இராட்சதர்கள் எவ்வாறு தோன்றினர்?

இராட்சதர்கள் எவ்வாறு தோன்றினர்?

ஆதி 6:1-2 தேவ குமாரர் என்றால் யார்? இராட்சதர்கள் எவ்வாறு தோன்றினர்?: 

பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது தேவ புத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்கள் (யோபு 38:4-7). அப்போது இருந்தவர்கள் யார்? மனிதர்கள் அல்ல, தேவதூதர்கள்தான்.

எனவே தேவகுமாரர் என்று இவ்விடத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதும் தேவதூதர்களையே குறிக்கும். சோதோம் கொமோரா பட்டணத்தாரைப்போல விபசாரம்பண்ணி அந்நிய மாம்சத்தைத் தொடர்ந்து தங்களுடைய ஆதி மேன்மையைக் காத்துக்கொள்ளாமல் உங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தேவ தூதர்கள குறித்து யூதா 6-7 இல் வாசித்துப்பாருங்கள். 

இதிலிருந்து நாம் கண்டுகொள்வது என்ன? 

பெண்ணின் வித்தாகத் தன் தலையை நசுக்குபவர் தோன்றாதபடிக்குச் சாத்தான் மேற்கொண்ட ஒரு சதித்திட்டம் தெரிய வருகிறது. தனது தலைமையை ஏற்றுக்கொண்டு தன்னோடு தள்ளப்பட்ட தேவதூதர்களில் சிலரை மனிதப் பெண்களோடு உறவு கொள்ளச் செய்வதன் மூலம் பெண்ணின் வித்தை மாசுபடுத்த சாத்தான் திட்டம் தீட்டினான். இவ்வாறு உறவு கொண்ட அத்தூதர் களுக்கான முதல் தண்டனை அவர்களைச் சங்கிலியிலே கட்டி அந்தகாரத்தில் வைத்தபோது நிறைவேற்றப்பட்டது (யூதா 6-7; 2 பேதுரு 2:4). பின்னர் ஆபிரகாமின் சந்ததியில் பெண்ணின் வித்தாகிய இரட்சகர் வருவார் என்றறிந்த சாத்தான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட கானான் தேசத்தில் மீண்டும் இவ்விதம் தனது தூதர்கள் மூலம் செயல்பட்டு இராட்சதர்களை உருவாக்கினான் (எண்.13:31-33). இஸ்ரவேலரோடு போரிட்ட ஒக் என்ற அரசன் ஒரு இராட்சதன் (உபா.3:11-13). மீண்டும் தாவீதின் காலத்தில் இதைப் போன்ற ஒரு முயற்சி நடந்து கோலியாத்தும் அவனது சகோதரரும் இஸ்ரவேலை அழிக்க முற்பட்டதை 1 சாமு. 17; 2 சாமு 21:15-22 இல் காண்கிறோம். தேவன் தமது படைப்பின் செயல்களை முடித்தபோது (ஆதி.2:1-25) இராட்சதர்கள் இல்லை. எனவே அவர்கள் உருவானதற்கு ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல் மானிடப் பெண்களோடு உறவு கொண்ட தேவதூதரே காரணமாவர் (ஆதி.6:4). 

தேவபுத்திரர்

இப்பகுதியில் தேவபுத்திரர் என்று குறிப்பிடப்பட்டிருப்பது சேத்தின் வம்சத்தினர் என்பதை ஏற்றுக் கொள்ள இயலாது. ஏனெனில் சேத்தின் புத்திரரான மனிதர்கள் காயின் வம்சப் பெண்களோடு உறவு கொண்டால் மனிதர்கள் மட்டுமே பிறக்க முடியும், இராட்சதர்கள் பிறக்க முடியாது என்பது தெளிவு. மேலும், சேத்தின் வழியினர் தேவகுமாரர் என்று குறிப்பிடப்பட்டுள்ளனர் எனில் சேத்தின் வம்சத்தில் நோவாவின் குடும்பம் தவிர மீதிப்பேர் பெருவெள்ளத்தின்போது அழிக்கப் பட்டிருக்கமாட்டார்கள் அல்லவா? எனவே தேவபுத்திரர் என்பது தேவதூதரையே குறிக்கும். காபிரியேல், மிகாவேல் என்றழைக்கப் படும் தேவதூதர்கள் வேதத்தில் ஆண்பாலில் கூறப்பட்டுள்ளனர் (தானி.10:13; 12:1; லூக். 1:11, 19, 26-27; வெளி.12:7). தேவதூதர்கள் ஒருவரையொருவர் திருமணம் செய்து கொள்வதில்லை (மத்.22:30; மாற்கு 12:25) என்று மட்டுமே கர்த்தர் குறிப்பிட்டுள்ளார். பெண் தேவதூதர்களைப் பற்றி வேதம் கூறவில்லை.ஆதி 13:13; யூதா 6 குறிப்புகள் காண்க.

இதற்கு மாறாக தேவபுத்திரர் என்பது சேத்தின் வம்சத்தினரையே குறிக்கும் என்று சில வேதவல்லுநர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

[su_heading size=”24″ align=”left” id=”H2″]Pdf file Download Section[/su_heading]

[su_button id=”download” url=”https://www.mediafire.com/file/jlb5abjmvcger2j/இராட்சதர்கள்+எவ்வாறு+தோன்றினர்.pdf/file” target=”blank” style=”3d” size=”9″ wide=”yes” center=”yes” radius=”round” icon=”icon: download”]Download PDF Now[/su_button]

Have any Question or Comment?

One comment on “இராட்சதர்கள் எவ்வாறு தோன்றினர்?

PASTOR STANY FERNANDO

ஆதியாகமத்தில் கூறும் தேவ குமாரர்கள் மனித இனங்கொண்டவர்கள் தேவதூதருக்கு இன உர்ப்பத்தி செய்யும் தன்மை இல்லை மனிதருக்குமாத்திரம் மட்டுமே உரியது ஆகையினால் நீங்கள் கூறும் பதில் ஏற்றுக்கொள்ள முடியாது வேறு விளக்கம் இருக்கின்றது ஆராந்து பாருங்கள் ஆதியாகமம் ஒன்றிலிருந்து ஆறாவது அதிகாரத்திற்க்குள் புதையல் இருக்கின்றது தோண்டிப் பார்த்தால் ஆவியானவர் கிடைக்கச் செய்தார் நன்றி

Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *