தேவ சத்தத்தை கேட்பதற்குகான தடைகள்

தேவ சத்தத்தை கேட்பதற்குகான தடைகள்

தேவ சத்தத்தை கேட்பதற்குகான தடைகள் 

1. தேவனுக்கு முன்பாக உத்தம இருதயத்தோடு இராதிருத்தல்

“தம்மைப் பற்றி உத்தம இருதயத் தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப் பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது” (2நாளா. 16:9).

வேதாகம நாட்களில் மக்கள் இருதயமே 1. மன உணர்வுகள் அல்லது மன விருப்பம் 2. உள் நோக்கங்கள் மற்றும் 3. சுய நோக் கங்கள் இவற்றுக்கு இருப்பிடம் என்று கருதினார்கள். தேவன் இந்தக் காரியங்களைக் குறித்து அதிகமாகக் கரிசனை கொண்டிருக்கிறார். 

a. உலகப்பிரகாரமான விருப்பங்கள். 

நாம் பரலோகத்துக்கடுத்த காரியங்களைவிட உலகப்பிரகார மான காரியங்களில் அதிக விருப்பம் வைத்திருப்போமானால் அது தேவ னுக்குக் கோபமூட்டுகிறது (1யோவான் 2:15). நாம் தேவனிடத் தில் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மன தோடும், முழு பலத்தோடும் அன்பு கூர வேண்டும் (மத். 22:37).

b. அசுத்தமான உள்நோக்கங்கள். 

நமது உள்நோக்கங்களும் (செயல்படத் தூண்டுபவைகளும்) பிலேயாம் தீர்க்கதரிசியினுடையதைப் போல (எண்ணாகமம் 23) அசுத்தமானவையாக இருந்தால், தேவன் கடுமையாக நம்மை நியாயந்தீர்ப்பார். தேவனால் அருளப்பட்ட அற்புதமான ஈவுகளை பிலேயாம் பணத்துக்காகவும், புகழுக்காகவும், செல்வாக்குக்காக வும் விற்றுப் போட்டான். 

c.தவறான நோக்கங்கள். 

அனனியாவும், சப்பீராளும் தங்கள் பணத்தை ஆண்டவருடைய ஊ ஊழியத்துக்குக் கொடுப்பதாகப் பாவனை காட்டினாலும் (அப். 5 அதி.) அவர்கள் உண்மையில் அதில் பெரும் பகுதியைத் தங்களுக்கென வைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் நோக்கம் தவறானதாக இருந்தபடியால், தேவன் அவர் களைக் கொன்று போட்டார்.

நாம் நமது விருப்பங்களும், உள்நோக்கங்களும், நோக்கங் களும் சுத்தமாக இருக்கும்படி காத்துக் கொள்வது எவ்வளவு அவசியமானது! தேவன் நமது இருதயத்தை அறிந்திருக்கிறார் அல்லவா?

“மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்” (1சாமு. 16:17). நாம் இந்தக் காரியங் களை தேவனிடமிருந்து மறைக்க முடியாது. நாம் நமது இருதயத்தை அவருடைய மாக பார்வையில் உத்தம வைக்காவிட்டால், நம்மால் அவருடைய குரலைக் கேட்க முடியாது.

2.இருதயத்தின் கடினம்

“இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் உங்கள் இருதயங் களைக் கடினப்படுத்தாதிருங்கள்” (எபி. 4:7).

நானும் எனது குழுவினரும் நற்செய்தி அறிவிக்கும்படி எங்கா வது செல்லும்போது, நாங்கள் மக்க ளைக் குணமாக்கவும், அவர்களை ஆசீர்வதிக்கவும் வல்லமையைப் பெறும்படியாக, உபவாசமிருந்து தேவனை நோக்கி ஜெபங்களை ஏறெடுப்போம். இந்த வேளைகளில் பெரும்பாலும் நாங்கள் உபவாசிப் பதற்காகவும், ஜெபிப்பதற்காகவும் ஒரு நாளை ஒதுக்கி வைப்போம்.

முதிர்ச்சி பெற்ற மூன்று கிறிஸ் தவ தம்பதிகளைத் (கணவன் மற்றும் மனைவிமார்) தெரிவு செய்து, அவர் களை ஒரு ஜெபக் குழுவாக உருவாக் குவது எங்கள் வழக்கமாக இருக் கிறது. உபவாச ஜெபநாட்களில் இவ் வாறு ஐந்து அல்லது ஆறு ஜெபக் குழுவினர் மக்களுக்கு ஊழியம் செய்வார்கள்.

ஜெபக் குழுவினர் தங்கள் நாற் காலிகளை வட்டவடிவில் போட்டு அமர்ந்திருப்பார்கள். ஜெபிப்பதற் காக வருபவர்கள் இந்த வட்டத்தின் நடுவே அமர்ந்திருப்பார்கள்.

ஆவியில் ஜெபிக்கும்படியும் (அந்நிய பாஷையில் 1கொரி. 14:13,14), ஜெபிப்பதற்காக வந்திருப்பவர்களுக் காக பரிசுத்த ஆவியானவர் அவர் களுக்கு இயல்புக்கு அப்பாற்பட்ட உதவியை அளிக்கும்படி எதிர்பார்த் திருக்கும்படியும் அவர்களை நாங்கள் ஊக்குவிப்போம்.

a. மன்னிக்காமல் இருப்பது தேவனுடைய குரலைத் தடை பண்ணுகிறது. 

நானும் என் மனைவி யும் உறுப்பினர்களாக இருந்த ஜெபக் குழுவிற்கு ஒரு பெண்மணி ஜெபிக்கும்படி வந்தாள். அவள் முடக்குவாத நோயினால் அவதிப் பட்டு வந்தாள்; அவள் முதுகிலும் கைகளிலும் அதிக வேதனை காணப் பட்டது. நோயின் காரணமாக அவள் விரல்கள் வளைந்து போயி ருந்தன; அவளால் அவற்றை நேராக நீட்ட முடியவில்லை.

குழுவினர் ஆவியில் ஜெபிக்கத் துவங்கியபோது, என் உள்ளத்தில் ஒரு தரிசனத்தைப் பெற்றேன். அறு வடை செய்யப்பட்டிருந்த ஒரு நெல் வயலின் காட்சி அது. தரை உலர்ந்து கடினமாகிவிட்டிருந்தது; எஞ்சி யிருந்த தட்டைகள் காய்ந்துபோ யிருந்தன. அந்தச் சகோதரியின் தேவைக்கு இந்தக் காட்சி என்ன அர்த்தம் கொடுக்கிறது என்று நான் சிந்தித்துக் கொண்டிருந்த போது, பரிசுத்த ஆவியானவர் என்னிடம், “இதுவே இந்தப் பெண்மணியின் இருதயத்தின் காட்சி. அது கடினமாகவும் உலர்ந்து போயும் காணப்படுகிறது” என்று கூறுவதை உணர்ந்தேன்.

“ஏன் ஆண்டவரே எப்படி?” என்று நான் ஜெபித்தேன். “அவளது கணவன் அவளைத் தவறான முறை யில் நடத்தியிருக்கிறான். அவளால் அவனை மன்னிக்க முடியவில்லை. அவளது மன்னிக்க முடியாத நிலையே இந்த இருதயக் கடினத்தை ஏற்படுத்திவிட்டது. அவளால் அவனை மன்னிக்க முடியாதபடியால், அவளும் மன்னிக்கப்பட வில்லை. இதனால் ஏற்பட்ட நெருக் கத்தினால் அவள் உள்ளத்தில் அதிக மான ஏமாற்ற உணர்வு ஏற்பட்டு விட்டது. இதன் விளைவாக ஏற்பட் டதுதான் இந்த முடக்குவாத நோய்” என்று பரிசுத்த ஆவியானவர் என்னிடம் கூறினார்.

இப்படிப்பட்ட ஏதாவது ஒரு காரியம் நிகழும்போது, நான் உண் மையில் தேவனுடைய குரலைத் தான் கேட்கிறேனா அல்லது இல்லையா என்ற நிச்சயத்தைச் சில வேளைகளில் பெறுவதில்லை. எனவே அது பரிசுத்த ஆவியானவ ரால் கொடுக்கப்பட்டதா அல்லது என் சொந்தக் கற்பனையா என்பதை உறுதி செய்து கொள்ளும்படியாக, நான் அந்தச் சகோதரியிடம் நான் கண்ட காட்சியைப் பற்றிக் கூறினேன். அவளது நிலைமை பற்றி என் உள்ளத்தில் தேவன் கூறியதை நான் அவளிடம் எடுத்துச் சொன் னேன். “இதெல்லாம் உண்மையா?” என்று நான் அவளிடம் கேட்டேன். மனமுடைந்து கண்ணீர்விட்ட அவள் “ஆம், சகோதரன் ரால்ப், அனைத்தும் உண்மையே!” என்று ஒப்புக்கொண்டாள்.

b. மன்னிப்பு தேவனுடைய குரலை மீண்டும் கொண்டு வருகிறது. 

இந்த அன்பான சகோதரிக் காக தேவ அன்பு என் இருதயத்தை நிறைத்தது. என் கண்களில் நீர் வழிய நான் அந்தப் பெண்மணியிடம், “சகோதரியே, இயேசு உன்னை அதிகமாக நேசிக்கிறார். அவர் உன்னைக் குணமாக்கவும் உன்னோடு பேசவும் விரும்புகிறார். நீ மன்னிப் பதை வாய்விட்டுச் சொல்லிப்பார். ‘நான் என் கணவரையும் அவர் என்னை வேதனைப்படுத்தும்படி செய்த அனைத்துக் காரியங்களை யும் மன்னிக்கிறேன்’ என்று சொல் லிப்பார். அப்போது தேவன் உன் னைக் குணமாக்குவார். உனது இரு தயம் மென்மையாக்கப்படும். கடின இருதயத்துக்குப் பதிலாக நீ மென் மையான இருதயத்தைப் பெறும் போது, தேவன் மறுபடியும் உன்னுடன் பேசுவார்” என்று கூறினேன்.

நான் கூறியபடியே அவள் செய் தாள்; மூன்றே நிமிடங்களுக்குள் ளாக அவளது முடக்குவாத நோய் அவளை விட்டு அகன்று போனது. அவளது முதுகின் வேதனை குண மானது. கை விரல்களை அவளால் இயல்பாக நீட்டவும் மடக்கவும் முடிந்தது.

அநேக நாட்களுக்குப் பிறகு அவள் கண்களில் நீர் வழிய என்னிடம், “சகோதரன் ரால்ப், தேவன் மறுபடியும் என்னோடு பேசு கிறார். அவர் எவ்வளவு நல்லவர்!” என்று களிப்புடன் கூறினாள். அவள் ஒரு சிறந்த சபையின் தலைவியா னாள் என்பதைப் பின்னர் நான் அறிந்துகொண்டேன்.

தேவனோடு நமது இருதயத் தைச் சரிப்படுத்துவது எவ்வளவு அவசியம் என்பதை இந்த நிகழ்ச்சி சுட்டிக் காட்டுகிறது.ஒரு கடினமான இருதயம், இரக்கமற்ற இருதயம், விசுவாசமில்லாத இருதயம் இன்னும் பல்வேறு வகைப்பட்ட “இருதயத்தின் நிலைகள்” தேவனுடைய வார்த்தையைக் கேட்பதிலிருந்து நம்மைத் தடுக்கக்கூடும்.

3. மறுபிறப்பைப் பெறாத நிலைமை

நான் நற்செய்தியைப் பிரசங்கிப் பதற்காக பதினைந்துக்கும் மேற் பட்ட பகுதிகளில் சுற்றி வந்திருக்கி றேன். நான் எதிர் நோக்கும் பிரச் சினைகளில் பெரிய பிரச்சினை மறுபடியும் பிறவாத சபைத்தலை வர்கள்தாம். தேவனுடைய ஆவி யானவரில் மறுபடியும் பிறவாத ஊழியர்கள் பெரிய பிரச்சினை யாகக் காணப்படுகிறார்கள். அவர் கள் தேவனுடைய குரலைக் கேட்க முடியாமல் இருப்பதில் வியப்பொன் றும் இல்லை அல்லவா?

200 ஆண்டுகளுக்கு முன்னர், உல கின் மாபெரும் எழுப்புதல் இயக்கங் கள் ஒன்றின் நிறுவனரான ஜாண் வெஸ்லி ஜியார்ஜியா பகுதியில் அருட்பணி ஊழியம் செய்தபிறகு கப்பல் மூலம் இங்கிலாந்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். கைதி கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டுவருவதை மாற்ற அவர் ஜியார்ஜியாவில் முழுமூச்சோடு முயற்சி செய்திருந்தார்.

கப்பலில் பவேரியாவைச் சார்ந்த மொரேவிய அருட்பணியாளர்கள் ஜாண் வெஸ்லியோடு பேச்சுக் கொடுத் தார்கள். “ஜாண் வெஸ்லி, நீங்கள் மறுபடியும் பிறந்திருக்கிறீர்களா?” என்று அவரிடம் கேட்டார்கள்.

“நான் அபிஷேகம் பெற்ற ஓர் ஆங்கிலிகன் சபைப் போதகர்” என்று அவர் பதிலளித்தார்.

“நாங்கள் அதைக் கேட்கவில்லை, ஜாண், நீங்கள் தேவ ஆவியானவரால் மறுபடியும் பிறந்திருக்கிறீர்களா?”

“நான் இறையியல் கல்லூரியில் பட்டம் பெற்றதிலிருந்து சிறைக் கைதிகளுக்கு ஊழியம் செய்து வருகிறேன், ஏழைகளுக்கு உதவிவரு கிறேன்; அனைத்து வகைப்பட்ட நற்கிரியைகளையும் செய்துவருகி றேன்” என்று ஜாண் பதிலளித்தார். (“மோட்சம் நரகம்” பற்றிய விவாதத் தை அவர் தவிர்க்க முயன்றார்).

“இல்லை, ஜாண் வெஸ்லி, ‘மறுபடியும் பிறக்க வேண்டும்’ என்று இயேசுவானவர் கூறியிருக்கிறாரே!” என்று மொரேவிய அருட்பணி யாளர்கள் தொடர்ந்து வற்புறுத்தினார்கள்.

மறுபடியும் மறுபடியுமாக இந் தக் கேள்வியினால் தொடப்பட்ட ஜாண் வெஸ்லி, கடற்பயணத்தின் எஞ்சிய நாட்களைப் புதிய ஏற்பாட் டை மறுபடியுமாக ஆய்வுசெய்வதில் கழித்தார். “நாம் தேவனுடைய பிள்ளைக ளாயிருக்கிறோமென்று ஆவியானவர் தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார்” (ரோமர் 8:16) என்ற வசனத்தை அவர் வாசித்தார்.

‘பவுல் எதைக் குறித்துப் பேசு கிறார்? “ஆவியானவர்தாமே நம் முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார்….” இதற்குப் பொருள் என்ன?’ என்று அவர் சிந்தித்தார்.

“தேவனுடைய குமாரனிடத்தில் விசு வாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான்” (1யோவான் 5:10) என்ற வசனத்தை யும் அவர் வாசித்தார். 

“யோவான் கூறுவதுபோல என் இருதயத்தில் எந்தச் சாட்சியும் இருப் பது போன்ற அனுபவம் எனக் கில்லையே. நான் மறுபடியும் பிறந்திருக்கிறேனா?” என்று அவர் சிந்திக் கத் துவங்கினார்.

அவர் இன்னுமதிகமாக இதைக் குறித்து மொரேவிய அருட்பணி யாளர்களோடு பேசிய போதும், புதிய ஏற்பாட்டை வாசித்தபோதும், தான் “இரட்சிக்கும் விசுவாசத்தைப் பெற்றிருக்கவில்லை என்பதை அதிகமாக உணர்ந்தார்.

a. இரட்சிக்கும் விசவாசமா அல்லது வெறும் அறிவுசார்ந்த ஒப்புதலா? 

ஒரு நாள் ஜாண் வெஸ்லி “பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன” (யாக். 2:19) என்ற வசனத்தை வாசித்தார். வேதாக மத்தில் இயேசுவானவரைப் பற்றி வரலாற்றுபூர்வமாகக் கொடுக்கப் பட்டுள்ள உண்மைகளை அறிந் திருப்பதற்கும், “இரட்சிக்கும் விசு வாசத்திற்குமிடையே” பெருத்த வேறுபாடு இருப்பதை அவர் உணர்ந்தார். பிசாசுகளும் இந்த உண்மைகளை விசுவாசிக்கின்றன; ஆனால் இரட்சிக்கும் விசுவாசத்தை அவை பெற்றிருக்கவில்லை.

தான் தேவ ஆவியானவரால் மறுபடியும் பிறந்திருக்கிறோமா என்பதை உறுதிப்படுத்தாமல், தனது சபையும், இறையியல் கல்லூரிப் பேராசிரியர்களும், அருட்பணி நிர்வாகக் குழுவினரும் தன்னைக் கைவிட்டு விட்டதாக வெஸ்லி உணர்ந்தார்; ஆவிக்குரிய ஜாண் உண்மை நிலை பற்றிய சத்தியங்களை அவர் தேடத் துவங்கினார்.

இங்கிலாந்து வந்து சேர்ந்து சில காலத்துக்குப் பின்னர் அறியப் படாத இலண்டன் அருட்பணி நிலையமொன்றுக்கு ஓரிரவு சென் றார்; அங்கே ஒரு பிரசங்கியாரின் பிரசங்கத்தைக் கேட்டார். தெளிவாக வும், எளிமையாகவும் நற்செய்தி கூறப்பட்டதைக் கேட்டபோது, “என் இருதயம் அற்புதமான வகையில் வெம்மையாகியது” என்று பின்னர் வெஸ்லி சாட்சியாகக் கூறியிருக்கி றார். அந்த இரவு அவர் அறிவுக்கு அப்பாற்பட்ட சமாதானத்தையும், எடுத்துக் கூறமுடியாத களிப்பையும், மகிமையின் நிறைவையும் உள்ளத் தில் அனுபவித்தவராகத் திரும்பிச் சென்றார்.

இறுதியாக அவர் ஆவியானவ ரில் மறுபடியும் பிறப்பதின் மகிழ்ச்சி யை அறிந்துகொண்டார். பவுல், யோவான், யாக்கோபு இவர்கள் கூறி யதைப் பற்றி அவர் இப்போது தெரிந்து கொண்டார். ஆவிக்குரிய உண்மை நிலைக்கும், அறிவுசார்ந்த நிலையில் நற்செய்தியை ஒப்புக் கொள்வதற்கும் இடையேயுள்ள வேறுபாட்டை அவர் கண்டுகொண் டார். அவர் தனது ஊழியத்தின் எஞ்சிய நாட்களை, மறுபடியும் பிறந்திருப்பதை அறிந்திருப்பது எவ்வளவு அவசியம் என்பதை மக்களுக்கும், போதகர்களுக்கும் சுட்டிக்காட்டி வந்தார்.

b.நீங்கள் இரட்சிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை உங்களால் அறிந்துகொள்ள முடியும். 

உங்கள் நிலைமை எத்தகையது? நீங்கள் மறுபடியும் பிறந்துள்ளோம் என்று அறிந்திருக்கிறீர்களா? உங்களால் இதை அறிய முடியும்! ஏன் நீங்கள் உங்கள் இருதயத்தில் வரும்படி ஆண்டவராகிய இயேசுவை நோக்கி ஜெபிக்கக்கூடாது?

இந்த எளிய ஜெபத்தை ஏறெடுங் கள்: ஆண்டவராகிய இயேசுவானவரே! நீரே என் ஆண்டவர் என்று நான் அறிக்கையிடுகிறேன். என்னைப் பாவத்தி லிருந்து இரட்சிப்பதற்காக நீர் எனது பாவங்களைக் கல்வாரிச் சிலுவையில் சுமந்தீர் என்று நான் விசுவாசிக்கிறேன். நீர் மரித்தோரிலிருந்து எழுந்து, பரலோ கத்தில் பிதாவானவரின் வலது பக்கம் வீற்றிருக்கிறீர் என்று விசுவாசிக்கிறேன்.

எனது பாவங்களுக்கான முழுத் தீர்வையையும் செலுத்தித் தீர்ப்பது நீரும் உமது இரத்தமுமே என்று நான் நம்புகிறேன். நான் தேவனுடைய பிள்ளையாகும்படி என்னுடைய ஆவி யுடனேகூடச் சாட்சி கொடுக்கும் உமது பரிசுத்த ஆவியானவரை நான் ஏற்றுக் கொள்கிறேன். இவையனைத்தையும் நான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறேன். ஆமென்!

இந்த ஜெபத்தை நீங்கள் உண்மையுடன் ஏறெடுத்திருப்பீர்க ளானால், இயேசுவானவர் உங்கள் இருதயத்தில் வந்துவிட்டிருக்கிறார். இப்போது உடனடியாகச் சென்று எவரிடமாவது “நான் இயேசு வானவரை என் ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக் கொண்டுள் ளேன்; நான் இரட்சிக்கப்பட்டுள் ளேன் என்றும் பரலோக பாக்கியத் தைப் பெற்றுள்ளேன் என்றும் நிச்சய மாக அறிந்திருக்கிறேன்” என்று சாட்சியாகக் கூறுங்கள்.

“என்னவென்றால்,, கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கை யிட்டு, தேவன் அவரை மரித்தோரி லிருந்து எழுப்பினாரென்று உன் இருத யத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப் படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்” (ரோமர் 10: 9,10) என்று வேதாகமம் கூறுகிறது.

இப்போது நீங்கள் மறுபடியும் பிறந்திருக்கிறபடியால் அதை நீங்களும் அறிந்திருக்கிறபடியால் – தேவன் உங்களோடு பேசத் துவங் கும் சிலாக்கியத்தை நீங்கள் பெற்றி ருக்கிறீர்கள். உங்களால் அவருடைய குரலைக் கேட்க முடியும். “என் ஆடு கள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது” (யோவான் 10:27) என்று இயேசு வானவர் கூறியுள்ளார்.

இயேசுவானவர் உங்கள் இருத யத்தில் வரும்போது, பாவத்தையும் இருளையும் அகற்றி அவர் உங்கள் இருதயத்தைச் சுத்திகரிக்கிறார்; உங்கள் கடின இருதயத்தை எடுத்துப் போட்டு விட்டு, அவருடைய குரலை நீங்கள் கேட்கும்படி மென்மையும் மிருதுமான இருதயத்தை உங்களுக் குக் கொடுக்கிறார்.

“நான் உங்களுடைய எல்லா அசுத் தங்களையும்…. நீக்கி உங்களைச் சுத்த மாக்குவேன்…. உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப் போட்டு, சதையான இருதயத்தை உங்க ளுக்குக் கொடுப்பேன். உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும் பண்ணு வேன்” (எசே. 36:25-27).

4.கீழ்ப்படியாமை தேவனுடைய குரலைத் தடுக்கிறது

தான் இடைவிடாமல் ஜெபித் துக் கொண்டிருப்பதாகவும், தன்னு டன் பேசும்படி தேவனிடம் வேண் டிக்கொண்டிருப்பதாகவும் சகோத ரன் ஜட்சன் கார்ன்வால் கூறினார். இறுதியாக தேவன் அவரிடம், “ஜட்சன், நான் ஏன் மறுபடியும் உன் னுடன் பேச வேண்டும்? கடந்த முறை நான் உன்னுடன் பேசியபோது, நீ அதற்குக் கீழ்ப்படியவில்லையே!” என்று சுட்டிக் காட்டினார். அப் போதே எழுந்த சகோதரன் கார்ன் வால் தேவன் தன்னிடம் ஏற்கெனவே கூறியிருந்தபடி செய்தார். அதன் பிறகு அவரால் மீண்டும் தேவ னுடைய குரலைக் கேட்க முடிந்தது.

“ஆதலால் விசுவாசம் கேள்வியி னாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்” (ரோமர் 10:17).

விசுவாசிப்பது என்றால் “தேவன் கூறுவதற்கு கீழ்ப்படிதலுடன் செயல்படுவது” என்றும் கூறலாம். தேவனுடைய குரலைக் கேட்பது என்பது வெறுமனே உங்கள் காதுகளால் கேட்பது என்று அர்த்தமல்ல. அவர் கூறுவதற்குக் கீழ்ப்படிதலுடன் செவிசாய்க்க வேண்டும்.

என் பையனுக்கு ஒன்பது வய தாக இருந்தபோது நான் அவனிடம், “இந்தக் குப்பையைத் தொட்டியில் கொண்டுபோய் கொட்டிவிட்டுவா” என்று கட்டளையிட்டேன். “சரி அப்பா” என்றான் அவன். ஆனால் முப்பது நிமிடங்களுக்குப் பிறகு நான் திரும்பி வந்தபோது குப்பை அப்படியே இருந்தது. அவன் நான் கூறியதைக் கேட்கவில்லையா? வேதாகம உணர்வோடு பார்த்தோ மானால், அவன் எனக்குக் கீழ்ப்படி யும் வரை கேட்கவில்லை என்று தான் பொருள்.

நான் என் பையனை மீண்டும் அழைத்து அவனுக்குப் புரியும்படி போதித்தேன். அப்போது அவன் நான் கூறியதைக் கேட்டான்; குப் பையை வெளியே எடுத்துச் சென்றான்.

கேட்பதின்மூலம்… தேவனுடைய வசனத்தைக் கேட்பதின்மூலம் விசு வாசம் வருகிறது; அதாவது தேவன் கூறியுள்ளதைக் கேட்டு, கீழ்ப்படித லுடன் செவிசாய்க்க வேண்டும்.

a. பெருமை கீழ்ப்படிதலைத் தடுக்கிறது. 

நாம் கீழ்ப்படிதலுடன் செவிசாய்ப்பதற்குப் பெரிய இடையூ றாக இருப்பது பெருமை. ‘ஒவ் வொரு முறை நான் நோயாளிகளுக் காக ஜெபிக்க ஆயத்தமாகும்போ தும், மறுபடியுமாக என் பெருமை யைச் சிலுவையில் தொங்கவிட வேண்டியிருக்கிறது… ஏனென்றால் நான் ஜெபிப்பவர்களில் ஒருசிலரே குணமடைவார்கள் என்பதை அறி வேன்” என்று ஓரல் இராபர்ட்ஸ் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்.

சந்தேகம் கிளப்புகிறவர்களும், நிந்திப்பவர்களும், விமரிசனம் செய் யும் செய்தித்தாள் நிருபர்களும் தன் மனதைப் புண்படுத்தினாலும்கூட, தேவன் தான் செய்ய வேண்டு மென்று கூறியதைக் கேட்டு, தாழ்மை யுடன் அதைச் செய்ய ஓரல் இரா பர்ட்ஸ் கடுமையாக முயன்றார். அவ ரது அழைப்பு மற்றவர்களால் குறை சொல்லப்பட்டாலும்கூட அவர் அந்த அழைப்புக்கு உண்மையுள்ளவ ராக இருந்தபடியால்தான் ஆயிரக் கணக்கானோர் குணம்பெற்றிருக் கிறார்கள்; குணமாகுதலின் ஊழியம் பரவலாகப் பரவி வருகிறது.

நாம் தேவனுக்குக் கீழ்ப்படிந் தால் மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற அச்சத் தில் நம்மில் அநேகர் தேவன் நம்மி டம் கூறுவதைச் செய்யாமல் பின் வாங்குகிறோம். “மனுஷனுக்குப் பயப் படும் பயம் கண்ணியை வருவிக்கும்” (நீதி.29:35), “மனுஷனுக்குப் பயப்படும் பயம்” என்பது பெருமையின் மற் றொரு வெளிப்பாடாகும். அடிப் படையில் நாம் பெருமையின் காரண மாகவே நாம் என்ன செய்யவேண்டு மென்று தேவன் விரும்புகிறார் என்று அறிந்திருக்கிறோமோ அதைச் செய்யாமல் இருக்கிறோம்.

“தேவன் கூறுவதை நாம் செய்ய முயன்று அதில் தோற்றுவிட்டால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? என் போதக நண்பர்கள் என்னைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். தேவன் என்னிடம் செய்யும்படி கூறு வதை என் சபைப் பிரிவார் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்” என்று நமது மாம்சீகமான உள்ளம் சிந்திக் கிறது.

இந்தச் சிந்தனைகள் அனைத்துக் கும் அடிப்படை… மனிதருக்குப் பயப்படும் பயமே – பெருமையே! தேவனுடைய சித்தத்தைச் செய்ய வாஞ்சிக்கும் அநேகரும்கூட இந்தப் பயத்தின் காரணமாகவே பின்வாங்கு கிறார்கள்.

“சகோதரன் ரால்ப், தேவன் உங்க ளுடன் பேசுகிறார் என்ற நிச்சயத்தை எவ்வாறு பெறுகிறீர்கள்?” என்று அநேகர் என்னிடம் கேட்டிருக் கிறார்கள்.

“எப்போதுமே அந்த நிச்சயம் கிடைக்கும் என்று என்னால் கூற முடியாது. பல வேளைகளில் அந்த நிச்சயம் இல்லாதிருக்கலாம். ஆனால் நான் அதைச் சோதித்துப் பார்ப் பேன். அதோடு தொடர்புடைய மற்றவர்களோடு அந்த உண்மை களைச் சரிப்படுத்திப் பார்ப்பேன்.

“எல்லாவற்றையும் சோதித்துப் பார்க்கும்படி (1தெச. 5:21) வேதாகமம் நமக்குக் கட்டளையிடுகிறது. ஒரு காரியத்தை நிரூபிப்பதற்கு ஒரே வழி அதைச் சோதித்துப் பார்ப்பது தான். இந்தச் சோதனையில் நான் பெரும்பாலும் தோற்றுப் போகி றேன். என்றாலும் விசுவாசத்தின் ஓர் அம்சம் துணிகரமாக முயன்று பார்ப்பதுதானே! கிறிஸ்துவுக்காக முட்டாள் என்று பெயரெடுப்பதின் ‘துணிகர முயற்சி’ (risk) யையும் நாம் எடுத்துத்தானே ஆக வேண்டும்?” என்று நான் பதிலளித்தேன்.

பெருமை உங்களைச் செயலிழந்து போகச் செய்ய இடம்கொடாதிருங்கள். தேவன் நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறார் என்று நீங்கள் உணர்கி றீர்களோ அதைச் செய்ய முயலுங் கள். நீங்கள் ஒருசில தோல்விகளைப் பெற்றாலும்கூட, நிச்சயம் வெற்றிகளையும் பெறுவீர்கள். துணிகர முயற்சி எடுங்கள். விசுவாசத்தோடு காலெடுத்து வைத்து, கர்த்தருக்காகப் பெரிய காரியங்களைச்செய்ய முயலுங்கள்.

b. முன்னரே அபிப்பிராயம் கொள்வது கீழ்ப்படிதலுக்கு இடையூறாக இருக்கிறது. 

வேதாகமத்தின் சுவையான நிகழ்ச்சிகளில் ஒன்று 2இராஜாக்கள் 5ஆம் அதி காரத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. நாம் ஏற்கனவே அபிப்பிராயம் கொண்டிருப்பது எவ்வாறு தேவனு டைய குரலைக் கேட்பதற்கும், அதற்குக் கீழ்ப்படிவதற்கும் தடை யாக இருக்கிறது என்பதை இந்த நிகழ்ச்சி தெளிவாகச் சுட்டிக் காட்டு கிறது.

1) நாகமான் கிட்டத்தட்ட ஆசீர்வாதத்தை இழந்து போனான். 

நாகமான் ஒரு சிரியா நாட்டுத் தளபதி. போரில் பிடிக்கப் பட்ட ஒரு இஸ்ரவேல் சிறுமி அவன் வீட்டில் வேலைக்காரியாக இருந் தாள். நாகமான் குணப்படுத்த முடியாத தொழுநோயால் பீடிக்கப் பட்டிருந்தான். இஸ்ரவேலில் எலிசா என்ற தீர்க்கதரிசி இருப்பதையும், அவர் மக்களைக் குணமாக்கும்படி தேவனிடமிருந்து வல்லமை பெற்றி ருப்பதையும் அந்தச் சிறுமி தெரிவித்தாள்.

அரசுமுறைத் தொடர்புகளின் மூலம் நாகமான் இஸ்ரவேலின் அரச னோடு தொடர்புகொண்டு, எலிசா வைச் சந்திக்கச் செல்லும் ஏற்பாடு களை மேற்கொண்டான். நாகமான் எலிசாவின் எளிய வீட்டை நெருங் கியபோது, தேவன் நாகமான் என்ன செய்ய வேண்டுமென்று விரும்பு கிறார் என்பதை தீர்க்கதரிசி தன் வேலைக்காரனின்மூலம் அவனுக்குச் சொல்லியனுப்பினார்: “நீ போய், யோர் தானில் ஏழுதரம் ஸ்நானம் பண்ணு; அப்பொழுது உன் மாம்சம் மாறி, நீ சுத்தமாவாய்” (வச. 10).

அவ்வளவுதான்! கோபம் கொண்ட நாகமான் திரும்பிச் செல்லத் துவங்கினான். “அந்தத் தீர்க்கதரிசி வெளியே வந்து என்னைப் பார்க்கும் மரியாதை யாவது கொண்டிருப்பார் என்று நான் நினைத்திருந்தேன். அவர் தனது கடவுளாகிய தேவனின் பெயரைச் சொல்லி அழைத்து, என் நோயைத் தொடும்போது, நான் குணமடைவேன் என்று நினைத் திருந்தேன்” என்று அவன் கூறி னான் (தான் எவ்வாறு குணமாக்கப் படுவோம் என்று அவன் ஏற்கனவே கொண்டிருந்த அபிப்பிராயத்தைக் கவனியுங்கள்).

“ஆற்றில் குளிப்பதுதான் எனக்குத் தேவையென்றால் நான் சிரியாவுக்குத் திரும்பிச் சென்று ஆப்னா அல்லது பர்பார் நதிகளின் சுத்தமான தண்ணீரில் குளிப்பேனே! இந்தக் கலங்கலான யோர்தான் நதியில் ஏன் குளிக்க வேண்டும்?” என்று கோபத்துடன் கூறியபடி அவன் புறப்பட்டுவிட்டான்.

அப்போது அவனது வேலைக் காரர்கள் அவனிடம் கெஞ்சி னார்கள். “ஐயா, தீர்க்கதரிசி பெரிய கடினமான காரியங்களைச் செய்யும் படி கூறியிருந்தாலும் நீர் அதைச் செய்திருப்பீரே! இப்போது அவர் வெறுமனே குளித்துக் குணமாகு என்று சொல்லியிருக்கையில் அதற்குக் கீழ்ப்படிவது (முக்கியமான சொல்) கடினமான காரியமல்லவே!” என்று கேட்டுக் கொண்டார்கள்.

இவ்வாறு வற்புறுத்தப்பட்ட நாக மான் இறுதியில் யோர்தானில் இறங்கி, தீர்க்கதரிசி கூறியிருந்த படியே ஏழு தடவை மூழ்கி எழுந் தான். அவன் கீழ்ப்படிந்தபோது, அவன் மாம்சம் ஒரு சிறு பிள்ளை யின் மாம்சத்தைப் போல மாறியது. நாகமான் பூரண சுகமடைந்தான்.

நாகமான் கிட்டத்தட்ட தனக்கு வரவிருந்த ஆசீர்வாதத்தை இழந்து போகும் நிலையில் இருந்தான். ஏன் அப்படி? தேவன் எப்படித் தன்னைக் குணமாக்குவார் என்பது குறித்து அவன் முன்கூட்டியே ஒரு கருத்தைக் கொண்டிருந்ததுதான் காரணம். இந்த முன் அபிப்பிராயமும், அவனது பெருமையும் அவன் கீழ்ப் படிவதற்குத் தடைகளாக இருந்தன. முன் அபிப்பிராயம் பெருமை யில் வேர் கொண்டிருக்கிறது என் பதை நீங்கள் அறிய வேண்டும். “எனக்கு எல்லாமே தெரியும். காரி யம் நடக்குமுன்பே அது எப்படி நடக்குமென்பதை என்னால் நினைத்துப் பார்க்க முடியும்” (தானே கடவுள் என்ற கொள்கையைச் சேர்ந்த குணாதிசயம் இது) என்று அறிக்கையிடுவதுபோலவே இது காணப்படுகிறது.

எப்படி நடக்குமென்று நாம் மனதில் உருக்கொண்டு வைத்திருந் தோமோ, அந்தப்படியே காரியங்கள் நடக்காதபோது, அது நம்மைக் குறித்து நாமே கொண்டுள்ள பெருமையின் அடிப்படையிலான பிரதிமையைப் பாதிக்கிறது; எனவே நாமும் நாகமானைப் போல கோபத் தில் வெளியேறுகிறோம்; தேவன் எவ்வாறு நடந்து கொள்ளுவார் என்ற நமது முன்னபிப்பிராயத்தின் படி அவர் நடந்து கொள்ளாததால் கசப்படைகிறோம்.

2) உங்கள் வாழ்க்கைக்கான தேவனுடைய ஒழுங்கு. 

நமது வாழ்க்கையில் ஆவியானவருடைய வழிநடத்துதலோடுகூட நமது இறை யியல் கருத்துக்கள் (இவையும் தேவனைப் பற்றிய முன் அபிப் பிராயங்களே) அடிக்கடி முரண்படு கின்றன; அப்படிப்பட்ட வேளை களில் நாம் தேவனுடைய சித் தத்தைத் தவறவிடும் அபாயத்தைச் சந்திக்கிறோம்.

நான் ஒரு நாடோடிப் பிரசங்கி யராக ஊழியம் செய்ய வேண்டு மென்று தேவன் என்னைத் தீவிர மாக அழுத்தத் துவங்கியபோது, நான் பிடிவாதத்தோடு அதை எதிர்த் தேன். பதினொரு ஆண்டுகளாக நான் புதிய சபைகளைத் துவக்கி, போதகராக இருந்து வந்தேன்.

இப்போது இந்த உள்ளூர் சபை களுக்குப் போதகராக இருக்கும் பொறுப்பை விட்டுவிட்டுச் சுற்றித் திரிந்து நற்செய்தி அறிவிக்கும்படி தேவன் என்னை வற்புறுத்திக் கொண்டிருந்தார்.

“தேவனே, இது வேத வசனத்தின் படியானதல்ல. நாம் எதைச் செய் தாலும் அல்லது எதைச் செய்யப் போவதாக இருந்தாலும், உள்ளூர் சபையின் வழியாகவே அதைச் செய்ய வேண்டும்” என்று நான் வாதிட்டேன். அப்போதைய எனது இறையியல் கருத்து அதுவாகவே இருந்தது. “சுற்றித் திரிந்து பிரசங் கிப்பது என்பது அப்போஸ்தல நடபடிகளின் ஒழுங்கின்படி காணப் படவில்லை. நான் அனைத்தையும் இந்த ஒழுங்கின்படி செய்யவே எதிர் பார்க்கப்படுகிறேன்” என்று கூறி நான் என் எதிர்ப்பைத் தெரிவித் தேன். (எபிரெயர் 8:5 வசனம் எனக்கு விருப்பமான வசனமாக இருந்தது).

ஒரு ஞாயிறு காலை. நான் ஒரு கூட்டத்தில் பிரசங்கம் செய்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்த போது தேவன் என்னோடு பேசி னார்:

“நீ ஏன் அந்த வசனத்தின் எஞ் சிய பகுதியை வாசிக்கக் கூடாது?” தேவன் எதைக் குறிப்பிடுகிறார் என் பதை நான் உணர்ந்தேன். எபிரெயர் 8:5 வசனத்தின் எஞ்சிய பகுதியை வாசிக்கும்படி அவர் கூறினார்.

“தேவனே, நான் ஏன் இந்த வசனத்தின் எஞ்சிய பகுதியை வாசிக்க வேண்டும்? நான் இதை நூற்றுக்கணக்கான தடவைகள் வாசித்திருக்கிறேன். பலமுறை இதைக் கொண்டு பிரசங்கித்துமிருக் கிறேன். இந்த வசனத்தைத் தலை கீழாகச் சொல்லக்கூட என்னால் முடியும். நான் ஏன் இந்த வசனத்தின் எஞ்சிய பகுதியை வாசிக்க வேண்டும்?”

“அந்த வசனத்தின் எஞ்சிய பகுதியை வாசி” என்று எனக்குள் தேவனுடைய குரல் தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டிருந்தது.நான் என் வேதாகமத்தைத் திறந்து, …மலையிலே உனக்குக் காண்பிக்கப் பட்ட மாதிரியின்படியே எல்லாவற்றை யும் செய்ய எச்சரிக்கையாயிரு” (எபி. 8:5 பின்பகுதி) என்று வாசித்தேன். “உனக்குக் காண்பிக்கப்பட்ட” என்ற சொற்றொடர் என்னை நேரடி யாகத் தாக்கியது.

“உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரி யின்படியே எல்லாவற்றையும் செய்”.

மோசேக்கும் தாவீதுக்கும், துவக்க காலத் திருச்சபைக்கும் காண் பிக்கப்பட்ட மாதிரியே எனது இறையியல் கொள்கையின் அடிப் படையாக இருந்தது. ஆனால் தேவனோ என்னிடம் இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்தார்:

“நான் உனக்குக் காண்பிக்கிற படியேதான் நீ செய்ய வேண்டும். நோவாவுக்குரிய எனது ஒழுங்கின் மாதிரியின்படி அவன் பேழையை உருவாக்கினான். மோசேக்குரிய என் மாதிரியாக அது இருந்தபடியால் அவன் ஆசரிப்புக் கூடாரத்தை அமைத்தான். நான் அவனிடம் கூறிய படியால் சாலொமோன் ஆல் யத்தைக் கட்டினான். பேதுரு, பவுல், யாக்கோபு, யோவான் ஒவ்வொரு வரும் நான் அவர்களுக்குக் கூறிய படியே செய்தார்கள். அவர்களது வாழ்க்கைக்கான எனது ஒழுங்கு அதுவே.

“நான் எதைச் செய்யச் சொல்லு கிறேனோ, அதை எப்படிச் செய்ய வேண்டுமென்று கூறுகிறேனோ அதை அப்படியே செய்ய வேண்டும். உனது வாழ்க்கைக்கான எனது ஒழுங்கு இதுவே” என்று திட்ட வட்டமாகக் கூறினார்.

இறுதியாக நான் புரிந்து கொண் டேன். நான் தேவனுடைய குரலைக் கேட்டு அதற்குக் கீழ்ப்படிய வேண்டும். “முன்பு எப்போதுமே இந்த வழியில்தான் செய்யப் பட்டது” என்பதினால் மட்டுமே காரியங்களை அப்படியே செய்ய முடியாது. நான் தேவனுக்கே கீழ்ப் படிய வேண்டியிருந்தது.

என் நண்பனே, இதுவே இன்றும் பிரச்சினையாக இருக்கிற தல்லவா? தேவன் நம் ஒவ்வொரு வருக்கும் தனிப்பட்ட திட்டம் வைத்திருக்கிறார். தேவன் பில்லி கிரகாமுக்கு அளித்த ஊழியம் யோவான்ஸ்நானனுக்கு அளித்த ஊழியத்தைப் போன்றது; “யோவான் ஒரு அற்புதத்தையும் செய்யவில்லை” (யோவான் 10:41). கென்னத் ஹாகின், ஓரல் இராபர்ட்ஸ் போன்றவர்கள் ஸ்தேவானைப் போன்று இருக்கி றார்கள்; “ஸ்தேவான்… ஜனங்களுக் குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்” (அப். 6:8).

இந்த மூன்று மாபெரும் நற் செய்தியாளர்களும் தேவன் அவர் கள் செய்யுமாறு கூறியதையே செய்து கொண்டிருக்கிறார்கள்

என்றாலும் ஒவ்வொருவரும் மற்ற வர்களைவிட வேறுபட்டிருக்கிறார்கள். நம்மில் ஒவ்வொருவரும் தேவனுடைய குரலைக் கேட்டு அதற்குக் கீழ்ப்படிய வேண்டும். இதுவே அப்படிச் செய்யாத ஆயிரக் கணக்கானவர்களிலிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டுகிறது. அநேகர் தேவனுடைய குரலைக் கேட்கவும் மாட்டார்கள்; அதற்குக் கீழ்ப்படிய வும் மாட்டார்கள். ஆனால் நீங்கள் கண்டிப்பாக இதைச் செய்தே ஆக வேண்டும்!

தேவன் கூறியபடி நீங்கள் செய் வதற்குப் பாரம்பரியம் தடையாக இருக்க இடம் கொடாதிருங்கள். தேவனுடைய குரலைக் கேட்டு அதற்குக் கீழ்ப்படியுங்கள். சிலர் உங்களை வெறுக்கலாம். எதிர்க்க லாம், குறை கூறலாம். வேறு பலர் உங்கள் மீது ஐயம் உங்களைத் தாக்கலாம். கொண்டு உங்கள் பெருமை பாதிக்கப்படலாம். எப்படி யிருப்பினும், தேவனுடைய சித் தத்தைச் செய்யுங்கள்.

3) கூஷான் தீவில் ஏற்பட்ட அனுபவம். 

ஜெய்ஜியாங்கின் கிழக்குக் கடற்கரைக்குச் சற்றுத் தொலைவிலிருந்த ஒரு சிறு தீவில் நற்செய்தி அறிவிக்கும்படி 1962இல் நானும் மற்றொருவரும் முயற்சி மேற் கொண்டோம். மூன்று ஆண்டு களுக்கு முன்னர் நான் நடத்தி யிருந்த கூட்டங்களில் கலந்து கொண்டு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டிருந்த ஒருவர் எங்களுக்கு முன்பே அந்தத் தீவுக்குச் சென்று, ஒரு சபையைத் துவக்கியிருந்தார்.

நற்செய்தியாளர்களின் பாரம்பரிய வழக்கப்படி நான் தொடர்ந்து பல இரவுகள் இடைவிடாமல் பிரசங்கம் செய்தேன்; எந்தவொரு நபருமே கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளவில்லை. எனது உடன் பணியாளரும் நானும் சோர்வுற்று மனந்தளர்ந்து போயிருந்தபடியால், ஒவ்வொரு நாள் காலை நான்கு மணியளவில் ஜெபக் கூட்டம் நடை பெறுமென்று அறிக்கை செய்தோம். இதன்மூலம், உறுப்பினர்கள் காலை வேளையில் மீன்பிடிக்கவோ, பழங் களைச் சேகரிக்கவோ செல்வதற்கு முன்பு அவர்களோடு சேர்ந்து எங்க ளால் ஜெபிக்க முடிந்தது.

பத்து அல்லது பன்னிரெண்டு சபை உறுப்பினர்களே வருவார் களென்று நாங்கள் எதிர்பார்த்திருந் தோம். ஆனால் 100க்கு மேற்பட்ட வர்கள் கூடிவந்து, அந்தச் சிறு ஆலயம் நிறைந்து வழிந்ததைக் கண்டு வியப்படைந்தோம் (இரவு நேரக் கூட்டங்களில் கூட இந்த எண்ணிக்கையினரே கூடிவந்தார்கள்).

காலை நான்கு மணிக்கு நற் செய்திக் கூட்டங்கள் நடத்தப் படுவது பாரம்பரிய வழக்கமல்ல என்பதை நாமறிவோம்; ஆனால் அந்தக் கூட்டம் ஓர் எழுப்புதல் கூட்டமாகவே உருமாறிக்கொண் டிருந்தது. தேவன் எந்த வழியில் கிரியை செய்கிறார் என்பது குறித்த எனது முன் அபிப்பிராயங்களை தேவன் சிதைத்துப் போட்டு, அவரது குரலைக் கேட்டு அதற்குக் கீழ்ப்படிவது பற்றிய ஒரு பாடத்தை

எனக்குக் கற்றுக் கொடுக்கவிருந்தார். ஒரு சிறிய கோரஸ் பாடலோடு நாங்கள் ஜெபவேளையைத் துவக்கினோம்:

என் ஆத்துமாவைச் சுத்தமாக்கும்,

என் ஆத்துமாவைச் சுத்தமாக்கும்.

அன்பான ஆவியானவரே,

என் ஆத்துமாவைச் சுத்தமாக்கும் நான் அவரது பாதபடியில் அமர்ந்திருக்கும்போது என் இளைப்பாறுதல் முழுமையானது

அன்பான ஆவியானவரே, என் ஆத்துமாவை அசைவாட்டும். 

ஒன்று அல்லது இரு முறை சிரமப்பட்டு இந்தப் பாடலைப் பாடியபிறகு ஒரு பெண்மணி தீர்க்க தரிசனம் கூறத் துவங்கினாள். தட்டுத் தடுமாறியபடி அவள் பேச்சு வெளி வந்தது. வார்த்தைகளை வெளிப்படு வதில் அதிகம் சிரமம் இருப்பது போல அவள் திக்கித் திணறினாள். அது என்னைப் பதற்றமடையச் செய்தது; என்றாலும் அவள் முயற்சி செய்யட்டும், அதில் தவ றொன்றுமில்லை’ என்ற எண் ணத்தில் அமைதியாக இருந்தேன்.

மூன்று முறை அவள் இந்த வார்த்தைகளைத் திரும்பத் திரும்பக் கூறினாள்: “உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப் போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி.” அந்த நேரத்துக்கு சற்றும் பொருத்தமற்றது போன்று தோற்றமளிக்கும் சொற் களைத் திக்கித் திணறியபடி கூறிய அந்தப் பெண்மணியின் குரலையே நான் கேட்டேன்; அவளுக்காகப் பரிதாபப்பட்டேன்.

ஆனால் என் உடன் ஊழியரான சகோதரன் ஹீலி முற்றிலும் மாறு பட்ட வார்த்தைகளைக் கேட்டார். பாவிகளை மனந்திரும்பும்படி அழைக்கும் பரிசுத்த ஆவியானவரின் குரலை அவர் கேட்டார். (என்னை விட அவருடைய ஆவிக்குரிய கேட்கும் திறன் சிறப்பாக இருந்தது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்).

அவர் எழுந்து மென்மையான குரலில் பேசத்துவங்கினார். “நண்பர் களே, தேவன் தற்போது நம்மோடு பேசியிருப்பதாக நான் விசுவாசிக் கிறேன்; நாம் அதற்குச் செவிசாய்க்க வேண்டும். தேவன்.வார்த்தைக்கு வார்த்தை நமது பாதரட்சைகளைக் கழற்றிப் போடச் சொல்லுகிறாரா அல்லது வேறு அர்த்தம் உண்டா என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியாது; என்றாலும் நாம் நமது பாதரட்சைகளை கழற்றிப் போடு வதில் ஆபத்தொன்றும் இல்லையே!” என்று கேட்டுக் கொண்டார்.

மடமையாகத் தோன்றினாலும் கூட நாங்கள் எங்கள் காலணிகளை உடனடியாகக் கழற்றிப் போட் டோம். சகோதரன் ஹீஸி தொடர்ந்து, “தேவன் அர்த்தம் கொள்ளுவது இதுவாகத்தான் இருக்க வேண்டும். நாம் நமது பாவ வாழ்க்கையெனும் பழைய காலணி களைக் கழற்றிப் போட்டுவிட்டு, நீதியான வாழ்க்கையெனும் புதிய பாதரட்சையைத் தரித்துக் கொள்ள வேண்டும். அடிமைத்தனமும், கலகக் குணமுமுள்ள பழைய வாழ்க்கையை உதறிப் போட்டுவிட்டு, விடுதலை மற்றும் இயேசுவுக்குக் கீழ்ப்படியும் குணமுள்ள புதிய வாழ்க்கையில் காலடி எடுத்துவைக்க வேண்டும்.

“இப்போதே இதை நீங்கள் செய்ய விரும்பினால் உங்கள் காலணி களைப் பின்னால் விட்டு விட்டு, இங்கே முன்னால் வாருங்கள்; நாம் ஒன்றாக ஜெபிப்போம்” என்று அழைத்தார்.

எனது “ஊட்டமுள்ள நற் செய்திப் பிரசங்கங்களால்” சாதிக்க முடியாததை, சகோதரன் ஹீலியின் ஆவிக்குரிய கேட்கும் உணர்வும், தேவனுடைய குரலுக்குச் செவி சாய்ப்பதும் சாதிப்பதை நான் அங்கே கண்டு வியப்படைந்து நின்றேன். அந்தச் சிறு கட்டிடத்தில் ஒவ்வொரு மூலையிலிருந்தும் மக்கள் முன்னால் வரத் துவங்கி னார்கள். அப்போது அதுவரை நான் கண்டிராத அற்புதமான காரிய மொன்று நிகழ்ந்தது.

அவர்கள் முன்னேறியபோது, முன்னால் கண்ணுக்குத் தெரியாத கோடொன்று போடப்பட்டிருந்தது போலத் தோன்றியது. கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்படி முன்னால் வந்தவர்கள் அந்தக் கோட்டைக் கடந்தபோது, கண்ணுக்குத் தெரி யாத தேவதூதனால் தாக்கப்பட்டது போல முகங்குப்புற விழுந்தார்கள். விருப்பு வெறுப்பற்ற கடினமான இருதயத்தைக் கொண்டிருந்த அந்த விவசாயிகளும், மீனவர்களும் அழுது துடித்தபடி தரையில் கிடந்ததைக் காண வியப்பாக இருந்தது. நொறுங் குண்ட இருதயத்தோடு அவர்கள் தங்கள் பாவங்களைக் குறித்து மெய்மனஸ்தாபப்பட்டுக் கொண் டிருந்தார்கள்.

முன்னால் சென்றவர்கள் கீழே விழுவதைக் கண்டவுடன், மற்றவர் கள் பயந்து திரும்பி வெளியே ஓடி விடுவார்கள் என்று நான் நினைத்தேன்.

ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. அந்த ஆராதனை யில் கூடியிருந்த பாவியான ஒவ்வொருவரும் முன்னால் வந்து, மனந்திரும்பி, இரட்சிப்பின் ஈவைப் பெற்றுக் கொள்ளும்வரை அவர்கள் முன்னால் வந்துகொண்டிருந்தார் கள்; அன்று ஐம்பதுக்கும் மேற்பட் டோர் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டார்கள்.

என்னே வியப்பு! இந்த வகையில் ஆத்துமாக்கள் ஆதாயப்படுத்தப் படுவதை எவரேனும் கேள்விப்பட் டிருப்பார்களா? இத்தகைய நற் செய்தி “வழிமுறை” பற்றிக் கேள்விப் பட்டவர் யார்? ஆனால், “ஆவியான வர் கூறுவதற்குச் செவிமடுத்துக் கேட்பதிலேயே” இந்த இரகசியம் அடங்கியுள்ளது என்பதைக் கவனி யுங்கள்.

அந்த ஆராதனையில் நிகழ் வதைக் குறித்த குறித்த ஆவியானவரின் குரலை நான் கேட்கத் தவறியிருந் தேன் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வெட்கத்துடன் வேண்டும். ஆனால், கர்த்தருக்கு நன்றி, என் உடன் பணியாளர் அதைக் கேட் டார்! அவர் தேவனுக்குக் கீழ்ப்படிந் தார். மாபெரும் எழுப்புதல் அந்தச் சிறு தீவை ஒரு முனை துவக்கி மறுமுனைவரை அசைத்தது.

அன்பான தேவனே, உமது குரலைக் கேட்கவும் அதற்குக் கீழ்ப்படியவும் என்னைத் தடுக்கும் எனது கீழ்ப்ப டியாமை, முன் அபிப்பிராயங்கள், பாரம் பரியங்கள் மற்றும் இருதயத்தின் கடினத்திலிருந்து என்னை விடுவியும், ஆமென்!

[su_button id=”download” url=”https://www.mediafire.com/download/mbks8egtbkt4iyg” target=”blank” style=”3d” size=”7″ wide=”yes” center=”yes” radius=”round” icon=”icon: download”]Download PDF Now[/su_button]

Leave a Reply