இதன் pdf file கீழே கொடுக்கப்பட்டுள்ளது
நினைவு, நினைவுகூருதல்
ஏற்கெனவே கூறிய காரியங்களையும், நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் மறந்து விடாமல் மனதில் நினைவுகூருதல்.
தேவன் நினைவுகூரும் காரியங்கள்
- அவருடைய உடன்படிக்கைகள் (ஆதி 915-16; லேவி 26:42,45;சங் 105:8; எசே 16:60)
- அவருடைய சத்தியம் (சங் 98:3)
- அவருடைய கிருபை (சங் 98:3)
- அவருடைய வாக்குத்தத்தம் (சங் 105:42)
- வாக்குத்தத்த தேசம் (லேவி 26:42)
- ஜனங்கள் மாம்சமானவர்கள் (சங் 78:39)
- நாமெல்லாம் மண் (சங் 10314)
- நம்முடைய உருவம் (சங் 10314)
- நாமெல்லாம், காற்றைப் போல திரும்பி வராமல் அகலுகிறவர்கள் (சங் 78:39)
- மனுஷனுடைய பாவம் – அதை நியாயம் தீர்ப்பார் (ஓசி 8.13).
மனுஷன் நிளைவுகூரும் காரியங்கள்
- குற்றம் (ஆதி 419)
- மச்சம் (எண் 11:5)
- வெள்ளரிக்காய்கள் (எண் 11:5)
- கொம்மட்டிக்காய்கள் (எண் 11:5)
- கீரைகள் (எண் 11:5)
- வெண்காயங்கள் (எண் 11:5)
- வெள்ளைப்பூண்டுகள் (எண் 11:5)
- இருளின் நாட்கள் (பிர 11:8)
- தன் சொந்த வழிகள் (எசே 16.63)
- தன்பேரில் தன் சகோதரனுக்குக் குறை உண்டென்று நினைவு கூருதல் (மத் 5:23)
நாம் நினைவுகூரவேண்டுமென்று தேவன் நமக்கு கட்டளையிட்டுள்ள காரியங்கள்
- கர்த்தரின் கற்பனைகள் (எண் 15:39-40)
- கர்த்தர் (உபா 818)
- கர்த்தருடைய அதிசயங்கள், அற்புதங்கள் (1நாளா 16:12)
- சிருஷ்டிகர் (பிர 12:1)
- முந்திப் பூர்வ காலத்தில் நடந்தவைகள் (ஏசா 46.9)
- கர்த்தருடைய வார்த்தை (யோவான் 15:20; யோவான் 16:4; யூதா 1:17)
- இயேசு கிறிஸ்து (2தீமோ 2:8)
- கட்டப்பட்டிருக்கிறவர்களோடே நீங்களும் கட்டப்பட்டவர்கள்போல் அவர்களை நினைத்துக் கொள்ளுங்கள் (எபி 13:3)
- தேவ வசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினையுங்கள் (எபி 13:7)
- நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்துக் கொள் (வெளி 2:5)
தேவன் மறக்கவேண்டுமென்று மனுஷன் விரும்பும் காரியங்கள்
- இளவயதின் பாவங்கள் (சங் 25:7)
- பூர்வகாலத்து அக்கிரமங்கள் (சங் 79:8), அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும், அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் (எபி 812; எபி 1017).
[su_heading size=”24″ align=”left” id=”H2″]Pdf file Download Section[/su_heading]
[su_button id=”download” url=”https://www.mediafire.com/file/twogc64afbg4n35/Ninaivu+kooru.pdf/file” target=”blank” style=”3d” size=”9″ wide=”yes” center=”yes” radius=”round” icon=”icon: download”]Download PDF Now[/su_button]