல்முறைப்படுத்தப்பட வேண் டும் (கிரியை செய்வது). மூளைக்குப் பயிற்சியளிப்பதைவிட கைகளுக்குப் பயிற்சியளியுங்கள். செயல்முறைப் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
இந்த நூலின் ஆசிரியர் கடந்த முப்பது ஆண்டுகளில் பெரும் பகுதியை உலகெங்கிலுமுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் சென்று ஊழிய முயற்சிகளை மேற் பார்வை செய்வதில் கழித்துள்ளார். நற்பலனை விளைவிக்கும் ஊழியத் திட்டங்களோடுகூட, எந்தவிதப் பயனையுமே அளிக்காத பயிற்சித் திட்டங்களையும் அவர் கவனித் துள்ளார்.
மூன்று நாடுகளைச் சேர்ந்த சபைகள் அபரிமிதமான களைப் பலன் பெற்று வருகின்றன. கொரியா, பிரெசீல் சிலி என் பவையே இந்த மூன்று நாடுகள். இந்த நாடுகளில் மேலே கூறப்பட்டுள்ள கருத்துக்கள் செயல்படுத்தப்படு கின்றன. சபைகள் துரிதமாக வளர்ச்சி பெற்று வருகின்றன; ஆயிரக்கணக்கானோரைக் கிறிஸ்து வுக்காக ஆதாயப்படுத்துவதில் தலை வர்கள் வெற்றிபெற்று வருகின்றனர்.
இங்கே கொடுக்கப்படும் பயிற்சி வேதாகமத்தை மையமாகக் கொண் டது; குறுகிய கால வரையறை கொண்டது; செயல்முறைப் பயிற் சிக்கு முக்கியத்துவம் கொடுப்பது. கல்வித் திறனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இந்த மூன்று நாடுகளின் பயிற்சித் திட்டங்களி லும், கிறிஸ்துவுக்கு அர்ப்பணிப் போடு ஒப்படைத்தல், பரிசுத்தமான குணாதிசயம், செயல்முறைப் பயிற்சி (போதிக்கப்படுவதை உடனடியாகச் செயல்படுத்துதல்) இவற்றுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டன.
இந்தப் பயிற்சித் திட்டம் வேதா கமத்தை அடிப்படையாகக் கொண்டது. வேதாகமம் கூறும் பலன்களை விளைவிக்கக் கூடியது.