சோதனை

சோதனை

சோதனை, சோதித்தல் – TEMPTATION

சோதனை என்பது பாவம் செய்யுமாறு தூண்டும் அழைப்பு அல்லது ஆர்வம். தேவன் மனுஷனை சோதிப்பதில்லை. “சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல” (யாக் 1:13), “நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்க மாட்டார்” (266LOM 243).

சாத்தானே மனுஷரை சோதிக்கிறான் (மத் 4:3; 1கொரி 7:5; 1தெச 3:5). மனுஷனுடைய பலவீனங்களை சாத்தான் அறிந்தும் அவர்களை கண்ணியில் சிக்கவைத்து அழித்துப்போடுகிறான் (யாக் 1:14). நாம் சோதனைக்கு எதிர்த்து நிற்கவேண்டும். “சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான் (யாக் 1:12).

சோதனையின்போது நாம் சோதனையில் வீழ்ந்து விடாதவாறு தொடர்ந்து ஜெபம் பண்ணவேண்டும் (மத் 6:13; லூக் 11:4). நம்மால் தாங்கிக்கொள்ளும் அளவைவிட அதிகமாக சோதிப்பதற்கு தேவன் அனுமதிக்கமாட்டார் (1கொரி 1043; 2பேது 2:9).

பழைய ஏற்பாட்டுக்காலத்தில் தேவன் தம்முடைய ஜனங்களின் விசுவாசத்தை சோதித்துப்பார்த்தார். தேவன் அவர்களோடு உடன்படிக்கை செய்திருந்தார். அந்த உடன்படிக்கையில் அவர்கள் உண்மையுள்ளவர்களாக நடந்து கொள்கிறார்களா என்பதை தேவன் சோதித்தறிந்தார் (ஆதி 221; உபா 8:2,16).

இஸ்ரவேல் தேசத்தார் கர்த்தரை சோதித்துப் பார்த்தார்கள். கர்த்தரிடத்தில் பல கேள்விகள் கேட்டார்கள் (யாத் 17:27; சங் 78:1841,56.

இயேசுகிறிஸ்துவை சாத்தான் சோதித்தான் (மத் 41-11; லூக் 4:1-13). இந்த சோதனையில் இயேசுகிறிஸ்து வெற்றிபெற்றார். இதுபோல நாமும் சாத்தானால் சோதிக்கப்படும்போது வெற்றிபெற முடியும் (எபி 2:18; 4:5).

ஆதியாகமம் மூன்றாவது அதிகாரத்தில் மனிதனின் ஆவிக்குரிய வரலாறு பற்றிய திறவுகோல் வார்த்தைகள் காணப்படுகின்றன. அவையாவன, சோதனை, பாவம், குற்றம், நியாயத்தீர்ப்பு, நட்பு என்பவையாகும்.

மனிதனின் வீழ்ச்சிக்கான பின்னணிகளை ஆதியாகமம் இரண்டாவது அதிகாரம் தருகிறது. இதில் மனிதனின் முதல் இல்லம், அவனுடைய ஞானம், ஏதேன் தோட்டத்தில் அவனுடைய சேவை, இரண்டு விருட்சங்கள், முதல் விவாகம் குறிப்பிடப்பட்டுள்ளன. நித்தியத்தை வரையறுக்கும் இரண்டு மரங்களைப் பற்றிய ஆகியவை விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒன்று நன்மை தீமை அறியத்தக்க விருட்சம், மற்றொன்று ஜீவ விருட்சம். இவ்விரண்டு விருட்சங்களும் நமது ஆதிப்பிதாக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு தெளிவான பிரசங்கத்தைப் பிரதிபலிக்கின்றது. “தீமையை வெறுத்து நன்மையைப் பின்பற்றினால் நீ ஜீவனைப் பெற்றிருப்பாய்”, (உபா 3015)

விலக்கப்பட்ட விருட்சத்தை கவனிக்கவும்: அது ஏன் அங்கு வைக்கப்பட்டுள்ளது? மனிதனுக்கு ஒரு பரீட்சை கொடுப்பதற்காகவே. இதன் வாயிலாக மனிதன் அன்புடன் சுயாதீனமாகத் தேவனைச் சேவிப்பதைத் தெரிந்து கொள்வதோடு நல்ல குணநலன்களை வளர்த்துக் கொள்ளலாம். சுய சித்தம் மனிதனிடம் இல்லையெனில் அவன் ஓர் இயந்திரத்தைப் போன்றே இருப்பான்.

தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் சகல சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அக்காலத்தில் சர்ப்பம் மிகவும் அழகிய உருவமுடைய ஒரு சிருஷ்டியாக இருந்தது. மனிதன் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்பாகவே பரத்திலிருந்து வெளியே தள்ளப்பட்ட சாத்தான் சர்ப்பத்தை தன் பிரதிநிதியாகப் பயன்படுத்தினான் (எசே 28:13-17; ஏசா 14:12-15 ).

அதனால்தான் சாத்தானைக் குறிப்பிடும் பொழுது “பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம்” என்று கூறப்பட்டுள்ளது (வெளி 12.9).

சாத்தான் பொதுவாகப் பிரதிநிதிகளின் வாயிலாகவே கிரியை நடப்பிப்பான். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைத் தம் கடமையிலிருந்து வழி விலகிச் செல்வதற்கு பேதுரு (தீய நோக்கமின்றி) முயற்சி செய்த பொழுது, இயேசு பேதுருவைத் திருப்பிப் பார்த்து, “எனக்குப் பின்னாகப் போ, சாத்தானே” என்று கூறினார் (மத் 16:22,23).

இச்சந்தர்ப்பத்தில் சாத்தான் இயேசுவின் இனிய நண்பன் ஒருவன் மூலமாகவே கிரியை செய்தான். இதைப் போன்று ஏதேன் தோட்டத்தில் சர்ப்பத்தின் வாயிலாகச் சாத்தான் கிரியை நடப்பித்தான்.

தந்திரம் சர்ப்பத்தின் சிறப்பான குண அம்சங்களுள் ஒன்று (மத் 1016).

நயமாக நடித்து பாவ ஆலோசனைகளைச் சாத்தான் வழங்குகின்றான். அந்த ஆலோசனைகளை நாம் ஏற்றுக் கொள்ளும் பொழுது, அது பாவம் செய்ய வேண்டுமென்ற ஆசைகளையும் பாவச் செயல்களையும் நமக்குள் தோற்றுவிக்கும்.சாத்தான் ஸ்திரீயைப் பார்த்து பலவீனமான பாண்டம் போன்று வர்ணித்தது. அவள் நேரடியாகத் தடையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கவில்லை, என்று கூறுகிறான் (ஆதி 216,17).

ஏவாள் தனிமையாய் இருக்கும் வரையில் சாத்தான் பொருத்திருந்தான். இம்முயற்சியில் காணப்படும் தந்திரத்தை கவனிக்கவேண்டும். தேவனுடைய வார்த்தைகளை அவன் புரட்டுகின்றான் (ஆதி 3:1).

அவ்வாறு புரட்டிவிட்ட பிறகு ஆச்சரியப்படுபவன் போல நடிக்கிறான். இவ்வாறு சந்தேகத்தையும் நம்பிக்கையின்மையையும் விதைக்கின்றான். அதே வேளையில், புசிக்கலாகாது என தேவன் இட்ட கட்டளையை நியாந்தீர்ப்பதற்கு தானே தகுதிவாய்ந்த நீதிபதி என்ற நச்சுத்தன்மையை விதைக்கின்றான். முதலாவது வசனத்தில் சாத்தான் எழுப்பிய வினாவின்படி, தேவனுக்கு எதிராகச் சாத்தான் மூன்று வகையான சந்தேகங்களை எழுப்பிவிடுகிறான்.

சாத்தான் எழுப்பிவிடும் மூன்று வகையான சந்தேகங்களை.

 1. தேவனின் தன்மையைக் குறித்த சந்தேகம். “தேவன் உங்களுக்கு கொடுக்காத படி சில ஆசீர்வாதங்களை தானே வைத்துக்கொண்டார்” என்பது போன்று கூறுகின்றான்.
 1. தேவனுடைய நீதியைப் பற்றிய சந்தேகம். “நீங்கள் சாகவே சாவதில்லை” அதாவது “தேவன் சொன்னதைச் செய்யமாட்டார்”.
 1. தேவனுடைய பரிசுத்தத்தைப் பற்றிய சந்தேகம், ஐந்தாவது வசனத்தில் சர்ப்பம் இவ்வாறு கூறுகின்றது. உங்கள் மேலுள்ள பொறாமையினால் தேவன் “புசிக்கக்கூடாது” என்று தடைபண்ணினார் என்றும், நீங்கள் அவரைப் போல் ஞானமுள்ளவர்களாய் மாறிடுவதை அவர் விரும்பவில்லை. எனவே அவர் உங்களை அறியாமையில் வைத்துள்ளார் என்றும் கூறினான். உங்களை மரணத்திலிருந்து காப்பது உங்களுடைய பொறுப்பு அல்ல என்றும் நீங்கள் அவரைப் போல் மாறுவதை தடுப்பது தேவனுடைய சுபாவம் என்றும் கூறினான்.

“சோதிக்கப்படுகிற எவனும் நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன்” சொல்லாதிருப்பானாக. ஏனெனில் தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல” (யாக்கோபு 1:3), சாத்தானும் அவனுடைய பிசாசுகளும் (நம்முடைய உண்மையான விரோதிகள்) நம்மை சோதிக்கும் கருவிகளாகும். அவைகள் எப்பொழுதும் கெர்ச்சிக்கிற சிங்கம் போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடி சுற்றித்திரிகிறான். (1பேதுரு 5:8).

அவைகள் எல்லா விசுவாசிகளையும் சோதிக்கின்றன. (1பேதுரு 59). எல்லா மனிதர்களுக்கும் சாதாரணமாக நேரிடுகிற காரியங்கள், மற்றும் வழிகளிலும் சோதிக்கப்படுகின்றனர். (1 கொரிந்தியர் 10.43). மற்ற காரியங்களுடன், அவை கீழ்க்கண்டவற்றிலும் நம்மைச் சோதிக்கின்றன.

நம்மைச் சோதிக்கின்ற விதங்கள்

 1. அவைகளை வணங்க (லூக்கா 4:7).
 1. சரீர காரியங்களைத் தேடவும், ஆவிக்குரியவைகளை ஒதுக்கவும் (லூக்கா 4:3).
 1. விபச்சாரம் செய்ய (1கொரிந்தியர் 7:5).
 1. விசுவாசத்தை விட்டுவிட (1தெசலோனிக்கேயர் 3:5, 1தீமோத்தேயு 5:15).
 1. மற்றவர்களை மன்னிக்கக் கூடாமல் (2கொரிந்தியர் 2:10).
 1. பணம் மற்றும் உலக ஆதாயத்தை நேசிக்க (1தீமோத்தேயு 6:9-10).
 1. நம்மையே அழித்துக்கொள்ள (லூக் 4:9)
 1. மற்றவர்களை அழிக்க (லூக் 22:3).
 1. எல்லாவிதமான ஒழுக்கங்கெட்ட கிரியைகளை நடப்பிக்க. (கலாத்தியர் 5:19-21, 1கொரிந்தியர் 6:9-10, எபேசியர் 5:5, வெளிப்படுத்தின விசேஷம் 22:15).
 1. தேவனுக்கு விரோதமாக எதிர்த்து நின்று, முழுவதும் அவரிடமிருந்து நம்மை விலக்க. (ஆதியாகமம் 3:1-5).

விசுவாசிகளைச் சாத்தான் சோதிப்பதில் படிப்படியாக ஒழுங்கு முறைப்படியான வளர்ச்சி காணப்படுகிறது. இதற்கு சில நிமிடங்கள் அல்லது சிலருடைய காரியங்களில் வளர்ந்து முதிர்ச்சி அடைய பல வருடங்கள் ஆகின்றது:

1. பிரிவு 

விசுவாசியை, விசுவாசிகளின் ஐக்கியத்திலிருந்து பிரித்து விடுவது அல்லது விசுவாசி ஒரு சபையிலிருந்து அடுத்த சபைக்கு மாறி, மாறி செல்லும்படி செய்வது.

2. சோதனை

துன்மாக்கமான நினைவுகள், சந்தேகம்.

3. தூரமாக இழுத்துச் செல்வது 

தீவிரமான பொல்லாத கற்பனை, துன்மார்க்கமான பாவங்கள் நடைபெறுவதை பார்ப்பதில் களிகூருவது, தேவனுடைய பரிவையும் பாதுகாப்பையும் சந்தேகிப்பது.

4. கவர்ச்சிக்கப்படல்

சுயபலத்திலும் தேவனை விசுவாசிப்பதிலும் பலவீனப்பட்டு உலகத்தின் பக்கம் கவர்ச்சிக்கப்படுவது.

5. இச்சை கர்ப்பந்தரித்தல் 

தேவனை சந்தேகித்து, விட்டு விட்டு, பாவத்திற்கு ஒப்புக்கொடுத்தல்.

6. பாவம்

பாவம் கிரியையில் நடப்பிக்கப்படல். கிறிஸ்துவில் நம்பிக்கை அற்றுபோதல்.

7. மரணம்

நம்மில் வாசம் பண்ணும் பரிசுத்த ஆவியானவர் முற்றிலும் நம்மிலி ருந்து நீங்கிவிடும்வரை, தொடர்ந்து பாவச் செயல்களில் ஈடுபடுவது. முழுவதும் தேவனை விட்டு பிரிந்து போய் விடுவது. (யாக்கோபு 1:14-15).

சோதனை மேற்கொள்வதை தடுக்க வேண்டுமாயின், நமக்குள்ளே வாசம் பண்ணும் பரிசுத்த ஆவியானவரின் மெல்லிய சத்தத்திற்கும், வல்லமைக்கும் பணிந்து வாழ்க்கை நடத்துவதின் மூலம் மட்டுமே கூடும். (கலா 5:16). ஒரு விசுவாசி விழித்திருந்து ஜெபிக்கவும் வேண்டும் (மத்தேயு 6:13, 26:41). அதோடு இச்சையடக்கத்துடன், மிக ஜாக்கிரதையாக இருந்து (1பேதுரு 5:8), பிசாசின் சோதனைக்கு எதிர்த்து நின்று யாக்கோபு 4:7; 1பேதுரு 5:9), எப்பொழுதும் தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை அணிந்து கொண்டு (எபேசியர் 6:10-18), தொடர்ந்து தேவனுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதை அடிப்படையாகக் கொண்டு வாழவேண்டும். (யாக் 4:7, 119).

தேவபக்தியுள்ளவர்களை சோதனைகளிலிருந்து விடுவிக்க தேவன் அறிவார் (2பேதுரு 29). அவர் உண்மையுள்ளவர், அவர் தம்முடைய பிள்ளைகள், அவர்கள் தாங்குவதற்கு மேலாக சோதிக்கமாட்டார். சோதிக்கப்படும்போது, சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோட கூட, அதற்குத் தப்பிக் கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார் (அது ஒரு முடிவுக்கு வரும்படியாக) (1கொரிந்தியர் 10:13).

இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தை விட்டு அவர்கள் விலகிப் போகும்படியாக கவர்ந்து இழுக்க, பிசாசு விசுவாசிகளைச் சோதிக்கிறான். இருந்த போதிலும், விசுவாசியின் நன்மைக்காக, தேவன் இந்த சோதனைகளைப் பயன்படுத்துகிறார். இவைகளின் மூலமாக விசுவாசி பொறுமையில் வளரவும் கிறிஸ்துவுக்குள், முதிர்ந்து பூரணப்படவும், தன்னுடைய விசுவாசம் (கர்த்தரிடம்) மிக உன்னதமானது என்பதை நிரூபிக்கவும் முடிகிறது. (யாக்கோபு 1:4, 1பேதுரு 1:7).

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *