கர்த்தருக்குக் காத்திருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்

கர்த்தருக்குக் காத்திருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்

கர்த்தருக்குக் காத்திருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்

“கர்த்தருக்குக் காத்திருக்கிறவர் களோ (மாற்றப்பட்ட) புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படை யார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள்” (ஏசாயா 40:31).

1. இரண்டு கருத்துக்கள்

“கர்த்தருக்குக் காத்திருத்தல்” என்று குறிப்பிடும்போது வேதாகமம் எதைக் குறிக்கிறது? “கர்த்தருக்குக் காத்திருத்தல்” என்பது இரு கருத்துக் களை உள்ளடக்கியது. இதோ அவை:

a. தேவனுடைய வேளைக்காகக் காத்திருத்தல். 

அதாவது, இதுவே செயல்படுவதற்குச் சரியான வேளை என்று தேவன் உங்களுக்குக் காட்டும்வரை எந்தப் பெரிய செயலிலும் ஈடுபடாமல் இருத்தல்.

b. ஜெபத்திலும் உபவாசத்திலும் காத்திருத்தல். 

தியானப் பயிற்சிகளில் தேவனுடைய பிரசன் னத்தில் ஜெபத்தோடு நேரத்தைச் செலவழித்தல்; சில வேளைகளில் ஜெபத்தோடுகூட உபவாசத்திலும் ஈடுபடுதல்.

2.தேவனுடைய வேளைக்காகக் காத்திருத்தல்

எனது சொந்தச் சாட்சியை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1948இல் எனக்குப் பதினாறு வயதாக இருக்கும்போது, தேவன் தமது ஊழியத்துக்கென்று என்னை அழைத்தார். நான் மறுபடி யும் பிறந்து, பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டிருந்தேன். ஆனால் எனது சித்தத்தையும், திட்டங்களை யும் முழுமையாக தேவனிடம் ஒப் படைப்பதின் அவசியத்தை உணர்ந் திருக்கவில்லை.

கிறிஸ்தவ ஒப்படைப்புக்குரிய “தீவிரமான வாழ்க்கை” குறித்தும் நான் அக்கறை கொண்டிருக்க வில்லை. எனது வாழ்க்கையில் நான் எவற்றைச் செய்வது என்பது பற்றி நான் ஏற்கனவே முடிவுசெய்தி ருந்தேன். அந்தத் திட்டத்தில் பிரசங்கி யாராக ஆவதற்கு இடமே கொடுத் திருக்கவில்லை.

1948ஆம் ஆண்டு கோடை காலத்தில் தேவனுடைய கரம் என் மீது பாரமாக விழுந்தது. நான் ஜெபிப்பதற்காகத் தரையில் வீழ்த்தப் பட்டது போன்ற உணர்வைப் பெறும்படியாகக் காரியங்கள் நிகழ்ந்தன. அநேக தடவைகள் முகத் தில் கண்ணீர் வழிந்தோட நான் தரையில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடந்தேன். நான் ஜெபத்தில் தேவனை நோக்கிக் கதறினேன்.

இன்று அதை நினைத்துப் பார்க்கும்போது, அந்த கண்ணீரில் பல துளிகள் தேவனுடைய சித்தத்தை எதிர்த்து விடப்பட்ட துளிகள் என்றே நான் நினைக் கிறேன். நான் என் பாதையில் செல்ல விரும்பினேன் – தேவனோ நான் அவருடைய பாதையில் செல்ல வேண்டுமென்று விரும்பினார். எனது சித்தத்திற்கும் தேவனுடைய சித்தத்திற்கும் எதிரான இந்தச் சித்தங்களின் போராட்டம், மரணத் துக்கு ஏதுவான உள்ளான போராட் டத்தை உருவாக்கிக் கொண்டிருந் தது. எனது சுயசித்தத்தின் மரணமே அது.

மூன்று மாதங்கள் இவ்வாறு கடுமையான ஆவிக்குரிய போராட் டத்திற்கு உள்ளானபிறகு, தேவன் விரும்பியதைச் செய்யும்படிக்கு நான் என் வாழ்க்கையை ஒப்படைத் தேன். நான் உலகமெங்கும் சென்று நற்செய்தியைப் பிரசங்கிக்கும்படி அவர் விரும்பினார்.

a. இப்போதே செல்வோம்!

இறுதியாக நான் தேவனுடைய சித்தத்திற்கு என்னை ஒப்புக் கொடுத்தபோது, நான் அவரிடம், “அன்பான தேவனே, நீர் விரும்பும் இடத்துக்கு நான் செல்வேன். நீர் விரும்பியதை நான் கூறுவேன். நான் எப்படியிருக்க வேண்டுமென்று நீர் விரும்புகிறீரோ அப்படியே நான் இருப்பேன்” என்று வாக்களித்தேன். இவ்வாறு என்னுடைய சித்தத்தை தேவனுடைய சித்தத்திற்கு ஒப்புக் கொடுத்த அதே வேளையிலேயே – அப்போதே நான் போக ஆயத்தமாக இருந்தேன்.

இழப்பதற்குப் போதிய நேரம் இல்லை! (என்று நான் விசுவாசித் தேன்). “தேவனே நாம் இப்போதே செல்வோம்! நான் ஆயத்தமாக இருக் கிறேன்! காலம் குறுகியது! இது அணுசக்தி யுகம்! உலகத்துக்கு முடிவு வரப் போகிறது! தேவைப் பட்டால் நான் ஒருவனாகவே முழு உலகத்துக்கும் நற்செய்தி அறிவிக்க ஆயத்தமாக இருக்கிறேன்!”

இளைஞனுக்கே உரிய ஆர்வம், செயல் நம்பிக்கை (என்னுடைய அறியாமை என்பதையும் கூட சேர்த்துக் கொள்ளத்தான் ‘வேண் டும்) இவற்றோடு உடனடியாக உலகத்தை ஆதாயம் செய்யும் அற்புதமானவனாக” ஆகிவிட வேண்டுமென்று நான் எதிர்பார்த்தேன்.

எனது சிந்தனை எனது சபை யின் இறையியல் கொள்கைகளுக்கு ஏற்றபடியே வடிவமைக்கப்பட் டிருந்தது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எங்கள் சபைத் தலைவர்கள் நமது ஆண்டவர் வெகு விரைவிலேயே பரலோகத்தி லிருந்து திரும்பி வருவார் என்று வலியுறுத்தி வந்தார்கள். பிரசங்க பீடத்திலிருந்து இயேசுவானவரின் இரண்டாம் வருகை குறித்த பிரசங் கங்கள் அடிக்கடி ஏறெடுக்கப் பட்டன. உள்ளூர் பிரசங்கியார் இதைப் பற்றிப் பிரசங்கியாத வேளையில் வெளியூரிலிருந்து வந்த நற்செய்தியாளர் இதைக் குறித்துச் செய்தி கொடுத்தார். இயேசுவானவர் வெகுவிரைவிலேயே வருவார் என்று நான் எதிர்பார்த்திருந்தேன்.

1948ஆம் ஆண்டு கோடையில் ஓய்வுநாள் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு வாக்கெடுப்பு பற்றி எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. “நமது ஆண்டவர் திரும்பி வரு வதற்கு இன்னும் எவ்வளவு காலம் பிடிக்கும்” என்ற கேள்வி எங்கள் ஒவ்வொருவரிடமும் கேட்கப் பட்டது. 50 இளம் வாலிபர்களைக் கொண்ட அந்த வகுப்பில் எவருமே ஆண்டவர் 1950 ஆண்டுகளுக்குப் பின்னரும் தாமதிப்பார் என்று நினைக்கவில்லை.

இரண்டாம் உலகப் போர் அப் போதுதான் நடந்து முடிந்திருந்தது. கொரியச் சண்டை தத்தளிப்பான நிலையில் இருந்தது. அணுசக்தியி னால் பேரழிவு நிச்சயம் என்ற பயமுறுத்தல் பரவியிருந்தது. தேவன் எதைச் செய்வதாக இருந்தாலும் அதை அப்போதே செய்தாக வேண் டும் என்ற உணர்வு எனக்கு ஏற் பட்டது. காத்திருக்க நேரமில்லை. உலகுக்கு நற்செய்தி அறிவிக்க வேண்டுமென்ற அழைப்பைப் பெற்ற பிறகு, அதைச் செய்ய இரண்டு ஆண்டுகளே மட்டும் இருக்கும் பட்சத்தில், நான் உடனடியாகத் துவங்க வேண்டுமென்று நினைத் தேன்.

எனது தீவிரமான அவசர உணர்வுக்கு தேவன் கொடுத்த பதில் தான் என்ன?

b. காத்திருக்கக் கற்றுக் கொள்! 

உலகில் நிகழ்பவை பற்றி நான் எப்படியாகப் பொருள் கொண்டாலும், எனது அவசர உணர்வு எப்படிப்பட்டதாக இருந்தாலும் தேவன் என்னுடைய வேளைப்படி யல்ல, தமது சொந்த வேளைப் படியே செயலாற்றுகிறார் என்பதை நான் கற்றுக்கொள்ள வேண்டி யிருந்தது. நீங்கள் செயல்பட வேண்டுமென்ற “துடிப்பைப்” பெறும்போது, காத்திருக்க நேரிடுவது உலகத்திலேயே கடினமான காரியமாக இருக்கிறது.

வெளியே சென்று பிரசங்கிப் பதற்கான ஆயத்தத்தை (பயிற்சியை) நான் பெற்றிருக்கவில்லை. நான் அழைக்கப்பட்டது உண்மைதான். ஆனால் தேவனுடைய அழைப்பும், தேவனால் அனுப்பப்படுதலும் இரண்டு வெவ்வேறான காரியங்கள். அதைக் குறித்து நான் அவ்வேளை யில் அறிந்திருக்கவில்லை என் றாலும், தேவன் 1948ஆம் ஆண்டின் உலக நிலைமை குறித்துக் கொஞ்ச மும் கவலை கொண்டிருக்கவில்லை. நான் கவலைப்பட்டேன்; ஆனால் அவர் கவலைப்படவில்லை. அவர் எனது பயிற்சியையும், ஆயத்தமாகு தலையும் திட்டமிட்டிருந்தார். எனது கவலையோ பரபரப்போ அவர் தமது திட்ட ஒழுங்கை ஒரு நிமிடமாவது முன்கூட்டிச் செயல் படுத்தும்படி அவரைத் தூண்ட வில்லை.

அந்த வேளையில் நான் இதை உணரவில்லை; எனது சொந்த பலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு, போரிடும்படி துடித்துக் கொண் டிருந்தேன். ஆயத்தமின்றி நான் சென்றால் அழிக்கப்படுவேன் என்பதை தேவன் அறிந்திருந்தார். எனவே நான் பயிற்சியையும் அனு பவத்தையும் பெறும் வரையில் காத்திருக்கும்படி அவர் செய்தார். கர்த்தருக்குக் காத்திருந்த அந்த ஆண்டுகளில் நான் “சிறிய காரிய மானாலும் பெரிய காரியமானாலும் செய்யும் பொருட்டு, என் தேவனாகிய கர்த்தரின் கட்டளையை நான் மீறக் கூடாது” (எண். 22:18) என்று கற்றுக் கொண்டேன்.

c. தேவன் வேளையைக் கட்டுப்படுத்துகிறார். 

“காலம் நிறை வேறின போது… தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார்”(கலா.4:4) என்று வேதாகமம் கூறுகிறது. தேவன் வேளைகளையும், காலங்களையும் கட்டுப்படுத்துகிறார். இயேசுவான வரை இந்த உலகத்துக்கு அனுப்ப அவர் ஒரு வேளை வைத்திருந்தார். அனைத்துக் காரியங்களுக்கும் அவர் ஒருவேளை வைத்திருந்தார். தேவ னுடைய வேளைக்காகக் காத்திருங் கள். முன்னாலும் செல்லாதிருங்கள்; பின்னாலும் தயங்கியிராதிருங்கள். கர்த்தருக்குக் காத்திருங்கள். அவர் தமது வேளையை உங்களுக்கு வெளிப்படுத்துவார். 

காலங்களையும் வேளைகளை யும் பிதாவானவர் தமது சொந்த அதிகாரத்தில் வைத்திருக்கிறார் (அப். 1:7). பொறுமையோடு அவ ருக்குக் காத்திருக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் தேவன் வேளைகளையும் காலங்களையும் நமக்கு வெளிப்படுத்துவார்.

3. ஜெபத்தோடும் உபவாசத் தோடும் காத்திருத்தல்

“உமக்காகக் காத்திருக்கிறவர்கள்… வெட்கப்பட்டுப் போகாதிருப்பார்களாக; இஸ்ரவேலின் தேவனே, உம்மைத் தேடுகிறவர்கள்…. நாணமடையாதிருப்பார் களாக” (சங். 69:6).

நாம் நமது “குறுகிய” பலத்தை அவரது எல்லையற்ற பலத்துக்குப் “பண்டமாற்றம்” செய்ய வேண்டு மானால், ஓர் ஒழுங்கான தினசரி தியான வழக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். ஒழுங்கான ஜெபம் மற்றும் உபவாச வேளைகளுக்காகத் தங்களை ஒழுங்குபடுத்துவது அநேக சபைத் தலைவர்களுக்கு மிகவும் கடினமான காரியமாக இருக்கிறது. தினசரி வேலைப் பட்டியல் மற்றும் செயல்களின் அழுத்தத்தின் காரண மாக, தேவனோடுள்ள மிகவும் அத்தியாவசியமான தியான வேளை களை நாம் இழந்து போகிறோம்.

a. தினசரி தியான வேளைகள் எவ்வாறு உதவிபுரிகின்றன? 

இந்தப் பரிசோதனையைச் செய்து பாருங்கள். ஒரு குவளையின் மேல் மட்டம் வரை நீரால் நிரப்புங்கள். இனி ஒரு துளி தண்ணீரைச் சேர்த் தாலும் வழிந்துவிடும் என்ற அளவு தண்ணீரால் நிரப்புங்கள். இப் போது உங்கள் கை முஷ்டியின் அளவு கற்களை ஒன்றன் பின் ஒன் றாக அந்தக் குவளையின் உள்ளே போடுங்கள். என்ன நிகழ்கிறது? நீங்கள் ஒவ்வொரு கல்லைப் போடும் போதும் அதே அளவு நீர் குவளை யிலிருந்து வெளியே வழிகிறது.

இதேபோன்றுதான் நாம் நமது பலத்தைத் தேவனுடைய பலத் துக்குப் பரிமாற்றம் செய்கிறோம். நாம் நமது சொந்த பலமென்னும் தண்ணீரினால் நிரப்பப்பட் டுள்ளோம். நாம் ஜெபத்தில் நேரம் செலவழிக்கும்போது, தேவன் தமது பலம் மற்றும் வல்லமையின் கற் களை உள்ளே போடத் துவங்கு கிறார். இந்தக் கிருபையின் கற்கள் எதிர்மறையும், அவிசுவாசமுமான மனோபாவம் என்ற தண்ணீரை வெளியேற்றுகின்றன; “தேவனில் லாமல் என்னால் செய்ய முடியும்” என்ற மனோபாவமெனும் தேங்கிக் கிடக்கும் நீரை, தேவனைச் சார்ந் திருத்தல் என்ற கற்கள் வெளியேற்று கின்றன. அவரது தெய்வீக செயல் திறன்கள் நமது வாழ்க்கையை நிரப்புகின்றன; நமது பலமின் மைக்குப் பதிலாக அவரது பலம் நமக்குள் நிரப்பப்படுகிறது.

எனது வாழ்க்கையை தேவ னுடைய பலம் நிரப்புவதற்கு நான் செய்ய வேண்டியது என்ன? இது இயல்பான இயல்புக்கு அப்பாற் பட்ட வழிமுறையாகும். நீங்கள் ஒவ்வொரு நாளும் ஜெபிப்பதற்காக நேரம் செலவழிப்பீர்களானால், அது வளர்ச்சிபெறும் வழி முறையைப் போன்றதாகும். ஒரு குழந்தை வளர்வதைப் பற்றிச் சிந்திப்பதினாலோ அல்லது வளர் வதற்காகத் தன்னைத்தானே உந்தித் தள்ள முயற்சிப்பதாலோ அது வளர்ச்சியடைவதுமில்லை; பலத்தைப் பெறுவதுமில்லை. சரி யான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சியின் காரணமாக அதன் வளர்ச்சி ஓர் இயல்பான வழிமுறை யாக இருக்கிறது.

இதே போன்று, ஒரு சபைத் தலைவர் ஒவ்வொருநாளும் வேதம் வாசிப்பதற்கும், ஜெபிப்பதற்கும் நேரம் செலவழிப்பாரானால், இந்த ஆவிக்குரிய ருடைய போஷாக்கு அவருடைய வாழ்க்கையில் தேவனுடைய பலத்தின் அதிகரிப்பை ஊக்குவிக்கும். உங்கள் பலத்தை அவருடைய பலத்துக்காக மாற்று வது படிப்படியாகவும் தொடர்ந்தும் நடைபெறும்.

b. எனது தியான வேளையை நான் செலவழிப்பது எப்படி? 

அடுத்துக் கொடுக்கப்பட்டுள்ள சுருக்கக் குறிப்பு “தியானிக்கும் பழக்கத்தைப் புதுப்பித்தல்” என்ற தலைப்பில் அமைந்த தொடர் பிரசங்கங்களிலிருந்து தொகுக்கப் பட்டுள்ளது. எனது தியான வேளைகளில் இவை எனக்கு மிகவும் உதவியாக இருந்து வருகின்றன.

1) பாவத்தை அறிக்கையிடுங்கள். 

அறிக்கை செய்யப்படாத பாவங்களை உங்கள் உள்ளத்தில் உணர்த்துமாறு தேவனை நோக்கி ஜெபியுங்கள். இந்தப் பாவங்களை தேவனிடம் ஒப்புக்கொண்டு, அவ ரது மன்னிப்பையும், சுத்திகரித் தலை யும் கேட்டுப் பெற்றுக்கொள் ளுங்கள் (1யோவான் 1:9,10).

2) தேவனைத் துதியுங்கள். 

அடுத்தபடியாக, தேவன் யார் என்ப தற்காகவும், அவர் செய்துள்ள வற்றுக்காகவும் அவருக்கு நன்றி அவரைத் துதிக்கவும் நேரம் செலவழியுங்கள் (சங். 100).

3) அந்த நாளைத் தேவனிடம் சமர்ப்பியுங்கள். 

எவ்வளவு தூரம் தேவனுடைய வழிகாட்டுதலும், ஆலோசனையும் தேவைப்படுகிறது என்பதை அவரிடம் கூறுங்கள். அவ ருடைய வழிநடத்துதலுக்காக ஜெபி யுங்கள்; ஜெபத்தில் தேவன் உங்க ளுக்குக் கொடுப்பதாக நீங்கள் உண ரும் கட்டளைகளுக்குக் கீழ்ப்படி யுங்கள்.

4) குடும்பத்துக்காகவும், திருச்சபைக்காகவும், அனைத்து விசுவாசிகளுக்காகவும் ஜெபியுங்கள். 

உங்கள் வாழ்க்கைத் துணைவருக் காகவும்/ துணைவிக்காகவும், பிள்ளைகளுக்காகவும், குடும்ப உறுப்பினர்களுக்காகவும் ஜெபி யுங்கள். உங்கள் சபை உறுப்பினர் களுக்காகவும், தலைவர்களுக்காக வும் வேண்டுதல் செய்யுங்கள். உலகத் தின் பிற பகுதிகளிலுள்ள விசுவாசி களுக்காக ஜெபியுங்கள். அனாதை களுக்காகவும், குடும்பமற்ற விதவை களுக்காகவும் ஜெபியுங்கள்.

5) தலைவர்களுக்காகவும், அருட்பணியாளர்களுக்காகவும், நற்செய்தி ஊழியத்துக்காகவும் ஜெபியுங்கள். 

உங்கள் நாட்டின் தலைவர்களுக்காக வேண்டுதல் செய் யுங்கள். உங்கள் ஆவிக்குரிய தலைவர்களுக்காக ஜெபியுங்கள். உங்கள் பகுதியில் இன்னமும் நற்செய்தி அறிவிக்கப்படாத பழங் குடிகளுக்காகவும், மொழிவாரிக் குழுக்களுக்காகவும் ஜெபங்களை ஏறெடுங்கள். அருட்பணியாளர் களுக்காகவும், உலக நாடுகள் நற்செய்தி மயமாக்கப்படும்படி யாகவும் ஜெபியுங்கள்.

6) அந்நிய பாஷையில் ஜெபியுங்கள். 

இந்த ஜெபங்களின்போது, பரிசுத்த ஆவியானவரின் கிரியை உங்களில் செயல்பட இடம் கொடுத்து, அந்நிய பாஷையில் ஜெபியுங்கள்; உங்கள் ஜெபத்துக்கு மற்ற மொழிகளில் பொருள் கூறப் பட வேண்டுமென்று ஜெபியுங்கள் (1கொரி. 14:13,14).

7) தேவன் உங்களுக்குக் கொடுக்கும் போதனையை எழுதி வைத்து, அதைச் செய்யுங்கள்! 

உங்கள் ஜெபவேளையில் தேவனிட மிருந்து வரும் கருத்துக்களாக நீங்கள் உணருவதை எழுதிவையுங்கள். ஜெபத்தில் தேவன் உங்களுக்குக் கொடுக்கும் அனைத்தையும் குறித்துக் கீழ்ப்படிதலுடன் செயல் படுங்கள்.

c.சோதனைகள் நமக்கு எவ் வாறு உதவுகின்றன? 

“..உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக் குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல்” இருக்க வேண்டுமென்று (1பேதுரு 4:12) பேதுரு எச்சரிக்கிறார்.

எனது முதிர்வயது போதக நண்பர்களில் ஒருவர் சில ஆண்டு களுக்கு முன்பு என்னிடம் இவ்வாறு கூறினார்: “சகோதரன் ரால்ப், நீங்கள் தேவனோடு தொடர்ந்து செல்ல முயற்சிக்கும்போது, உலகம் உங்களை எதிர்க்கும். நீங்கள் தேவ னோடு ஆழமாகச் செல்ல முயற்சிக் கும் போது, உங்கள் மாம்ச இயல்பு உங்களைத் தடுக்கும். நீங்கள் தேவ னில் மேலாகச் செல்ல முயலும் போது, பிசாசின் துரைத்தனங் களும், வானத்தின் சக்திகளும் உங்க ளோடு போர்புரியும்.” கருடபகு

நாம் கர்த்தருக்குக் காத்திருக்கும் படி, தினசரி தியான வேளையை ஒழுங்குபடுத்தத் தீர்மானிக்கும் போது நமக்கு எதிர்ப்படும் தடை களைப் போல நாம் வேறெதிலும் சந்திக்க முடியாது. நீங்கள் தேவ னுடைய முகத்தைத் தேடுவது குறித்துத் தீவிரமாகும்போது, எதிர்ப்புக்களையும், சோதனை களையும் எதிர்பார்த்தே ஆக வேண் டும். அவை பெரும்பாலும் வரு கின்றன.

தேவன் சோதனைகள் வேதனை கள் இவற்றின் மூலமும்கூட “அவ ருடைய தீர்மானத்தின்படி அழைக்கப் பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக” (ரோமர்8:28) நடக்கும்படி செய்கிறார் என்பது ஆறுதலான செய்தியாக இருக்கிறது.

நாம் கர்த்தருக்குக் காத்திருக்கும் போது, அவர் சோதனைகள், பரீட் சித்தல், சோதித்தல் இவற்றின் அக்கினியை நம்மை நோக்கித் திருப்பு கிறார்; நமது வாழ்க்கை வெம்மை யாகிறது. நாம் “கொதிநிலையை” எட்டும்போது இரண்டு பலன்கள் விளைகின்றன:

  1. பாவமும் சுயமும் எரித்து அழிக்கப்படுகின்றன.
  2. தேவ னு டைய வல்லமை நமக்குள் கிரியை செய்யத் துவங்குகிறது.

அற்புதமான, இயல்புக்கு அப்பாற்பட்ட விளைவுகளோடு தேவனுடைய வல்லமை நமக் குள்ளும் நம் மூலமாகவும் கிரியை செய்யத் துவங்குகிறது.

நீங்கள் நீர் நிரம்பிய பாத் திரத்தை நெருப்பின்மீது வைக்கும் போது, தண்ணீர் கொதிக்கத் துவங்குகிறது. தண்ணீரையே பார்த்துக் கொண்டிருப்பதினாலோ, அதைத் தொடர்ந்து கலக்கி விடுவதி னாலோ அல்லது அதைப் புறக் கணிப்பதினாலோ தண்ணீர் கொதிப்பதை நீங்கள் துரிதப்படுத்த வும் முடியாது; அதைத் தடுக்கவும் முடியாது. நீங்கள் எதைச் செய் தாலும், கொதிப்பதற்கான வெப்ப நிலையை எட்டும்போது தண்ணீர் கொதிக்கும். தண்ணீர் தனக்குத் தானே ஏதோ கிரியை செய்து கொள்வதின் விளைவினால் அல்ல, தண்ணீரைச் சூடாக்குவதின் விளை வாகவே அது கொதிக்கிறது.

இதைப் போன்றே, நாம் பாடுகள் துன்பங்கள் எனும் அக்கினியினூடே செல்லும்போது, நமக்குள் காரியங் கள் நிகழத் துவங்குகின்றன; இதில் நமது முயற்சி எதுவுமேயில்லை. மனித இயல்பெனும் தண்ணீரை தேவனுடைய வெப்பத்தினால் சூடுபடுத்தும்போது ஏற்படும் பக்க விளைவுகளே இவை. நாம் உள்ளான மாற்றத்தை அனுபவிக்கிறோம். நமது நோக்கங்கள் சுத்திகரிக்கப்படு கின்றன. பாவம் செய்யவேண்டு மென்ற நமது இச்சை எரித்து அழிக்கப்படுகிறது.

“….மாம்சத்தில் பாடுபடுகிறவன்…. பாவங்களை விட்டோய்ந்திருப்பான்” (1பேதுரு 4:2), ஆம், இது உண்மையே! அவரது நியமிக்கப்பட்ட வேளைக் காக ஜெபத்தோடும் உபவாசத் தோடும் காத்திருப்பவர்கள், தங்கள் பலத்துக்குப் பதிலாக அவருடைய பலத்தையே மாற்றிக் கொள்வார்கள்.

Pdf file Download

[su_button id=”download” url=”https://www.mediafire.com/file/hgvwrl4nevi5fiq/Kartharukku+kathiru.pdf/file” target=”blank” style=”3d” size=”5″ center=”yes”]Download PDF [/su_button]

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *