பரிசுத்த வாரம் தரும் ஜெபப் பாடங்கள்
கிறிஸ்து சிலுவையிலறையப்பட்டதும் மரித்ததும் ஒரு போராட்டம் (warfare) ஆகும்
- எபே 2:14-16… பிரிவினைச் சுவரைத் தகர்க்க …
- கொலோ 2:14-15 . அதிகாரங்களை உரிந்துகொள்ள …
- தீத்து 2:14-15 அக்கிரமங்களிலிருந்து நம்மை மீட்க …
- எபி 2:14-15 பிசாசானவனை அழிக்க .
போராட்டத்தில் மோதியவை
- தேவனும் சாத்தானும்
- நல்லதும் தீயதும்
- பெண்ணின் வித்தும் சர்ப்பத்தின் வித்தும்
- பரலோகமும் நரலோகமும்
- ஆவியும் மாம்சமும்
- சத்தியமும் பாரம்பரியமும்
- இறையரசும் இவ்வுலகும்
இயேசுவின் உடல்தான் போர்க்களம்
சங் 129:3… என் முதுகின்மேல் உழுது…
குழந்தை இயேசுவைக் கரங்களில் ஏந்திக்கொண்டு மரியாளிடம் சிமியோன் சொன்னது இதுவே
- “ஒரு பட்டயம் உன் ஆத்துமாவை உருவும்” (லூக் 2:35)
இப்போராட்டத்தில் இயேசுவின் முக்கிய போராயுதம்: ஜெபம்
- கெத்செமனேக்குள் நுழைவதற்கு முன்னர் ஒரு நீண்ட ஜெபம் செய்தார் (யோ 17 & 18:1)
- கெத்செமனேக்குள் நுழைந்த பின்னர் ஒரு சத்த ஜெபம் செய்தார் (மத் 26:36)
நமக்கும் இப்போராட்டம் உண்டா?
- ஆம்! பச்சை மரம் VS. பட்ட மரம் (லூக் 23:31) – வான மண்டலங்களில்…. (எபே 6:12)
- எபே 6:13-17இலுள்ள போராயுதங்களைப் பயன்படுத்தும் திறனைத் தருவது ஜெபமே (வச 18).
- ஜெபம் என்பது நமது வாழ்வின் வாடிக்கையாகிவிடவேண்டும் – – அவசரத்திற்கு அழைப்பு அல்ல!
உதாரணம்:
ஒரு சிறுவன் கூரையில் வழுக்கினான். “தேவனே, காப்பாற்றும்” என்று கதறினான். ஒரு சில நிமிடத்தில் ஆணியொன்றில் மாட்டிக்கொண்டபோது சொன்னான்:
“பரவாயில்லை, பத்திரமாகத்தானிருக்கிறேன்!” அவசர உதவிக்கே ஆண்டவர் எனும் எண்ணம்.
வெற்றியுள்ள ஜெப வாழ்வுக்கு ஏழு உறுதுணைகள்:
1. விசுவாசம் (Faith)
- மாற் 11:20-24 அத்தி மரத்தைச் சபித்தது
- மரத்துக்கு ஆண்டவர் செய்ததை மலைக்கு நாம் செய்யலாம்!
- “விசுவாசிக்கிறவன்… இன்னும் பெரிய காரியங்கள்” (யோ 14:12)
- மலை = பிரச்னைகள், தடைகள்
- நமது மிகப்பெரிய பிரச்னையைவிடத் தேவன் மிகப் பெரியவர்!
- கானானுக்குச் சென்ற வேவுகாரர்
- இராட்சதர்கள் … வெட்டுக்கிளிகள் … தேவன் (எண் 13:28-33)
- வேதத்தின் தேவனை அறிந்துகொள்ள வேதத்தைத் திரும்பத் திரும்ப வாசியுங்கள்.
- ஜெபத்திற்கு விசுவாசம் தேவை… விசுவாசத்திற்கு ஜெபம் தேவை!
- எ.கா.) பேதுருவின் விசுவாசத்திற்காய் இயேசு ஜெபித்தார் (லூக் 22:32)
2. மன்னிப்பு (Forgiveness)
- மாற் 11:25,26 (விசுவாசத்தைப்பற்றிப் போதித்தவுடன்)
- கர்த்தருடைய ஜெபத்தில் நிபந்தனையோடுள்ள ஒரே வேண்டல் “மன்னிப்பைக்” குறித்தது (மத் 6:12)
- “குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு ஜெபம்’ (யாக் 5:16)
- சிலுவையிலிருந்து இயேசு ஏறெடுத்த இரு ஜெபங்களில் முதலாவது “பிதாவே, இவர்களை மன்னியும்”.
- ஒப்புரவாகவேண்டிய நபர்களைப் பட்டியலிடுங்கள். பிறர் பாவங்களை மன்னியாவிடில் நமது பாவங்களும் மன்னிக்கப்படாது.
- எவருக்கும் விரோதமாக வைராக்கியத்தையும் கசப்பையும் பேணிவைப்பது நமக்குத்தான் கேடு.
3.விழித்திருப்பு (Watchfulness)
- = கவனம், தெளிவு, கரிசனை
- x கவலையீனம், ஏனோதானோ எனும் சிந்தை – மத் 26:41…
- விழித்திருங்கள்… ஜெபியுங்கள்… அதாவது, அவசரப்படாமல்
- “ஒரு மணி நேரமாவது” ஜெபம் (வச 40) பயிற்சியினாலேயே இது சாத்தியம் (யோ 18:2)
- இது சுலபமல்ல (மத் 26:41 … உற்சாக ஆவி x பலவீன மாம்சம்)
உங்கள் வாழ்வில் ஜெப மணி நேரம் உண்டா?
அப் 3:1 (9ஆம் மணி = பிற்பகல் 3 மணி) யோவான் ஒரே நாளில் 3000 பேர் சபையில் சேர்ந்தார்களே, எவ்வளவு வேலை இருந்திருக்கும்!
அ) ஜெபத்தில் பாவனை (Posture)
இதுவும் விழிப்புக்கு முக்கியமானது.
- படுத்துக்கொண்டு ஜெபிப்பது
- கால் மேல் கால் போட்டு ஜெபிப்பது
- முழங்காலிடுங்கள்!
- “முகங்குப்புற விழுந்து” ஜெபித்தார் (மத் 26:39)
ஆ) ஜெபத்திற்கு இடம் (Place) – –
ஜெபமென்றால் தேவனோடு இடைபடுதலாம்.
விழிப்பாயிருக்கவேண்டியதேன்?
- தேவன் உங்களோடு பேசுவார்!
- இயேசு “உன் அறையைப் பூட்டி …” (மத் 6:6)
- கைபேசியை அணைத்துவிடுங்கள்.
4.ஒப்புக்கொடுத்தல்/அர்ப்பணித்தல் (Yieldedness)
- மத் 26:39,42,44… உமது சித்தம் செய்யப்படுவதாக…. ஒப்புக்கொடுத்த பின்னரே பலம் வருகிறது (லூக் 22:42,43)
- முதலாம் ஆதாம் ஒரு தோட்டத்தில் தோற்றான்; இரண்டாம் ஆதாம் ஒரு தோட்டத்தில் வென்றார்.
- அன்று, அங்கு, சாப்பிடுவதற்குச் சோதனை; இன்று, இங்கு, குடிக்காமலிருப்பதற்குச் சோதனை.
- கிறிஸ்துவின் இறுதி வார்த்தைகள் அர்ப்பணிக்கவே “பிதாவே, உமது கைகளில் …”
- தேவனது கரங்களில் விழுவதே மேலானது, பாதுகாப்பானது.
- கடினமாயிருந்தாலும் தேவனது சித்தம், தேவனது வழிதான் மேல்
- 1 யோ 5:14 . நம்பிக்கை … தேவ சித்தம் …
- திருவசனமே திருச்சித்தம்.
- திருவசனத்தால் நிறைந்திருங்கள்.
- எஸ்றா – நெகேமியா – நெகே 9:3
- 6 மணி நேரம் + 6 மணி நேரம்
- விருப்பு வெறுப்புகளுக்காவே ஜெபம் என்பது தவறு (யாக் 4:3,4)
உதாரணம்: ஒரு சிறுவனின் ஜெபம்
- “ஆண்டவரே, கல்கத்தாவை மஹாராஷ்டிராவின் தலைநகராக்கும்; அப்படித்தான் புவியியல் பரீட்சையில் எழுதியிருக்கிறேன்!”
- நமது விருப்பத்திற்கேற்ப தேவ சித்தத்தை மாற்ற அல்ல, அவரது சித்தத்திற்கேற்ப நமது விருப்பங்களை மாற்றவே ஜெபம்!
5. கண்ணீர் / நொறுங்கியிருத்தல் (Contriteness)
- உங்களுக்காக, உங்கள் பிள்ளைகளுக்காக அழுங்கள் லூக் 23:26-28…
- இயேசுவின் கண்ணீர் … எபி 5:7
- பவுலின் கண்ணீர்… அப் 20:19,31
- தீமோத்தேயுவின் கண்ணீர் 2 தீமோ 1:3
பவுல் இதை இயேசுவிடம் கற்றார்; தீமோத்தேயு பவுலிடம் கற்றான். நீங்கள் கண்ணீரோடு ஜெபிக்கக் கற்றுவிட்டீர்களா?
- கண்ணீர் இல்லாவிடில் கலக்கம்தான்!
- தேவனுக்குமுன் விழுந்து கிடப்பவன் மனிதருக்குமுன் நிமிர்ந்து நிற்பான்!
- கண்ணீர் சிந்துவோருக்கே வெற்றி!
- நெகேமியா அழுதான் …
- எஸ்றா அழுதான் …
- எஸ்தர் அழுதாள்
- தேவனது பார்வையில் கண்ணீர் அருமையானது (சங் 56:8)
- புத்தகத்தில் ஜெபங்கள்
- புட்டியில் கண்ணீர்
- ஊழியத்தில் கனியில்லையே என்று விரக்தியடைந்திருந்த உடன் ஊழியருக்கு வில்லியம் பூத்: ‘அழுது பாருங்கள்!” “Try tears!”
- உங்கள் பிள்ளைகளுக்காய்க் கண்ணீருடன் ஜெபியுங்கள் –
- “உன் பிள்ளைகளுக்காய்க் கண்ணீர் விடு’ (புல 2:18,19)
- நமது பிள்ளைகளின் காலம் நமதைவிடக் கொடியதாயிருக்கும்.
6. தனிமை/இருட்டு (Loneliness/Darkness)
- தனித்திருப்பது ஜெபத்திற்கு இன்றியமையாதது
- 70… 12…. 3… தனித்து! (மத் 26:36-39)
- மாற் 15:33,34 அந்தகாரம் என் தேவனே, என் தேவனே… இதுவே சிலுவையிலிருந்து வந்த மத்தியக் கதறல்.
- இரகசிய ஜெபமே ஜெபத்தின் இரகசியம்.
- இருட்டு வேளைகள் வரத்தான் செய்யும் (ஏசா 50:10)
7. தைரியம் (Boldness)
- மாற் 15:37,38… தேவாலயத் திரைச்சீலை கிழிந்தது
- எபி 4:14-16; 6:19,20 மகா பரிசுத்த தலத்திற்குத் திறந்த வழி
- மரியாளோ, ஊழியரோ, நடுவராய்ச் செயலாற்ற வேண்டியதில்லை.
- தந்தையிடம் மகன் கேட்பதுபோல் ஜெபியுங்கள் (மத் 7:7-11)
- “அப்பா, பிதாவே’ (ரோ 8:15)
- பிதாவை நோக்கி, இயேசுவின் மூலம்!
- இன்று ”கிருபையின்” ஆசனத்தருகே தரித்திருப்போம்; நாளை “மகிமையின்” ஆசனத்தில் பங்குபெறுவோம்.
- “ஜெபமே ஜெயம்” என்ற சுவர் வாசகம் அப்பொழுதுதான் முழுமையாகப் புரியும்!
- ஜெபமே ஜீவன், ஜெபம் ஜெயம், ஜீவியத்திற்கு இதுவே சட்டம்!