மோசேக்குக் கொடுக்கப் பட்ட ஐந்து கொள்கைகள் – பாகம் 3

மோசேக்குக் கொடுக்கப் பட்ட ஐந்து கொள்கைகள் - பாகம் 3

மோசேக்குக் கொடுக்கப் பட்ட ஐந்து கொள்கைகள் – பாகம் 3

4. அபிஷேகத்தை மற்றவரிடம் கொடுத்தல்

“அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: மூப்பரில் எழுபது பேரைக் கூட்டி, அவர்களை ஆசரிப்புக் கூடாரத்தினிடத்தில் அங்கே உன்னோடே கூட வந்து நிற்கும்படி செய்.

“அப்பொழுது…. நீ ஒருவன்மாத்திரம் ஜனங்களின் பாரத்தைச் சுமக்காமல், உன்னோடே கூட அவர்களும் அதைச் சுமப்பதற்காக உன்மேல் இருக்கிற ஆவியை அவர்கள் மேலும் வைப்பேன்” (Num. 11:16,17).

a. அபிஷேகம் அத்தியாவசியமானது. 

தலைமைத்துவ திறனை மேம்படுத்துவதில் இந்த அம்சம் மிகவும் முக்கியமானது; ஆனால் அதே வேளையில் இந்த அம்சமே அதிகமாகப் புறக்கணிக்க வும் படுகிறது.

பரிசுத்த ஆவியானவரின் வல்லமை தலைவரின்மீது இறங்கி யிராவிட்டால் (அபிஷேகம் பெறா விட்டால்) அவர் வெற்றி பெறுவ தற்கு எந்தவித வாய்ப்பும் கிடை யாது. தாம் முதலில் வல்லமையை அளிக்காமல், இயேசுவானவர் தம்மைப் பிரதிநிதித்துவம் செய்யும்படி எவரையும் அனுப்ப வில்லை.

“அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசு களையும் துரத்தவும், வியாதியுள்ள வர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து….” (லூக்கா 9:1).

“இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறே எழுபது பேரை நியமித்து…. அவர் களை அவர் நோக்கி… இதோ, சர்ப்பங் களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையை யும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்த மாட்டாது” (லூக்கா 10:1,18,19).

“அன்றியும், அவர் அவர்களுடனே கூடி வந்திருக்கும்போது, அவர்களை நோக்கி; யோவான் ஜலத்தினாலே ஞானஸ் நானங் கொடுத்தான்; நீங்கள் சில நாளுக் குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ் நானம் பெறுவீர்கள்.

“ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்” (அப். 1:4,5).

“பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் பரியந்தமும், எனக்குச் சாட்சிகளா யிருப்பீர்கள் என்றார்” (அப். 1:8). கடைசி

இயேசுவானவர் தாம் யோவான் ஸ்நானனினால் ஜலத்தில் ஞானஸ் நானம் பெறும்போது, தம்மீது தேவ ஆவியானவர் வந்து இறங்கும்வரை, தமது ஊழியத்தைத் துவங்கா திருந்தார் (பார்க்க மத்தேயு 3:16; மாற்கு 1:10; யோவான் 1:32),

கீழ்க்கண்ட வார்த்தைகளுடன் இயேசுவானவர் தமது ஊழியத்தைத் துவங்கினார்: “கர்த்தருடைய ஆவி யானவர் என்மேலிருக்கிறார்; தரித்திர ருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம் பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குண மாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வை யையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங் குண்டவர்களை விடுதலையாக்கவும், கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பி னார்” (லூக்கா 4:18,19 – மே.கோ. லேவியராகமம் 25: 1-54).

மேலே கூறப்பட்டுள்ள வசனங் களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது போல இயேசுவானவர் அபிஷேகம் பண்ணப்படுவது அவசியமானதாக இருந்தது. அதைப் போலவே உங்க ளுக்கும் அது அத்தியாவசியமானது.

தமது சீடர்கள் “பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம்” (அப். 1:5) பெற வேண்டும் என்று இயேசு வானவர் கட்டளையிட்டார். துன் மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறி கொள்ளாமல் ஆவியினால் நிறைய வேண்டுமென்று (எபே. 5:18) பவுல் கட்டளையிட்டார்.

இந்த முக்கியமான அம்சத்தைப் பற்றி இன்னுமதிகமாக அறிந்து கொள்ள தலைவர்களின் பயிற்சிக் கையேட்டில், “பரிசுத்த ஆவியான வரில் ஞானஸ்நானம்” என்ற பகுதியைப் பாருங்கள்.

b. அபிஷேகம் பெற்ற தலைவர்கள் மற்றவர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும். 

மேலே குறிப்பிடப்பட்டுள்ள வேத பகுதி களில் பொதிந்துள்ள முக்கியமான கருத்தை நாம் கவனிக்கத் தவறக் கூடாது. முக்கியமான தலைவர் அபிஷேகம் செய்யப்பட்டார்; அவர் தம்மால் பயிற்சி பெற்றவர்களுக்குத் தமது அபிஷேகத்தைப் பிரித்துக் கொடுத்தார்.

ஆனால் இதற்கு மாறாக, அநேக வேளைகளில் ஊழியத்தில் தோல்வி யுற்ற அநேகர் இறையியல் கல்லூரி களில் ஆசிரியராக இருப்பதை இந்த நூலாசிரியர் கண்டிருக்கிறார். ஒரு சபைக்குப் போதகராகவோ அல்லது நற்செய்தி அறிவிக்கும் படியோ சென்றவர்கள், அந்தப் பணியில் தோல்வியுற்றபோது, அநேக வேளைகளில் அவர்கள் தலைமைத்துவ திறனைப் பெற் றுள்ளவர்களுக்குப் பயிற்சியளிக்கும் படி இறையியல் கல்லூரிக்கு அழைக் கப்படுகிறார்கள். இதன் காரணமாக தோல்வியடையக் கூடியவர்களே உருவாக்கப்படும் அபாயம் காணப் படுகிறது.

வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள அறுவடையின் விதி மிகத் தெளிவாக உள்ளது. “பூமியானது தங்கள் தங்கள் ஜாதியின் படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டு களையும், தங்கள் தங்கள் ஜாதிகளின் படியே தங்களில் தங்கள் விதையை யுடைய கனிகளைக் கொடுக்கும் விருட் சங்களையும் முளைப்பித்தது…..

“தேவன், மகா மச்சங்களையும், ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின் படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகல வித நீர்வாழும் ஜந்துக்களையும், சிறகுள்ள ஜாதிஜாதியான சகலவிதப் பட்சிகளையும் சிருஷ்டித்தார்…..” (ஆதி. 1:12, 21).

நாம் எப்படியிருக்கிறோமோ அப்படியே நாம் இனப்பெருக்கம் செய்கிறோம். தோல்விபெற்ற தலைவர்கள் பயிற்சியளிப்பார்களா னால், அவர்களின் மாணவர்களும் தோல்வி பெறுபவர்களாகவே இருப்பார்கள். தங்கள் வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவரின் அபிஷே கத்தை வல்லமையாகப் பெற்றுள்ள, வெற்றி பெற்ற தலைவர்களே. தலைமைப் பொறுப்புக்கு மற்றவர் களைப் பயிற்றுவிக்கும் பொறுப்பில் ஈடுபட வேண்டும். அவர்கள் தங் களைப் போலவே வல்லமையான அபிஷேகம் பெற்று, வெற்றி பெறும் மற்றவர்களை உருவாக்குவார்கள்.

மோசேயிடம் பயிற்சி பெற்றவர் களும் இவ்வாறே இருந்தார்கள். “உன்மேல் இருக்கிற ஆவியை அவர்கள்மேலும் வைப்பேன்”(எண்.11:17) என்றார் தேவன்.

இதுவே எலியா மற்றும் எலிசாவைப் பொருத்தமட்டிலும் உண்மையாக இருந்தது. “எலியா எலிசாவை நோக்கி: நான் உன்னைவிட்டு எடுத்துக் கொள்ளப்படுமுன்னே நான் உனக்குச் செய்ய வேண்டியது என்ன, கேள் என்றான். அதற்கு எலிசா: உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி வேண்டுகிறேன் என்றான்.

“அதற்கு அவன்: அரிதான காரி யத்தைக் கேட்டாய்; உன்னைவிட்டு நான் எடுத்துக் கொள்ளப்படுகையில் என்னை நீ கண்டால் உனக்குக் கிடைக்கும்; இல்லாவிட்டால் கிடையாது என்றான்.

“அவர்கள் பேசிக்கொண்டு நடந்து போகையில், இதோ, அக்கினி ரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழற்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப் போனான்.

“அதை எலிசா கண்டு: என் தகப்பனே, தகப்பனே, இஸ்ரவேலுக்கு என் இரதமும் குதிரை வீரருமாய் இருந்தவரே என்று புலம்பினான்…

“பின்பு அவன் எலியாவின் மேலி ருந்து கீழே விழுந்த சால்வையை எடுத்துத் திரும்பிப் போய், யோர்தானின் கரையிலே நின்று, எலியாவின் மேலிருந்து கீழே விழுந்த சால்வையைப் பிடித்து: எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று சொல்லித் தண்ணீரை அடித்தான்; தண்ணீரை அடித்தவுடனே இருபக்கமாகப் பிரிந்ததினால் அது இருபக்கமாகப் எலிசா இக்கரைப்பட்டான்.

“எரிகோவில் பார்த்துக்கொண்டு நின்ற தீர்க்கதரிசிகளின் புத்திரர் அவனைக் கண்டவுடனே எலியாவின் ஆவி (அபிஷேகம்) எலிசாவின்மேல் இறங்கி ஆவி யிருக்கிறது என்று சொல்லி….” (2இரா. 2:9-15).

இயேசுவானவர் மற்றும் அவ ரது சீடர்களைப் பொருத்தமட்டி லும் இதுவே உண்மையாக இருந்தது. “பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே…” (யோவான் 14:26).

“பிதாவினிடத்திலிருந்து நான் உங்க ளுக்கு அனுப்பப் போகிறவரும்…. தேற்றர வாளன் வரும்போது..”(யோவான் 15:26).

“நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்க ளிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்” (யோவான் 16:7).

C. அபிஷேகம் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. 

மோசேயின் அபிஷேகம் அவனது ஊழியத்தில் பங்கு கொள்ளவிருந்த தலைவர் களுக்குப் பரிமாற்றம் செய்யப் பட்டது. எலியாவிடமிருந்து, அவ னது ஊழியத்தில் பங்கு கொள்ள. விருந்த எலிசாவுக்கு அபிஷேகம் பரிமாற்றம் செய்யப்பட்டது. இயேசு வானவரின் ஊழியத்தில் பங்கு கொள்ளவிருந்த சீடர்களுக்கு அவரிடமிருந்து அபிஷேகம் பரி மாற்றம் செய்யப்பட்டது.

இன்றும் இவ்வாறே நடைபெறு கிறது. பயிற்சி பெறுபவர், பயிற்சி யளிப்பவரின் அபிஷேகத்தில் பங்கு பெறுகிறார். எனவே, பயிற்சி கொடுப் பவர்கள் தேவனுடைய வல் லமையைத் தங்கள் வாழ்க்கையில் அதிகமாக வெளிப்படுத்துகிறவர் களாக இருக்க வேண்டும். அறு வடையின் விதி அப்போது செயல் படும். அவர்கள் தங்கள் சிறப்புக் கேற்றபடி கனி கொடுப்பார்கள்.

ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்க மக்களிடையே அற்புதமான குணமாக்கும் ஊழி யத்தைச் செய்துவந்த, வல்லமை யுள்ள நற்செய்தியாளர் ஒருவரை நான் அறிவேன். எந்தெந்த நாடு களில் அவர் ஊழியம் செய்தாலும், அவரது மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரிபவரும் இந்த நற்செய்தி யாளரைப் போன்றே அபிஷேகம் (ஊழியம்) பெறுவதை நான் கவனித் தேன். இரண்டு வாரங்கள் அந்த நற்செய்தியாளரோடு சேர்ந்து பணி புரிந்தாலே அபிஷேகம் பரிமாற்றம் செய்யப்பட்டது. அந்த நற்செய்தி யாளர் விட்டுச் சென்றபின்னரும், மொழிபெயர்ப்புப் பணிசெய்த ஊழி யர், நற்செய்தியாளரின் ஆவியிலும், வல்லமையிலும் தொடர்ந்து ஊழி யம் செய்வார்.

d. அபிஷேகத்தைப் பரிமாற்றம் செய்வது யார்?

 ..நான்… உன் மேல் இருக்கிற ஆவியை அவர்கள் மேலும் வைப்பேன்” (எண். 11:17) என்றார் தேவன்.

தேவனுடைய இராஜரீகத்திலும், அவருடைய வழிநடத்துதலினா லுமே இது நிகழ்கிறது. பெறுபவர் யாரென்று தெரிந்தெடுப்பவர் தேவனே; அவரே இந்த ஆசீர்வதிக் கப்பட்ட மாற்றத்தின் மூலம் தலைமைப் பொறுப்பை நியமிக்கிறார். “….ஆரோனைப் போலத் தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத் துக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை” (எபி. 5:4). தேவனே நியமனம் செய்கிறவர்.

துவக்ககால திருச்சபையில், தேவன் பேசக்கூடிய அளவு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கும்படியாக, விசுவாசிகள் உபவாசிப்பதிலும், ஜெபிப்பதிலும், ஊழியத்திலும் நேரம் செலவிட்டார்கள் என்று தெரிகிறது (அப்.1:14; 13:1-3). இத்தகைய வேளைகளில் பரிசுத்த ஆவியானவர் அருளப்பட்டார். அபிஷேகம் அளிக்கப் பட்டது. ஊழியர்கள் பரிசுத்த ஆவியான வரின் வல்லமையைப் பெற்றவர்களாக வெளியே சென்று, தங்கள் ஊழியங் களை வெற்றிகரமாக நிறைவேற்றினார்கள்.

மேல் அறையின் சூழலை நாம் மறுபடியும் ஏற்படுத்தி, ஆவியான வரின் வல்லமை வரும்வரை தேவ பிரசன்னத்திற்காக வேண்டி ஜெபிப் போமாக. அப்போது இயேசுவான வரின் உயிர்த்தெழுதலை நிரூபித்து, பிரகடனம் செய்யும்படி வெளியே செல்ல நாம் ஆயத்தமுடையவர் களாவோம்.

“கர்த்தராகிய இயேசுவின் உயிர்த் தெழுதலைக் குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சி கொடுத்தார்கள்; அவர்களெல்லார்மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது” (அப். 4:33).

5. பாரத்தைப் பரிமாற்றம் செய்யுங்கள்

“அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: இஸ்ரவேல் ஜனங்களுக்கு மூப்பரில் கூட்டி, அவர்களை…. உன்னோடேகூட வந்து நிற்கும்படி செய்… நீ ஒருவன் மாத்திரம் ஜனங்களின் பாரத்தைச் சுமக்காமல், உன்னோடேகூட அவர்களும் அதைச் சுமப்பதற்காக….” (எண். 11:16,17).

பொறுப்பை ஏற்றுக்கொள்ள ஒருவர் முன்வருவதைக் கண்டீர் களானால் அவரை உயர்த்துங்கள்! அந்த நபர் தேவனுடைய ஊழியத் திற்கு ஓர் ஆசீர்வாதமாக விளங்கு வார். ஆனால் அதிகாரத்தை வேண்டும் ஒரு நபரைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்! அந்த நபர் தேவனுடைய ஊழியத்திற்கு ஊறு விளைவிப்பார்.

a. தலைமைப் பொறுப்பு என்பது ஆளுகைப் பதவியல்ல. 

“உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து… சுதந் தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்க ளாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள்” (1 பேதுரு 5:2,3).

ஆளுகை செய்யும்படியே தேவன் மனுக்குலத்தைப் படைத்தார் (பார்க்க-ஆதியாகமம் 1:26). இதன் காரணமாகவே, அநேக மனிதர்க ளின் இருதயங்களில் ஆளுகை செய் வதற்கான வாஞ்சை இருக்கிறது.

ஆனால் வேதாகம முன்மாதிரி யின்படி ஆளுகை செய்வது என்பது, உலகத்தின் பெரும்பாலான தலைவர்கள் தங்கள் அதிகாரத்தைச் செயல்படுத்துவதைவிட முற்றிலும் வேறானது. எனவே தலைமைப் பொறுப்பு குறித்த வேதாகம முன் மாதிரியை நாம் புரிந்துகொள்வது அவசியம்.

இயேசுவானவர் செய்தபடியே ஆளுகையைப் பயன்படுத்துவதே சரியானது. …பிதாவுக்குப் பிரிய மானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால்…” (யோவான் 8:29). அவர் தனது தலைமைப் பொறுப் பைப் போதிக்கவும், ஆசீர்வதிக்கவும், குணமாக்கவும், கட்டுக்களை உடைக் கவும், பிசாசுகளை விரட்டவும், பாவங்களை மன்னிக்கவும், இருதயம் நொறுங்குண்டவர்களைக் குண மாக்கவும் பயன்படுத்தினார் (பார்க்க லூக்கா 4:18), இவை அனைத்துமே அவரது பரலோக பிதாவானவரைப் பிரியப்படுத்தின.

“அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங் கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்” (மாற்கு 10:45). சுய ஆதாயம் தேடும் ஒரு சர்வாதி காரியைப் போல இயேசுவானவர் ஆளுகைப் பொறுப்பைச் செயல் படுத்தவில்லை. அவர் ஓர் ஊழிய ஆளுநராகவே செயல்பட்டார்.

அவரது சீடர்கள் இதைப் புரிந்து கொள்ளவில்லை. தலைமைப் பொறுப்பு என்பது அவர்களுக்குத் துதியையும், மதிப்பையும் பெற்றுத் தரும் மேலான பதவியென்று அவர் கள் நினைத்தார்கள். 

“அப்பொழுது, செபதேயுவின் குமாரருடைய தாய் தன் குமாரரோடுகூட அவரிடத்தில் வந்து, அவரைப் பணிந்து கொண்டு: உம்மிடத்தில் ஒரு விண் ணப்பம் பண்ண வேண்டும் என்றாள்.

“அவர் அவளை நோக்கி: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவள்: உம்முடைய இராஜ் யத்திலே என் குமாரராகிய இவ்விரண்டு பேரில் ஒருவன் உமது வலது பாரிசத் திலும், ஒருவன் உமது இடது பாரிசத் திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள் செய்ய வேண்டும் என்றாள்.

“இயேசு பிரதியுத்தரமாக…. புறஜாதி யாருடைய அதிகாரிகள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், பெரியவர்கள் அவர்கள் மேல் கடினமாய் அதிகாரஞ் செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்களுக் குள்ளே அப்படி இருக்கலாகாது; உங் களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்.

“உங்களில் எவனாகிலும் முதன்மை யானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக் கடவன். அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்” (மத். 20:20-28).

தமது அப்போஸ்தலர்கள் மேலாக ஆளுகை செய்ய வேண்டு மென்று ஆண்டவர் விரும்பவில்லை. அவர்கள் மக்களுக்குக் கீழாக, தங் களைத் தாழ்த்தி, குனிந்து, அவர் களின் கால்களைக் கழுவி, கீழான ஓர் அடிமையைப் போல ஊழியம் செய்ய வேண்டுமென்றே அவர் விரும்பினார். “ஆண்டவரும் போதகரு மாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவ ருடைய கால்களை ஒருவர் கழுவக் கடவீர்கள்” (யோவான் 13:14).

தனது எழுத்துக்களில் பவுல் அப்போஸ்தலன் இதை உறுதிப் படுத்தினார். … இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள்… அப்போஸ்தலர் தீர்க்க தரிசிகள் என்பவர்களுடைய அஸ்தி பாரத்தின் மேல் கட்டப்பட்டவர்களுமா யிருக்கிறீர்கள்; அதற்கு இயேசு கிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்” (எபே. 2:13,20).

தலைமைத்துவம் என்பது (அப் போஸ்தலரும், தீர்க்கதரிசிகளும்) திருச்சபையின் அடிப்படை ஊழிய மாக இருக்கிறது என்று இந்தப் பகுதி போதிக்கிறது. ஒரு கட்டிடத் தின் அஸ்திபாரம் என்பது அதற்கு மேலாக இருப்பதில்லை. மாறாக, அது கட்டிடத்தைத் தாங்கும் வகையில் அதற்குக் கீழே இருக்கிறது.

“மூலைக் கல்” என்பது கூம்பின் உச்சக் கல்லாக (அல்லது தலைக் கல்லாக) இருக்கிறது. இந். இடம் இயேசுவானவருக்கு மட்டுமே உரியது. அவர் மட்டுமே “மூலைக் கல்லாக” திருச்சபையில் ஆளுகை செய்வதற்கான எந்த உரிமையையும் பெற்றுள்ளார்.

இயேசுவின் இடத்தை எடுத்துக் கொள்ள முனையும் எந்த சபைத் தலைவரும், அவருக்கு விரோதமாகச் செயல்படும் அபாயம் உண்டு. புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவுக்கு விரோத மான என்பதைக் குறிப்பிடும் கிரேக்கபதம், ‘கிறிஸ்துவுக்கு விரோத மாக’ என்று பொருள்படுவது மட்டு மின்றி, சில இடங்களில் ‘கிறிஸ்து வுக்குரிய இடத்தில்’ என்றும் பொருள்படுகிறது. தலைமைப் பொறுப்புக்காகப் பயிற்சி பெறு பவர்கள் இந்த முக்கியமான கருத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குப் பல நூற்றாண்டு களுக்கு முன்னர் இஸ்ரவேலர் தங்களை மீட்ட கிதியோனை ஓர் அரசனாக்க முயன்றார்கள். உடனே அவன் புத்திசாலித்தனமாக, “நான் உங்களை ஆளமாட்டேன்; என் குமாரனும் உங்களை ஆளமாட்டான்; கர்த்தரே உங்களை ஆளுவாராக என்றான்” (நியா. 8:23).

1) யோதாம் கூறிய உவமைக் கதை. 

கிதியோனின் உறவினர்களில் ஒருவனான யோதாம் கூறிய உவமைக் கதையை (நியா. 9:7-21) வாசித்துப் பாருங்கள்.

அவனது உவமைக் கதையில், ‘கனிகொடுக்கும் எந்த மரங்களும்’, செடிகளும் ஆளுகை செய்யும் அழைப்பை ஏற்றுக்கொள்ள முன் வரவில்லை. கனி கொடுக்காத, முட்கள் நிறைந்த, முட்செடியே அந்த ஆளுகை செய்யும் அழைப் புக்குச் செவிசாய்த்தது. யோதாமின் உவமைக் கதையில் கனிதரும் திராட்சச் செடி கூறியதைக் கவனி யுங்கள்: “அப்பொழுது மரங்கள் திராட்சச் செடியைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாயிரு என்றது.

“அதற்குத் திராட்சச் செடி: தேவர் களையும் மனுஷரையும் மகிழப் பண்ணும் என் ரசத்தை நான் விட்டு மரங்களை அரசாளப்போவேனோ என்றது” (நியா. 9:12,13). மற்றவர்களை ஆளுகை செய்ய திராட்சச் செடி மறுத்துவிட்டது.

இயேசுவானவரும் இதேபோன்ற மனோபாவத்தையே கொண்டிருந் தார். அவரே மெய்யான திராட்சச் செடி; அவரும்கூட தாம் அரசனாக் கப்படுவதற்கு இடம்கொடுக்க மறுத் தார் (பார்க்க, யோவான் 15:1). “ஆதலால் அவர்கள் வந்து, தம்மை இராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டு போக மனதாயிருக்கிறார்களென்று இயேசு அறிந்து, மறுபடியும் விலகி, தனியே மலையின் மேல் ஏறினார்” (யோவான் 6:15).

பவுல் அப்போஸ்தலன் பிலிப் பியருக்கு இவ்வாறு எழுதினார்: “….கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக் கடவது;

“அவர் தேவனுடைய ரூபமாயிருந் தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண் ணாமல்,

“தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.

“அவர் மனுஷரூபமாய்க் காணப் பட்டு, மரண பரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப் படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தி னார்.”

எனவே, “ஒன்றையும் வாதினா லாவது வீண் பெருமையினாலாவது செய் யாமல், மனத் தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக் கடவர்கள்” (பிலி. 2:3-8).

2) பவுல் ஒரு முன்மாதிரி:

இயேசுவானவரின் அப்போஸ்தல னாக இருப்பது எந்த மதிப்பையும், துதியையும் கொண்டு வரவில்லை. பவுல் தனது தலைமைப் பொறுப் பின் பங்கைப் பற்றி இவ்வாறு விவரிக்கிறார்: “இந்நேரம் வரைக்கும் பசியுள்ளவர்களும், தாகமுள்ளவர்களும், நிர்வாணிகளும், கட்டுண்டவர்களும், தங்க இடமில்லாதவர்களுமாயிருக் கிறோம்.

“எங்கள் கைகளினாலே வேலை செய்து, பாடுபடுகிறோம்; வையப்பட்டு, ஆசீர்வதிக்கிறோம்; துன்பப்பட்டு, சகிக்கிறோம்.

“தூஷிக்கப்பட்டு, வேண்டிக் கொள்ளு கிறோம்; இந்நாள் வரைக்கும் உலகத்தின் குப்பையைப் போலவும், எல்லாரும் துடைத்துப் போடுகிற அழுக்கைப் போலவுமானோம்.

“உங்களை வெட்கப்படுத்தும்படிக்கு நான் இவைகளை எழுதவில்லை, நீங்கள் எனக்குப் பிரியமான பிள்ளை களென்று உங்களுக்குப் புத்தி சொல்லு கிறேன்” (1கொரி. 4:11-14).

உலகில் தங்கள் பொறுப்பைப் பற்றி கொரிந்திய சபையினரும், அவர்களது தலைவர்களும் தவறாகப் புரிந்துகொண்டிருந்தார்கள். அவர் கள் புறஜாதி ஆளுநர்களைப் போல இருக்க வேண்டுமென்று நினைத் திருந்தார்கள் (பார்க்க, 1கொரிந்தியர் 48). துடிப்பான சுட்டிக்காட்டும் வார்த்தைகளைக் கொண்டு, அவர் களது தவறான கருத்துக்களைப் பவுல் திருத்துகிறார்.

b. திருச்சபைத் தலைவர் ஒரு பாரம் சுமப்பவர். 

வேத வசனம் திருச்சபைத் தலைவருக்கு அடை யாளமாக ஒரு மாட்டைச் சுட்டிக் காட்டுகிறது. “போரடிக்கிற மாட்டை வாய்கட்டாயாக என்று மோசேயின் பிரமாணத்திலே எழுதியிருக்கிறதே. தேவன் மாடுகளுக்காகவே கவலையா யிருக்கிறாரோ?

“நமக்காகத்தான் இதைச் சொல்லு கிறாரோ? அது நமக்காகவே எழுதி யிருக்கிறது” (1 கொரி. 9:9,10).

அறுவடையின் கடுமையான பணியிலும், பொறுமையாகச் சகித்துக் கொண்டிருக்கிறபடியால் இந்த மாடு, திருச்சபைத் தலை வருக்கு அடையாளமாக இருக்கும் படி தெரிந்தெடுக்கப்பட்டுள்ளது. காளையானது எந்தவித சுயநலமு மின்றி, தொடர்ந்து சகித்துக் கொள் ளும் சக்தியைப் பெற்றுள்ளபடியால், உழவுக்குப் பயன்படுத்தப்படும் அனைத்து மிருக ஜீவன்களிலும் அதுவே அதிகமாக நேசித்துப் போற்றப்படுகிறது.

ஒரு பாரம் சுமப்பவராக, மற்ற வர் போஷிக்கப்படுவதையும், கரிசனையுடன் கவனிக்கப்படுவதை யும் கண்காணிக்கும் பொறுப்பைக் களிப்புடன் ஏற்றுக் கொள்ளும் திருச்சபைத் தலைவரின் வேதாகமம் கூறும் பொறுப்பை – இந்தக் காளை மாடு இவ்வாறு தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறது.

தங்கள் தலைமைப் பொறுப்பை உண்மையாய் நிறைவேற்றுபவர்கள், இந்த மாட்டைப்போல, அநேக பாரங்களைச் சுமக்கிறார்கள் என்பது வேத வசனங்களின்மூலம் தெளிவாகிறது. தனது ஊழியத்தைப் பற்றி பவுல் அப்போஸ்தலன் 2 கொரிந்தியர் 11:23-28 வசனங் களில் இவ்வாறு விவரிக்கிறார்:

…..நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்ட வன், அதிகமாய் அடிபட்டவன், அதிக மாய்க் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகந்தரம் மரண அவதியில் அகப் பட்டவன்.

“யூதர்களால் ஒன்று குறைய நாற் பதடியாக ஐந்துதரம் அடிபட்டேன்.

“மூன்று தரம் மிலாறுகளால் அடி பட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்று தரம் கப்பற் சேதத்தில் இருந்தேன், கடலில் ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன்.

“அநேகந்தரம் பிரயாணம் பண்ணி னேன்; ஆறுகளால் வந்த மோசங் களிலும், கள்ளரால் வந்த மோசங் களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந் தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங் களிலும், கள்ளச் சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும், “பிரயாசத்திலும், வருத்தத்திலும், அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசி யிலும் தாகத்திலும், அநேக முறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன்.

“இவை முதலானவைகளை யல்லாமல், எல்லாச் சபைகளைக் குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை நாள்தோறும் நெருக்குகிறது”. உண்மையான திருச்சபைத் தலைவர் களைத் தவிர வேறு எவரும் இத்தகைய பாரங்களையும், பொறுப் புக்களையும் விரும்ப மாட்டார்கள். தேவனுடைய “மாடுகள்” இத்தகைய வாஞ்சையைக் கொண்டிருக்கின்றன.

இத்தகைய மனிதர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களைத் தலைமைப் பொறுப்புக்காகப் பயிற்றுவியுங்கள். தலைவர்களைப் பயிற்றுவிப்பதில் இந்த வேதாகமக் கருத்துக்களைக் கவனியுங்கள்: அப்போது –

“நீ உன் வழியை வாய்க்கப் பண்ணுவாய், அப்பொழுது புத்தி மானாயும் நடந்துகொள்ளுவாய்” (யோசுவா 1:8).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *