எசேக்கியேல் புத்தகத்தின் முக்கிய நிகழ்வுகள் 1

எசேக்கியேல் புத்தகத்தின் முக்கிய நிகழ்வுகள் 1

எசேக்கியேல் புத்தகத்தின் முக்கிய நிகழ்வுகள் 1

1:1-2 சிறையிருந்த யோயாக்கீன்

யோயாக்கீன், யோயாக்கீம் அரசரின் மகனாவார். தேவனுக்குக் கீழ்ப்படியாமலும் தேல வார்த்தையை எரித்தும் தண்டனை யைப் பெற்றுக்கொண்ட தந்தை யோயாக்கீம் (எரே 36 301 சிறைப்பட்ட போது இவர் 3 மாதங்கள் அரசராக இருக்க நேர்ந்தது. ஆனாலும் இவர் தமது அரியணையில் சரியாக உட்காரும் முன்பே நேபுகாத் நேச்சார் வந்து பிடித்துச் சென்றார். அப்போது ஒரு கூட்டம் மக்களும் சிறை சென்றனர். அதில் எசேக்கியேலும் உள்ளடங்குவார் என்பது சிலர் கருத்து,

எசேக்கியேல் சிறை சென்றபோது சுமார் 25 வயது இருக்க வேண்டும். யோயாக்கீனின் சிறையிருப்பின் ஐந்தாம் ஆண்டில் அவர் 30 வயதுடையவராக விளங்கியதை எசே 1: 1-ல் வாசிக்கலாம். இது சுமார் கி.மு.592 ஆகும். யோயாக்கீன் சிறைப்பட்ட பின் எருசலேமில் சிதேக்கியா அரசர் நேபுகாத் நேச்சாரால் நியமிக்கப்பட்டார். இந்த கிதேக்கியா யோயாக்கீனின் சித்தப்பா ஆவார். இந்த யோயாக்கீள் சுமார் 36 ஆண்டுகள் சிறையிருந்தார். யோயாக்கீன் சிறை செல்லும்போது வயது 18 தான், பின்பு நேபுகாத் நேச்சாரின் வாரிசாக பாபிலோனில் அரியணையேறிய ஏவில் மெரொதாக் என்பவர் இவருக்கு நல்ல பதவியை வழங்கி நேசித்தார் 2இரா 25 : 27.

யோயாக்கீள் என்றால் ‘தேவன் கட்டுவார்’ என்பது பொருள். இவருக்கு கோனியர் எரே 22 : 24, எகொனியா (எஸ்த 2 : 6 போன்ற பெயர்கள் உண்டு. இவர் சிறையிருந்த காலத்தில் பல புதல்வர்களைப் பெற்றெடுத்தார். இவரது பேரளாக விளங்கிய செருபாபேல் சிறைமீண்டு வந்த முதல் மக்கள் குழுவுக்குத் தலைமை தாங்கினார் (எஸ்றா 3. 2). இக்கால கட்டத்தில் எரேமியா எருசலேமில் தீர்க்கதரிசனம் உரைத்து வந்தார் (சுமார் கி.மு.626 – 573). எருசலேம் கி.மு. 586-ல் பாபிலோனியரின் மூன்றாம் படையெடுப்பில் அழிந்தது. அக்கால கட்டத்தில் எசேக்கியேல் பாபிலோன் சிறையிருப்பில் இருந்த மக்கள் (நடுவில் தேவ தீர்க்கதரிசியாக விளங்கினார்.

2:1 கலக வீட்டாருக்கு ஒரு மனு புத்திரன்

இங்கு மனுஷபுத்திரள் என காணப்படும் சொல்லுக்கு எபிரெய மொழியில் பென்ஆதாம் என காணப்படுகிறது. எசேக்கியேல் நூலில் சுமார் 93 முறை இச்சொல் திரும்பத்திரும்ப வருகிறது என்பர்.

இச்சொல் மகிமையான தேவனுக்கும் சாதாரணமான மனிதருக்கும் இடையேயுள்ள வேறுபாட்டைக் குறிப்பிடும். கிருஷ்டிகருக்கும் திருஷ்டியின் மகுடமான மனிதருக்கும் இடையேயுள்ள வேறுபாட்டைக் காட்டும். மேலும் மனித குலத்துக்கு வழங்கப்பட்ட தேவ பிரதிநிதியான மனிதனைக் காட்டும். அக்காலத்தில் எசேக்கியேல் உயிருள்ள செய்முறைப்பாடமாக சிறையிருப்பின் மக்கள் நடுவில் உலவினார் (1 : 3, 3 4- 7) இஸ்ரவேலருக்கு ஓர் அடையாளமாக இருந்தார் 12 : 6),

இதே அடையாளங்களுடன் பிந்தின ஆதாமாக கிறிஸ்து அவதரித்து உலவினார் (மத் 8: 20. 1கொரி 15: 45 இந்த கிறிஸ்துவே மனுஷகுமாரனுக்கு ஒப்பானவராக தானியேலின் தீர்க்கதரிசனத்திலேயே வெளிப்படுத்தப்பட்டார் தாளி 7: 13. கிறிஸ்து மனிதர் நடுவில் அடையாளமாகவே உலவினார் (லூக் 2: 34). மத்தேயு சுவிசேஷத்தில் மட்டும் சுமார் 32 முறை கிறிஸ்து தம்மை மனுஷகுமாரன் என அழைத்துக் கொள்ளுகிறார்.

இனி, எசேக்கியேல் தமது ஊழியத்தை நிறைவேற்ற வேண்டியது கலக வீட்டார் நடுவிலாகும். கீழ்ப்படிய மமைற்றோருக்குக் கசப்பான தீர்ப்புகளைக் கூற வேண்டியவராக அவர் விளங்கினார். தரிசனத்தில் அவருக்கு வழங்கப்பட்ட தோற் கருளில் உள்ளும் புறமும் எழுதப்பட்டிருந்தது, சாதாரனாமாக தோல் சுருள்களில் ஒரு பக்கம் எழுதுவதே இயல்பு. இங்கு இருபுறமும் எழுதப்பட்ட கருளை எசேக்கியாவுக்கு தேவன் வழங்கினார். இதன் பொருள் தேவன் மிகவும் அதிகமாக அவர்களோடு பேச விரும்பினார் என்பதோ?

இன்றும் தேவண் எலும்பும் சதையுமுள்ள தமது பிள்ளைகளையே திருப்பணிக்காக அனுப்ப விரும்புகிறார். மனுஷகுமாரர்களே அவர் பணிக்குச் செல்ல எத்தனைபேர் தயாராக இருக்கிறீர்கள்?

3:1-11 புசித்துப் போதியுங்கள் . . !

கேபார் நதியண்டை இருந்த எசேக்கியேலுக்குக் கட்டளை வந்தது. கரமொன்று கொடுத்த கருளைப் புசித்தார் அது தேனைப் போல அவர் வாய்க்குத் தித்திப்பாக இருந்தது. இதுபோல ஒரு சூழலில் யோவான் அப்போஸ்தலர் புசித்தார். அது முதலில் அவர் தித்திப்பாகவும் பின்பு வயிற்றிலோ கசப்பாகவும் இருந்தது (வெளி 10 : 9). தேவ வசனம் அதற்குக் கீழ்ப்படிவோருக்கு இனியது. தேளிலும் சிறந்தது (சங் 19 10, 119 103, நியாயத் தீர்ப்புக்குரியோருக்கோ கசப்பானது, நியாயத்தீர்ப்புகளை வாசிக்கும் போது அத்தகைய உணர்வைப் பெறுகிறோம். தேவப் பணியாளன் புரியாமல் பிரசங்கிக்க முடியுமோ? பணியாமல் பணியாற்ற முடியுமோ? அனுபவமாக்காமல் அறைகூவ முடியுமோ? இவை இன்றி செய்யும் பிரசங்கம் மாய்மாலமாகவே இருக்கும். கர்த்தர் அவற்றை விரும்புவது இல்லை.

3:17 காவலனே காவலனே . . !

எசேக்கியேல் தேவனுக்காக தயாரான காலத்தில் தானியேல் நேபுகாத் நேச்சாரின் அரண்மளையில் இருந்தார். அப்போது இஸ்ரவேலின் 10 கோத்திரத்தார் அசீரியாவுக்கு அடிமைப்பட்டு சுமார் 129 ஆண்டுகள் ஆகியிருந்தன. எருசலேம் அழிய 6 ஆண்டுகள் மட்டுமே இருந்தன. எரேமியா எருசவேயில் அறைகூவிக்கொண்டிருந்தார்..

எசேக்கியேலை தேவன் இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவலனாக அழைத்தார். தேவனிடம் கேட்டு, மக்களுக்கு அறிவிக்க வேண்டியது அவரது கடமையாக இருந்தது.

காலலன் என்பவன் சிறந்த தூரப்பார்வை உடையவனாக விளங்கவேண்டும். தூரத்தில் வரும் தீங்கையும் அறிவித்து மக்களை எச்சரிக்க வேண்டும் (சான்று 2சாமு 18 24, 2இரா 9 : 1. ரோம சிறைக் காவலர்கள் ஏதாவது கைதியைத் தப்பவிட்டால், தப்பவிடுப வர் மரண தண்டனை பெறுவது உறுதி அப் 12 19 1627)

தேவனும் தமது தீர்க்கதரிசிகளை காவலர்கள் என அழைத்துள்ளார் (ஏசா 56:: 10. எரே 6 17 ஓ 9: 8. இங்கே எசேக்கியேவை தேவன் காவலன் என்றே நியமிக்கிறார்.

காவலள் என்ற நிலையில் நான்கு வகை மக்களை அவர் எச்சரிக்க வேண்டும்

 • திரும்ப மனமற்ற துன்மார்க்கள்,’
 • திரும்ப மனம் வைக்கும் துன்மார்க்கன்.
 • திரும்பாமல் அநீதி செய்யும் நீதிமான் ”
 •  மனத்திரும்பும் அநீதி செய்யும் நீதிமான்.

இவற்றில் காலவனின் சிாரிப்பது அநதியாகும் சிாவு என்பது சர்ர மரணமாகும். ஆத்மீக மரணம் அல்ல வசனம் 20-ல் காவலனின் கடமை எச்சரிப்பது. அதனைச் சரிவரச் செய்யாதுபோனால் காவலன் தண்டனை பெறுவான். தேவனுடைய பிள்ளைகளாக விளங்குவோருக்கும் சில கடமைகள் உண்டு ரோம் 1: 14, 1கொரி 9 15. சுவிசேஷத்தை அறிவிப்பு எச்சரிப்பையும் வழங்கவேண்டும். கடமை தவறுதல் தண்டனைக்குரியது. தேவனுடைய சிறப்பு காவல்படையில் பணியாற்ற பதுடன் ஆள் தேவை. விருப்பமுண்டென்றால் விண்ணப்பியுங்கள்.

4:1-3 எசேக்கியேலின் அடையாள நடிப்புகள்

எசேக்கியேல் தமது தீர்க்கதரிசன நாட்களில் பல குறியீட்டு நிலையிலான நாடகங்களை நிகழ்த்தி பல செய்திகளை வழங்கினார். இங்கு ஒரு செங்கல்லை எடுத்து எருசலேம் நகரத்தை அதன் மேல் வரைந்து, முற்றுகையிடுவதுபோன்ற அமைப்புக்களை ஏற்படுத்தி கி.மு.588 முதல் நடந்த பாபிலோனின் முற்றுகையை நடித்துக் காட்டினார் (2இரா 24 20 – 25 : 21 எரே 52 4 – T10. மக்கள் தம்மைப் பற்றி என்ன நினைப்பர் என்பது அவருக்கு ஒரு விஷயமல்ல, தேவன் அளித்த செய்திகளை மக்களுக்கு அவ்வாறே விளக்குவதுதான் அவரது குறிக்கோளாக இருந்தது.

இதுபோல அவர் அடையாளமாக்கிய பிற சில 

 • 380 நாட்கள் இடபக்கமாக திரும்பியும் 40 நாட்கள் வலப்பக்கமாக திரும்பியும் படுத்தல் 4 – இ.
 • அசுத்தமான எரிபொருளால் உணவைச் சமைத்தது (4 : 9 – 19), 
 • தலையை மழித்து, தலைமுடியை நிறுத்து, பங்கிட்டு பல காரியங்களைச் செய்தல் 15: 1-4).
 • சுவரில் ஓடிப்போகும் துளையை உண்டாக்குதல் (12 1-16).
 • நடுக்கத்தோடே உணவைச் சாப்பிடுதல் 112 : 17-20,
 • பெரியதாக பெருமூச்சு விடுதல் (21: 6, 17
 • வழியில் ஒரு பிரிவு அடையாளத்தை நாட்டுதல் 21 : 18 – 24) 
 • மனைவியின் மரணத்தில் அழாதிருத்தல் 24: 15 – 24,
 • இரண்டு கோல்களை ஒன்றாகச் சேர்த்தல் (37 15 – 28) 

[su_button id=”download” url=”https://www.mediafire.com/file/a6o2l9vmuoxs7h4/எசேக்கியேல்+புத்தகத்தின்+முக்கிய+நிகழ்வுகள்+1.pdf/file” target=”blank” style=”3d” size=”9″ wide=”yes” center=”yes” radius=”round” icon=”icon: download”]Download PDF Now[/su_button]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *