இதன் pdf file கீழே கொடுக்கப்பட்டுள்ளது
வேதாகம ஜாதிகள் : அம்மோனியர்!
பெயர் :-
பெயரைப் பார்த்தால் ஏதோ உரத்தின் பெயர் மாதிரியோ அல்லது வேதியியல் சமாச்சாரம் மாதிரியோ தோன்றும்.
ஆனால் உண்மையில் அம்மோனியர் என்பது ஒரு இனத்தவரின் பெயர். இவர்கள் சார்ந்த இனத்தின் பெயர் அம்மோன் என்பது. இந்த இனத்தை சேர்ந்த ஜனங் களை வேதம் சில சமயம் அம்மோனியர் என்றும், சில சம யம் அம்மோன் புத்திரர் என்றும் அழைக்கிறது.
பழைய ஏற்பாட்டுக் காலத்திலிருந்த முக்கிய இனங்களுள் இதுவும் (அம்மோனியர்) ஒன்று. ஜாதிகளைப் பற்றி உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. பொதுவாகவே ஒவ்வொரு ஜாதிக்கும் பெருமை சேர்க்கிற மாதிரி சில பூர்வாங்க கதைகளை வைத்திருப்பார்கள்.
அதையே வழிவழியாய் கொஞ்சம் சேர்மானம் சேர்த்து பெருமையாய் பேசிக் கொண்டே மீசை முறுக்குவார்கள். தங்கள் பிள்ளைகளுக்கும் அதையே சொல்லிச் சொல்லி உசுப்பேற்றி, கடைசியில் உருப்படாமல் பண்ணிவிடுவார்கள்.
அரிவாளை எடுத்தால் அதில் இரத்தம் பார்க்காமல் வைக்கிற ஜாதியில்லீங்க எங்கள் ஜாதி! அப்படித்தான் பாருங்க ஒருமுறை… என்று இவர்கள் தங்கள் வம்சாவளிப் பெருமையை நீட்டி முழக்க ஆரம்பித்தார்களென்றால் அரிவாள் இல்லாமலேயே உங்கள் கழுத்தில் இரத்தம் வரவழைத்து விடுவார்கள்.
இன்னும் சில ஜாதியினருக்கு சொல்லிக்கொள்ளுகிற மாதிரி யாதொரு பெருமையான நிகழ்வுகளும் இருக்காது. ஆனாலும் அதற்காக அவர்கள் சோர்ந்து போய்விடமாட்டார்கள். மாறாக தாங்களே சில கதைகளை சொந்தமாக புனைந்து உலாவ விடுவார்கள்.
எட்டுப்பட்டியை கட்டியாண்ட பரம்பரை எங்களுடையது. நியாயம் கேட்க சுத்துப்பட்டி ஜனங்களெல்லாம் எங்களைத்தான் தேடி வருவார்களாம். என்று தாங்கள்தான் இந்த தேசத்திற்கே சட்டம் சொல்லித் தந்த ரேஞ்சிற்கு பேசுவார்கள். ஒரு காலகட்டத்தில் தாங்கள் கற்பனையாய் சொன்ன கதையை தாங்களே உறுதியாக நம்பவும் துவங்கி விடுவார்கள்.
பொதுவாகவே ஒரு ஜாதி, சமுதாயத்தில் பெருமையாய் பேசப்பட வேண்டுமானால் அந்த ஜாதிக்கென்று இப்படிப்பட்ட புனைக்கதைகளோ, பூர்வாங்க கதைகளோ அல்லது சரித்திர நிகழ்வுகளோ மெத்த அவசியம். இல்லாவிட்டால் அந்த ஜாதியை ஒரு ஈ காக்காய் மதிக்காது.
சரித்திர பின்னனி :-
அந்த வகையில் அம்மோனியர் களுக்கும் ஒரு பின்னணி சரித்திரம் உண்டு. ஆனால் அது பெருமைக்குரியதல்ல. மாறாக அம்மோனியர்களை தலைமுறை தலைமுறையாக தலைருளிய வைக்கிற மாதிரியான விஷயம்.
விஷயம் தெரிய வேண்டுமானால் அம்மோனியர்களில் பூர்வோத்திரம் பற்றி கொஞ்சம் பார்த்தேயாக வேண்டும்.
யார் இந்த அம்மோனியர்கள்?
சோதோம் கொமோரா பட்டணங்கள் தேவகோபத்தினால் அழிக்கப் பட்டபோது அங்கு வாழ்ந்த நீதிமானாகிய லோத்துவுக்கும் அவர் குடும்பத்திற் கும் மட்டும் கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது.
அவர் மனைவி பின்னிட்டு பாராதே என்ற தேவ கட்டளையை மீறி தன் நகருக்கு நேர்ந்த கதியைப் பார்க்கும்படி பின்னால் திரும்பிப் பார்க்க. வழியிலேயே உப்புத்தூணாய் மாறி நின்றுவிட்டான். லோத்துவும் அவருடைய இரண்டு பெண்பிள்ளைகளும் மட்டும் தப்பி மலைக்குகையில் போய் குடியேறினார்கள்.
மலைக்குகையில் அந்த குடும்பத்துக்கு நேர்ந்ததுதான் அபத்தம். லோத்தின் இரு பெண்பிள்ளைகளுக்கும் தங்கள் எதிர்காலம் குறித்த கவலை மேலிட தங்கள் சந்ததி எங்கே விருத்தியடையாமல் போய்விடுமோ என்ற பயத்தில் தவறான முடிவை எடுத்துவிட்டனர்.
தங்கள் தகப்பனுக்கு மதுவை குடிக்கக் கொடுத்து அவர் சுயநினை வின்றி இருக்கும்போதே அவருடன் சேர்ந்தபடியால் இருவருமே கர்ப்பவதி களானார்கள். தங்கள் தகப்பனால் இவர்கள் பெற்ற பிள்ளைகளில் ஒருவன் மோவாப்,மற்றவன் பென்னம்மி.
இந்தப் பென்னம்மியின் வழித்தோன்றல்கள் தான் இந்த அம்மோனியர் கள்.
இப்போது சொல்லுங்கள் இவர்கள் தங்கள் வம்சபெருமையை தலை நிமிர்ந்து சொல்ல முடியுமா என்ன?
தள்ளி வைக்கப்பட்டவர்கள்
மிகவும் அருவெறுப்பான வம்சப்பின்னணியின் நிமித்தம் இவர்கள் என்றைக்கும் தேவ ஆலயத்தில் உட்படலாகாது என்று தேவனாலேயே தள்ளிவைக்கப்பட்டிருந்தனர்.
வேசிப்பிள்ளையும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது. அவ னுக்குப் பத்தாம் தலைமுறையானவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலா காது. பத்தாம் தலைமுறையிலும் என்றைக்கும் அவர்கள் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது. (உபா 23 : 2,3)
கர்த்தர் இந்த சந்ததியை அருவெறுத்து தலைமுறை தலைமுறை தோறும் தேவாலயத்துக்கு உட்படலாகாது என்று கூறியிருந்தாலும் இந்த அம்மோனியர்களின் மேல் கர்த்தருக்கு ஒரு பச்சாதாபம் இருந்திருக்கிறது. ஒருவேளை அது நீதிமானாகிய லோத்தின் நிமித்தமாக உண்டானதாயிருக்கலாம்.
இஸ்ரவேலர்கள் கானானை நோக்கி பயணம் செய்து போகையில் வழியில் இருந்த தேசங்களுடனெல்லாம் சண்டை செய்து ஜெயித்தும், கீழ்ப் படுத்தியும் வந்து கொண்டிருந்தனர்.
அவர்கள் வழியில் அம்மோனியரின் தேசமும் வருகிறது. தேசம் நல்ல ஆற்றங்கரையில் அமைந்த தேசமானதால் மிகவும் செழிப்பாக காணப்பட்டது.
இஸ்ரவேலர்களும் அம்மோன் தேசத்தை மடங்கடித்து கீழ்ப்படுத்த தங்கள் ஆயுதங்களை தீட்டிக் கொண்டிருந்தபோது தான் தேவன் மோசேயை நோக்கி நீங்கள் அம்மோன் புத்திரரை வருத்தப்படுத்தவும் அவர்களுடன் போர் செய்யவும் வேண்டாம் என்று தடைவிதித்தார். வாசித்துப் பாருங்கள்.
அம்மோன் புத்திரருக்கு எதிராக இன்று சேரப்போகிறாய், நீ அவர்களை வருத்தப்படுத்தவும் அவர்களுடனே போர் செய்யவும் வேண்டாம். அம்மோன் புத்திரரின் தேசத்தில் ஒன்றும் உளக்கு சுதந்திரமாய் கொட்டன் அதை லோத்தின் புத்திரருக்கு சுதந்திரமாய் கொடுத்திருக்கிறேன், (உபா 2:19)
அம்மோனியர் தேசம்
அக்காலத்தில் அம்மோனியர்களின் தேசம் என்பது யோர்தானின் தென்முனையின் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்தது. ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகள் மாதிரி மோவாபின் எல்லையும், அம்மோனியர்களின் எல்லையும் அடுத்தடுத்து அமைந்திருந்தது.
அம்மோனியர்களின் எல்லை மோவாபியரின் எல்லையை ஒட்டி சவக்கடல் வரை நீண்டு பரவியிருந்தது. அம்மோனியர்கள் வசித்த இந்த தேசத்தில் இவர்களுக்கு முன்பு இராட்சதர்கள் வாழ்ந்து வந்தனர்.
இராட்சதர்கள் என்றவுடன் நீங்கள் அரபுநாட்டுக் கதைகளில் வருவது மாதிரி தலையில் சின்னக் கொம்புகளுடன் உடலெல்லாம் கரடி மாதிரி முடியுடன், கார்பம்பர் மாதிரி இரண்டு கோரைப்பற்கள் துருத்திக் கொண்டிருக்க ஒற்றைக்கண் அல்லது இரண்டிற்கு மேற்பட்ட கண்களுடன் மனிதர்களைப் பிடித்து தின்னும் கதைத்தனமான இராட்சதர்களை கற்பனை பண்ணிக்கொள்ளக்கூடாது.
இந்த இராட்சதர்கள் என்பவர்கள் மனிதர்களில் XL சைஸ் ஹார் மோன்களில் சாய்சத்தால் பனைமரத்தில் பாதி உயரமும், தினவெடுத்த தோன்களுமாய் இருந்தனர். ஆண்கள் சராசரியாக எட்டரையிலிருந்து ஒன்பது அடி வரை உயரம் வளர்ந்திருந்தனர். பெண்கள் வழக்கம்போலவே மனோ திடமுள்ளவர்களாகவும், அடக்கி ஆள்கிறவர்களாகவும் இருந்தனர்.
மற்றபடி இவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகளும், மந்தை மேய்ப்பர்களும் தான். இவர்களுக்கு சம்குமியர் என்று பெயர் (உபா 2 : 20,21) இவர்கள் கொஞ்சம் நொடித்து போன நேரத்தில் அம்மோனியர்கள் இவர்கள் மேல் படையெடுத்து, இவர்களை தேசத்திலிருந்தே துரத்தியடித்துவிட்டு தேசத்தை தாங்கள் சுதந்தரித்துக் கொண்டனர்.
கி.மு. 1300 லிருந்து கி.மு. 580 வரை மத்திய யோர்தான் தேசம் அம் மோனியர்களுடையதாக இருந்தது. இங்கு யாப்போக் என்ற ஆறு தெற்கு வடக் காக கையை விரித்த மாதிரி பிரிந்திருக்கும்.
அம்மோனியர் தொழில்
மூகத்துவாரப்பகுதியில் இந்த தேசம் அமைந்திருந்ததால் விவசாயத் திற்கு ரொம்பவும் சௌகரியம். விளையாட்டாய் நெல்லெடுத்து வீதியில் போட் டாலும் விளைந்துவிடும் அளவுக்குச் செழிப்பான பூமி.
விவசாயத்தில் கவனம் செலுத்தினாலே இவர்கள் வாழ்க்கைத்தரம் வானளவு உயர்ந்துவிடும். ஆனால் இவர்கள் விவசாயத்தில் கவனம் செலுத்து வதை விட சுற்றுப்புற தேசங்களில் படையெடுத்து கொள்ளையடிப்பதையே பிரதான தொழிலாகக் கருதினார்கள்.
யாத்திராகம காலத்தில் இஸ்ரவேலர்கள் கர்த்தரின் வார்த்தையை ஏற்று அம்மோனியர்களுடன் போரிடவோ அவர்களை மேற்கொள்ளவோ இல்லை. இந்நிலை நியாயாதிபதிகளின் காலம் வரை கூட நீடித்தது.
ஆனால் இந்த அம்மோனியர்கள் சும்மாயிருந்தால் தானே? அமைதியாயிருக்கும் இஸ்ரவேலை சீண்டுவது மாதிரி இவர்கள் அடிக்கடி இஸ்ரவேலுக் குத் தொல்லை தந்து வந்ததால் இஸ்ரவேலர்கள் பலமுறை இவர்களுடன் யுத்தம் செய்ய வேண்டியதாயிற்று.
யெப்தாவின் நாட்களிலும் சவுல், தாவீது மற்றும் யோசபாத்தின் நாட்க ளிலும், இஸ்ரவேலர்களுக்கும் அம்மோனியர்களுக்குமிடையில் பலமுறை யுத்தங்கள் நடைபெற்றன.
அகழ்வாராய்வுகளின்படி அம்மோன் தேசம் பற்றி நிறைய குறிப்புகள் கிட்டவில்லையாயினும், இந்த தேசத்தின் நிலமேற்பரப்பு ஆராய்ச்சிகளின்படி இந்த தேசத்தில் முதலாம் உலோக காலம் முதலே மனிதர்கள் குடியிருந்ததாக ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
அம்மோனியர் தலைநகரம்
அம்மோனியர்களின் தலைநகரம் ராப்பா – அம்மோன் (Rabbah Ammon) இந்த நகரத்தின் பெயர், அம்மோனின் குமாரனாகிய ரப்பாட் (Rabbaht) என்பவரின் பெயரால் வழங்கப்பட்டது. இந்நகரம் யோர்தானுக்கு கிழக்கே யாப்போக் ஆற்றின் நதிமூலத்தில் அமைந்திருந்தது.
அம்மோனியர்கள் லோத்தின் சந்ததியினராக இருந்தபோதிலும் தேவன் அவர்களுக்கு தயை பாராட்டி சம்சூயரின் தேசத்தை தந்திருந்த போதி லும் அம்மோனியர்கள் கர்த்தரை தெய்வமாக கொண்டிருக்கவில்லை.
அம்மோனியர் தெய்வம்
மாறாக, இவர்கள் முற்றும் முழுவதுமாக விக்கிரக ஆராதனைகாரர் களாகவே இருந்தனர். இவர்களது பிரதான தெய்வம் மோளேகு. இந்த மோளே கின் மேடைகளில் இவர்கள் நடத்தும் மதசடங்குகள் யாவுமே தேவனுக்கு விரோதமானவை. நரபலியும், தீக்கடக்கப்பண்ணுவதும், அருவெறுப்பான ஆராதனைகள் செய்வதுமாக இவர்களது ஆராதனைகள் தேவகோபத்திற்கு ஏற்றதாகவே இருந்தது.
அம்மோனியர்கள் தேவனைத் தேடவில்லையாயினும், கர்த்தர் அவர் களுக்கு கொடுத்த வார்த்தையை காப்பாற்றத் தவறவில்லை. கர்த்தர் இஸ்ரவேலை நோக்கி அம்மோன் புத்திரரின் தேசத்தில் ஒன்றையும் நாள் உனக்கு சுதந்திரமாகக் கொடேன் என்று சொல்லியிருந்தார். (உபா 2:19)
அதன்படியே பலமுறை இஸ்ரவேலருக்கும் அம்மோனியருக்கும் போர்கள் தோன்றியும் இஸ்ரவேல் அம்மோன் தேசத்தைப் பிடித்துக்கொள்ள முடியவில்லை.
யெப்தா, சவுல், தாவீது போன்ற யுத்தத்தில் கரைகண்ட பலவான்களாகிய இஸ்ரவேல் இராஜாக்கள் படையெடுத்தும் கூட இஸ்ரவேலுக்கு ஒரு சிறு பகுதி கூட சுதந்திரமாக கிடைக்கவில்லை என்பது ஆச்சரியமான விஷயம்.
கர்த்தர் கொடேன் என்று மறுத்துவிட்டால் எத்தனை இராஜாக்கள் கூடிக் கொண்டாலும் தங்கள் புயபல திறமைகளை காண்பித்தாலும் ஒன்றையும் பெற்றுக்கொள்ள முடியாது என்பதற்கு அம்மோன் தேசமே சான்று.
அகழ்வாராய்ச்சி
பண்டைக்கால அம்மோனின் தலைநகரான ராப்பா அம்மோன் அழிந்து போய்விட்டது. ஆனால் அது இருந்ததாக கருதப்படும் இடத்தில் 1973ம் ஆண்டு நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் போது வெண்கல காலத்தை சேர்ந்த கல்லறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது கி.மு. 1900ஐ சேர்ந்தது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். கண்டுபிடிக்கப்பட்ட கல்வறைக் குகைகளி லேயே இதுதான் மிகவும் பழமையானது என்பது இதன் சிறப்பு.
இந்த குகையில் ஏராளமான மண்பாத்திரங்களும், சில சிலைகளும் மண்ணாலான சிறு சிறு குதிரைகளும் கிடைத்துள்ளன.
மேற்சொன்ன இந்த இடங்களை 1947ல் ஆராய்ந்தவர் டாக்டர் தாம்ப் ஸன் (Dr.Thompson) என்பவர். இவர் ஆராயும் நாட்களில் யோர்தான் நாட்டை தோண்டிப்பார்க்க அனுமதியில்லை. எனவே இங்கு நடைபெற்ற பல ஆய்வுகள் பூமியின் மேற்பரப்பிலேயே செய்யப்பட்டன.
நாம் மேற்சொன்ன கல்லறை குகையில் இன்னும் கொஞ்சம் ஆழமாக தேடியபோது ஒரு உடைந்த கல்வெட்டு கிடைத்தது. அதில் எண்ணி எட்டே வரிகள் யாரோ மிகவும் இரத்தினச் சுருக்கமாக சரித்திரம் எழுத முயன்றிருந் திருக்கிறார்கள். இந்த எட்டுவரிகளும் 1இராஜா 11: 7ல் காணப்படும் அம்மோ னிய கடவுளான மோளேகு பற்றியும், அதற்கு கட்டப்பட்ட கோயில் பற்றியும் சொல்கிறது. இந்தக் கல்வெட்டு கி.மு. 9ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கார்பன்டேட்டிங் முறையில் கண்டுபிடித்து சொல்லியிருக்கிறார்கள்.
அம்மோன் தேசம் பற்றி நாம் அறிந்து கொள்ள நமக்கு கிடைத்துள்ள இன்னொரு ஆதாரம் டீக்கடை பாய்லர் மாதிரி தோற்றம் கொண்ட வெண்கல உருளை. இந்த வெண்கல உருளையிலும் எழுத்துக்களை பதித்திருக்கிறார்கள். உருளையை உருட்டிப்பார்த்தால் அது அம்மோனிய இராஜாவான அம்மினதாபைப் பற்றிய சரித்திரம் சொல்லுகிறது.
ராப்பாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆராய்ந்தபோது கிடைத்த ஆதாரங்களில் பெரும்பான்மையானவை, அம்மோனியர்கள் எவ்வளவு ஆழமான விக்கிரக ஆராதனைக்காரர்களாக இருந்திருக்கிறார்கள் என்று காட்டுகின்றன. மட்டுமல்ல. இஸ்ரவேலர்கள் மேல் அம்மோனியர்கள் எவ்வளவு தூரம் பகை பாராட்டியிருக்கிறார்கள் என்பதையும் காட்டுகின்றன. யெப்தாவின் காலத்திலும் சரி, மற்ற இராஜாக்களின் நாட்களிலும் சரி. இவர்கள் இஸ்ரவேலருக்கு கொடுத்து வந்த தொல்லைகள் மிகவும் அதிகமா னவை.
முன்னறிவிப்பு
இவர்கள் தேவனுடைய ஜனங்களைப் பகைத்து நிந்தித்ததினிமித்தம் கர்த்தர் அவர்களுக்கு வரப்போகும் தண்டனையைக் குறித்து எசேக்கியேல் மூலம் எச்சரித்தார்.
இதோ, நான் உன்னைக் கிழக்கு தேசத்தாருக்கு சுதந்திரமாய் ஒப்புக்கொடுப்பேன். அவர்கள் உன்னில் தங்கள் அரணைக்கட்டி, உன்னில் தங்கள் வாசஸ்தலங்களை உண்டுபண்ணுவார்கள். (எசேக் 25:1-10)
உரைக்கப்பட்ட தேவவார்த்தைகளின்படி அதுவரை சுதந்திரமாக ஆண்டு வந்த தேசத்தின் மீது அசீரியர்களின் கண்பட்டது. அசீரியர்கள் இந்த தேசத்தின் மீது கண் வைத்ததற்கு காரணம், தேசத்தின் செழிப்பு. அசீரியர்களைப் பற்றி ஏற்கனவே சில கட்டுரைகளில் சொல்லியிருக்கிறேன். நல்ல கட்டமைப் பான இராணுவ அமைப்புடன் தங்கள் நாட்டின் எல்லைகளை விரிவாக்க வேண்டுமென்ற வெறியுடன் கண்ணில்பட்ட தேசங்களையெல்லாம் படை யெடுத்து ஜெயித்துப் பணியவைத்துக் கொண்டிருந்தார்கள். மிகவும் கொடூர மனமும், பலமும் பெற்ற இவர்கள் அந்நாட்களில் சுற்றுப்புற நாடுகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார்கள். இவர்கள் தாங்கள் பிடித்த தேசங்களை முற்றும் அழித்து விடாமல், அவற்றை தங்கள் நாடுகளுடன் சேர்த்துக் கொண்டு அந்த தேசத்தின் ராஜாவையே பதவியில் வைத்து. தாங்கள் கப்பம் மட்டும் வசூலித்து கொண்டார்கள். அந்த ராஜாக்கள் வரி, வட்டி என்று ஏதாவது வசனம் பேசினால் தவணைமுறையில் சீவிச் சீவிக் கொன்றுவிடுவார்கள்.
இந்த அசீரியர்களின் கண்ணைத்தான் அம்மோன் தேசம் உறுத்தியது. அம்மோனின் இராஜாவாகிய பாஷா – அம்மோன் காலத்தில் அசீரியர்களின் படையெடுப்பு துவங்கியது. சல்மனாசார் என்ற அசீரியாவின் புகழ்பெற்ற ராஜா அம்மோன் மேல் படையெடுத்தார்.
அசீரியர்களின் பலத்தின் முன்பாக நிற்க முடியாத அம்மோனிய ராஜா பாஷா சரணடைந்துவிட்டார். சல்மனாசார் அம்மோனுக்கு பாஷாவையே மீண்டும் ராஜாவாக்கி அசீரியாவிற்கு சப்பம் செலுத்தும்படி பணித்துச் சென்று விட்டார். அசீரியாவிற்கு அம்மோனியர்கள் கப்பம் கட்டுவது சல்மனாசார் காலம் துவங்கி, திக்லாத்பிலேசர், சனகெரீப் ஆகியோர் காலம் வரை தொடர்ந்தது.
அசிரியர்களுக்கு ஒரு பழக்கம் என்னவென்றால் தாங்கள் பிடித்தாளும் தேசங்களுக்கென்று கப்பந்தொகையாக ஒரு நிலையான தொகையை நிர்ணயிப்பதில்லை, மாறாக, தங்களுக்கு தேவைகள் பெருகும்போதெல்லாம். கப்பத்தொகையை ஏற்றிக்கொண்டே போவார்கள். அதன்படி அசீரியர்கள் அம்மோனியர்கள் மேலும் கப்பத்தொகையை ஏற்றிக்கொண்டே போக இதற்கு அழித்திருந்தாலே பரவாயில்ளல் என்று எண்ணுமளவிற்கு அம்மோனின் இராஜாவும். குடிகளும் நொந்து போய்விட்டனர். அம்மோன் தேசமும் நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமுமாக நொடித்துப் போனது.
அசீரியர்களை தொடர்ந்து அம்மோன் பாபிலோனியர்களின் படை யெடுப்புக்குள்ளாகியது. இம்முறை அம்மோன் மேல் படையெடுத்தவர் நேபு. காத்நேச்சார். மீண்டும் அம்மோள் பிடிப்பட்டது. படையெடுப்புகளால் நவிந்து போன அம்மோன் கோமா நிலைக்குப் போய்விட்டது.
கண்ணெல்லாம் பஞ்சடைத்துப் போன நிலையிலும் அம்மோனியர்கள் திருந்திய பாடாயில்லை. பாபிலோனியர்களுடன் சேர்ந்து கொண்டு தங்கள் படைகளை அனுப்பி இஸ்ரவேலைப் பிடிக்கத் திட்டமிட்டனர். இதனிமித்தம் கர்த்தர் இவர்களை நொறுக்க சித்தமானார். தொடர்ந்து கிரேக்கர், ரோமர், முகமதியர், துருக்கியர் என்று அடுத்தடுத்து படையெடுப்புகள் தொடர. அம்மோன் நூலாகிப் போனது.
துருக்கியரின் படையெடுப்பு
துருக்கியரின் படையெடுப்பின் போது தேசம் மிகவும் சிதிலமடைந்தது. புகழ்பெற்ற கட்டிடங்கள் தகர்க்கப்பட்டன, கடைசியில் தேசம் இன்றைய பாக்தாத் மாதிரியாகிவிட்டது.
ஜனங்கள் இனி தேசம் தாங்கள் வாழ ஏற்றதல்ல என்ற முடிவிற்கு வந்துவிட்டனர். உண்மையான நிலையும் அதுதான். அவர்கள் நாடோடிகள் மாதிரியாக தேசத்தைவிட்டுப் பிழைப்புத் தேடி பல தேசங்களுக்கும் போய் சிதறிக் கடைசியில் கரைந்து போனார்கள்.
துருக்கியரின் முரட்டுத்தனமான ஆட்சியின் காரணமாக தலைநகர மாகிய ராப்பாவும் பொலிவிழந்து ஒரு குப்பணாம்பட்டி போல மாறிப்போனது. அங்கிருந்த பல மதிப்பு வாய்ந்த கட்டிடங்களும் பாரம்பரியமிக்க கட்டிடங்கள் மற்றும் சரித்திரச் சின்னங்களும் துருக்கியரின் கைகளில் சிக்கி சீரழிந்து நிறம் மாறிப் பேரீச்சம்பழத்துக்குப் போடுவது மாதிரியாகி விட்டது.
துருக்கியர்களுக்குப் பிள் இந்த அம்மோன் ஆங்கிலேயர்களின் வசமாயிற்று. ஆனால் பழைய கம்பீரமான தேசமாக அல்ல. பல்லெல்லாம் கொட்டிப்போய் ஒரு கின்னஸ் ரிக்கார்ட் கிழவர் ரேஞ்சிற்கு வயசாகி வலுவிழந்து, அழகிழந்து, எலும்புக்கு தோல் போர்த்திய எய்ட்ஸ் நோயாளி மாதிரியான தோற்றத்திலிருந்தது.
காலங்காலமாக தனிப்பெருமை பெற்ற தேசமாக விளங்கிவந்த அம் மோன் பலங்குன்றி, நலிந்து போளதால் தனிநாடு என்னும் அந்தஸ்தை இழத்தது.
தனி நாடு என்பதற்கான அடையானங்கள் ஒன்றும் அதில் இல்லை. அதற்கான அடிப்படை வசதிகளும் இல்லை. நானு சின்னக் கிராமங்களை வைத்துக்கொண்டு தனிநாடாக்குவது எப்படி சாத்தியமாகும்? எனவே, ஆங்கிலேயர்கள் யோசித்து இதை அருகிலுள்ள ஏதாவதொரு நாட்டுடன் இணைத்துவிட முடிவு பண்ணினார்கள்.”
எத்தனை பெருமை வாய்ந்த எங்கள் நாட்டை தனிநாடாக்காமல் மற்றொரு நாட்டிற்கு வாலாக்குவதா என்று அம்மோலுக்காக போராடக்கூட அதற்கு மண்ணின் மைந்தர்களோ, இனங்காக்கும் டாக்டர்களோ இல்லை. கார ணம். அம்மோன் குடிகளுக்கு தங்கள் தேசத்தின் வரலாறோ, பெருமைகளோ கூடச் சரிவரத் தெரிந்திருக்கவில்லை.
எனவே எந்தவிதமான இடையூறுமின்றி அம்மோனை ஆங்கிலேயர்கள் அருகிலிருந்த யோர்தான் தேசத்துடன் இணைத்துவிட்டார்கள்.
ஆங்கிலேயர்களால் போர்தானுடன் இணைக்கப்பட்டபின் யோர்தான் நாட்டின் ஒரு பகுதியாக அம்மோன் மாறிவிட்டது. இணைக்கப்பட்ட இந்நாட்டின் சுவர்னராத அமீர் முகம்மது என்பவரை ஆங்கிலேய அரசு நியமித்தது. யோர்தானின் ஆட்சித்தலைவராக இருந்தாலும், அவர் தன் குடியி ருப்பை ராப்பாவுக்கு மாற்றிக் கொண்டார்.
இதன் பூர்வாங்க சரித்திரம் பற்றித் தெரிந்துகொண்ட இவர் அதுவரை ராப்பா என்று வழங்கி வந்த நகரத்தின் பெயரை மறுபடியும் பழைய பெய ருக்கே மாற்றி அம்மோன் என்று பிரகடனம் செய்துவிட்டார். இதனால் இந்த நகரத்திற்கு மீண்டும் சமூக அந்தஸ்து கிடைத்தது.
1948ல் இஸ்ரேல் தனிநாடானபோது போர்தானும் சுதந்திரமடைந்து தனிநாடாகப் பிரகடனம் செய்யப்பட்டது. அதன் தலைநகராக இன்றும் அம்மோன்தான் இருக்கிறது.
ஒரு தேசத்தின் தலைநகரமானபடியினால் மீண்டும் அம்மோன் புதுப் பிக்கப்பட்டது. கட்டிடங்கள் கட்டப்பட்டன. சிதிமைானவை சீரமைக்கப்பட்டன. நிர்வாக அலுவலகங்கள் பல துவங்கப்பட்டன. ஜனநடமாட்டம் பெருகியது. அம்மோள் மீண்டும் புதிய பொலிவுடன் விளங்கத் துவங்கியது.
இன்று இந்நகரின் மக்கள்தொகை ஒரு லட்சத்தையும் தாண்டும்.
இங்கு இப்போது குடியிருப்பவர்கள் யாவரும் அராபிய முஸ்லீம்கள் இவர்களை யோர்தாளிய அராபியர் என்று குறிக்கிறார்கள். ஆனால் இவர்கள் தங்களைத்தான் அம்மோனின் பூர்வ இனமக்கள் என்று சொல்லிக் கொள்கி றார்கள். அம்மோன் இன்று பணப்புழக்கமும் வசதிகளும் நிரம்பிய நகரமாக காட்சியளிக்கிறது.
மொத்தத்தில், இன்று அம்மோன் இருக்கிறது. ஆனால் அம்மோனியர்களைத்தான் காணவில்லை.