பலவீனத்தை ஆசீர்வாதமாக மாற்றுதல்
“சோர்ந்து போகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாத வனுக்குச் சத்துவத்தைப் பெருகப் பண்ணுகிறார்” (ஏசாயா 40:29).
இணைபிரியா நண்பர்களாகி விட்ட ஒரு பார்வையற்றவனைப் பற்றியும், முடவனைப் பற்றியும் கதை யொன்று கூறப்படுவதுண்டு. இந்த நட்புறவுக்கான ஆதாரம் என்ன?
முடவனால் தெளிவாகப் பார்க்க முடிந்தது; ஆனால் அவனால் நடக்க முடியவில்லை. பார்வைக் குறைவு உள்ளவன் வலு வான கால்களைப் பெற்றிருந்தான்; ஆனால் அவனால் பார்க்க முடிய வில்லை. பார்வையற்றவனின் நடக்கும் திறனுக்குப் பதிலாக, முடவன் அவனுக்குத் தனது பார்க்கும் திறனை அளித்தான்.
பார்வையற்றவனால் முட வனைத் தன் தோளில் ஏற்றிக் கொண்டு செல்ல முடிந்தது. எந்தப் பாதையில் நடப்பது என்றும், வழி யில் அவனைத் தடுமாறி விழச் செய் வது எவையென்பது குறித்தும் முட வன் அந்தப் பார்வையற்றவனுக்கு எச்சரிப்புக் கொடுத்து வந்தான்.
அவர்களில் ஒவ்வொருவரது பலவீனங்களும், தேவையும் அவர் களை ஒன்றாக இணையும்படி செய் தது. ஒருவர் மற்றவரின் பலத்தைத் தமக்கு ஆதாயமாக எடுத்துக் கொள்ளும்படி செய்தது.
1. தேவனை அதிகமாகச் சார்ந்திருங்கள்
இதைப் போலவே, நமது ஆவிக்குரிய குருட்டுத் தன்மையும், முடமான இயல்பும் ஜெபத்தோடு தேவனைச் சார்ந்திருக்கும் உறவை நமக்குள் ஏற்படுத்த வேண்டும்; அப் போது அவரது பலம் நமது பல வீனத்தின் இடத்தைப் பிடித்துக் கொள்கிறது.
பாமாலைப் பாடலாசிரியர் இந்தக் கருத்தை அழகுற விளக்கி யுள்ளார்: அவரது பலம் பலவீனத்தில் பூரணமாக்கப்படுகிறது.
- அவரது வல்லமை வலியவருக் குரியதல்ல.
- ஓட்டத்தில் பலவீனமானவர்களுக்கு – அவர் அதிக கிருபையளிக்கிறார்.
- அவரது பலம் பலவீனத்தில் பூரணமாக்கப்படுகிறது.
ஒரு தலைவனாக இருப்பதற்குத் தேவையான திறமையிலோ அல்லது வல்லமையிலோ நாம் குறைவுபடு வதை நமக்கு உணரச் செய்யும் நமது தனிப்பட்ட பலவீனங்கள், நமது இருதயத்தை தேவனை நோக்கி உபவாசித்து ஜெபிக்கும்படி திருப்பவேண்டும். இந்த வழியில் நாம் செயல்படுவோமானால், “சோர்ந்து போகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப் பண்ணுகிறார்” (ஏசாயா 40:29) என்பதை நம்மால் கண்டுகொள்ள முடியும்.
தேவனையே சார்ந்திருக்கும் மனோபாவம் அவரது கவனத்தைக் கவர்ந்து, அவரை நம்மை நோக்கி இழுக்கிறது; நம் மூலமாக அவர் தமது வல்லமையை மகிமையாய் வெளிப்படுத்தும்படி செய்கிறது.
நமது குறைபாடுகள் இன்னு மதிகமாக கிறிஸ்துவைச் சார்ந் திருக்கும்படி நம்மைத் தூண்டு மானால், அவை மறைமுகமான ஆ ஆசீர்வாதங்களாகக் காணப்படு கின்றன.
இதற்கு மாறாக, நம்மை நாமே நோக்கிப் பார்த்து, நமது பிரச்சினை களைப் புரிந்துகொள்ளுவதை நாடி, சுய பச்சாதாபத்திலும் சுயவெறுப் பிலும் ஆழ்ந்துவிடுவோமானால், இறுதியில் நாம் தாழ்வு மனப்பான் மையையே பெறுவோம்.
2. வார்த்தையை அறிக்கையிடுதல்
“தாழ்வு மனப்பான்மை” என்று உளவியல் நிபுணர்கள் குறிப்பிடுவது பெரும்பாலும் நம்மைக் குறித்து நாம் கொண்டுள்ள அளவு கடந்த மாம்சீகமான ஆர்வமே (சுய உணர்வு). இதன் விளைவாக உங்களைக் குறித்து நீங்களே “நான் ஒன்றுக்கும் உதவாதவன்! நான் ஒரு பயனுமற்றவன்… தேவனால் என்னை ஒருபோதும் பயன்படுத்த முடியாது” என்ற முடிவுக்கு வந்து விடுகிறீர்கள். இத்தகைய சுயமதிப்பீடு முழுமையான அதைரியத்தையே பெற்றுத் தருகிறது.
“துணிவை இழந்துபோன ஓர் ஊழியனை தேவனால் ஒருநாளும் பயன்படுத்த முடியாது” என்று அதிகப் பெயர் பெற்றுள்ள நற்செய்தி யாளரான பில்லிகிரகாம் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்.
இது உண்மையே! நமது சாட்சியின் வசனத்தினால் (வெளி. 12:11) நாம் இத்தகைய மனோபாவங் களை வெற்றிகொள்ள வேண்டும்.
வேதாகமம் நம்மைப் பற்றி என்ன கூறுகிறதோ அதையே நாமும் கூறிக்கொள்ளும் போது, நாம் வெற்றிகொள்கிறவர்களாக ஆகிறோம். “என்னைப் பெலப் படுத்துகிற (சக்தியளிக்கிற, செயல் திறனளிக்கிற) கிறிஸ்துவினாலே எல்லா வற்றையுஞ் செய்ய எனக்குப் பெல னுண்டு”(பிலி.4:13) என்று வேதாகமம் கூறுகிறது.
“இதோ, சர்ப்பங்களையும் தேள் களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ள வும் உங்களுக்கு அதிகாரங் கொடுக் கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப் படுத்த மாட்டாது” (லூக்கா 10:19).
நமது தேவனின்மூலம் – நாம் தீரமாய்ச் செயல்படுவோம். நமது எதிரிகளைத் தள்ளி மிதிப் பவர் அவரே. நாங்கள் பாடி, வெற்றியை அறிக்கையிடுவோம்.
கிறிஸ்துவே இராஜா! அவரே அரசர்! தேவனால் ஆசீர்வதிக்கப்படும் ஆவிக்குரிய தாழ்மையோடு நாம் தாழ்வு மனப்பான்மையைக் குழப்பிக் கொள்ளக் கூடாது. இரண்டும் ஒன்றல்ல.
3. ஜெபத்தில் கிட்டிச் சேருதல்
தேவனைச் சார்ந்திருக்கும் உணர்வை நமக்குள் ஏற்படுத்தும் பலவீனங்களுக்கு தேவன் பதிலளிக் கிறார். “தேவனே, நீரே எனக்குத் தேவை. உம்மையன்றி என்னால் எதுவுமே முடியாது” என்று நாம் ஜெபிக்கும்போது – தேவன் நமது சார்பில் செயல்படுகிறார். “தேவனே… என் ஆத்துமா உம்மேல் தாகமா யிருக்கிறது” (சங். 63:1; 84:2) என்று ஜெபித்த தாவீது அரசனைப் போலா கிறோம் நாம்.
தேவைபற்றிய இந்த உணர்வு ஆரோக்கியமான ஜெபத் தியான வாழ்க்கையின் வளர்ச்சிக்கு அவசிய் மாக இருக்கிறது.
இத்தகைய வகையில்தான் அது செயல்பட வேண்டும் அல்லவா?
இதற்கு நேர்மாறாக, அனைத்தையும் ஊடுருவும் உணர்வு சுய நம்மைச் செயலிழந்து நிற்கும்படியே செய்யும். நம் மூலமாக தேவனுடைய வல்லமை பாய்ந்து செல்வதை இது தடுக்கிறது. இத்தகைய மாம்சீக உணர்வை விட்டுத் தொலைத்து விட்டு, அதிலிருந்து திரும்புங்கள். தேவனே உங்கள் வாழ்வின் பெல னாக இருக்கிறார் என்பதையும், நீங்கள் பயப்படத் தேவையில்லை என்பதையும் (சங். 27:1) ஒப்புக் கொள் ளுங்கள். தம்மைப் பயபக்தியுடன் வழிபட்டு, தம்மையே சார்ந்திருப்பவர்களின் சார்பாக, அவர் தம்மைப் பலமுள்ளவராகக் காட்டுவார்.
4.உங்கள் பலத்தை அவரது பலத்துக்குப் பண்டமாற்று செய்யுங்கள்
“இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறி விழுவார்கள். கர்த்தருக்குக் காத்திருக்கிற வர்களோ (மாற்றப்பட்ட) புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப் போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்” (ஏசாயா 40:30,31).
இந்த வசனத்தின் மையமான சொல் “புதுப் பெலன்” என்பதாகும்; அதாவது “மாற்றப்பட்ட” பெல னாகும். நாம் தேவனை நோக்கிக் காத்திருக்கும்போது, அவர் நமது பலத்தை எடுத்துக் கொண்டு தமது பெலனைக் கொடுக்கிறார்.
இது நமது பலத்தை அவ ருடைய பலத்தோடு சேர்ப்பதல்ல; அவரது பலத்தை வைப்பதற்காக நமது பலம் முற்றிலுமாக அகற்றப் படுகிறது. “நீ உன்னில்தானே பல முள்ளவனாக இருந்தால் என்னைப் பயன்படுத்த முடியாது. னாலேயே அதைச் செய்யக் கூடு உன் மானால் உனக்கு நான் தேவை யில்லை” என்று தேவன் கூறுகிறார்.
தேவன் தமது பலத்தை நமக்குள் “மாற்றுவதற்கு முன்பு நாம் என்ன செய்ய வேண்டுமென்று எதிர்பார்க் கிறார்?
a. உங்கள் தேவையை ஒப்புக் கொள்ளுங்கள்.
“இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்க லாக்கி இரட்சித்தார்” (சங். 34:6) என்று தாவீது அரசன் கூறினார்.
பின்வரும் துடிப்பான வார்த்தை களின்மூலம் ஆசாப் தனது பெல வீனத்தையும், தேவன் தேவைப்படு வதையும் ஒப்புக்கொண்டான்: “நான் காரியம் அறியாத மூடனானேன்; உமக்கு முன்பாக மிருகம் போலிருந்தேன்” (சங். 73:22).
தாவீது மற்றும் ஆசாப் இருவருமே தங்கள் தேவையையும் பலவீனத்தையும் ஒப்புக்கொள்ளும் படி தங்களைத் தாழ்த்தச் சித்த முள்ளவர்களாக இருந்தபடியால் தேவனுடைய பலத்தைப் பெற்றுக் கொண்டார்கள். இதைச் செய்யும் அனைவருக்கும் வல்லமையான வாக்குத்தத்த வார்த்தை அருளப்பட்டது.
“சிறுமையும் எளிமையுமான வர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல், அவர்கள் நாவு தாகத்தால் வறளும்போது, கர்த்தராகிய நான் அவர் களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன்.
“உயர்ந்த மேடுகளில் ஆறுகளை யும், பள்ளத்தாக்குகளின் நடுவே ஊற்றுகளையும் திறந்து, வனாந் திரத்தைத் தண்ணீர்த் தடாகமும், வறண்ட பூமியை நீர்க்கேணிகளுமாக்கி….
“கர்த்தருடைய கரம் அதைச் செய்தது என்றும், இஸ்ரவேலின் பரிசுத்தர் அதைப் படைத்தார் என்றும், யாவரும் கண்டு உணர்ந்து சிந்தித்து அறிவார்கள்” (ஏசாயா 41:17-20).
1) பவுல் ஒரு முன்மாதிரி.
தனது வாழ்க்கையின் தேவைகளை யும் பெலவீனங்களையும் தான் ஒப்புக் கொள்ள முன்வந்தால், இன்னுமதிகமாக தேவனுடைய பலம் தன்னிடம் வல்லமையாக வரும் என்பதைக் கண்டுகொண்டார்.
“அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப் பட்டவைகளுக்குரிய மேன்மையினி மித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப் பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாத படிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது. அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு, நான் மூன்று தரம் கர்த்தரிடத்தில் வேண்டிக் கொண்டேன்” (2கொரி. 12:7,8) என்று அவர் எழுதுகிறார்.
இந்தக் குட்டுதல் மற்றும் பல வீனத்திலிருந்து விடுதலை வேண்டி பவுல் ஏறெடுத்த ஜெபத்திற்கு தேவன் எவ்வாறு பதிலளித்தார்?’
“என் கிருபை உனக்குப் போதும்; (உன்) பலவீனத்திலே என் பலம் பூரணமாய் (முழுமையாக) விளங்கும்” (வச.9). இப்போது பவுல் ஏன் கீழ்க் கண்டவாறு கூறினார் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடி கிறது:
“ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக் குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன். அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும் போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தை களிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்” (2கொரி. 12 :9,10).
இந்தக் கருத்தின்படியே சுவி சேஷத்தின் வல்லமை செயல்படு கிறது. நாம் பெலவீனராக இருக்கும் போது, தேவன் நமக்கு அதிகமாகத் தேவைப்படுவதை உணரும்போது, இது நம்மை முற்றிலுமாக அவரைச் சார்ந்திருக்கும்படி செய்கிறது. அதிக நேரத்தை நாம் ஜெபிப்பதில் கழிக்கும் படி செய்கிறது. இதன் பலன் என்ன? நாம் பலத்தைப் பெறுகிறோம்.