நம்மைப் பரீட்சைபார்ப்பதும் சோதிப்பதும் யார்?

நம்மைப் பரீட்சைபார்ப்பதும் சோதிப்பதும் யார்?

நம்மைப் பரீட்சைபார்ப்பதும் சோதிப்பதும் யார்?

கிறிஸ்தவனின் வாழ்க்கையில் பரீட்சை பார்த்தலையும், சோதனை களையும் கொண்டுவருவது யார்? தேவனா அல்லது சாத்தானா?

கிறிஸ்தவர்களாக நாம் அனுப விக்கும் ஒவ்வொரு வேதனைக்கும், துன்பத்துக்கும் பிசாசின்மீது குற்றம் சாட்டுவது பொதுவான சிந்தனை யாக இருக்கிறது. சில வேளைகளில் பிசாசானவன் நமது பரீட்சைக ளிலும், சோதனைகளிலும் தொடர்பு கொண்டிருக்கிறான்.

என்றாலும், தேவனுடைய ஊழி யத்தைச் செய்ய ஆயத்தமாகும் தலைவர்களுக்கு எங்கிருந்து சோத னைகள் வருகின்றன என்பதைக் குறித்து தாவீது அரசன் வேறுபட்ட கண்ணோட்டம் கொண்டிருந்தார். “கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார்” (சங். 11:5). நமது சோதனைகளிலும் பிரச்சினைகளிலும் நாம் பெரும் பாலும் பிசாசோடு தொடர்பு கொண்டிருக்கவில்லை என்பதற்காக நம்மால் தேவனைத் துதிக்கக் கூடும். தேவனுடனோ அல்லது நமது சொந்தத் தவறுகளுடனோ நாம் தொடர்பு கொள்கிறோம்.

1. யோபுவின் சோதனை தேவனால் அனுமதிக்கப்பட்டது

யோபுவின் பாடுகள் மற்றும் துன்பங்களிலிருந்து நாம் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக் கொள்ள முடியும். யோபுவைச் சோதிக்க பிசாசு தேவனிடமிருந்து அனுமதியைப் பெற்றான் என்று வேதாகமம் கூறுகிறது (யோபு 1அதி.).

ஆனால் யோபு ஒருபோதும் பிசாசின்மீது குற்றம் சாட்டவில்லை என்பதைக் கவனியுங்கள். “தேவ னுடைய கை என்னைத் தொட்டது” (யோபு 19:21). “அவர் என்னைக் கொன்று போட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்” (யோபு 13:15) என்றான் அவன்.

யோபு சாத்தானால் தாக்கப்பட் டாலும்கூட அவன் பிசாசோடு அல்ல, தேவனுடனே தொடர்பு கொண்டிருந்தான். தனது எந்தச் சோதனையிலும், வேதனையிலும் சாத்தானை அங்கீகரிக்க அவன் மறுத்தான்.

தேவன் நமது பக்கத்தில் இருக்கி றார் என்பதை அறிவது ஆறுதலாக இருக்கிறது. நம்மை நாமே அவரது கரங்களில் ஒப்படைக்கும்போது, சூழ்நிலை எப்படியிருந்தாலும், அவர் எப்போதும் நம்முடன் இருக்கிறார்.

“…உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு (பரீட் சிக்கப்படுகிறதற்கு) அவர் இடங் கொடாமல்” இருப்பார் (1கொரி.10:13), ….அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத் தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்” (ரோமர் 8:28).

2.சோதனைகளும் பாடுகளும் வாக்களிக்கப்பட்டுள்ளன 

“பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றி யெரிகிற அக்கினியைக் குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல்” இருக்கும் படி பேதுரு அப்போஸ்தலன் கூறு கிறார் (1பேதுரு 4:12).

வளர்ந்துவரும் ஓர் இளவயது சபைத் தலைவருக்கு பவுல் இவ்வாறு எழுதுகிறார்: “அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படு வார்கள்” (2தீமோ.3:12).

“நீதியினிமித்தம் துன்பப்படுகிற வர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ் யம் அவர்களுடையது” (மத். 5:10) என்று இயேசுவானவர் கூறினார்.

எனக்குப் பதினாறு வயதாக இருந்தபோது, தேவனுடைய ஊழி யத்திற்காக என் வாழ்க்கையை அவரி டம் ஒப்படைத்தபோது, எவ்வளவு தூரம் உணர்ச்சிவயப்பட்ட நிலை யில் இருந்தேன் என்பதை நினைவு கூருகிறேன். நானும் அவரும் மட்டுமே சேர்ந்து உலகத்தைப் பற்றியெரிய” வைக்க முடியுமென்று நான் நினைத்திருந்தேன்.

ஒரு சில மாதங்கள் கடப்பதற்கு முன்பாகவே நான் “ஒரு புலியை அதன் வாலினால் பிடித்திருக்கி றேன்” என்பதை உணர்ந்தேன். அந்த வாலைப் பிடித்திருப்பதும் சிரம மான காரியமாக இருந்தது; விட்டு விட்டாலும் வரவிருக்கும் அழிவை எண்ணி மனம் கலங்கியது. ஊழியத் திற்கான ஆயத்த நடவடிக்கைகளில் தேவன் என்னை உட்படுத்தியிருந் தார்; அது துன்பத்தை நோக்கியே என்னை வழிநடத்தியது. என்னால் அதிலிருந்து தப்பவே முடியவில்லை. நானும் பவுல் அப்போஸ்தலனைப் போலவே “கிறிஸ்து இயேசுவினிமித்தம் கண்டுண்டவனாக” (எபே. 3:1) உணர்ந் தேன்.

3. தேவனும் கழுகுகளும்

என் பாதையில் குறுக்கிட்ட சோதனைகள், கலக்கங்கள் இவற் றின் மத்தியிலும் தேவன் இந்த வாக்குத்தத்தங்களைக் கொண்டு எனக்கு ஊக்கமளித்தார்: “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப் போலச் செட்டை களை அடித்து எழும்புவார்கள்” (ஏசாயா 40:31). “கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின்மேல் சுமந்துகொண்டு போகிறது போல, கர்த்தர் ஒருவரே அவனை வழி நடத்தினார்” (உபா. 32:11,12). இந்த இரண்டு வசனங்களும், பிரச்சினை களையும், ஏமாற்றங்களையும் எதிர் கொள்ள எனக்கு உதவின.

இந்த வாக்குத்தத்தங்கள் அரு ளும் அற்புதமான ஆறுதலை முழு மையாக உணர வேண்டுமானால், தாய்க் கழுகைப் பற்றியும், அது எவ்வாறு தன் குஞ்சுகளை வளர்த்து அவற்றுக்குப் பயிற்சியளிக்கிறது என்பதையும் தெரிந்து கொள்வது அவசியம்.

கழுகு மலைச் சரிவின் உயரமான, செங்குத்தான பாறைகளில் தன் கூட்டைக் கட்டுகிறது. அது முட் செடிகளின் கிளைகளையும், முட் புதர்களையும் கொண்டு, தான் முட்டையிடுவதற்கான உறுதியான கூட்டை உருவாக்குகிறது. தனது சொந்த மார்பிலிருந்து பிடுங்கப் பட்ட தூவல்கள் உட்பட, மென்மை யான பொருட்களைக் கொண்டு கூட்டினுள்ளே தளம் அமைக்கிறது. குஞ்சுகளுக்கான அருமையான தங்கு மிடமாக இது அமைகிறது.

a. வசதியான கூடு. 

முட்டை பொறித்து வெளிவரும் குஞ்சுகள் அபாயங்களுக்கு அப்பாற்பட்ட உயரத்தில் வெதுவெதுப்பான சுக போகத்தில் வளருகின்றன. தாய்ப் பறவை குஞ்சுகளுக்கு இரையளிக் கிறது; அவைகளைப் பாதுகாக் கிறது; அவைகளின் ஒவ்வொரு தேவையையும் சந்திக்கிறது.

இவ்வகையில்தான் “கிறிஸ்துவுக் குள் பாலகராக” தேவன் நம்மையும் பராமரிக்கிறார். அன்பும், கருணை யும் கொண்ட பிதாவானவரின் கிருபையையும், மன்னிப்பையும், அபரிமிதமான பராமரிப்பையும் நாம் அறிகிறோம். நாம் பாது காப்பான இடத்தில் தங்கியிருப் பதையும், “திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலை” (1பேதுரு 2:3) பருகிக் கற்பதையும் களிப்புடன் அனுபவிக்கிறோம்.

b. வசதிகள் அகற்றப்படுகின்றன. 

என்றாலும், வளர்ச்சி பெறுகிற இந்த அனுபவத்தில், “கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின் மேல் அசைவாடும்” வேளையும் வரும். தாய்க் கழுகு மென்மையான கூட்டின் தளத்தைக் கலைத்துப் போடுகிறது. தனது வலுவான, பெரிய இறக்கைகளை அசைத்து, வசதிக்காக வைக்கப்பட்டிருந்த மென்மையான பொருட்களைப் பறக்கடிக்கச் செய்கிறது. குஞ்சுகள் கீழேயுள்ள வெறும் கூட்டின் முட் கள் மேலும், முட்புதரின் மேலும் அமர வேண்டியிருக்கிறது.

எவ்வளவுதான் முயன்றாலும், குஞ்சுகளால் வசதியான இடத்தைக் காண முடிவதில்லை. வளர்ந்துவரும் குஞ்சுகளும் அந்தக் கூட்டிலேயே இருப்பதால் நெருக்கமும் அதிகமாகி றது; வசதியற்ற நிலைமை ஏற்படு கிறது. குஞ்சுகள் நெருக்கியடித்துக் கொண்டு, குற்றஞ்சாட்டும் விதத்தில் கூக்குரலிடுகின்றன. குஞ்சுகள் கூட்டை விட்டுவிட்டுப் பறப்பதற் கான பயிற்சியைப் பெறுவதற்காகவே தாய்ப் பறவை வசதிகளை அகற்றி விட்டு, நெருக்கத்தை அதிகமாக்கு கிறது.

“வேதனையின்றி ஆதாய மில்லை!” என்பதே இயற்கையின் பாடமாக மட்டுமின்றி, ஆவிக்குரிய வாழ்க்கையின் கொள்கையாகவும் இருக்கிறது.

நாம் அனைவருமே அந்தக் குஞ்சுகளைப் போலவே இருக்கி றோம். நாம் நமக்குரிய வீடாக இராத இந்த உலகத்தினூடே பயணம் செய்கிறவர்களாக மட்டுமே இருக்கி றோம் என்று வேதாகமம் கூறி னாலும், நாம் வசதியையும், சுகத்தை யுமே விரும்புகிறோம். நமக்கெனஒரு சிறு பாலைவனச் சோலையில் தங்கியிருந்து, ஈச்சம்பழங்களைத் தின்னவும், சூரிய ஒளியை அனுபவிக் கவுமே விரும்புகிறோம். இருக்கும் இடத்தில் எல்லாமே வசதி நாம் யாகத்தான் இருக்கிறது. நாம் இதை விட்டுவிட்டு, சிரமங்கள் நிறைந்த வனாந்தரப் பாதையில், வாக்குப் பண்ணப்பட்ட நாட்டை நோக்கிப் பயணம் புறப்பட விரும்புவதில்லை.

நாம் வார்த்தையைக் கேட்கி றோம், பிரசங்கங்களை அனுபவித்து ருசிக்கிறோம். சில வேளைகளில் அது நமக்குக் களிப்பைக் கொடுப்பதாகக் காண்கிறோம். வாழ்க்கை சுகமும், நலமுமாய் இருக்கிறது. தேவன் நம்மிடம் பேசும்போது, அதைக் கேட்கக் கூடாதபடிக்கு, நமது வசதி களின்மீது நமது கவனம் சிதறிப் போய் இருக்கிறது.

அப்போது, நாம் வளர்ச்சி பெறுவதற்கு இதுவே வேளை என்று தேவன் தீர்மானிக்கிறார்; அனைத்துமே துரிதமாக மாற்ற மடைகின்றன. திடீரென்று பிரச்சி னைகளும், வேதனைகளும், பாடு களும் நம்மைத் தாக்குகின்றன.நாம் குறைகூறுதல், கதறுதல் இவற்றின் மூலம் ‘பிசாசானவனைத் திட்டத்’ துவங்குகிறோம்; ஆனால் பயனேதும் ஏற்படுவதில்லை.

வேதனைகளும் பாடுகளும் நமது கவனத்தைக் கவரும்படியாகவே கொடுக்கப்பட்டுள்ளன. அவ்வேளை யில் நாம் மறுபடியுமாக கர்த்தருக்குக் காத்திருக்கவும், அவரது குரலுக்குச் செவி கொடுக்கவும் முன்வரும்போது, நமக்காக அவர் செயல்படுத்தவிருக்கும் தமது திட்டத்தை நமக்குக் காட்டுகிறார். “கழுகுகளைப் போலச் செட்டைகளை அடித்து எழும்புவதற்கு” அவர் கற்றுக் கொடுக்கப் போகிறார்.

  1. பறப்பதற்குரிய பாடங்கள். தாய்க் கழுகு “அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின் மேல் சுமந்துகொண்டு போகிறது”.

பயிற்சிக்கான வழிமுறையின் இந்தப் பருவத்தில் முட்களாலான கூட்டைவிட்டு வெளியேறுவது குஞ்சுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எந்தவித வற்புறுத்தலும் இல்லாமல் அது தாய்க் கழுகின் முதுகில் ஏறி, அதன் உறுதியான செட்டைகளின் மீது தன் கால்களைப் பதித்துக் கொள்கிறது. கழுகுக் குஞ்சு பறப்பதற் குரிய முதல் பாடத்தைக் கற்றுக் கொள்ளவிருக்கிறது.

குஞ்சு தன்னை உறுதியுடன் பற்றியிருக்க, தாய்க் கழுகு இறக் கையை விரித்து, கூட்டை விட்டு மேலே எழும்பி, பள்ளத்தாக்கின்மீது, பறக்கிறது. முதன் முறையாக கழுகுக் குஞ்சும் ஆகாயத்தில் பறக்கிறது. எதிர்காற்றுக்கு ஏற்ப தாய்க் கழுகு சிறகுகளை அடித்தபடி, பல்லாயிரக் கணக்கான அடி உயரத்தில் பறக் கிறது. “எவ்வளவு களிப்பான அனு பவம் இது!” என்று குஞ்சு நினைக் கிறது.

“ஆனால் கழுகுக் குஞ்சே, பறப்பதற்கான நேரம் இது!” திடீ ரென்று, எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், தாய்க் கழுகு கீழ்நோக்கி மல்லாக்கப் பாய்கிறது. அவ்வளவு தான்! கழுகுக் குஞ்சின் பிடி விலகு கிறது. பயந்துபோன குஞ்சு தன் புதிய செட்டைகளைப் படபடவென்று அடிக்கிறது; எப்படியாவது தன் னைக் காப்பாற்றிக்கொள்ள முயலு கிறது. ஆனால், அந்தோ, நிச்சயமான அழிவை நோக்கி அது வெகு வேக மாக விழுந்து கொண்டிருக்கிறது.

நம்பிக்கையே அற்றுப் போனது போன்ற உணர்வைப் பெறும்போது, தாய்க் கழுகு அதன் கீழே வந்து, தன் உறுதியான முதுகால் அதைத் தாங்கிக் கொண்டு, குஞ்சின் வீழ்ச்சி யைக் கட்டுப்படுத்துகிறது. தனது கால்களின் கீழ் தாய்ப்பறவையின் இறக்கைகளை உணர்ந்த குஞ்சு, அதை உறுதியாகப் பற்றிக்கொண்டு, மறுபடியுமாக பாதுகாப்பை பெறுகிறது.

மீண்டும் அந்தத் தாய்க் கழுகு மேலே எழும்பி தன் பயிற்சியைத் தொடருகிறது. ஒவ்வொரு முறை கீழே விழும்போதும் குஞ்சு இன்னு மதிக பாடத்தைக் கற்றுக்கொள் கிறது; இறுதியில் அது தானாகவே “கழுகுகளைப் போலச் செட்டைகளை அடித்து எழும்புகிறது”.தாயின் முதுகில் பயணம் செய்வதைவிட, சொந்தச் செட்டைகளால் பறப்பது கிளர்ச்சியளிக்கக் கூடியது என் தன் பதைக் கழுகுக் குஞ்சு புரிந்து கொள்கிறது.

இந்தக் கழுகுக் குஞ்சுகளைப் போல நாமும் “செட்டைகளை அடித்து எழும்புவதற்காக” ஊழியத்துக்கான தேவனுடைய அழைப்புக்குச் செவி சாய்க்கிறோம். இது ஓர் அற்புத கருத்து என்று நாம் நினைக்கிறோம். விரைவிலேயே நாமும்கூட “மேலே பறப்போம்”. ஆனால் நம்மை ஆயத்தப்படுத்துவதிலும், பயிற்சி யளிப்பதிலுமுள்ள கவலைகளையும், வேதனைகளையும், துன்பங்களையும் தேவன் கருணை கூர்ந்து நம்மிட மிருந்து மறைத்து விடுகிறார். இதற்கு நாம் என்ன கிரயம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்வதில்லை.

நாம் உலகப்பிரகாரமான பணி யிலோ அல்லது செயல்களிலோ அசௌகரியமான சூழ்நிலைகள் அதிகரிக்கும்படி தேவன் அனுமதிக்கி றார். இதனால் ஏற்படும் வேதனை நம்மை முழுவதுமாக தேவனுக்கு ஒப்படைக்கும்படி செய்து, நாம் வேதாகமப் பள்ளிக்கோ அல்லது கல்லூரிக்கோ செல்ல முன்வரும்படி ஏவுகிறது.

நாம் படிப்பில் தேர்ச்சி பெறும் போது, உடனடியாக வெற்றியும், மகிமையும் கிடைக்குமென்ற எதிர் பார்ப்புடன் தி நம்பிக்கையுள்ளவர்களாகச் செயல்புரியத் துவங்குகிறோம். சிறிது காலம் காரியங்கள் நலமாக நடக்கின்றன; திடீரென்று எதிர்பாராத வகையில் அடித்தளமே ஆட்டம் கொடுக் கிறது. சகோதரர்களுக்கும் சகோதரிக ளுக்கும் இடையே பிரச்சினைகள் உருவாகுகின்றன. அனைத்துமே தவ றாகத் துவங்குகிறது. நமக்கு நண்பர் களாக இருந்தவர்கள் இப்போ தெல்லாம் நம்மோடு நெருக்கமாக இருப்பதில்லை.”தோல்விபெறும் ஒருவரோடு இருப்பதாக அறியப் பட வேண்டாம்” என்பதற்காகவே அவர்கள் விலகிவிட்டார்கள் என் பதை நாம் அறிகிறோம். உங்க ளுக்கும் இப்படிப்பட்டவை நேரிட் டுள்ளதுபோலத் தோன்றுகிறதல்லவா?

நடப்பது என்ன? நாம் பறக்கக் கற்றுக்கொண்டிருக்கிறோம். இந்தத் துன்பங்களும் இடுக்கண்களும் நாம் விசுவாசத்தில் வளர்ச்சியடையும் படியும் பரிசுத்த ஆவியானவரை இன்னுமதிகமாகச் சார்ந்திருக்கும் படியும் நம்மை உந்தித் தள்ளு கின்றன. அனைத்து இடுக்கண் களையும் மேற்கொள்ள நாம் கற்றுக் கொள்கிறோம். பவுல் அப்போஸ் தலன் கூறியது போல நாம் “திராணி யுள்ளவர்களாக நிற்பதற்குக்” கற்றுக் கொள்கிறோம். நம்மைச் சுற்றிலும் ஒவ்வொன்றாக விழுந்து கொண்டி ருக்கும்போது, நமது கன்மலை யாகிய இயேசு கிறிஸ்துவின்மீது நிற்கக் கற்றுக் கொள்கிறோம்.

[su_heading size=”24″ align=”left” id=”H2″]Pdf file Download Section[/su_heading] 

[su_button id=”download” url=”https://www.mediafire.com/file/z41t5fa6y15mv0p/நம்மைப்+பரீட்சைபார்ப்பதும்+சோதிப்பதும்+யார்.pdf/file” target=”blank” style=”3d” size=”9″ wide=”yes” center=”yes” radius=”round” icon=”icon: download”]Download PDF Now[/su_button]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *