தேவன் தெரிந்து கொள்ளும் மனிதர்கள்

தேவன் தெரிந்து கொள்ளும் மனிதர்கள்

தேவன் தெரிந்து கொள்ளும் மனிதர்கள்

குறிப்பிட்ட பணிகளைச் செய்ய தேவன் தெரிந்து கொள்ளும் மனிதரைக் கண்டு நான் அடிக்கடி வியப் படைந்திருக்கிறேன்.

1.பவுல்

எடுத்துக்காட்டாக, அவர் பவுலைப் பண்பாடற்ற, தேவபக்தியற்ற, புறஜாதியார் மத்தியில் அனுப்பினார். பரிசேயர்களின் முக்கியமான ஆசிரியராக இருந்த கமாலியேலின்கீழ் அவர் வேதங்களைக் கற்றார். இஸ்ரவேலில் சமயப் பிரமாணங்களைப் பகுத்துக் கூறக்கூடிய யூத ஆண்களின் குழுவான ஆலோசனைச் சங்கத்தின் உறுப்பினராக இருக்கவும் அவர் தகுதி பெற்றிருந்தார். கல்வி பயிலும் போது அவர் பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்களை எந்த விதத் தவறுமின்றி மனப்பாடம் செய்து எடுத்துக் கூறவேண்டியிருந்தது.அவர் குறிப்பிடத்தக்க பின்னணியும், சாதனைபுரியும் திறனும் கொண்டிருந்த யூதராக இருந்தார்.

மனிதக் கண்ணோட்டத்தில் பார்ப்போமானால் யூதர்களுக்கு நற் செய்தி அறிவிக்கும் பணிக்கு மிகவும் பொருத்தமானவர் பவுலாகவே இருக்க வேண்டும். 

ஆனால் யாருக்கு ஊழியம் செய்யும்படி தேவன் பவுலை அனுப்பினார்? 

கலாச்சாரம் பெற்றிருந்த யூதர்களுக்கு அல்ல, புற ஜாதியார் என்று அழைக்கப்பட்ட அறியாமையுள்ள, ஒதுக்கப்பட் டிருந்த மக்களுக்கு ஊழியம் செய்யும் படியே அவர் அனுப்பப்பட்டார். பவுலின் கல்வித் திறனைப் பற்றியும், யூதப் பிரமாணங்களை அவர் குறை வில்லாமல் தெரிந்து வைத்திருந் ததைப் பற்றியும் புறஜாதியார் அக்கறை காட்டவேயில்லை.

பவுலின் கல்வியறிவும், நுண்ணறிவும், திறன்களும், பவுலின் இயல்பான பலம் முழுவதுமே ஒதுக்கிவைக்கப்பட வேண்டியிருந்தது. முற்பிதாவான மோசேயைப் போலவே தேவன் இவரையும் அரபியாவின் பாலைவனத்துக்கு அழைத்துச் சென்று, அவரிட மிருந்து அனைத்தையும் களைய நேரிட்டது; பவுலுக்குப் பெருமையாகத் தோன்றும் அனைத்தையும் தேவன் அவரிடமிருந்து எடுத்துப் போட்டார் (பார்க்க கலாத்தியர் 1:17; பிலிப்பியர் 3:4-8).

கலாத்தியர் 1: 17

எனக்கு முன்னே அப்போஸ்தலரானவர்களிடத்திலே எருசலேமுக்குப் போகாமலும்; அரபிதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், மறுபடியும் தமஸ்கு ஊருக்குத் திரும்பிவந்தேன்.

பிலிப்பியர் 3:4-8

4 மாம்சத்தின்மேல் நம்பிக்கை வைக்கவேண்டுமானால் நானும் வைக்கலாம். வேறொருவன் மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிருக்க நினைத்தால் நான் அதிகமாய் அப்படிச் செய்யலாம்.

5 நான் எட்டாம் நாளிலே விருத்தசேதனமடைந்தவன், இஸ்ரவேல் வம்சத்தான், பென்யமீன் கோத்திரத்தான், எபிரெயரில் பிறந்த எபிரெயன், நியாயப்பிரமாணத்தின்படி பரிசேயன்.

6 பக்திவைராக்கியத்தின்படி சபையைத் துன்பப்படுத்தினவன், நியாயப்பிரமாணத்திற்குரிய நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவன்.

7 ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன்.

8 அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.

அந்த, “அவாந்தரவெளியும், பள்ளங்களுமுள்ள தேசமும், வறட்சியும், மரண இருளுமுள்ள தேசமும், ஒருவனும் கடவாமலும் ஒரு மனுஷனும் குடியிராமலும் இருக்கிற தேசமுமான வனாந்தரத்தில்-” (எரே. 2:6) லாபமாயிருந்தவைகளை கிறிஸ்துவை அறிகிற அறிவின் மேன்மைக்காக நஷ்டமென்று விட்டுவிடுவதின் (பார்க்க பிலிப்பியர் 3:7,8) மூலமாக மட் டுமே, தான் கிறிஸ்துவின் ஊழியனாக வெற்றிபெற முடியும் என்பதைப் பவுல் கற்றுக்கொண்டார்.

“மனுஷருடைய ஞானத்திலல்ல… ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப் படுத்தப்பட்டதாயிருந்தது” (1 கொரி. 2:4) நற்செய்தியை அறிவிக்கும்படி அவர் கற்றுக்கொண்டார்.

இயேசுவானவரே அவர்களின் மீட்பரென்று மக்களுக்கு உணர்த்து வதற்காக அவர் தனது பேச்சுத் திறனையோ போதிக்கும் திறமை யையோ சார்ந்திருக்கவில்லை; அவர் மூலம் அற்புதங்களைச் செய்யக் கூடிய பரிசுத்த ஆவியானவரையே அதிகமாகச் சார்ந்திருந்தார் (1கொரி. 10:4; 2கொரி.10:10). நாமும் இதையே செய்ய வேண்டும்.

2.பேதுரு

பேதுரு புறஜாதியாருக்கு விசுவாசத்தின் கதவைத் திறந்த போதிலும் (அப். 10), ரோமப் பேரரசின் முக்கியத்துவம் வாய்ந்த யூதர்களிடையே, “யூதர்களுக்கு அப்போஸ்தலனாயிருக்கும்படி” (பார்க்க கலாத்தியர் 2:8) எருசலேமிலேயே தங்கியிருந்தார். 

இந்தப் பணிக்கென பேதுருவைத் தகுதியுள்ளவராக்கியது எது? 

அறிவுசார்ந்த சாதனைகளோ அல்லது கல்வித் திறனோ அல்ல. அவர் “படிப்பறியாதவரென்றும் பேதமை யுள்ளவரென்றும்” வேதாகமம் கூறு கிறது (அப்.4:13). அவர் ஓர் எளிய மீனவராக இருந்தார்; என்றாலும் தேவன் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையின் மூலம் அவரை இந்தப் பணிக்குத் தகுதியுள்ளவராக்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *