தேவன் ஏன் நம்மைப் பரீட்சை பார்க்கவும், சோதிக்கவும் செய்கிறார்

தேவன் ஏன் நம்மைப் பரீட்சை பார்க்கவும் சோதிக்கவும் செய்கிறார்?

தேவன் ஏன் நம்மைப் பரீட்சை பார்க்கவும் சோதிக்கவும் செய்கிறார்?

1. நெருக்கம் விசாலத்தை உண்டாக்குகிறது

 “நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர்” (சங்.4:1). தனது வாழ்க்கையின் மாபெரும் வீழ்ச் சிக்குப் பிறகு, பத்சேபாளுடன் தனது விபசாரமும், கொலை செய்யத் தூண்டியதுமான உறவுக்குப் பிறகு (2சாமு.11 அதி) தாவீது எழுதிய சங்கீதம் இது.

அவனது பாவத்தின் காரணமாக தேவன் கடுமையான நியாயத்தீர்ப் புக்குத் தாவீதை உள்ளாக்கினார். இவற்றில் ஒரு தண்டனை அவனது சொந்தக் குமாரனாகிய அப்ச லோமின் கைகளிலிருந்தே கிடைத் தது; அவன் அரியணையைப் பிடித் துக் கொண்டு, தாவீது நாட்டை விட்டு வெளியேறி அலையும்படி செய்தான். தாவீது தனது உயிர் பிழைக்கும்படி ஓட வேண்டியிருந்த படியினாலும், மோசமான அவமரி யாதைகளை அனுபவிக்க வேண்டி யிருந்தபடியினாலும் இவை அவ னுக்கு “விசாலத்தை அளித்தன.

தாவீதுக்கு வந்த பிரச்சினைகள் அவனது சொந்தக் கிரியைகளின் காரணமாக ஏற்பட்டிருந்தாலும், இந்த நியாயத்தீர்ப்பு வேளைகளை, அடுத்து வரும் பணிகளுக்காக அவனை இன்னும் சிறப்பான மனித னாக்கும்படி தேவன் பயன்படுத்திக் கொண்டார். நாம் நமது தோல்வி களை ஒப்புக்கொண்டு, நமது பாவங் களைக் குறித்து வருந்தி, அவற்றை விட்டுத் திரும்புவோமானால், தொடர்ந்துவரும் அடிகள் மற்றும் பாடுகளை, நம்மை இன்னும் சிறந்த தலைவர்களாக்குவதற்கு தேவன் பயன்படுத்திக் கொள்கிறார்.

2.சோதனைகள் நிரூபணத்தைப் பெறுகின்றன, நம்மைத் தாழ்மைக்கு உள்ளாக்குகின்றன.

நாம் அவரை நேசிப்பதினால் அவருக்கு ஊழியம் செய்கிறோமா அல்லது அவர் நமக்களிக்கும் அனைத்து ஆசீர்வாதங்களுக்காக அவருக்கு ஊழியம் செய்கிறோமாஎன்பதை அறிந்துகொள்ள தேவன் விரும்புகிறார். சிலர் தம்மை “அப்பங் களுக்காகவும் மீன்களுக்காகவுமே” (அதாவது, அவரை நேசிப்பதினால் அல்ல, அவரிடமிருந்து என்ன பெற்றுக் கொள்ள முடியும் என்பதற் காகவே) பின்பற்றினார்கள் என் பதை இயேசுவானவர் கண்டறிந்தார்.

இஸ்ரவேல் மக்களை எகிப்தி லிருந்து வெளியே கொண்டுவர தேவன் செய்த கிரியைகளை மோசே விவரிக்கிறார்: “உன்னுடைய பின் நாட்களில் உனக்கு நன்மை செய்யும் பொருட்டு, உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைச் சோதித்து, கொள்ளிவாய்ச் சர்ப்பங்களும் தேள்களும், தண்ணீ ரில்லாத வறட்சியுமுள்ள பயங்கரமான பெரிய வனாந்தரவழியாய் உன்னை அழைத்துவந்தவரும், உனக்காகப் பாறையான கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணினவரும்,

“உன் பிதாக்கள் அறியாத மன்னா வினால் வனாந்தரத்திலே உன்னைப் போஷித்து வந்தவருமான உன் தேவனாகிய கர்த்தர்….” (உபா. 8:15,16).

தேவன் ஏன் இவ்வளவு கடுமை யான பரீட்சைகளையும், சோதனை களையும் அனுமதித்தார்? “உன்னு டைய பின்நாட்களில் உனக்கு நன்மை செய்யும் பொருட்டு…”. தேவன் ஒரு போதகரையோ அல்லது சபையையோ விசாலமாக்கி, ஆசீர் வதிக்கத் திட்டமிடும்போது, அவர் களை அவநம்பிக்கையின் ஆழத்துக் குள்ளும், நம்பிக்கையிழந்த சூழ்நிலை களின் உளைக்குள்ளும் இட்டுச் செல்கிறார். ஏன் அவர் இவ்வாறு செய்கிறார்? “என் சாமர்த்தியமும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை (மேன்மையை) எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக் கொள்ளாமலும்” இருப்பதற்காகவே (உபா.8:17).

தேவன் விசாலத்தை அளிக்கும் போது, பெரும்பாலும் பெருமை உள்ளே நுழைந்துவிடுகிறது; நமது சொந்த அறிவுத்திறன் அல்லது ஈவு களின் காரணமாகவே நாம் இத் தகைய ஆசீர்வாதங்களை அனுபவிக் கிறோம் என்று நினைக்க முற்படு கிறோம். பெருமையிலிருந்து நம்மைக் காப்பாற்றும் தேவனுடைய இரக்கத்தின் காரணமாகவே, பெரிய விசாலத்துக்கும் ஆசீர்வாதத்துக்கும் முன்பாக நாம் கடினமான வேளை களைச் சந்திக்கும்படி அவர் அனுமதிக்கிறார்.

யோபுவின் வாழ்க்கையிலும் இதுவே நிகழ்ந்தது. “நீர்… அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர்; அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று. ஆனாலும் உம்முடைய கையை நீட்டி அவனுக்கு உண் டானவையெல்லாம் தொடுவீ ரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு நேரே உம்மைத் தூஷிக் கானோ பாரும்” என்று சாத்தான் தேவனிடம் கூறினான். யோபுவுக் குரிய அனைத்தையும் எடுத்துக் கொள்ள தேவன் சாத்தானுக்கு அனுமதியளித்ததின்மூலம் அவனது சவாலை ஏற்றுக்கொண்டார்.

சாத்தான் யோபுவின் மந்தை களையும், அவனது பிள்ளைகளை யும் கொன்றுபோட்டு, அவனது உடமைகள் அனைத்தையும் அழித்த போது, யோபு என்ன செய்தான்? யோபு “தரையிலே விழுந்து பணிந்து” கொண்டான் (யோபு 1:20). சாத் தானின் குற்றச்சாட்டுகள் பொய் யென்றும், தேவன்மீது அவன் கொண்டிருந்த அன்பு மெய்யான தென்றும் யோபு நிரூபித்தான். அவனது மிருகங்களும், வீடுகளும், பிள்ளைகளும், உடமைகளும் அவனை விட்டு எடுக்கப்பட்ட பின்னரும் அவன் தேவனையே பணிந்து கொண்டான். “அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன்” (யோபு 13:15) என்று யோபு கூறினான்.

இறுதியில் தேவன் யோபுக்குரிய அனைத்தையும் இரண்டத்தனை யாகத் திரும்பக் கொடுத்தார் (யோபு 42:10). கடுமையான பரீட்சை மற்றும் சோதனைகளின் வேளைகளிலும் தான் தேவனுக்கு உண்மையுள்ள நண்பனாக இருப்பதை நிரூபித்ததின் மூலம் யோபு இரண்டத்தனையான பங்கைப் பெற்றுக் கொண்டான்.

“…கர்த்தருடைய நாமத்தினாலே பேசின தீர்க்கதரிசிகளைத் துன்பப் படுதலுக்கும் நீடிய பொறுமைக்கும் திருஷ்டாந்தமாக வைத்துக் கொள் ளுங்கள்…. யோபின் பொறுமையைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக் கிறாரே” (யாக். 5:10,11).

3. பாடுபடுதல் நமக்குள் தேவனுடைய வல்லமையை அதிகரிக்கக் கூடும்

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் தேவனுடைய வல்லமைக்காக வேண்டிக் கொள்வீர்களானால், அதைப் பெறுவதற்குத் தேவை யானது எது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். “வழியிலே என் பெலனை ஒடுக்கி…” (சங். 102:23) என்று கூறினார் தாவீது. தேவ னுடைய வல்லமைக்காக நீங்கள் கேட்கும்போது அவர், “உண்மை யிலேயே நீ அதைக் கேட்கிறாயா? அப்படியானால் உன் பெலன் ஒடுக் கப்பட (தேவனை முற்றிலுமாகச் சார்ந்திருக்க)வும், அதோடு கூட வரும் வேதனை, பரீட்சைகள் மற்றும் சோதனைகள் இவற்றையும் ஏற்றுக் கொள்ள விருப்பமுள்ளவனாயிரு. அப்போது நான் என் வல்லமையை அருளுவேன்” என்று கூறுகிறார்.

a. பவுல் அப்போஸ்தலனின் அனுபவம். 

“…என்னைக் குறித்து என் பலவீனங்களிலேயன்றி வேறொன்றிலும் மேன்மைபாராட்ட மாட்டேன்… அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப் பட்டவைகளுக்குரிய (பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவது பற்றிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு (பெருமை கொள் ளாதபடிக்கு), என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக் கிறது.

“அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு, நான் மூன்று தரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன். அதற்கு அவர்: என் கிருபை (செயல் திறனளித்தல்) உனக்குப் போதும்; பலவீனத்திலே என் பலம் (வல்லமை) பூரணமாக விளங்கும் என்றார்.”

‘ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக் குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன். அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும் போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தை களிலும், நெருக்கங்களிலும், துன்பங் களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்” (2கொரி. 12 :5,7-10).

ஒரு தலைவனின் வாழ்க்கையில் வரும் பரீட்சைகள் மற்றும் சோதனைகள் இவற்றைப் பற்றி அநேக முக்கியமான பாடங்களைப் பவுல் அப்போஸ்தலன் போதிக் கிறார். அவற்றுள் சில:

1) பெருமையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். 

நமது ஜெப வேளைகளில் கிடைக்கும் பயனுள்ள ஆவிக்குரிய அனுபவங் கள் நம்மைப் பெருமைகொள்ளும் படி செய்யக் கூடும்.

2) தேவனையே சார்ந்திருங் கள். 

தேவன் நமது அசௌகரி யத்தைவிட நமது குணநலனையே முக்கியமாக மதிக்கிறார். நமது பெருமை குட்டப்பட வேண்டி யிருக்குமானால், நம்மைப் பெலவீன ராக்கும்படி அவர் சாத்தானின் தூது வனை அனுப்புகிறார்; இதனால் நாம் தேவனையே சார்ந்திருப்போம்.

3) சோதனைகளில் களிகூருங்கள். 

தாழ்மை மற்றும் பெலவீனத் தின்மூலம் மட்டுமே தேவனுடைய வல்லமை நமது வாழ்க்கையில் வெளிப்பட முடியும். எனவே, உபத்திரவங்கள், கடினங்கள், மற்றும் பாடுகள் இவற்றின் விளைவாக நமக்குள் தேவனுடைய வல்லமை யும் மகிமையும் வெளிப்படுத்தப் படும் என்பதை நாம் அறிந்திருக் கிறபடியால், நாம் அவற்றில் களிகூர முடியும்.

வல்லமையும், மகிமையும், ஆவியானவரின் ஜீவனும் நம் மூல மாக வெளிப்படுத்தப்படுவதை நாம் நாடத் துவங்கும்போது, நாம் எதிர் பார்க்கும் வகையில் நமது வேண்டு கோளுக்கு தேவனிடமிருந்து பதில் வருவதில்லை. நாம் பொறுமைக்காக ஜெபிக்கும்போது, அவர் உபத்திர வங்களை அனுப்புகிறார். ஏன்? ஏனென்றால், “உபத்திரவம்….. பொறுமையை உண்டாக்கும்” (ரோமர் 5:3).

அவர் நமது ஜெபத்துக்குப் பதலளிக்கிறார், ஆனால் நாம் நினைக்கும் வகையில் அல்ல! இந்த அடிக்குக் காரணம், “தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும்” (பிலி. 2:13) நம்மில் உண்டாக்கிக் கொண் டிருக்கிறார் என்பதே என்று நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.

4. பாடுகள் அழைக்கப்பட்டவர் களிலிருந்து தெரிந்து கொள்ளப்பட்டவர்களைத் தனியே பிரிக்கிறது.

“….உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்துகொண்டேன்” (ஏசாயா 48:10). இந்த வசனத்தில் “தெரிந்துகொள்ளுதல்” என்ற சொல், பள்ளித் தேர்வுகளில் “மதிப் பிடப்படுதல்” என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நாம் பள்ளித் தேர்வுகளை எழுதும்போது, எவ்வாறு எழுதி யிருக்கிறோம் என்பதைக் குறித்து ஆசிரியர்களால் “மதிப்பிடப்படு கிறோம்’ (மதிப்பெண் பெறு கிறோம்). நாம் தேர்ச்சியடைவதற் கான மதிப்பெண்ணைப் பெறும் போது, அடுத்த வகுப்புக்கு அல்லது தகுதி நிலைக்கு உயர்த்தப்படு கிறோம்; இது எப்போதுமே முந்தைய நிலையைவிடக் கடினமாகவும், சவால்விடக் கூடியதாகவுமே இருக்கும்.

எனக்குத் தேர்வுநிலை மதிப் பெண் கொடுக்கலாமா அல்லது கூடாதா என்பதை தேவன் எவ்வாறு முடிவு செய்கிறார்? அவர் எனது செய்கையை உபத்திரவத்தின் குகை யிலே இட்டுச் சோதிக்கிறார். சோதனைகளையும், ஏமாற்றங்களை யும் எவ்வாறு எதிர்கொள்கிறேன் என்பதை வைத்து நான் மதிப் பிடப்படுகிறேன். அதிக அழுத்த மான மற்றும் கடினமான சூழ்நிலை களில் நான் எவ்வாறு செயல் படுகிறேன் என்பதை தேவன் கவனிக் கிறார். நான் பொருத்தமான முறை யில் எதிர்கொள்வேன் என்றால், “நல்லது என் உத்தமும் உண்மை யுள்ள ஊழியக்காரனே, நீ இப்போது அடுத்த தகுதி நிலைக்குச்

செல்ல, கடினங்களின் அடுத்த கட்டத்துக்குச் செல்ல ஆயத்தமாக இருக்கிறாய்” என்று அவர் கூறுகிறார்.

தேவனுக்காக ஊழியம் செய் வது தொடர்ந்த உபத்திரவங்களாக இருக்குமென்றோ, இளைப்பாறு தலோ, இடைவேளையோ அல்லது பலனோ இல்லாத வேலையாக இருக்குமென்றோ கூற நான் முன்வர வில்லை. அவரது ஊழியத்துக்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப் பவர்களுக்கு அவரது கிருபையின் மூலம் மேன்மையான ஆசீர்வாதங் கள் கிடைக்கின்றன. ஆனால் நாம் கற்றுக் கொள்வதிலும், வளர்ச்சி யடைவதிலும் முன்னேறும்போது, அவர் இன்னும் கடினமான பணி களை நமக்குக் கொடுக்கிறார்; தொடர்ந்து நம்மைச் சோதிக்கிறார்; மதிப்பிடுகிறார்; தெரிந்துகொள்கிறார்.

அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர்” (மத். 20:16). ஏன் சிலர் மட்டுமே தெரிந்து கொள்ளப்படுகிறார்கள்? நாம் உபத்திரவத்தின் குகையிலே மதிப்பிடப்படுவதால், நம்மில் ஒரு சிலர் மட்டுமே தலைவனுக்குரிய தேர்வில் தேர்ச்சியடைகிறோம்.

தன்னோடுகூட போருக்குச் செல்ல ஆண்டவராகிய இயேசுவின் அனுமதியைப் பெறுபவர்களைப் பற்றி வெளிப்படுத்தலின் நூலில் வல்லமையான அறிக்கை கொடுக்கப் பட்டுள்ளது. “இவர்கள் ஆட்டுக் குட்டி யானவருடனே யுத்தம்பண்ணுவார்கள்… அவரோடுகூட இருக்கிறவர்கள் அழைக் கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப் பட்டவர்களும் உண்மையுள்ளவர் களுமாயிருக்கிறார்கள்” (வெளி.17:14).

மூன்று தகுதிகள் மிகவும் அவசியமாகத் தேவைப்படுகின்றன. முதலில் நீங்கள் அழைக்கப்பட வேண்டும், பிறகு தெரிந்து கொள்ளப்பட வேண்டும்; பின்னர் உங்களை நீங்களே உண்மையுள்ள வர்களாக நிரூபிக்க வேண்டும். பாடுகளும், சோதனைகளும், உபத் திரவங்களும் இவர்களுக்கு வரத் தான் செய்யும். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் அவருக்காக ஆபத்து களைச் சந்திக்க வேண்டியிருந்தா லும், தாங்கள் தெரிந்து கொள்ளப்படத் தகுதியுள்ளவர்கள் என்பதை நிரூபித்தார்கள்; தேவ னுக்கு உண்மயுள்ளவர்களாக நிலைத்து நின்றார்கள்.

5.பாடுபடுதல் கீழ்ப்படிதலைப் போதிக்கிறது

“அவர் குமாரனாயிருந்தும் பட்ட பாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக் கொண்டு….” (எபி. 5:8).

“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூரு கிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக் கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார்… எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளை களாயிருப்பீர்களே” (எபி. 12:6,8).

“…மாம்சத்தில் பாடுபடுகிறவன் இனி மாம்சத்திலிருக்கும் காலம் வரைக்கும் மனுஷருடைய இச்சைகளின்படி பிழைக் காமல் தேவனுடைய சித்தத்தின்படியே பிழைக்கத்தக்கதாகப் பாவங்களை விட்டோய்ந்திருப்பான்.

“ஆதலால் உங்களில் ஒருவனும் கொலைபாதகனாயாவது, திருடனா யாவது, பொல்லாங்கு செய்தவனாயாவது, அந்நிய காரியங்களில் தலையிட்டுக் கொண்டவனாயாவது பாடுபடுகிறவனா யிருக்கக் கூடாது.

“ஆகையால் தேவனுடைய சித்தத் தின்படி பாடனுபவிக்கிறவர்கள் நன்மை செய்கிறவர்களாய்த் தங்கள் ஆத்துமாக் களை உண்மையுள்ள சிருஷ்டி கர்த்தா வாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கக் கடவர்கள்” (1பேதுரு 4 :1,2,15,19).

வேதனையின்றி, ஆதாயம் பெற வும், பாடுபடுதலோ தண்டிக்கப் படுதலோ இல்லாமல் கற்றுக் கொள்ளவும் ஒரு வழி இருந்தால் நலமாக இருக்குமென்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு; ஆனால் அப்படியொரு வழி இல்லை.

ஒரு சக்தி வாய்ந்த ஊழியம் உருவாக ஆதாரமான வேதனைகள் இல்லாமலே அத்தகைய ஊழியத்தைப் பெற்று அனுபவிக்க நாம் விரும்புகிறோம். இயேசுவான வரையே பூரணப்படுத்த தேவன் வேதனையான பாடுகளைப் பயன் படுத்தினார் என்றால், நமது வாழ்க் கையில் அவர் எவ்வளவாக துன்பங் களைப் பயன்படுத்துவார்?

எனவே நாம் தேவனுடைய ஒழுங்குபடுத்துதலைக் களிப்புடன் ஏற்றுக்கொள்வோமாக. இதன்மூலம் நாம் வேசிப்பிள்ளைகளல்ல, அவ ரது சொந்தப் பிள்ளைகளே என் பதை அறிந்து கொள்கிறோம் அல்லவா?

[குறிப்பு: பவுல் பவுல் அப்போஸ் தலன் ஆவிக்குரிய உணர்வோடு தான் இதைப் பயன்படுத்துகிறார். நியாயப்பிரமாணத்தின்படி, வேசிப் பிள்ளைகள் ஆசாரிய ஊழியத் துக்கோ அரச ஊழியத்துக்கோ உரிமையுடையவர்களாக ஆக மாட் டார்கள் (உபா. 23:2). புதிய ஏற்பாட்டின் கிருபை விதிகளின்படி மண உறவுக்கு அப்பாற்பட்டவர் களாகப் பிறந்தவர்களும் மற்ற வர்களைப் போலவே மதிக்கப்படு கிறார்கள்.]

6.சோதனைகள் பொறுமையையும், முதிர்ச்சியையும் உருவாக்குகின்றன

“என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். நீங்கள் ஒன்றிலும் குறை வுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறை வுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது” (யாக். 1 :2-4).

தேவனுடைய சித்தத்துக்குக் கீழ்ப்படிய வேண்டுமானால் பாடு களையும், சோதனைகளையும் சந்திக்க வேண்டியிருப்பதால் அநேக தலைவர்கள் விலகிச் செல்வது போலத் தோன்றுகிறது. வரவிருக்கும் கடுமையான பரீட்சை யிலிருந்து தப்பிச் செல்ல முய லாமல் நாம் அவற்றைக் களிப்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று யாக்கோபு போதிக்கிறார்.

“நீங்கள்…. பூரணராயும் நிறைவுள்ள வர்களாயும் இருக்கும்படி, பொறுமை யானது பூரண கிரியை செய்யக்கடவது” என்பதைக் கவனியுங்கள். நம்மால் முதிர்ச்சியடைவதைத் துரிதப்படுத்த முடியாது என்பதே இதற்குப் பொருள். கடுமையான பரீட்சைகள் உடனடி விளைவுகளை உண் டாக்குவதில்லை. கடுமையான பரீட்சைகள் வரும்போது நாம் அவற்றை ஏற்றுக்கொள்வதோடு மட்டுமின்றி, பொறுமையுடன் அதைத் தாங்கிக் கொள்ளவும் வேண்டும்.

a.கூட்டுப் புழுவும் வண்ணத்துப் பூச்சியும். 

மரத்திலிருந்து விழுந்து விட்டிருந்த ஒரு கூட்டுப் புழுவை ஒருவன் கண்டான். அந்தக் கூட்டிலிருந்து வண்ணத்துப் பூச்சி வெளிவந்து கொண்டிருப்பதை அவன் கவனித்தான். கிட்டத்தட்ட நாற்பத்தைந்து நிமிடங்களாக அது வெளியே வர முயன்று கொண்டிருந் தது. இவ்வளவு நேரம் சென்ற பின்னரும் அதன் தலையும், ஒருபக்க இறக்கையும் மட்டுமே வெளியே வந்திருந்தது.

அந்தப் பாடுபடும் வண்ணத்துப் பூச்சி விரைவாக வெளியேறத் துணை புரியும் நோக்கத்தில் அவன் ஒரு கூர்மையான கத்தியைக் கொண்டு கூட்டின் மறுபாதியைக் கிழித்து விட்டான். பூச்சி வெளியே வந்தது. ஆனால் அது சிரமப்பட்டு வெளி யேற்றிய பகுதி மட்டுமே முதிர்ச் சியைப் பெற்றிருப்பதைக் கண்டு அவன் வியப்படைந்தான். அவன் விடுவித்த மறு பாதி இன்னமும் முதிர்ச்சியடையவில்லை; கூட்டுக்கு வெளியேயிருந்த சுற்றுச் சூழலைச் சந்திக்க ஆயத்தமாகவும் இல்லை.

அந்தக் கூட்டுப் புழு ஒரு வண்ணத்துப் பூச்சியாக உருவாக உதவுவதற்குப் பதிலாக, அவன் அதனுடைய வளர்ச்சிப் படியையே குலைத்து விட்டான். அரைகுறை வளர்ச்சியைப் பெற்றிருந்த அந்த வண்ணத்துப் பூச்சி விரைவிலேயே இறந்துபோய் விட்டது.

சபைத் தலைவர்களாகிய நாமும் கூட இதே குற்றத்தைப் புரிந்திருக்கி றோம். சிரமத்துடன் போராடும் சகோதரர்களை நாம் காண்கிறோம். அவர்களுக்காக வருத்தப்படும் நாம் அவர்களுக்கு உதவி செய்ய முயலு கிறோம்; ஆனால் சிறிது காலம் கழித்து அவர்கள் மறுபடியும் அதே பிரச்சினையில் விழுந்து போவ தையே காண்கிறோம். ஆனால் அவர் களை இன்னும் கொஞ்சக் காலம் வேதனைப்படவும், தேவன் அவர் களுக்கு போதிக்க முயலும் பாடத்தை அவர்கள் கற்றுக் கொள்ளவும் விட்டுக் கொடுத்திருந் தோமானால், அது அவர்களுக்கும் திருச்சபைக்கும் நலமானதாயிருந் திருக்கும்.

b. சோதனைகளுக்கான மூன்று காரணங்கள். 

இத்தகைய சூழ்நிலைகளில் தவறான வேலை யிலும், தவறான போக்கிலும் எடுக் கப்படும் எந்த முயற்சியும், தேவ னுடைய கிரியைகள் நிறைவுபெறுவ தற்கு இடையூறாகிவிடும். கடுமை யான சோதனையின் மத்தியில் எவரேனும் கண்ணீரோடு நம்மிடம் வரும்போது, அந்தச் சோதனை கீழ்க்கண்ட எந்தக் காரணத்தால் ஏற்பட்டது என்பதைக் கண்டறியும் ஞானத்துக்காக ஜெபிக்க வேண்டும்.

  • தேவனுடைய நடவடிக் கைகள்
  • அவர்கள் தங்களுக்குத் தாங்களே வருவித்துக் கொண்ட, சுய தூண்டுதலால் ஏற்பட்ட துன்பம் அல்லது
  • தேவனுடைய சித்தத்திற்கு உட்படாத சாத்தானின் தாக்கு தல்கள்

c.சோதனைகளை எவ்வாறு எதிர்கொள்ளுவது?

1) அது தேவனுடைய நட வடிக்கையாக இருந்தால்: 

 ஒப்புக் கொடுங்கள். அது தேவனுடைய நடவடிக்கையாக இருந்தால், “தேவனுக்குக் கீழ்ப்படிந்திருக்க” (யாக். 4:7) அவர்களுக்கு உதவுங்கள். அந்தச் சோதனையினூடே வெற்றி கரமாகக் கடந்துசெல்ல தேவ னுடைய கிருபையைப் பெறும்படி உதவுங்கள்.

2) அது சுய தூண்டுதலால் ஏற் பட்டதாக இருந்தால்: 

கற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் தங்க ளுக்குத் தாங்களே வருவித்த பிரச்சினைகளிலிருந்து கற்றுக் கொள்ள அவர்களுக்கு உதவுங்கள்.

3) அது சாத்தானின் தாக்கு தலாக இருந்தால்: 

எதிர்த்துப் போரிடுங்கள். அது தேவனுடைய சித்தத்திற்கு அப்பாற்பட்ட சாத் தானின் தாக்குதலாக இருந்தால், அவற்றுக்காக போரிட்டு சாத் தானை எதிர்த்து நில்லுங்கள். “அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஒடிப்போவான்” (யாக். 4:7).

7. துன்பங்கள் தேவனுடைய வார்த்தையில் நமக்குள்ள விசுவாசத்தைச் சோதிக்கின்றன

“தேவனுடைய வசனமெல்லாம் புட மிடப்பட்டவைகள்….” (நீதி. 30:6). “கர்த்தருடைய சொற்கள் மண்குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக் கொப்பான சுத்த (சுத்திகரிக்கப்பட்ட) சொற்களாயிருக்கிறது” (சங். 12:6).

இந்த வசனங்களை சங்கீதம் 105:19 வசனத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள். “கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும ளவும், அவருடைய வசனம் அவனைப் (யோசேப்பைப்) புடமிட்டது.”

போத்திபாரின் இச்சைக்கு யோசேப்பு இணங்க மறுத்தபடியால், அவன் பத்து முதல் பன்னிரெண்டு ஆண்டு களை எகிப்திய சிறைச்சாலையில் கழித்தான். அவன் அவளோடு தவ றான செயலுக்கு முயன்றான் என்று அவள் பொய்யாகக் குற்றஞ் சாட்டி னாள். இதனால், யோசேப்பு பல ஆண்டுகளை நீதிக்காகத் துன்பப் படுவதில் கழிக்க வேண்டியிருந்தது.

அவனை ஆளுகை செய்பவனாக ஆக்குவதாக தேவன் வாக் களித்திருந்தார். இத்தகைய ஒரு வாக்குத்தத்தத்தைப் பெற்றிருந்த ஒரு தலைவன் பத்து அல்லது பன்னி ரெண்டு ஆண்டுகளைச் சிறையில் கழிக்க வேண்டியிருந்ததால் அவ னுடைய நிலைமை எப்படியாகும் என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? என்னுடைய நிலைமை எப்படியாகும் என்பதை நான் அறிந்திருக்கிறேன். நம்பிக்கை யையே இழந்துபோகக் கூடிய வகையில் அது எனக்கு ஏமாற் றத்தையும், கலக்கத்தையுமே கொண்டுவந்திருக்கும். என்றாலும், யோசேப்பு இப்படிப்பட்டதொரு சூழ்நிலைக்கு உட்பட தேவன் ஏன் அனுமதித்தார்? அவனுக்குரிய தேவ னுடைய வார்த்தை “மண்குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிட்ட வெள்ளிக் கொப்பான சுத்த சொற்களாயிருப்பதற்காகவே” (சங். 12:6)

தேவனிடமிருந்து வழிமுறை களைக் கேட்டதின் விளைவாக மாபெரும் தேவ மனிதர் ஒவ்வொரு வரும் கடுமையான சோதனையைச் சகிக்க வேண்டியிருந்தது. தேவன் கூறியதைச் செயல்படுத்தும் முயற் சிக்காக அவர்கள் அதிகக் கிர யத்தைச் செலுத்த வேண்டியிருந்தது.

a. நோவா. 

ஒரு பெரிய பேழையைக் கட்டும்படி நோவா வுக்குக் கட்டளை கொடுக்கப்பட்டது. இதன் விளைவாக அவன் மக்களின் நிந்தனைகளையும், கேலி யையும் சகிக்க வேண்டியிருந்தது. அவன் குடும்பத்தாரும், சில உயிரினங்களும் மட்டுமே காப்பாற்றப்பட்டார்கள்.

b. ஆபிராம். 

“நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான ஜாதி களுக்குத் தகப்பனாவாய். இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும்” (ஆதி. 17:4,15) என்ற வாக்குத்தத்தம் ஆபிராமுக்குக் கொடுக்கப்பட்டது. அண்மையில் இருந்தவர்கள் ஆபிர காமை எவ்வளவாகக் கேலி செய்து நகைத்திருப்பார்கள் என்பதை உங்க ளால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? “”திரளான ஜாதிக்குத் தகப்பனே’ உனக்கு எத்தனை பிள்ளைகள் இருக்கிறார்கள்?* என்று எள்ளி நகையாடியிருப் பார்கள். ஆபிரகாம் மௌனமாகத் தலையைக் குனிந்து கொள்ள வேண்டியிருந்திருக்கும். ஏனென்றால் அவனுக்குப் பிள்ளைகளே கிடை யாது. “நீ திரளான ஜனங்களுக்குத் தகப்பனாக ஆவோம் என்று நினைப்பதாகக் கேள்விப்பட்டோம். இப்போதே உனக்கு 99 வயதாகி விட்டது. எப்போது இது நடை பெறப் போகிறது?” என்று கேலி யாகக் கேட்டிருப்பார்கள். ஆபிர காமால் பதிலளிக்க முடியாமல் போயிருந்திருக்கும். “தேவனிடமிருந்து வார்த்தை”யைப் பெற்ற ஒவ்வொருவரும் தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கும் நிந்தனையை அவனும் சகித்துக் கொண்டான். நான் கூறுவதை நம்புங்கள். தேவ னுடைய ஒவ்வொரு வார்த்தையும் சோதிக்கப்படுகிறது.

c. மோசே. 

தான் தனது மக் களை எகிப்தின் அடிமைத்தனத்தி லிருந்து விடுவிக்க வேண்டும் என்பதை மோசே அறிந்திருந்தான். அவன் முயன்றபோது, அவனது சொந்த இஸ்ரவேல் சகோதரர்களே அவனுக்கு எதிராகத் திரும்பி னார்கள். அவன் நாற்பது ஆண்டு கள் பாலைவனத்துக்கு விரட்டப்பட்டான்.

இந்த ஆண்டுகளில் மோசேயின் சிந்தனைகள் எப்படியிருந்திருக்கு மென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அவனது தியான வேளைகளில் இப்படிப்பட்ட எண்ணங்களே அவனை வேதனைப்படுத்தியிருக்கு மென்று நான் நினைக்கிறேன். “தேவனே, உமக்குக் கீழ்ப்படியும் எனது முயற்சியில், பார்வோனின் அரியணைக்குரிய எனது உரிமையை யும் விட்டுக் கொடுத்தேன். நான் குறைந்தபட்சம் எகிப்தின் தலைமை அமைச்சராகவாவது இருந்திருக்க முடியும். ஆனால் இதற்கு மாறாக, நான் உமது அழைப்பைப் பின்பற்ற முயன்றேன். இப்போது என் மாம னாரின் கொஞ்சம் ஆடுகளைக் கவனித்துக் கொண்டு, ஒரு நாடோடியைப் போலவும், தள்ளப் பட்டவனைப் போலவும் பாலை வனத்தில் அலைந்து திரிகிறேன். தேவனே, நீர் எனக்கு என்ன செய்து வருகிறீர்?” என்று அவன் நினைத்திருக்கலாம்.

ஒரு தரிசனத்தை நாற்பது ஆண்டுகளாகத் தழுவிக் கொண் டிருந்து, பார்வைக்கு அது ஒரு நாளும் நிறைவேறப்போவதில்லை என்பது போலத் தோன்றினால், அந்த மனிதனின் நிலைமை என்ன வாக இருக்கும் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?

அவனது தன்னம்பிக்கை சிதைந்து போயிருந்ததென்றும், அவன் பேசுவதற்கே திக்கித் திணறி னான் என்றும் நாம் அறிவோம். அவனுக்காக அவன் சகோதரன் ஆரோன் பேசவேண்டியிருந்தது. உள்ளான உணர்வுகளின் கடுமை யான போராட்டமும், வேதனை யும் மட்டுமே இதற்கான காரணமாக இருக்க முடியும்.

நமக்கு நேரமும், இடமும் இருந் திருக்குமானால், தாவீது, நெகே மியா, எரேமியா, யோவான் ஸ்நானன், பவுல் மற்றும் பலரைப் பற்றியும்கூட நம்மால் பார்த்திருக்க முடியும். இவர்கள் ஒவ்வொருவரும் “தேவனுடைய வார்த்தையைக்’ கிடைக்கப் பெற்றிருந்தார்கள். அந்த வார்த்தையின்மீது அவர்கள் கொண்ட விசுவாசத்தின் காரணமாக, தவறாகப் புரிந்துகொள்ளப் படுதல், இடுக்கண்களைப் பெறுதல் போன்ற கடுமையான பரீட்சை களையும், வேதனையான பெரிய சோதனைகளையும் சந்திக்க வேண்டி யிருந்தது.

என் நண்பனே தலைமைப் பொறுப்பைப் பெறுவதற்கு வேறு எந்த வழியும் கிடையாது. “அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோ மானால், அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்” (2தீமோ. 2:12).

பவுல் அப்போஸ்தலன் இவ் வாறு கூறினார்: “இந்தச் சுவிசேஷத் தினிமித்தம் நான் பாதகன் போலக் கட்டப்பட்டு, துன்பத்தை அனுபவிக் கிறேன்; தேவ வசனமோ கட்டப்பட் டிருக்கவில்லை. ஆகையால், தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்து இயேசு வினால் உண்டான இரட்சிப்பை நித்திய மகிமையோடே பெற்றுக்கொள்ளும்படி, சகலத்தையும் அவர் நிமித்தமாகச் சகிக்கிறேன்.

“இந்த வார்த்தை உண்மையுள்ளது; என்னவெனில், நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்; அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடு கூட ஆளுகையும் செய்வோம்;

“நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்; நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்க மாட்டார்” (2 . 2:9-13).

[su_heading size=”24″ align=”left” id=”H2″]Pdf file Download Section[/su_heading]

[su_button id=”download” url=”https://www.mediafire.com/file/7jfk6r6xdfqf0at/தேவன்+ஏன்+நம்மைப்+பரீட்சை+பார்க்கவும்,+சோதிக்கவும்+செய்கிறார்.pdf/file” target=”blank” style=”3d” size=”9″ wide=”yes” center=”yes” radius=”round” icon=”icon: download”]Download PDF Now[/su_button]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *