சோதனையில் நாம்…..?????
பெரிய உபத்திரவங்களின் மத்தியிலும் ஆக்கபூர்வமான மனோ பாவத்தைக் கொண்டிருப்பதே, வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க் கைக்குத் திறவுகோலாகும். “கிறிஸ்து வுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றி சிறக்கப்பண்ணுகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” (2 கொரி. 2:14).
1.ஒவ்வொரு சோதனையிலும் தேவனுடைய கரத்தை அங்கீகரியுங்கள்
பவுல் அப்போஸ்தலன் வெறும் கொள்கையளவில் இந்த வார்த்தை களை எழுதவில்லை. அவர் கூறு வதை அவரே அனுபவித்துச் செயல்படுத்தியிருக்கிறார்.
பிலிப்பி பட்டணத்தில் அவர் ஒரு பெண்ணை ஆட்கொண்டிருந்த பிசாசை விரட்டியடித்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள். இதன் விளை வாக, “அப்பொழுது ஜனங்கள் கூட்டங்கூடி, அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள். அதிகாரிகள் அவர்கள் வஸ்திரங்களைக் கிழித்துப்போடவும், அவர்களை அடிக்கவும் சொல்லி; அவர்களை அநேக அடிஅடித்தபின்பு, சிறைச்சாலையிலே வைத்து அவர்களைப் பத்திரமாய்க் காக்கும்படி சிறைச்சாலைக்காரனுக்குக் கட்டளையிட்டார்கள். அவன் இப்படிப் பட்ட கட்டளையைப் பெற்று, அவர் களை உட்காவலறையிலே அடைத்து, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் மாட்டி வைத்தான்.
“நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம் பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்; காவலில் வைக்கப் பட்டவர்கள் அதைக் கேட்டுக் கொண் டிருந்தார்கள்” (அப். 16:22-25).
தேவன் தமது வாக்குத்தத்தத்தில் உண்மையுள்ளவராக, பவுலையும் சீலாவையும் “இரட்சணியப் பாடல்கள் சூழ்ந்து கொள்ளும்படி” (சங். 32:7) செய்தார்.
அவர்கள் தங்கள் “இரட்சணியப் பாடல்களைப் பாடியதின் விளைவாக நடைபெற்றது என்ன? தேவன் ஒரு நிலநடுக்கத்தை அனுப்பினார்; அது பவுலையும் சீலாவையும் மட்டுமல்ல, அங்கிருந்த அனைத்துக் கைதிகளை யும் விடுவித்தது. சிறைச் சாலை அதிகாரி மனந்திரும்பி, பவுலையும் சீலாவையும் தனது விருந்தாளி களாக வீட்டுக்கு அழைத்துச் சென்றான். இதன் பலனாக, ஒரு வலுவான சபை பிலிப்பியில் உருவாக்கப்பட்டது.
அத்தகைய சூழ்நிலைகளிலும் ஜெபிக்கவும், துதித்துப் பாடவும் பவுலுக்கும் சீலாவுக்கும் கொடுக்கப் பட்டிருந்த கிருபை அற்புதமானதே. நாம் ஆவியானவரில் நடந்து, பரீட்சைகளும் சோதனைகளும் வரும்போது தேவன்மீதோ அல்லது மற்றவர்களின்மீதோ குற்றஞ்சாட் டாமல் இருந்தால், தேவன் உங்க ளுக்கும் எனக்கும்கூட இதையே செய்வார். உங்களுக்கு வரும் ஒவ் வொரு சோதனையிலும் தேவனுடைய கரத்தை அங்கீகரியுங்கள்.
2. தேவனுக்கு விரோதமாக முறுமுறுக்காதிருங்கள்
உங்களுக்கு நேரிடும் சூழ்நிலை களை நீங்கள் எவ்வாறு எதிர்கொள் கிறீர்கள் என்பதைப் பொருத்தே நீங்கள் கசப்படைகிறீர்களா அல்லது நலமடைகிறீர்களா என்பது அமை கிறது. “இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்” (கலா.2:20) என்பதை நீங்கள் உணரவேண்டு மென்று தேவன் விரும்புகிறார்.
நீங்கள் இடுக்கண்களைச் சந்திக்க “கிறிஸ்துவின் மனோ பாவத்தைக்’ கொண்டவர்களாக இருந்து, தேவனை நோக்கி, “தேவனே, இதில் நான் உம்முடைய கரத்தைக் காண்கிறேன். என்னை வடிவமைத்து வருவதற்காகவும், எனக்குப் போதிப்பதற்காகவும் உமக்கு நன்றி, தேவனே” என்று கூறுவீர்களானால், உங்களை வெற்றிக்குள் இட்டுச் செல்லும் சிறப்பான கிருபையை நீங்களும் கூட தேவனிடமிருந்து பெற்றுக் கொள்வீர்கள்.
இஸ்ரவேலர் வனாந்தரத்தில் தோல்வியுற்றதுக்குக் காரணமாக பவுல் அப்போஸ்தலன் ஐந்து பாவங்களைச் சுட்டிக் காட்டினார். இதோ அந்த ஐந்தாவது பாவம்: “அவர்களில் சிலர் முறுமுறுத்து, சங்காரக்காரனாலே அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நீங்களும் முறுமுறுக்கா திருங்கள்” (1 கொரி. 10:10).
3. துன்பங்கள் உங்களுக்காகக் கிரியை செய்வதைக் காணுங்கள்
கிறிஸ்துவுக்காகத் தான் அனுபவித்த சில பாடுகளை எடுத்துக் கூறும்போது பவுல் அப்போஸ் தலன், “அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கன மகிமையை உண்டாக்குகிறது” (2
கொரி. 4:17) என்று கூறியுள்ளார். தனது உபத்திரவங்கள் “தனக் காகக் கிரியை செய்வதை” பவுல் கண்டார்; அதாவது, அவை தேவ னுடைய கட்டளைப்படி செயல் படும் தனது ஊழியர்கள் என்பது போலக் கண்டார். இவை நம் மீது இன்றும் என்றுமான தேவனுடைய அபரிமிதமான ஆசீர்வாதங்கள் வரும்படி கிரியை செய்கின்றன.
அதிக உபத்திரவங்களால் பரீட்சை பார்க்கப்பட்டு, சோதிக்கப் பட்டுச் சோர்ந்து போயிருக்கும் நீங்கள், காணப்படும் இந்தத் துன்பங்கள் விரைவில் முடிந்து விடும் என்பதையும், காணப்படாத நித்திய சந்தோஷம் நிரந்தரமானது என்பதையும் (2கொரி. 4:18) உணர்ந்து கொள்ளுங்கள். தேவன் உங்களை அதிகமாக நேசிக்கிறார். நீங்கள் இறுதிவரை சகித்துக் கொள் வீர்களானால், பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்.
மௌரி என்ற தீவில் தனித்திருந்த ஒரு முதிய அருட்பணியாளர் இவ்வாறு எழுதியுள்ளார்:
அவரே கடல்களின் கர்த்தர் அவரே நிலத்தின் தேவன் காற்றுகள் அவர் கட்டளைக்குக் கீழ்ப்படியும், அவர் மழைபொழியச் செய்கிறார் பனிக்கட்டி விழச் செய்கிறார் புயலின் சக்தியைக் கட்டுப்படுத்துகிறார். வாழ்க்கையின் துன்பப் பயணத்தில் புயலின் கடுமை கண்டு சிலர் அழுவார், சிலர் முறுமுறுப்பார் காற்றோடு போரிடாதே நண்பனாக எண்ணு அதை வாழ்வில் அதிகக் கிருபையைப் பெறுவாய். சூறாவளியின் சக்தியல்ல பாய்மரத்தின் உறுதியே பாதுகாப்புடன் வீடுகொண்டு சேர்க்கிறது.
புயல்கள் நமக்கு ஊழியரானால் சிரமத்தின் வியர்வை இன்றி இனிய புகலிடத்தைச் சென்றடைவோம்.
சோர்வுற்ற மாலுமியே, தொடர்ந்துசெல் உனது எசமானர் காத்திருக்கிறார் பரலோகத்தின் இனிய கரையில் வரவேற்க ஆதாரத்தின்மீது கண்வை அவரது வலக்கரத்துக்கு ஆயத்தப்படுத்தும் சக்திகளைக் குறித்துக் கலங்காதே.
ஆம், சரியான மனோபாவத் துடன் வாழ்க்கைப் புயல்களைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். கப்பலின் பாய்கள் அசைய காற்று எவ்வளவு அவசியமோ, அவ்வாறே பரீட்சைகள் மற்றும் சோதனைக ளின் புயல்கள் நாம் முதிர்ச்சி பெற உதவுகின்றன; இந்த முதிர்ச்சி உல கத்தின் தலைமைப் பொறுப்பைப் பெறவும், நித்திய புகலிடமும் வீடு மான பரலோகத்தைச் சென்றடைய வும் நம்மை ஆயத்தப்படுத்துகிறது.
[su_heading size=”24″ align=”left” id=”H2″]Pdf file Download Section[/su_heading]
[su_button id=”download” url=”https://www.mediafire.com/file/5vtrns5pgwg6a94/சோதனையில்+நாம்…_.pdf/file” target=”blank” style=”3d” size=”9″ wide=”yes” center=”yes” radius=”round” icon=”icon: download”]Download PDF Now[/su_button]