எசேக்கியேல் புத்தகத்தின் முக்கிய நிகழ்வுகள் 4

எசேக்கியேல் 4

எசேக்கியேல் புத்தகத்தின் முக்கிய நிகழ்வுகள் 4

131-16 நாடக நடிகர்கள்

எரேமியா எசேக்கியேல் ஆகிய தீர்க்கதரிசிகள் வாழ்ந்த காலகட்டம் பொய் தீர்க்கதரிசிகள் மலிந்த காலமாகும்.

பொய்யர்கள் கூட்டணியாக சேர்ந்து நின்று ஒருவன் கூறிய பொய்யை இன்னொருவன் சாந்து பூசி மெருகு ஏற்றியச் செயல் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியுடைய கோட்டைகள் போல அவை காட்சியளித்தன. ஆனால் நியாயத்தீர்ப்பின் கல்மழை சொரிந்த போது அவை அடிப்படையற்றவையாதலால் இடிந்து விழுந்தன. அதில் அடைக்கலம் புகுந்தோர்களும் புதைந்து செத்தனர். வெள்ளையடிக்கப்பட்ட பொய்களை நம்ப மக்கள் எவ்வளவாய் ஓடி அலைகின்றனர் . . ? 

அவர்களுக்கு வரும் நியாயத்தீர்ப்புகளாக எசேக்கியேல் கூறியன 

  • 1 இஸ்ரவேலிலிருந்து அவர்கள் உரிமைகள் பறிக்கப்படும் 113 : 9), 
  • 2 கோத்திர அட்டவணையிலிருந்து அவர்கள் பெயர்கள் விடப்படும் 13: 9 
  • 3 இஸ்ரவேல் தேசத்துக்கு அவர்கள் திரும்பி வருவதில்லை 13 : 9). 
  • 4 எருசலேம் வீழும்போது அவர்கள் ஆசீர்வாத உரிமை பாராட்டல்கள் அழியும் (13 : 10 – 12 )
  • 5 எருசலேமின் அழிவுடன் சேர்ந்து அவர்களும் அழிவர் 13: 13 – 16),

 தற்கால கிறிஸ்தவ உலகமும் இத்தகைய சூழலைச் சந்திக்க வெகுகாலம் செல்லுமோ …….?

13: 17-23 ஆத்தும வேட்டைக்காரிகள்

பெண்கள் ஆண்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் காலம் இது, பட்டறை முதல் ஆகாய விமானம் ஓட்டுவதுவரை ஏன் ராக்கெட் பயணத்தைக் கூட அவர்கள் மேற்கொண்டு சாதித்து வருகின்றனர்.

பொய் தீர்க்கதரிசிகள் அணிவகுப்பிலும் இதற்கு சற்றும் குறைச்சலில்லை. நாவுகூசாது பொய் சொல்லி மக்களை ஏமாற்ற கொஞ்சமும் தயக்கம் இல்லை. தமிழக கன்வென்ஷன் மேடைகளே இதற்குச் சரியான சான்று. பரிசுத்த வேதாகமம் கூறும் பெண்மையின் பண்புகளுக்கு மாறாக பரிசுத்தக் குலைச்சல்களைக் குவிக்கும்படி கொக்கரிக்கும் துணிச்சல்கள் என்னே. . ! வீடுகள் தோறும் ஏறியிறங்கி சில சிறங்கை (கைப்பிடி) வாற்கோதுமைக்காகவும் சில்லறைக் காசுகளுக்காகவும் அள்ளி வீசும் பொய் தரிசனங்கள்தான் என்னே ? ஆண்களை விட சாதுரியமாக தலைகளுக்கு ஏற்ற தலையணைகளைத் தயாரிக்க இவர்கள் காட்டும் புத்தி சாதுரியம் தான் என்னே (வச் 18). மந்திர தந்திரங்களையும், தலையணைக் கலாச்சாரங்களையும் தேவன் நியாயந்தீர்ப்பார். நித்தியத்தின் ராஜா முன் இவர்கள் முகமூடிகள் கிழியும்போது சாதுரியத்தைப் பயன்படுத்தி தப்பிக்கொள்வார்களா? மேடை கட்டி முழங்குவார்களா? பார்க்க: பக். 371 – 372.

14:14 காப்பாற்ற முடியாத மத்தியஸ்தர்கள் 

எருசலேமின் அழிவு நிச்சயிக்கப்பட்டாயிற்று. இனி அதன் தீர்ப்பை மாற்ற எவராலும் முடியாது. இதனை நோவா தானியேல் யோபு ஆகிய மூன்று மனிதர்களை முன்னிறுத்திக் கொண்டு எசேக்கியேல் பேசுகிறார். டப்ஐந்த. அயன்ருேது நோவா எசேக்கியேலுக்கு சுமார் 1900 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். 

யோபு எசேக்கியேலுக்கு சுமார் 1400 – 1000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். தானியேலோ” எசேக்கியேலுக்கு சம சம காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்தவர்.

தானியேல் எசேக்கியேலின் சமகாலத்தவரானதால் இங்கு குறிப்பிடப்படும் தானியேல் ஆபிரகாம் போன்ற முன்னோர்களின் காலத்தில் வாழ்ந்த ஒருவராக இருக்கலாம் என்றொரு கருத்து உண்டு ராஸ்ஷம்ரா கல்வெட்டுகளில் (சுமார் கி.மு.1400 -ஐச் சார்ந்தது) நீதிமானும் புத்தியுடையவருமான ஒரு தானியேலாக இவர் இருக்கலாம் என்ற கருத்தை சிலர் முன்வைப்பர். ஆனால் இந்தக் கல்வெட்டு கூறும் தானியேல் பாகால் வழிபாடு உடையவராக இருந்தார் என்ற கருத்து இவர்கள் கூற்றை மறுக்கிறது.

வேறு சிலர் இந்த தானியேல் தான் – ஏல் என்ற உச்சரிப்புடைய வேறு பெயர் என்றும், இந்த உச்சரிப்பு வேறுபாட்டால் நமக்கு தெரியாத வேறு ஏதாவது தானியேலாக இருக்கலாம் எனவும் கருதுவர். நோவாவையும், யோபுவையும் குறிப்பிடும்போது இந்த தானியேல் அறியப்படாத தானியேலாக விளங்க நியாயம் இல்லை. எனவே இவர் எசேக்கியேலின் சமகால தானியேலாகவே இருக்க வேண்டும். நாம் அவ்வாறு கொள்வோமேயானால் இந்த இளைஞனான விசுவாசத் தளபதியை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.

இந்த தானியேல் கி.மு.605-ல் நிகழ்ந்த நேபுகாத் நேச்சாரின் முதல் படையெடுப்பில் சிறைபிடிக்கப்பட்டார். எசேக்கியேல் கி.மு.597-ல் சிறையானார். எருசலேம் கி.மு.586-ல் முற்றும் ஆழிய காத்துக்கொண்டிருந்தது. இப்போது தானியேல் எருசலேமை விட்டு கைதியாகி 14 ஆண்டுகளாவது ஆகியிருந்தது. பின்பு இஸ்ரவேலரின் விடுதலைக்காக வேதாகமத்தை ஆராய்ந்து தெளிந்து அதனடிப்படையில் போராடிய இவர் தானியேல் இளமையிலேயே விசுவாச ஜெப வீரராக விளங்கியிருக்க வேண்டும். அரண்மனை வாழ்விலும் மூன்று வேளை ஜெபத்தை அவர் மறக்கவில்லை (தானி 6 : 10). தேவனோ அதனை மறைக்கவில்லை.

இனி மத்தியஸ்துவ ஜெபங்கள் யூத மக்களை விடுவியாதது ஏன்? அவர்கள் மனந்திரும்பாமல் இருக்கும் வரை அவர்கள் மீது நியாயத்தீர்ப்பு செலுத்தாமல் இருப்பது என்ற காலம் வந்துவிட்டது. மட்டுமல்ல. நம்மைப் பொறுத்தவரை மறுமைகால நியாயத்தீர்ப்பில் இன்னொரு பரிசுத்தவானின் ஜெபம் எவருக்கும் தோள் கொடுக்காது.

இன்று- பாவங்களில் வாழ்ந்து கொண்டே காணிக்கை அனுப்பி தேவசமுகத்தில் வேண்டுதலை ஏறெடுக்க ஆட்களை நியமிப்போர் கவனிக்க இவர்கள் வேண்டுதல் நீங்கள் மனந்திரும்பாதவரை பயனில்லை, உலகில் ஆசீர்வாதம் வருவது போலத் தோன்றினாலும் மாயத் தோற்றமே. இது பயனுடைய ஆசீர்வாதமும் அல்ல.

தேவ நியாயத்தீர்ப்பில் தேவ கோபுரங்களோ. தேவ வீடுகளோ. தேவ தோட்டங்களோ. தேவ கூடாரங்களோ தேவ பண்ணைகளோ, தேவ மலைகளோ, தேவ பண்டகசாலைகளோ, ஆசீர்வாத திட்டங்களோ, காணிக்கை விண்ணப்பப் பங்காளர் திட்டங்களோ, ஜெப தொலைபேசி எண்களோ. ஜெப் பத்திரிக்கைகளோ, ஜெப தொலைக்காட்சிகளோ காப்பாற்றாது என்பதை மறந்து விடாதீர்கள். தேவனின் தேவை உங்கள் மனந்திரும்புதலும், நேரடியான தேவ உறவில் சரியாகுதலுமே, பிற எல்லாம் உற்சாகப்படுத்த ஓரளவு உதவி செய்யும் உதவிகளே. அணை உடைந்தபின் அழ துணியாது, இப்போதே வாழ்வுகளைச் சீரமைத்துக் கொள்ளுங்கள்.

15:1-8 எசேக்கியேலின் உருவகக் கதைகள் 

எசேக்கியேல் ஏழு உருவகக் கதைகளைப் பயன்படுத்தி இஸ்ரவேலருடன் பேசுவதை 15 முதல் 24 வரையுள்ள அதிகாரங்களில் பார்க்க முடியும்.

  • 1 பயனற்ற திராட்சைச் செடி (15:1-8)
  • 2 உண்மையற்ற மனைவி (16: 1-63)
  • 3 இரண்டு கழுகுகள் 117 : 1 – 20 
  • 4 கேதுரு மரம் (17: 22 – 24)
  • 5 பெண் சிங்கமும் குட்டியும் 19 : 19) 
  • 6 இரண்டு வேசிப்பெண்கள் 23: 1 – 49)
  • 7 கொதிக்கும் கொப்பரை (24: 1- 14

15-ம் அதிகாரத்தில் பயனற்ற திராட்சைச் செடியைப் பற்றி பார்க்கிறோம். இஸ்ரவேலரைத் திராட்சைச்செடியாக உருவகப் படுத்துவது வேதாகம் நடை (சான்று உபா 32 : 32. சங் 80: 8 – 12, ஏசா 5 : 1 – 3, எரே 2 21, ஓசி 10 : 1 மத் 21 : 33. திராட்சைச் செடியின் பயன் என்பது கனி மட்டுமே. அதன் கொடிகள் எந்த மரச்சாமான்கள் செய்யவும் உதவாது. அது பயன்கொடா விட்டால் நல்ல விறகாக கூட உதவாது. வீணாகச் சுட்டெரிக்கப்பட வேண்டும். கனி கொடுக்கும் போதோ அது உன்னதமானச் செடியாக விளங்குகிறது.

தேவ கிருபை பெற்ற இஸ்ரவேலரும் அப்படியே என்பது எசேக்கியேலின் விளக்கம்.

தேவ கிருபை பெற்ற திருச்சபையின் விளக்கமும் இதுவே. அது கனி கொடுத்தால் உலகிலேயே அதைப்போல சிறந்த பொருள் வேறு இல்லை. அது கனிகொடாவிட்டால் உலகிலேயே வேண்டாத பொருள் இதனைவிட வேறு இல்லை. தனிப்பட்ட விசுவாசியின் வாழ்வும் இத்தகையதே உலகில் வைக்கப்பட்டிருப்பதன் நோக்கத்தை நிறைவேற்றாவிட்டால் இடைஞ்சல் பொருளாகிவிடுவார் ! ஒன்றில் நாம் உலகில் மிகமிக முக்கியமானவர்களாக வாழ முடியும். இல்லையேல் பயனற்ற தொல்லைக் கொடுப்பவர்களாக வாழ முடியும். இன்று பெரும்பாலான வாழ்வுகளும் இத்தகைய உதவரிக்கரைகள் அல்லவா?

16:1-63 எருசலேம் என்றொரு உண்மையற்ற மனைவி

எசேக்கியேல் இந்த நீண்ட அதிகாரத்தில் யூதாவினரை ஒரு உண்மையற்ற மனைவியுடன் ஒப்பிட்டுக் கொண்டு, அதன் அருவ ருப்புக்களை வெளிப்படையாகவே விபச்சாரத்துடன் ஒப்பிட்டு விளக்குகிறார். சற்று விரசமான நிலையில் விமர்சிக்கும் வரிகள் இதில் காணப்படுவதால் சில யூத ரபிகள் இப்பகுதியை பொதுவான இடங்களில் வாசிக்கக்கூடாது எனக் கூறியதுண்டு. இப்பகுதியில் இஸ்ரவேல் கானானில் இருந்த தாழ்ச்சியான நிலை, எகிப்தில் அடிமையாக வாழ்ந்த நிலை, அற்புத விடுதலை, சீனாய் உடன்படிக்கை,

பாலும் தேனும் ஓடும் தேசப் பரிசு, சிறந்த பொற்கால ஆட்சிகள், உண்மையில்லா தன்மை ஆகியவற்றைப் பேசுகிறார். இஸ்ரவேல் வானிலிருந்து நேரடியாக வந்த ஜாதி அல்ல, உலகின் மோசமான மக்களினத்திலிருந்து தெரிந்து கொள்ளப்பட்டோ ராவர் 16:1-3 மிக மோசமானவர்களை தேவன் தத்தெடுத்தார் 16: 55- 

பின்பு நல்ல பதவியை வழங்கினார்; உடன்படிக்கை செய்து கொண்டார் அதன் பிறகு மிகச் சிறப்பாக உயர்த்தினார் (16 – 10 – 14). ஆனால் அவளோ தெரு விலைமகளைப்போல மாறிவிட்டாள் (16 : 15 – 34).

எனவே தேவன் அவள் தன்னைக் கெடுத்துக்கொண்ட நாடுகளிடமே தண்டிக்க ஒப்புக்கொடுத்தார் 116 – 35 – 48

யூதாவின் தீங்கு மூத்த சகோதரியான சமாரியாவையும் (இஸ்ரவேல் வடக்கு அரசு) இளைய சகோதரியான சோதோமையும் விட கேடாக மாறியது என எசேக்கியேல் குற்றம் சாட்டினார் (16 : 46 – 50). தண்டித்த பின் தேவன் மீண்டும் அவளை அவளது சகோதரிகளுடன் சேர்த்து திரும்பவும் சேர்த்துக் கொள்வார் என வாக்குறுதியளித்தார் (16 : 53, 60, 63.

நமது பழைய நிலைகள் திரும்பிப் பார்க்கப்பட வேண்டும். கிறிஸ்துவாலும் அவரது சுவிசேஷத்தாலும் அடைந்த நன்மைகளை மறந்து அகந்தைகொண்டு, தீயோராக நடப்பது அழகல்ல. தேவன் நியாயத்தீர்ப்பு நடத்தும்போது ஒவ்வொன்றாக பிட்டு பிட்டு நமது கண்முன்னே நிறுத்துவார்.

16:17 அலங்கரித்தவரை மறந்து அராஜகம்

இஸ்ரவேலின் பழைய நிலை படுமோசமானது. தேவ கிருபை மகா பெரிதாக இருந்ததால் இஸ்ரவேலின் மகிமை மிகவும் உயர்ந்ததானது ஆண்டவர் அவளை அலங்கரித்தபோது அந்த அழகுடன் விபச்சாரத் தொழிலுக்கு அவள் இறங்கினாள். இது எவ்வளவு கேவலமானது? ஒருகாலத்தில் கலாச்சாரத்தின் படுகுழிகளில் வீசப்பட்டிருந்தது நமது பின்புலம் உயர்ந்த ஜாதியைச் சார்ந்தோர் எனக்

கூறியவர்கள் மேலேறி நின்று மிதித்தனர். மதம் காலால் உதைத்து விரட்டியது. பணம் வெற்றிலை குதப்பும் வாய்களால் எச்சில் உமிழ்ந்து துப்பியது. மேலாடை போடக்கூட உரிமையில்லை. ஓட்டுக்கூரை வீடு கட்ட அனுமதியில்லை. தார்பாய்ச்சிக் கிடந்த கலாச்சாரத்தில் சுவிசேஷ ஒளி வெள்ளம் பாய்ந்தது. படிப்பறிவற்றவனுக்கு கல்வி ஏழைக்கு உணவு, அடிமைத்தனத்துக்கு விடுதலை என மனித நேயம் கொண்ட மிஷனரிகள் மாடாய் உழைத்தனர். 

தெருமுனைகளில் மிஷன் மருத்துவ சாலைகள் வைத்து, குன்றுகளின் மேல் தேவாலயங்களைக் கட்டி, மனிதனாக வாழ வேதத்தை மொழிபெயர்த்து அளித்து, தேவ வாக்கைப் போதித்தனர். காலம் கடந்தபோது அனைத்தும் உடை இஸ்ரவேலரைப் போல தேவனை மறந்தவர்களானோம். ஆனால் அந்த அலங்காரத்தில் கொழுத்து விபச்சாரம் செய்த ஆன்மீகச் சொத்துக்களை அனுபவிக்கத் துணிந்து விட்டோம். அடிதடி கலாச்சார ஆ அரசியலைப் புகுத்தி, வாணிபச் சந்தைகளாக தொழிற்சாலைகளையும் மருத்துவமனைகளையும், கல்வி நிறுவனங்களையும் மாற்றி விட்டோம். மதுவும் மாதுவும் பயன்படுத்தி அரசியல் பிடிக்க களமிறங்கி விட்டோம். லஞ்சமும், பொய்போதனைகளும் தலைவிரித்தாடுகின்றன.

இனி தேவன் சாட்டை வாருடனும் தீப்பந்த முனையுட வர வெகுகாலம் ஆகுமோ?

16:53-63 திரும்பவும் வரும் தேவ கிருபை

தேவன் இஸ்ரவேலின் கொடுமையான தீமைக்கு ஏற்ற தண்டனையை வழங்குவார். ஏனெனில் அவர் நீதியுள்ள நியாயாதிபதி ஆனால் அவர் கிருபையுள்ள தேவனும்கூட எனவே மீண்டும் கிருபையாக இரங்கி இஸ்ரவேலைச் செழிப்படையச் செய்வார். அது ஆயிரம் ஆண்டு அரசாட்சியின்போது நிகழும். அப்போது இஸ்ரவேலுடனான புதிய உடன்படிக்கை ஏற்படுத்தப்படும் (எரே 31: 31 – 34). அது நித்திய உடன்படிக்கையாக விளங்கும் எசே 16 

எருசலேம் திருப்பப்படும்போது, சோதோமும் சமாரியாவும் கூட திரும்பவும் செழிப்படையும். அக்காலத்தில் இஸ்ரவேல் வெட்கப்படும். குறிப்பாக தனது மேசியாவை மறுதலித்ததற்காக அதிகமாக நாணமடையும் (சக 12 : 10i,

தேவ கிருபை எவ்வளவு மேன்மையானது. பாலம் தனக்குரிய தண்டனையை பெற வழிநடத்தும்போது, தேவ கிருபை மன உருக் கமுடன் செயல்பட தருணம் காத்து நிற்கிறது. மனம் திரும்புதல் என்ற வாய்ப்பு கிடைத்து விட்டால் அது கிரியை செய்துவிடுகிறது. பாவத்தால் பின்னடைந்து போன விசுவாசிகளுக்கு எவ்வளவு ஆறுதலான செய்தி இது.

வெறும் ஒரு மனந்திரும்புதலே அவர்கள் வாழ்வுக்கு திருப்புமுனையை அளித்துவிடும். இன்னும் எத்தனைநாள், இவர்கள் கல்மனமுடன் தேவனுக்கு முதுகைக் காட்டி வாழ்வார்கள்? 

[su_heading size=”24″ align=”left” id=”H2″]Pdf file Download Section[/su_heading]

[su_button id=”download” url=”https://www.mediafire.com/file/genfma236ic5x0r/எசேக்கியேல்+புத்தகத்தின்+முக்கிய+நிகழ்வுகள்+4.pdf/file” target=”blank” style=”3d” size=”9″ wide=”yes” center=”yes” radius=”round” icon=”icon: download”]Download PDF Now[/su_button]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *