மோசேக்குக் கொடுக்கப் பட்ட ஐந்து கொள்கைகள் – பாகம் 1
1.உதவி செய்யத்தக்க வகையில் மற்றவர்களைப் பயிற்றுவித்தல்
“இந்த ஜனங்களெல்லாரையும் நான் ஒருவனாய்த் தாங்கக் கூடாது; எனக்கு இது மிஞ்சின பாரமாயிருக்கிறது. உம் முடைய கண்களிலே எனக்குக் கிருபை கிடைத்ததானால், இப்படி எனக்குச் செய்யாமல், என் உபத்திரவத்தை நான் காணாதபடிக்கு இப்பொழுதே என்னைக் கொன்றுபோடும்….” (எண். 11:14,15).
குருமரபு சார்ந்த முறையின் பிரச்சினைகளின் காரணமாக தன்னைக் கொன்றுபோடும்படி மோசே தேவனிடம் வேண்டிக் கொண்டான். தானே அனைத்தை யும் செய்த முறை மோசேயைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்று கொண்டிருந்தது. அது உங்களையும் கொல்லக்கூடும்!
இந்தப்பிரச்சினையில் அவ னுக்கு உதவுவதற்காக தேவன் மோசேயுடன் பேசினார் (எண். 11 அதி) எண்ணாகமம் அதிகாரத்தில் மோசேயின் 18ஆம் மாம் னாகிய எத்திரோ அவனிடம் இதே காரியத்தைக் கூறுவதைக் காண்கிறோம்.
மோசே தேவனுக்கும், எத்திரோ வுக்கும் செவிகொடுத்தபோது, அவன் கண்டறிந்தது என்ன?
அவனது பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியின் முதல்படி மற்ற வர்களுக்குப் பயிற்சியளிப்பதாகும்.
“அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: இஸ்ரவேல் ஜனங்களுக்கு மூப்பரும் தலைவருமானவர்கள் இன் னார் என்று நீ அறிந்திருக்கிறாயே, அந்த மூப்பரில் எழுபது பேரைக் கூட்டி…”(எண். 11:16).
“ஜனங்கள் எல்லாருக்குள்ளும் தேவ னுக்குப் பயந்தவர்களும் உண்மையுள்ளவர்களும் பொருளாசையை வெறுக்கிறவர் களுமாகிய திறமையுள்ள மனிதரைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம் பேருக்கு அதிபதிகளாகவும்,நூறு பேருக்கு அதிபதிகளாகவும், ஐம்பது பேருக்கு அதிபதிகளாகவும் பத்துப் பேருக்கு அதிபதிகளாகவும் ஏற்படுத்தும். அவர்கள் எப்போதும் ஜனங்களை நியாயம் விசாரித்து, பெரிய காரியங்கள் யாவை யும் உம்மிடத்தில் கொண்டுவரட்டும்…..” (யாத். 18:21,22).
ஊழியத்தின் பணிகளைச் செய்ய உறுப்பினர்களைப் பயிற்று விப்பதற்காக, தலைமைத்துவத்திற் கான ஈவுகள் திருச்சபைக்குக் கொடுக்கப்பட்டன என்பதை அடுத்துவரும் வேதாகம வசனங் களின்மூலம் அறிந்துகொள்கிறோம்.
மோசேயினுடைய ஊழியத்தின் நோக்கம் இதுவே. ஆனால் அவன் இதை அறிந்திருக்கவில்லை.
தலைமைப் பொறுப்பை ஏற்கும் திறமையுடையவர்களைக் டறிந்து, சபையின் கண் உறுப்பினர் களிடையே அவர்களைத் தெரிந்து தெடுத்து, அவர்களுக்குப் பயிற்சி யளித்து, அவர்களை ஆயத்தப் படுத்துவதே தலைவரின் பணியாகும்.
பின்னர் இந்த உறுப்பினர்கள் ஊழியத்தின் பணிகளைச் செய்வார்கள்.
“இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத் தக்கதாக, எல்லா வானங் களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறின வருமாயிருக்கிறார்…. பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், அவர் சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும் சிலரைச் சுவிசேஷ கராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்” (எபே. 4:10-12).
a.ஒவ்வொருவரும் – மற்ற ஒருவருக்குப் போதித்தல்.
ஒரு சபைத் தலைவரின் முதல் முக்கிய மான நோக்கம் மற்றவர்களுக்குப் பயிற்சி அளிப்பதே என்று, மேற் கண்ட வசனங்களின்மூலம் பவுல் அப்போஸ்தலன் போதிக்கிறார்.
பவுல் இளைஞனாகிய தீமோத் தேயுவுக்கு இதை விளக்கினார். ஒரு சபைத் தலைவனாக மற்றவர் களுக்குப் பயிற்சியளிப்பதே அவ னது பணி. பவுலிடமிருந்து அவன் பெற்ற பயிற்சியை உண்மையுள்ள மற்ற விசுவாசிகளுக்கு அவன் அளிக்க வேண்டும். அவர்களும் இப்படியே பிற விசுவாசிகளுக்குப் போதனை அளிக்க வேண்டும்.
“அநேக சாட்சிகளுக்கு முன்பாக நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்ற வர்களுக்குப் போதிக்கத் தக்க உண்மை யுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவி” (. 2:2).
இவ்வாறு ஒருவர் மற்றவருக்குப் பயிற்சியளிக்கும்படியான பவுலின் ஆலோசனையைப் பின்பற்றும் போது, ஊழிய விரிவாக்கம் சங்கிலி போலத் தொடருகிறது. வெகு விரை விலேயே அகில உலகம் முழுவதிற் கும் நற்செய்தியைப் பரப்ப முடியும்.
நீங்கள் உண்மையுள்ள ஒரு மனிதனைத் தெரிந்தெடுத்து, ஓராண்டு காலம் அவருக்குப் பயிற்சியளிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்; இந்த முயற்சி சங்கிலித் தொடர்போல விரிவடையும்போது பலன் எப்படி யிருக்கும் என்பதை அடுத்து வரும் அட்டவணையில் காணலாம்.
இரண்டாவது ஆண்டில் நீங்க ளும், முதலில் பயிற்சிபெற்றவரும் தலா ஒருவர் வீதம் வேறு இரு வருக்குப் பயிற்சியளிக்கலாம். இந்த முறை முப்பத்து மூன்று ஆண்டுகள் தொடரப்படும் போது எத்தகைய அபரிமிதமான பலன் விளையக்கூடும் என்பதை அட்டவணையில் காணலாம்.
இதுவே “ஒவ்வொருவரும் மற்றும் ஒருவருக்குப் போதித்தல்” என்ற வேதாகமக் கருத்தின் செயல் முறைப் பலனை எடுத்துக்காட்டுகிறது.
ஒவ்வொருவரும் மற்ற ஒருவருக்குப் போதித்தல்
ஒவ்வொருவரும் மற்றும் ஒருவ ருக்குப் போதனை அளிப்பார்க ளானால், 30 ஆண்டுகளுக்குப் பிறகு, உலக மக்கள் தொகைக்கும் மேற்பட்டோர் பயிற்சியளிக்கப்படு வார்கள். வேதாகமம் கூறும் வழியில் நாம் காரியங்களைச் செய்யும்போது, வேதாகமம் கூறும் பலன்களையும் நம்மால் அனுபவிக்க முடியும்.
“பின்பு அநேக ஜனங்கள் அவரோடேகூடப் பிரயாணமாகப் போகை யில்… திரளான புருஷர்களும் ஸ்திரீ களும் விசுவாசமுள்ளவர்களாகிக் கர்த்தரிடமாக அதிகமதிகமாய்ச் சேர்க்கப் பட்டார்கள்” (லூக்கா 14:25; அப். 5:14). இவ்வாறு திரளானோர் இயேசு வானவரைப் பின்பற்ற வேண்டு மென்பதே தேவனுடைய வாஞ்சை யாக இருக்கிறது.
“இவைகளுக்குப் பின்பு, நான் பார்த்தபோது இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவ னும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்கா சனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டி யானவருக்கு முன்பாகவும் நிற்கக் கண்டேன்” (வெளி.7:9). ஆம்! திரளான வர்கள் மீட்கப்பட வேண்டுமென்றே தேவன் விரும்புகிறார். …ஒருவரும் கெட்டுப் போகாமல் எல்லாரும் மனந் திரும்ப வேண்டுமென்று விரும்பி….” (2 பேதுரு 3:9). இந்தப் பலன்களை உறுதிப்படுத்துவதற்கான செயல் முறைகளையும் அவர்தாமே நமக்குக் கொடுத்துள்ளார்.
b. நிலைத்திருக்கும் கனி.
1959ஆம் ஆண்டு இந்த நூலின் ஆசிரியர் மத்திய அமெரிக்காவி லுள்ள நிக்கராகுவா நாட்டில் ஊழியம் செய்து கொண்டிருந்தார். வயது முதிர்ந்த ஞானமுள்ள ஒரு சபைத் தலைவரிடம், “முப்பதே ஆண்டுகளில் எப்படி உங்களால் மத்திய அமெரிக்காவில் 500 சபை களை நிறுவ முடிந்தது?” என்ற கேள்வியைக் கேட்டார். இந்தக் கேள்விக்குப் பதில்கூறும் விதமாக அவர் கீழ்க்கண்ட நிகழ்வுகளை விவரித்தார்.
“1929ஆம் ஆண்டு நான் குவாடமாலா நாட்டிற்கு ஓர் அருட்பணியாள னாகச் சென்றேன். உடனடியாக, மறுபடியும் பிறந்த விசுவாசிகள் இல்லாத கிராமங்களை நாடிச் சென்றேன். ஆறு இரவுகள் நான் பிரசங்கம் செய்தேன்; நோயுற்றவர்களைக் குணமாக்கினேன். ஒவ்வொரு இரவும் பாவிகள் முன்னால் வந்து, தங்களுடைய பாவங்களுக்காக இயேசுவானவரிடம் மன்னிப்பைப் பெறும்படி அழைப்பு விடுத்தேன். ஒவ்வொரு இரவும் அநேகர் முன் வந்தார்கள்.
“புது விசுவாசிகளுக்குத் தண்ணீரி னால் ஞானஸ்நானம் கொடுத்துவிட்டு அடுத்த கிராமத்துக்குச் செல்வேன்; அங்கும் இவ்வாறே செயல்படுவேன். – ஒவ்வொரு வாரமும் நான் கிறிஸ்துவுக்காக நூறு ஆத்துமாக்களை ஆதாயம்பண்ணிக் கொண்டிருந்ததாக நினைத்தேன். ஏனென் றால் அத்தனை பேருக்கு நான் ஞான ஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்தேன்.
“என்னை ஆதரித்து வந்த என் தாய்ச் சபைக்கு எனது வெற்றிகளைப் பற்றிய அனைத்துச் செய்திகளையும் எழுதி வருவேன். நம்புவதற்குக் கடினமான காரியம்தான் இது! ஒவ்வொரு ஆண்டும் நான் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட ஆத்து மாக்களைக் கிறிஸ்துவுக்காக ஆயத்தம் பண்ணி வந்தேன்.
“இரண்டு ஆண்டுகளில் நூறு கிராம எழுப்புதல் கூட்டங்களை நடத்தியபிறகு, மறுபடியும் திரும்பிச் சென்று, நான் ஆதாயப்படுத்திய கிராமங்களை இரண் டாவது முறை சந்திக்கும்படி தீர்மானம் செய்தேன்.
“முதல் கிராமத்துக்குச் சென்றேன்; அங்கே என்னால் மனந்திரும்பிய அனைவரும் பின்வாங்கிப் போயிருந் ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்; அவர்கள் அனைவருமே வேதாகம சத்தியங்களின்படி வாழவில்லை; தங்கள் பூர்வீகச் செயல்களுக்கே திரும்பியிருந் தார்கள். சபைக் கூட்டங்கள் எதுவும் நடத்தப்படவில்லை; எவரும் புது விசுவாசிகளுக்குப் போதித்து, அவர்களை வழிநடத்தவும் இல்லை. நான் பொறுப்பில் விட்டுச் சென்றிருந்தவர்கள் தொடர்ந்து கிறிஸ்துவைப் பின்பற்றவில்லை.
நான் தொடர்ந்து அடுத்தடுத்த கிராமங்களுக்கும் சென்றேன். அங்கும் இதேபோன்ற நிலைமைதான் காணப் பட்டது. என் இருதயம் நொறுங்கியது. இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாகச் செய்து வருவதாக நான் நினைத்துவந்த ஊழியத்தில் எந்தவித நிலைத்திருக்கும் கனியும் காணப்படவில்லை.
“இயேசுவானவரின் இந்த வார்த்தைகள் என் காதில் ரீங்காரமிட்டன: *நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ள வில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண் டேன்: நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்தி ருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத் தினேன்” (யோவான் 15:16).
“நான் நிலைத்திருக்கும் கனியைக் கொடுக்கவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்? உபவாசத்தோடும், ஜெபத் தோடும் தேவனுடைய ஆலோசனையை நாடினேன். அந்த வேளையில் தேவன் தெளிவாக என்னுடன் பேசினார். ‘நீ ஒருவனாகவே மத்திய அமெரிக்காவை ஆதாயம் பண்ணும்படி நான் உன்னை அனுப்பவில்லை. மற்றவர்களுக்குப் பயிற்சியளிக்கும்படியே நான் உன்னை அனுப்பினேன்’ என்று அவர் கூறினார்.
“இரண்டு முக்கிய கருத்துக்களை தேவன் எனக்குக் காட்டினார். முதலா வதாக: தலைமைப் பொறுப்பை ஏற்கும்படி மற்றவர்களுக்குப் பயிற்சி கொடு! இரண்டாவதாக: தேவன் கிரியை செய்யும் இடத்தில் நீயும் கிரியை செய்!
“நான் உடனடியாக ஆறுமாத கால வேதாகமப் பள்ளி பயிற்சி வகுப்புக்களைத் துவக்க ஆயத்தம் செய்தேன். ஏறத்தாழ ஐம்பது மாணவர்கள் கலந்து கொண்டு, முதலாவது முடித்தார்கள். பயிற்சித் திட்டத்தை அப்போது காட்டுப் பகுதிகளில் அற்புதமான வகையில் குணமாகுதல் நடைபெறுவதைப் பற்றிய செய்திகளை நான் கேட்டேன். மக்கள் இயேசு வானவரைப் பற்றிய தரிசனங்களைப் பெற்றார்கள்; குணமாக்கும் இந்த அற்புதங்களின் காரணமாக அநேகர் மனந்திரும்பிக் கொண்டிருந்தார்கள்.
“அவ்வேளையில் ‘தேவன் கிரியை செய்யும் இடத்தில் நீயும் கிரியை செய்’ என்ற இரண்டாவது கட்டளை என் நினைவில் வந்தது. உடனடியாக நான் பயிற்சி பெற்றிருந்த ஊழியர்களை அந்தப் பகுதிக்கு அழைத்துச் சென்றேன். ஆத்து மாக்களின் அறுவடை அபரிமிதமாக இருந்தது. பயிற்சி பெற்ற ஊழியர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் சபையைத் துவங்கினார்கள்; புதுவிசுவாசிகளுக்கு : ஆவிக்குரிய போதனையளித்து அவர் களைப் போஷித்தார்கள். இது ‘நிலைத் திருக்கும் கனிகளை’ உருவாக்கியது.
“1931ஆம் ஆண்டிலிருந்து, 1. மற்ற வர்களுக்குப் பயிற்சி கொடு, 2. தேவன் கிரியை செய்யும் இடத்தில் கிரியை செய் என்ற இந்த இரண்டு கட்டளைகளையும் நான் பின்பற்றிவருகிறேன்.
“தற்போது குறுகிய காலப் பயிற்சி யளிக்கும் ஐந்து வேதாகமப் பயிற்சிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. ஆயிரத் துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பயிற்சி பெற்றுள்ளார்கள். நாங்கள் பயிற்சியளித்த மத்திய அமெரிக்கப் பகுதி இளைஞர்களின் ஊழியத்தினுடைய ஊ நிலைத்திருக்கும் கனிகளே இந்த ஐந்நூறு சபைகள். தேவன் கிரியை செய்கிறார் என்று நாங்கள் கேள்விப்பட்ட இடங் களுக்கெல்லாம் அவர்கள் சென்றார்கள். நாங்கள் தேவனோடு இணைந்து செயல் பட்டோம்; அபரிமிதமான கனிகளைப் பெற்றோம்” என்று அவர் கூறினார்.
1989ஆம் ஆண்டு வாக்கில் (நான் அந்த அருமையான அருட் பணியாளரை முதன்முதலில் சந் தித்து 30 ஆண்டுகளுக்குப் பிறகு) அந்த மத்திய அமெரிக்க பக்தி விருத்தி இயக்கத்தின் பல்லாயிரக்கணக்கான பலனாக சபைகள் உருவாகியிருந்தன.
c. தலைவர்களைக் கண்டெடுங்கள்.
“அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: இஸ்ரவேல் ஜனங் களுக்கு மூப்பரும் தலைவருமானவர்கள் இன்னார் என்று நீ அறிந்திருக்கிறாயே, அந்த மூப்பரில் எழுபது பேரைக் கூட்டி…” (எண். 11:16) என்று கூறினார்.
தலைமைத்துவத்துக்கான ஈவைப் பெறாதவர்களுக்குப் பயிற்சி யளிப்பதினால் நேரமும், உழைப்பும் தான் அதிகமாக வீணாகிறது. “மூப்பரும் தலைவருமானவர்கள் இன் னார் என்று நீ அறிந்திருக்கிறாயே, அந்த மூப்பரில் (தலைவரில்) எழுபது பேரைக் கூட்டி..” என்று தேவன் தெளி வாகக் கூறுகிறார்.
தலைவனாகக் கூடிய ஒருவனை உங்களால் எவ்வாறு கண்டு கொள்ள முடியும்? அந்த நபரை எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள் என்று கவனித்துப் பாருங்கள். ஒரு வருமே பின்பற்றாவிட்டால் அந்த நபர் தலைவனாவதற்குத் தகுதி யுடையவனாக இருக்க முடியாது.
மாட்டுப் பண்ணையில் பால் கொடுக்கும் ஐம்பது பசுக்களைக் கொண்ட மந்தையைப் பால்கறக்கும் இடத்துக்கு அழைத்துவர வேண்டு மென்றால் முதலில் நீங்கள் வழி நடத்தும் பசுவைக் கண்டுபிடித்தால் போதுமானது. அந்தப் பசுவைக் கூட்டிவரும்போது பிற பசுக்கள் தாமாகவே அதைப் பின்பற்றி வரும். மக்களுக்குத் தலைவர்களைத் தெரிந் தெடுப்பதிலும் இவ்வாறே செயல்பட வேண்டும். மற்றவர்களால் பின் பற்றப்படக் கூடிய ஆண்களையும், பெண்களையும் நீங்கள் தெரிந் தெடுத்து அவர்களுக்குப் பயிற்சி யளிக்க வேண்டும்.
இயேசுவானவர் இதையே செய்தார். “அந்நாட்களில் அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இரா முழுவதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக் கொண்டிருந்தார்.
“பொழுது விடிந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டு பேரைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பேரிட்டார்…. பின்பு அவர் அவர்களுடனே கூட இறங்கி…” (லூக்கா 6:12, 13, 17).
இயேசுவானவர் தமது நேரத்தில் பெரும்பான்மையான பகுதியை, பன்னிரு அப்போஸ்தலர்களும் தமது ஊழியத்தைத் தொடரும்படி அவர்களை ஆயத்தப்படுத்துவதற் காகவே செலவிட்டார். மற்றவர் களுக்குப் பயிற்சியளிப்பதின் மூலம் அவர்களும் பிறருக்குப் பயிற்சி யளிக்கும் – இந்தக் கருத்தை அவர் செயல்படுத்தினார். மேலும் அதிக தலைவர்களைத் தெரிந்தெடுத்து, அவர்களுக்குப் பயிற்சியளிப்பதே தலைவர்களின் ஊழியமாகும்.