இதன் pdf file கீழே கொடுக்கப்பட்டுள்ளது
ஞானஸ்நானம்
1. பேச்சு வழக்கில் இருந்த கிரேக்கமொழி
பேச்சு வழக்கில் இருந்த கிரேக்கமொழியில் “ஞான்ஸ்நானம்” என்ற சொல் வழக்கச்சொல்லாக இருந்து வந்தது. (350 கி.மு)
a) ஆங்கில மொழியில் இப்பதம், ‘பாப்டிஜோ’ என்ற கிரேக்கச்சொல்லில் இருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது, இதன் மூல மொழியின் அர்த்தம், அடையாளம் கண்டுகொள்ளுதல். இச்சொல்லை கிரேக்க கவிஞர்கள், நாடக எழுத்தாளர்கள், சரித்திர வல்லுநர்கள் தங்களது காவியங்களில் பயன்படுத்தினர். பொதுவாக சரித்திர வல்லுனர்கள் இப்பதத்தினை, ஓர் பொருள் இரண்டாம் பொருளுடன் சேர்ந்து தனது இயல்பான தன்மை, குணங்கள் மாற்றப்படுவதை வருணிக்க இப்பதத்தை பயன்படுத்தினர்.
b) உதாரணமாக சென்பன் ( கி.மு நான்காம் நூற்றாண்டு) என்பவர், ஸ்பார்ட்டன் யுத்த வீரர்கள், யுத்தத்திற்குச் செல்லுமுன்னார், தங்களது ஈட்டியை பன்றியின் இரத்தத்தில் தோய்த்து எடுத்துச்செல்வார்களாம். இதன் பொருள் தங்களது ஈட்டி, வேட்டையாட பயன்பட்டதிலிருந்து, யுத்தித்திற்கு பயன்படப்போகிற தன்மை படைத்ததாய் மாறிவிட்டது என்பதைக்காட்ட, இப்படி செய்வார்கள் எனக்கூறுகிறார்,.
c) யூரிப்பெடஸ் ( கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு ) இச்சொல்லை கடலில் மூழ்கும் கப்பலை விவரிக்கப் பயன்படுத்துகிறார். கப்பல் மூழ்க, மூழ்க அதன் தன்மை, குணங்கள் மாறுகின்றன. இப்பொழுது கப்பலை அடையாளம் கண்டுகொள்வோமென்றால், அது மிதக்கும் தன்மை மாறி, உடைந்துபோய் மூழ்கும் தன்மையை பெற்றுள்ளது. மூழ்குதல் என்ற பதம் ஞானஸ்நானம் ( ) என்கிற சொல்லாக பயன்படுத்தினர்.
2. பேச்சு வழக்கு கிரேக்க மொழியில் இதன் பொருள்:
a) வினைச்சொல்: “பாப்டோ” தண்ணீரில் முழுகச்செய் (லூக்கா 13:26, லூக்கா 16:24)
(b) வினைச்சொல்: “பாப்டிஜோ” தண்ணீரில் முழுகச்செய், தண்ணீரில் மூழ்கு, கழுவி சுத்தம் செய்,
c) பெயர்ச்சொல்: “பாப்டிஸ்மாஸ்” பாத்திரங்களை கழுவுதல், (மாற்கு 74) ஞானஸ்நானத்தின் உபதேசம் (எபிரெயர் 6:2)
d) பெயர்ச்சொல்: “பாப்டிஸ்மா” ஞானஸ்நான சடங்கு (மத்தேயு 3:7, 21:25) ஆவிக்குரிய ஞானஸ்நானம் (ரோமர் 6:4) இரத்தசாட்சியின் ஒப்புமை (மாற்கு 10:38, லூக்கா 12:50)
e) பெயர்ச்சொல்: பாப்டிஸ்டஸ்: யோவான் ஸ்நானகனைப்போல, ஞானஸ்நானம் கொடுப்பவர் (மத்தேயு 3:1, 11:11, மாற்கு 6:25)
3.மெய்யான ஞானஸ்நானங்கள்
மெய்யான ஞானஸ்நானங்கள் உண்மையான நிலையில் அடையாளம் கண்டுகொள்ளப்படுதல் –
மெய்யான ஒன்றுடன், ஒரு நபர் அடையாளம் கண்டுகொள்ளப்படுதல். இவைகள் உலர்ந்த ஞானஸ்நானம். இப்படிப்பட்ட ஞானஸ்நானத்திற்கு தண்ணீர் அவசியமற்றது. நான்கு மெய்யான ஞானஸ்நானங்கள் இருக்கின்றன.
A.மோசேயின் ஞானஸ்நானம்:
இது செங்கடலில் இஸ்ரவேல் மக்களின், இரட்டிப்பான நிலையில், அடையாளம் கண்டுகொள்ளப்படுதலை குறிக்கிறது. (1 கொரிந்தியர் 10:2)
அ) மோசேயுடன் –
இது மோசேயின் விசுவாசத்தில், தலமைத்துவத்தில், விடுதலையில் இஸ்ரவேல் ஜனங்கள் அடையாளம் கண்டுகொள்ளப்படுகின்றனர். “மோசேக்குள்ளாக” ஜெயமடைந்தனர்.
ஆ) மேகங்களுடன் –
இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுடன் (மேகத்துடன்) அடையாளம் கண்டுகொள்ளப்படுகின்றனர். அவர் இஸ்ரவேல் ஜனங்களை செங்கடலின் நடுவே உலர்ந்த தரை வழியே நடக்கப்பண்ணி, அவர்களைப் பின்தொடர்ந்த அவர்களது சத்துருக்களை செங்கடலில் அழித்துப்போட்டார். அவர்கள் “தேவனுக்குள்ளாக” ஜெயமடைந்தனர்.
B. அக்கினியின் ஞான்ஸ்நானம்:
அவிசுவாசிகள் அணைவரும், நியாயத்தீர்ப்பில் அடையாளம் கண்டுகொள்ளப்படுகின்றனர். (மத்தேயு 3:11, 13:24 – 30, 2 தெசலோனிக்கேயர் 1:7-9)
C.ஞானஸ்நானத்தின் பாத்திரம்:
சபை யுகத்தில் வாழும் விசுவாசிகள், இயேசுக்கிறிஸ்துவின் சிலுவை மரணத்திற்குப்பின் உள்ள ஜெயத்தில் (வெற்றியில்) அடையாளம் கண்டுகொள்ளப்படுகின்றனர். இயேசுக்கிறிஸ்து நமது பாவங்களில் அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறார். (மத்தேயு 26:39, 2 கொரிந்தியர் 5:21)
D. பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம்:
சபை யுகத்தில் விசுவாசிகள் கிறிஸ்துவின் சரீரத்தில் நுழைவதை இது காட்டுகிறது, இதினிமித்தம் கிறிஸ்துவில் சகலமும் அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறது. (1 கொரிந்தியர் 12:13, ரோமர் 6, எபேசியர் 1:3)
4.ஞானஸ்நானங்களின் சடங்கு.
இது தண்ணீருடன் சம்பந்தப்பட்டது. இது கீழ்க்கண்ட காரியங்களை பிரதிபலிக்கிறதாய் இருக்கிறது
அ) இயேசுக்கிறிஸ்துவின் ஞானஸ்நானம்:
தனித்தன்மை வாய்ந்தது (மத்தேயு 3:13-17) தண்ணீர் பிதாவின் திட்டத்தை பிரதிபலிக்கிறது. இயேசுக்கிறிஸ்து பிதாவின் சித்தமாகிய,சிலுவைக்கு செலவதை தன்னில்தானே அடையாளம் கண்டுகொள்கிறார்.
ஆ) யோவானின் ஞானஸ்நானம்:
(மத்தேயு 3:1-11, யோவான் 1:25-33, அப்போஸ்தலர் 18:25). தண்ணீர் தேவ இராஜ்யத்தை பிரதிபலிக்கிறது. யோவான் மூலம் ஞானஸ்நானம் பெற்றவர்கள் இயேசுக்கிறிஸ்துவுடனும், அவரது இராஜ்யத்திலும் அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறார்கள்.
இ) விசுவாசிகளின் ஞானஸ்நானம் (அப்போஸ்தலர் 2:38,41; 8:36-38, 9:18, 10;47-48; 16:33).
தண்ணீர் இயேசுக்கிறிஸ்துவின் கிரியையை பிரதிபலிக்கிறது. சபை யுக விசுவாசிகளுக்கு, ஞானஸ்நானம் என்பது, கிறிஸ்துவின் மரணம் (தண்ணீரில் முழுகுவது) கிறிஸ்துவின் அடக்கம் (தண்ணீருக்குள் இருப்பது) மற்றும் அவரது உயிர்த்தெழுதல், உயிர்த்து புதிய ஜீவனை உடையவர்களாதல், (தண்ணீரை விட்டு வெளிவருதல்) இது போன்றவைகளால் கிறிஸ்துவில் அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறார்கள்.
ஈ) சபைக்காக இரு விதிமுறைகள் உள்ளன:
(1) தண்ணீர் ஞானஸ்நானம் – ஒரே ஒரு முறை நிகழ்வது; இரட்சிப்பை பிரதிபலிக்கிறது.
2) திரு விருந்து – திரும்பத் திரும்ப நடைபெறுவது; ஐக்கியத்தைப் பிரதிபலிக்கிறது.
[su_heading size=”24″ align=”left” id=”H2″]Pdf file Download Section[/su_heading]
[su_button id=”download” url=”https://www.mediafire.com/file/hcjnlvrw336q5sa/ஞானஸ்நானம்.pdf/file” target=”blank” style=”3d” size=”9″ wide=”yes” center=”yes” radius=”round” icon=”icon: download”]Download PDF Now[/su_button]