எசேக்கியேல் புத்தகத்தின் முக்கிய நிகழ்வுகள் 3

எசேக்கியேல் புத்தகத்தின் முக்கிய நிகழ்வுகள் 3

எசேக்கியேல் புத்தகத்தின் முக்கிய நிகழ்வுகள் 3

10:1-22 கேருபீன்கள்

கேருபீன்களைப் பற்றிய தெளிவான குறிப்புகளை எசே 1: 5 – 14, 10 : 20, வெளி 4 6 – 9 ஆகிய பகுதிகளில் காண்கிறோம்.

1 இவை தேவனோடு நெருக்கமாக காணப்பட்ட சிருஷ்டிகள் எள காணலாம்.

2 இவை தேவ தூதரை விட வேறுபட்ட கணத்தைச் சார்ந்தவைகளாகவே தோன்றுகின்றன.

3 இவை வெறும் மகாயத்தோற்றங்களாகவோ, அடையாளங்கனாகவோ அன்றி உயிருள்ள உயிரினமாகவே வேதாகமத்தில் குறிப்பிடப்படுகின்றன.

4 இவற்றின் உருவங்களை தேவனின் ஆசளமான கிருபாசனத்தின் மீது பொறித்து வைத்ததாகவும் திரைச் சீலையில் பின்னி ஆசரிப்புக் கூடாரப் பணியில் வாசிக்க முடிகிறது யாத் 25 : 18, 26 31),

5  ஆதி 3: 24-ல் ஏதேன் தோட்டத்துக்குப் போகும் வழியை இவை காவல் செய்ததாகக் காணலாம்.

6 நாள்கு கேருபீன்களி எனக் காண்பதும் சிந்தனைக்குரியது வேதத்தில் நான்கு என்ற எண் சிருஷ்டியின் எண் என் அறிவோம். 

7 இவை சிருஷ்டிகளைக் குறியீடாக கொண்டு விளங்குவன போல நான்கு வகையான முகங்களை ஒன்றாகக் கொண்டிருந்தன.

  •  சிங்கம் – வன விளாங்குகள்
  • காளை – நாட்டு விலங்குகள்
  • கழுகு –  பறவைகள்
  • மனிதன் – மனுக்குலம் .

8 அவை எப்போதும் தேவனைத் துதிக்கும் வழக்கம் உடையனவாக இருந்தன 

9 எசேக்கியேல் நூலில் வரும் கேருபீன்களும், வெளிப்படுத்தின விசேஷம் 4-ம் அதிகாரத்தில் வரும் ஜீவன்களும் வேறு வேறானவை என்ற கருத்தும் உண்டு.

10 :18, 19 பறந்து சென்ற தேவ மகிமை

இவ்வதிகாரப் பகுதிகளில் எசேக்கியேல் தீர்க்கதரிசி தேவாலயம் அழிக்கப்படுவதற்கு முன்பே தேவனுடைய மகிமை தேவாலயத்தை விட்டுக் கடந்துச் சென்றக் காட்சியைக் காட்டுகிறார். மகா பரிசுத்த ஸ்தலத்தில் கேருபீன்கள் இருந்த இடத்திலிருந்து எழும்பிய தேவமகிமை 110 4. கேருபீன் இரதத்தில் அமர்ந்தது (10 18) பின்பு அது தேவாலாயத்தின் கிழக்கு வாசல் வழியாக வெளியேறி 110 : 19) தேவாலயப் பகுதியை விட்டுச் சென்றது. அதன் பின் அது எருசலேம் நகரையும் தாண்டி ஒலிவமலையின் மேல் நின்றது (11: 23)

இக்காலகட்ட மக்களின் ஆன்மீக வாழ்வுச் சீரழிவை எரேமியாவின் புத்தகத்திலும் இராஜாக்களின் நூலின் இறுதிப் பகுதியிலும் நாளாகம நூலின் இறுதிப் பகுதியிலும் வாசிக்க முடியும். விக்கிரகங்களைப் பெருக்கி, வெற்று ஆசாரங்களை மலியச் செய்து தேவனுக்கு முதுகைக் காட்டின மக்கள் நடுவில் தேவனுக்கு என்ன வேவை, இருக்கிறது? சாலொமோளின் காலத்தில் தேவ மகிமையால் நிறைந்த தேவாலயம் நோளா 5) இப்போது வெறும் கட்டிடமாக கைவிடப்படுகிறது. 

தேவன் கைவிட்டால் பின்பு அழிவைத் தவிர எதுதான் சந்திக்கும். பொன்னோ, அலங்காரங்களோ ஆசாரங்களோ ஒரு கட்டிடத்தை தேவாலயமாக்குமோ? தேவ பிரசன்னம் இல்லாவிடில் அது கல் சுவர் அல்லவோ? இது எவ்வளவு பயங்கரமானது? எசேக்கியேலைப் போல தரிசனம் பெறும் திறனுடையோர் இன்று இருந்தால் எத்தனையோ கூடுகைகளை விட்டு தேவ மகிமை இடம் பெயர்ந்துள்ளதைக் காண்பார்களோ? தேவன் இடம் பெயரும் இடத்தை அடைத்துக் கொள்வது எது? பொய்யனல்லவா? இது கிறிஸ்தவ வாழ்வுகளுக்கு எவ்வளவு பயங்கரமானது? 

11:37 இறைச்சிப் பானையும் இறைச்சியும்

இவ்வசனங்களில் யூதர் நடுவில் வழக்கி வந்த ஒரு பழமொழி கையாளப்படுகிறது.

இறைச்சிப் பானையின் உள்ளே வைக்கப்பட்ட இறைச்சியானது நல்லதும், பத்திரமானதுமாகும். தேவையற்ற எலும்புகள் தூர எறியப்படும். இந்தப் பழமொழியை எடுத்துக்கொண்டு, இஸ்ரவேலின் பிரபுக்கள் மக்களிடம், நேபுகாத் நேச்சாரின் கி.மு.597 படையெடுப்புவரை கிறை சென்ற மக்கள் கைவிடப்பட்டவர்கள் என்றும், எருசலேமில் தங்கியிருந்த மக்களோ பாதுகாப்பானவர்களும், நல்லவர்களுமானவர்கள் என்றும் போதித்தனர். எனவே வீடு கட்டி சுகமாகக் குடியிருக்க ஆலோசனை கூறினர். நகரம் இறைச்சிப் பானையைப் போல தங்களைப் பாதுகாக்கும் என்றனர். வசனம் 3-ஐ “அவர்கள் அது அருகில் இல்லை; வீடுகளைக் கட்டுவோம் என்றும், இந்த நகரம் பானை. நாங்கள் அதிலுள்ள இறைச்சியென்றும் சொல்லுகிறார்கள்” என்றும் மொழிபெயர்க்கலாம்”.. இங்கு அவர்களால் குறிப்பிடப்படும். “அது அருகில் இல்லை” என்பது தீர்க்கதரிசிகளால் கூறப்பட்ட அழிவு ஆகும். இவ்வாறு தேவ தீர்க்கதரிசிகள் விரைவில் அழிவு வரும் எனக் கூறியதை மக்களை மறக்க வைக்க முயன்றனர் எரேமியா அப்போதும் எச்சரிப்பை வழங்கியபடி வாழ்ந்து கொண்டிருந்தார்.

எனவே எசேக்கியேல் பாதுகாப்பான இறைச்சியாக மாறியோர் அவர்களால் கொலை செய்யப்பட்டவர்களே எனக் கூறுகிறார். இப்போது வாய்ச்சாலம் பேசவோரோ நகரை விட்டுத் துரத்தப்பட்டு, கொலை செய்யப்படுவார்கள் எனவும் எச்சரித்தார் (11 : 7 – T1). தேவள் கைவிட்டால் எந்தப் பானைகள்தான் காப்பாற்றும்? ஆசாரப்பானைகளிலும், தவறான நம்பிக்கைகளின் பாளைகளிலும் நம்பிக்கை வைத்திருப்போரே மனந்திரும்பாவிட்டால் உங்களுக்குத் துதி ஏது?

11:16 அகதிகளுடன் செல்லும் ஆண்டவர்

இஸ்ரவேல் தேவனுக்கு எதிராக கொடிய பாவங்களைச் செய்தது. தேவனோ அவர்களைத் திருத்த முடியாது என்ற நிலை வந்த போது அவர்களைச் சிதறடித்தார்..

ஆனாலும் தேவன் அவர்களை கைவிட்டு வீட்டுப் போய்விடுவதில்லை. எருசலேம் ஆலயம் அழிக்கப்படுவதற்கு முன்பு தேவ மகிமை அதனை விட்டுக் கடந்துச் சென்றாலும் சிதறடிக்கப்பட்டவர்கள் நடுவில் பரிசுத்த ஸ்தலமாக இருப்பேன் என வாக்குறுதியளிக்கிறார். அதுவும் கொஞ்சகாலம்தான். அதன் பின்பு 2 அவர்களை மீண்டும் பழைய இடத்திலேயே கூட்டிச் சேர்த்து புதிய இதயத்தைக் கொடுத்து அவர்கள் நடுவில் பூரிப்புடன் தங்குவார் 11 : 177- 201.

நம்மைப் பொறுத்தவரையில் தேவனுடைய பரிசுத்த ஸ்தலம் நம்மோடுகூட எப்போதும் உண்டு. தேவனுடைய பெட்டியும், பொற்பாத்திர மன்னாவும், நியாயப்பிரமாணப் பலகைகளும் அனைத்தும் கிறிஸ்துவுக்குள் உள்ளடங்கி உள்ளன: அவர் நம்மோடு இருப்பது தமக்கு மிகப்பெரிய ஆசீர்வாதம்

உலகின் வீதியில் நாம் ஒருபோதும் அகதிகளல்ல ஒருவேளை ஆண்டவரால் கைவிடப்பட்டால், நம்மை அகதி புணர்விலிருந்து காப்பாற்ற எதனாலும் முடியாது.

12:1-6 உலகத்தின் பார்வையில் பைத்தியங்கள்

எசேக்கியேலின் செயலை நினைத்துப் பாருங்கள். வேடிக்கையாக இல்லையா

இஸ்ரவேலுக்கு அடையாளமாக தேவனால் மாற்றப்பட்டிருந்த அந்த தேவ மனிதன் நன்றாகவே தமது பங்கை ஆற்றினார் 112 : 6,

இங்குக் காண்பிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் அதேபடி எருசலேமில் சுமார் கி.மு.586-ல் நடந்தேறியது (2இரா 25 1 -7, எரே 52 : 4 – 11, தேவன் நம்மைத் தற்கால உலகத்துக்கு அடையாளமாகவைத்துள்ளார் விரைவில் வரப்போகும் கிறிஸ்துவை எதிர்பார்த்திருப்பதை வாழ்வில் காண்பிக்கும் கடமை நமக்கு உண்டு, ஆனால் நாம் இதற்குநேர்மாறான நிலையில் வாழ்ந்து வருகிறோமல்லவா? நாம் காவலாளிகளோ, கயவர்களோ? கிறிஸ்துவின் நியாயாசனம் நிரூபிக்காமல் போகாது.

12:22-28 பழைய மொழிகளுக்கு பலிகடா ஆவதோ?

தீர்க்கதரிசனங்கள் என்றவுடனே அவை நீண்ட நாட்களுக்குப் பின்பு நடக்கும் காரியம் என்ற எண்ணம் இஸ்ரவேலர் நடுவில் இருந்தது. எசேக்கியேல் மூலம் தேவன் இதற்கு எதிரான எச்சரிப்பை வழங்கினார்: எரேமியா கூறிய எருசலேம் அழிவும் உடனடியானதாக இருந்தது. மக்களோ பழைமையான எண்ணங்களிலேயே வாழ்ந்து கொண்டிருக்க முயன்றனர். உடனடியாக அது வராது வீடுகள் கட்டி சுகமாகக் குடியிருப்போம் என எண்ணினர் (11 : 3, 12 22)

சாத்தான் மிகப்பெரிய சூழ்ச்சிக்காரன் கர்த்தரின் வருகையையும் உலகின் முடிவையும் மனிதனின் ஆயுக முடிவையும் பற்றி நாம் அறியும்போது அது மிகவும் நீண்ட காலம் தாண்டி வரும் ஒரு நிகழ்ச்சி என எண்ண வைக்கிறான். ஒவ்வொரு மனிதர் உள்ளத்திலும் இந்த உணர்வை ஏற்படுத்துகிறான் விரைவில் அவர்கள் வாழ்வு முடியும் படியாகவும் காய்களை நகர்த்துவான். தேவ வசனங்களை வாசிப்போரே உங்கள் ஆயத்தமாகுதலின் நாள் நாளை அல்ல; ‘இன்றாக இருக்கட்டும்

[su_heading size=”24″ align=”left” id=”H2″]Pdf file Download Section[/su_heading]

[su_button id=”download” url=”https://www.mediafire.com/file/zsyq1yuaazgqxwe/எசேக்கியேல்+புத்தகத்தின்+முக்கிய+நிகழ்வுகள்+3.pdf/file” target=”blank” style=”3d” size=”9″ wide=”yes” center=”yes” radius=”round” icon=”icon: download”]Download PDF Now[/su_button]

Leave a Reply