எசேக்கியேல் புத்தகத்தின் முக்கிய நிகழ்வுகள் 2

எசேக்கியேல் புத்தகத்தின் முக்கிய நிகழ்வுகள் 2

எசேக்கியேல் புத்தகத்தின் முக்கிய நிகழ்வுகள் 2

4:4-8 எசேக்கியேல் குறிப்பிடும் நாட்கள்

எசேக்கியேல் இஸ்ரவேலின் அக்கிரம வருடங்களை நினைவூட்டும்படி 390 நாட்களும், யூதாவின் அக்கிரம வருடங்களை தினை வூட்டும்படி 40 நாட்களும் முறையே இடது, வலது பக்கங்களில் திரும்பிப் படுத்திருந்தார் என இங்கு குறிப்பிடப்படுகிறது. இந்த ஆண்டுகள் எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டுவரையான எதனைக் குறிக்கிறது என்பதை விளக்குவது மிகவும் கடினமாக உள்ளது. 

எசேக்கியேல் எருசலேம் அழிவதற்கும் 11 ஆண்டுகளுக்கு முன்பு சிறைபிடித்துச் செல்லப்பட்டார் என்பதை எசே 40 : 1 காட்டும். எருசலேமில் அழிவு நிகழ்ந்தது சுமார் கி.மு.586 எனக் கொண்டால் அவர் சிறைபிடித்துச் செல்லப்பட்டது சுமார் கி.மு.597-ல் ஆகும். அப்போதுதான் யோயாக்கீன் அரசர் சிறைபிடித்துச் செல்லப்பட்டார். எசே 1: 1-ல் வரும் 30-ம் வருஷம் என்பதை எசேக்கியேலின் வயது என்றும், பாபிலோனிய ஆண்டுக் கணக்கு என்றும் இருவகைக் கருத்துக்கள் உண்டு. 

எசேக்கியேல் குறிப்பிடும் 390 மற்றும் 40 ஆண்டு கணக்கு பற்றிய சில விளக்கங்கள் பின்வருமாறு.

 1. இது எருசலேமின் முற்றுகை நாட்களைக் குறிக்கும் பாபிலோனிய ஆவணங்களின்படி எருசலேமின் முற்றுகை கிமு.588 ஜூனு வரி-ல் தொடங்கி கி.மு.587 மார்ச்சில் முடிவடைந்தது மொத்த முற்றுகை நாட்கள் சுமார் 4,30 ஆகும். 

இந்த நாட்களின் முற்றுகை இஸ்ரவேல் மக்களின் அக்கிரமங்களின் வருஷங்களைக் குறியீடாகக் கொண்டது. 430 ஆண்டுகள் எகிப்தில் அடிமைகளாக கிடந்ததுபோல இதுவும் ஒரு குறியீட்டு நிலை. இதற்காள எந்த குறிப்பான காரணங்களையும் கூறமுடியாது. 

 1. சிலர் 430 ஆண்டுகளை எசேக்கியேலின் சிறைப்பிடிப்பு ஆண்டாகக் கருதப்படும். கி.மு.597-டன் முன்னோக்கிக் கூட்டுவர். அப்போது சுமார் கி.மு.167 வரும். கி.மு.168 – 63-காலகட்டம் யூதாவில் மக்காபியர் கலகம் நிகழ்ந்து யூதர் தன்னாட்சியைக் கைப்பற்றியிருந்த காலமாகும். 
 1. சிலர் 390 ஆண்டுகளை எருசலேமின் வீழ்ச்சி ஆண்டான கி.மு.586-லிருந்து பின்னோக்கிக் கழிப்பர். அப்போது ஏறக்குறைய சாலொமோனின் ‘சிகாலம் வரைச் செல்லும். கூடுதலாக வரும் யூதாவின் 40 ஆண்டுகள் மனாசேயின் காலத்தின் மிக மோசமான ஆட்சி காலத்தைக் குறிப்பதாக இருக்கலாம் என்பார்
 1. சிலர் சில ஆண்டு கணக்குகளின்படி, இஸ்ரவேலின் பிளவு முதல் எருசலேமின் அழிவுவரை சுமார் 390 ஆண்டுகள் ஆகின்றன என்பர் சிலர் தேசம் பிளவு முதல் யூதாவின் இரண்டாம் சிறைபிடிப்பு வரை சுமார் 390 ஆண்டுகள் என்பர் யூ.தாவின் 40 ஆண்டுகள் என்பது 390-க்குள் உள்ளடங்கும் என்றும், அது யூதாவின் இறுதி மூன்று அரசர்களின் ஆட்சி ஆண்டுகளாகும் என்றும் விளக்குவோர் உண்டு.
 • அதாவது யோசியாவின் ஆட்சி ஆண்டுகள் 18
 • யோயாக்கீமின் ஆட்சி ஆண்டுகள் 11
 • சிதேக்கியாவின் ஆட்சி ஆண்டுகள். 11 மொத்தம் 40
 1. சிலர் கிரேக்க செப்டுவெஜின்ட் மொழிபெயர்ப்பில் 390-க்கு பதில்190 என உள்ளதால் இஸ்ரவேலின் அசீரியச் சிறைப்பிடிப்பு முதல் கோரேசின் கட்டளை வரையான ஆண்டுகள் சுமார் 190 (கி.மு.722-5361 என்பர். யூதாவின் 40 ஆண்டுகள் என்பது அதன் இறுதிக்குழு சிறைச் செல்லுதல் முதல் கோரேசின் கட்டளை பிறப்பது வரையான ஆண்டுகள் என்பர். இங்கு குறிப்பாக 40 ஆண்டுகள் என கொடுக்கப்படாது சுமார் 40 ஆண்டுகளாகத் தரப்படுகின்றன (சுமார் கி.மு. 586 – 536 என்பர்.

4:9-17 சிறைபடுதலின் வேதனைகள்

இஸ்ரவேலின் வரலாற்றில் சிறைபடுதலின் வேதனைகள் பலமுறை நிகழ்ந்துள்ளன. அவை சொல்லி முடியாத அளவு துயரங் களை வழங்கியுள்ளன. எசேக்கியேலின் அளவான உணவு முறையும், நீர் அருந்தும் முறையும் உணவைச் சமைக்கும் முறையும் இதனை ஓரளவு விளக்கிக் காட்டும். முற்றுகையின் வேதனையில் மனித கழிவுகளைப் பயன்படுத்தி உணவை ஆக்கித் தின்பதும் குழந்தைகளையும் மனிதரையும் சமைத்துத் தின்பதும் அதிசயமான காரியங்கள் ஒன்றும் அல்ல பொடி பாபிலோனியச் சிறைவாசம் முதல் இஸ்ரவேல் அனுபவித்த சில அடிமைத்தன அனுபவங்கள் பின் வருமாறு:

 • பாபிலோன் சுமார் கி.மு.587 – 539.
 • பெர்சியா கமார் கி.539 332 
 • கிரேக்கம் சுமார் கி.மு.332 – 300 
 • எகிப்தியர்(தாலமி சுமார் கி.மு.300 -198. 
 • சீரியர் செலூசிட் சுமார் கிமு.198 – 158
 • ரோம் சுமார் கி.மு.63 – கி.பி.320
 • பைசான்டைன் சுமார் கி.பி.320 – 635
 • அரேபியர். சுமார் கி.பி.636 – 1072
 • துருக்கியர் (செல்ஜக்) சுமார் கி.பி.1072 1099
 • குருசேடர் சுமார் கி.பி.1099 – 1187
 • இஸ்லாமியர் (சராசெஸ்) சுமார் கி.பி.1187 – 1291
 • எகிப்தியர் (மம்லூக்) சுமார் கி.பி.1291 – 1517
 • துருக்கியர் (ஓட்டோமன்) சுமார் கி.பி.1517 – 1917 
 • பிரிட்டன் சுமார் கி.பி1917 – 1948

இவ்வாறு 14 வகையான அடிமைத்தனங்களின் வழியாக அவர்கள் 1948 வரை கடந்து சென்றனர். இதற்கு இடைப்பட்ட காலத்தில் கி.மு.168 – 63 காலகட்டத்தில் மக்காபியரின் கீழும் கி.பி.66-70 கி.பி. 132 – 135 காலகட்டங்களில் யூத புரட்சிகளின் கீழும் தன்னாட்சியை அமைத்திருந்தனர். சுதந்திர காலத்தில் அதன் மகிமையை விளங்கிக் கொள்ளத் தெரியாத இஸ்ரவேலர் அடிமைத்தனத்தின் கீழ் அதன் மகிமையை எண்ணி வாடினர்.

இன்றும் கிறிஸ்தவம் அருளும் மகிமையான சுதந்திரத்தை அனுபவிக்கத் தெரியாத விசவாசிகள் பலர், பாவங்களின் அடிமைத்த ளத்தில் வெந்து கிடக்கின்றனர். கிறிஸ்து தரும் தற்காலங்களைப் பக்தியாகச் செலவழிக்க முடியாதவர்கள், உபத்திரவத்தின் இரும்புச்சிறைக் காலங்களில் எண்ணுவது திண்ணம். காலத்தை ஆதாயப்படுத்துவோர் ஞானவான்கள்தான்.

6:1-6 விக்கிரக பீடங்களை இடித்து நித்தியத்தை நினைத்து…..

தற்காலத்தில் நம்மை பாதிக்கும் விக்கிரகங்கள் எனவ?.

 • உலக நம்பிக்கைகள் ..
 • புகழ் நாட்டங்கள் ..
 • வலிமை பெருமைகள். 
 • மேன்மை பாராட்டல்கள்…
 • சிற்றின்ப ஆசைகள்..

நாம் விக்கிரகங்களுக்கு விவகி வாழ ஆயத்தமா? யோவானின் அறிவுரையை சிரமேற்கொள்ள விரும்புவோமா (1யோவா 5 21)

தேவனோடு இருக்கும் மணித்துளிகளே உலக வாழ்வின் மாணிக்கத் துளிகள் அவை நமது இலட்சியங்களுக்கு ஒளியாய்ச்சும்; திட்டங்களை ஒழுங்காக்கும். கரிசனைகளை உருவாக்கும்; தரிசனங்களை நிறைக்கும்: தேவதுதிகளாலும் நன்றிகளாலும் நிறைக்கும். நமது கண்களை மயக்கி மறைக்கும் பொல்லாத விக்கிரகங்களை நொறுக்கும். நித்தியங்களை நோக்கி நமது கண்கள் திருப்பப்படுமாயின், அதரிசனமான பல நமது தரிசனங்களாகும் நமது இலட்சியங்கள் புதுமையில் கூடுகட்டும்; வாழ்வு வசந்தம் பெறும்.

7 (அதிகாரம்) தரிசனங்களின் மனிதரான எசேக்கியேல்

தரிசனங்கள் வழியாக தேவன் மக்களோடு தொடர்புகொண்ட காலங்கள் பல உண்டு தெய்வீகத் திட்டங்களைத் தரிசனங்கள் வழியாகவே அவர் அறிவித்து வந்தார். தற்காலத்தில் வேதபுத்தகங்களில் இந்தத் தரிசனங்கள் எழுதப்பட்டு நமது ஆராய்ச்சிக்காகத் தரப்பட்டுள்ளன. தற்போது கண்மூடித் தரிசனம் காண முயல அல்ல, கண் திறந்து வேதாகமத்தை ஆராய நாம் அழைக்கப்படுகிறோம்.

எசேக்கியேல் நூலில் தீட்டப்பட்டிருக்கும் தரிசனக் காட்சிகள்.

 • கேருபீன்களின் தரிசனம் 1: 4 -28
 •  சுருளின் தரிசனம் 2 :9-3: 3 2
 •  பள்ளத்தாக்கில் கண்ட தரிசனம் 3:22-23
 • எருசலேமைப் பற்றிய தரிசனம்
  • தேவாலயத்தில் தீங்குகள் 8:1 – 18
  • குடிமக்களின் வீழ்ச்சி 9:1-11
  • நகரம் தீக்கிரையாதல் 10: 1 – 22
  • தேவன் நகரை விட்டுப் போதல் 11:1-25
 • உலர்ந்த எலும்புகளின் தரிசனம் 37 :1-10
 •  புதிய தேவாலயம் பற்றிய தரிசனம் 40 :1-48

8:1-9 இஸ்ரவேலர் செய்த அருவருப்பான வழிபாடுகள்

இந்த அதிகாரத் தரிசௗத்தைக் காணும் காலம் சுமார் கி.மு.501 ஆகஸ்டு- செப்டம்பர் ஆகும். இது அவர் முதலில் அழைப்பு பெற்றதற்குப்பின் i மாதங்கள் கழித்து நிகழ்ந்தது Ii 31 இப்போது அவர் பாபிலோளில் தெலாபீப் என்ற இடத்தில் இருந்தார். உடல் அங்கு இருக்கும் போது தானேஆவியில் எருசலேமின் காட்சிகளைக் காண்கிறார். இப்போது அவர் முன்பு மழித்த தலைமுடி வளர்ந்திருக்க வேண்டும் 5: 1, 8: 3,

அக்காலத்தில் சிதேக்கியா எருசலேயில் அரசராக இருந்தார் தேசம் அழிவுக்கு நேராக நகர்ந்துக் கொண்டிருந்தபோதும், எரேமியா எச்சரிப்புகளை வழங்கி வந்தபோதும் மக்கள் விக்கிரகங்களைப் பெருக்கி வந்ததை தேவன் எசேக்கியேலுக்குக் காட்டுகிறார்.

அவர்கள் தொழுகைகள்: 

1. விக்கிரக ஆராதனை (8:1-6):

இங்குக் குறிப்பிடப்படும் எரிச்சல் உண்டாக்கும் விக்கிரகம் என்பது அசேரா தேவியின் விக்கிரசும் எனக் கருதப்படுகிறது. இதனை மனாசே நிறுவினார், யோசியா அழித்தார்: 2இரா 21 :7; 23: 6 ஆனால் மீண்டும் அவர்கள் அதனை ஸ்தாபித்து தேவனுக்கு எரிச்சலூட்டி வந்தனர் 

2. ஊரும் பிராணிகளின் விக்கிரகங்கள் (8 : 7 – 13).

ணரும் பிராணிகளின் விக்கிரகங்கள் தேவனுக்கு அருவருப்பானவை அவற்றுக்குத் தூபம் காட்டி வழிபட்ட கேடுகெட்ட மூப்பரின் நிலையை தேவன் காட்டினார்.

3. தம்மூக ஆராதனை (8: 14, 15): 

ஒழுக்கக்கேடுடன் தொடர்புடைய பாபிலோனியத் தேவனாகக் கருதப்படுகிறது. அதனை வழிபட்ட மக்களைக் காட்டினார்.

4. சூரிய நமஸ்காரம் (8 : 16):

சூரியன் என்ற படைப்பை தேவனாக வணங்கிய நியாயப்பிரமாணம் பெற்ற மக்களையும் தேலன் காட்டினார். இத்தகைய தீச்செயல் செய்தோரைப் பாலும் தேனும் ஒழுகும் தேசத்தில் வாசம் பண்ணச் செய்வது எவ்வளவு கேடான காரியம். (தேவள் அவர்களை அழித்து ஒழித்தார். நமக்கு இவை எச்சரிப்புகள்.

8:14 தம்மூசுக்காக அழும் தேவதாசிகள்

தம்முக வழிபாட்டுப் புராணச் செய்திகள் விரிவான எல்லைகளை உடையதும் இஸ்ரவேலைப் போல கிறிஸ்தவ வழிபாட்டு எல்லைகளைப் பாதித்ததும் ஆகும். சாத்தானின் முதல் பேரரசனும் நோவாவின் பேரனுமான நிம்ரோத் (ஆதி 10 8-10 என்பவனுடன் இந்த தம்மூசு தொடர்புபடுத்தப்படுகிறது. நிம்ரோத் செமரிமஸ் என்ற பெண்ணைத் திருமணம் செய்திருந்தானாம். இவள் சாத்தானின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருந்தவ ளும் கொடியவளுமாக இருந்தாள். தேவனுடைய வாக்குறுதியான ‘ஸ்திரீயின் வித்து’ பற்றி அறிந்திருந்த செமெரிமஸ் தனது முதல் மகளான தம்மூசை உலக இரட்சகராக்கினாள்.

பின்பு செமரிமசையும், தம்மூசையும் உள்ளடக்கியதான தாயையும் மகனையும் வழிபடும் வழிபாட்டுக் கலாச்சாரம் தொடங்கியது. இக்கவாச்சாரம் உலகம் முழுவதும் பரவியது. இந்த தம்மூசு இஸ்தார் என்ற பெண்னுடன் மையல் கொண்டிருந்தான். இவன் திடீரென ஒரு வேட்டையாடுதலின் போது காட்டுப் பன்றியால் கொல்லப்பட்டான், இறந்த பின் இவன் பாதாள உலகின் தேவனாக கற்பனை பண்ணப்பட்டான். இஸ்தார் காதல் தேவதையாக்கப்பட்டாள்.

இவன் செழிப்பின் கடவுளாகவும் கருதப்பட்டான். இவன் கோடைகாலத்தில் செத்து வசந்த காலத்தில் உயிர்பவளாகக் கருதப்பட்டான். அதாவது காட்டுப் பன்றியால் செத்தவன் 40 நாட்கள் கழித்து உயிருடன் வந்ததாக சில புராணச் செய்திகள் வண்டு.

ஆண்டு தோறும் இவன் மரித்து உயிர்ப்பதாக இந்த மூடநம்பிக்கைக் கூறுகிறது.

இவனை வழிபடும் தேவதாசிகளும் பெண்களும் 40 நாட்கள் இவனுக்காக உபவாசம் எடுத்து அவன் உயிருடன் வரவேண்டும். என அழுவர். 40 நாட்கள் முடிந்தவுடன் இஸ்தார் பண்டிகை கொண்டாடப்படும் அன்று வண்ண முட்டைகளைப் பரிமாறுவர். எரேமியா தீர்க்கதரிசியும் இந்த தம்மூக வழிபாடு குறித்துக் கண்டித்துள்ளார் (எரே 7: 18, 44: 25

இந்த தாய் – மகன் வழிபாட்டில் வரும் செமரிமஸ், தேவனுடைய வழியாகவும், வாள ராணியாகவும் கூறப்படுகிறாள். இவள் புனித நீர் தெளிப்பு வழியாகவும் பிற பலச் சடங்குகள் வழியாகவும் மக்களை இரட்சிப்புக்கு நேராக வழி நடத்துவாள் என்றும் நம்பப் படுகிறது கிறிஸ்தவ மதத்தில் காணப்படும் கன்னிமரியாள் – குழந்தை இயேசு வழிபாட்டுக்கும். இந்த விக்கிரக புராண வழிபாட்டுக்கும் நெருங்கியத் தொடர்புகள் இருப்பதை பல அறிஞர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். மரியாளை, இரட்சிப்பவள். ஜென்ம பாவமற்ற அமவோற்பவை, ‘சர்வவல்ல தேவனின் தாய், சர்ப்பத்தின் தலையை நசுக்குபவள், வாளராக்கினி. மோட்ச அரசி, மூவுலக அரசி திரித்துவத்தின் ஆலயம், தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே மத்தியத்துவம் செய்பவள், தேவ இரகசியங்கள் நிறைந்த பரதீசின் மலர். மோட்சத்தின் வாசல், பாவிகளின் அடைக்கலம் என்றெல்லாம் கற்பனை கட்டுவது வேதாகமத்துக்கு முரணான கருத்து. பாபிலோனிய விக்கிரசு வழிபாடுகளின் தாக்கத்தால் கிறிஸ்தவ மதத்தில் ஏற்கப்பட்ட கலப்படங்களில் இதுவும் ஒன்று. -னே நாம் இத்தகைய மத வழிபாடுகளை விட்டோட எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

9:1-11 திரும்புவோருக்கு ஆதரவாக

தேவன் கருணையும் நீதியும் உடையவர். அவர் அநீதியாக எதனையும் செய்வது இல்லை. எருசலேமில் விக்கிரக ஆராதனை மலிந்த காலத்திலும். அதனைப் பார்த்து பெருமூச்சு விட்டழுத கொஞ்சம் மக்கள் இருந்தனர். அவர்களைப் பாதுகாக்க தேவன் தவறவில்லை; அவர்களது நெற்றியில் போடும்படி கொடுக்கப்பட்ட அடையாளம் எபிரெய அகரவரிசையின் இறுதி எழுத்தான ‘தௌ’ ஆகும்.

இது எசேக்கியேலின் காலத்தில் பெருக்கல் வடிவில் (X) எழுதப்பட்டது. தொடக்க கால கிறிஸ்தவர்கள் இதனைச் சிலுவை அடையாளத்துடன் ஒப்பிட்டுக் காண முயன்றனர்.

இந்த அடையாளமிடுதல் செயல், எகிப்து நாட்டின் தலைப்பிள்ளைச் சங்கார காலத்தில் இரத்தம் பூசியதை நினைப்பூட்டும்

யாத் 12: 1 – 36. எத்தகைய ஆபத்தான சூழவிலும் தேவனால் பாதுகாக்கப்படுவோரை தீமை அணுகாது. எத்தகைய கொடிய சூழலிலும் மனந்திரும்புவோரை தேவன் மறப்பது இல்லை

தற்கால அறியாய உலகிலும், அறியாய மதங்களிலும் வெறுப்புற்று தேவனை நோக்கி பெருமூச்சு விடுவோரை தேவன் (காண்கிறார். அவரது கண்கள் எதையும் காணாமல் இருப்பது இல்லை. 

[su_button id=”download” url=”https://www.mediafire.com/file/ehe476frgpsi041/எசேக்கியேல்+புத்தகத்தின்+முக்கிய+நிகழ்வுகள்+2.pdf/file” target=”blank” style=”3d” size=”9″ wide=”yes” center=”yes” radius=”round” icon=”icon: download”]Download PDF Now[/su_button]

Leave a Reply