சாத்தான்
சாத்தானின் தொடக்கம்
பூமி படைக்கப்பட்ட பின்னர், மனிதன் படைக்கப்படுவதற்கு முன்பு பூமியில் தேவதூதர்கள் இருந்தனர். அப்பொழுது, தேவன் படைத்த கேருபாக லூசிபர் என்பவன் பூமியில் இருந்தான். படைப்பின் வரலாறு. கட்டுரை காண்க. நல்லவனாக இருந்த லூசிபர் பெருமையடைந்து, தேவனைப்போலாகவேண்டும் என்று பேராசைப்பட்டான். தான் தேவனாக வேண்டுமென்று தேவனுக்கு எதிராகப் புரட்சிசெய்து பரலோகத்திற்கு (வடதிசை ஆராதனைக் கூடங்கள்) ஏற முயற்சித்தான். அப்பொழுது அவனுடைய தலைமையில் பல தேவதூதர்கள் சேர்ந்து புரட்சியில் ஈடுபட்டனர். புரட்சி தோல்வியில் முடிந்தது. லூசிபரும் அவனுடன் சேர்ந்து புரட்சி செய்தவர்களும் தங்களது தன்மைகளிலும் பொறுப்புகளிலும் பலவற்றை இழந்து தீமை செய்யும் நபர்களாக ஆயினர். இவ்வாறு மாறிய லூசிபர் சாத்தான் என்றும் அவனுடன் சேர்ந்த தேவதூதர்கள் பிசாசுகள், பேய்கள், அசுத்த ஆவிகள் என்றும் அழைக்கப்படுகின்றனர். மேலும் பூமியின்மீது வந்த சாபத்தால் பூமியின்மேல் ஒளிபடாமல் தடுக்கப்பட்டிருந்தது. இச்சமயத்தில் இருளின்மீது ஆவியானவர் அசைவாடினார். மேலே கூறப்பட்ட யாவும் இருளிள்மீது ஆவியானவர் அசைவாடியதற்கு முன்பு நடைபெற்றன. இவற்றை ஏசா.14:12-14; எசே.28:12-19; ஆதி.1:2 காண்க. லூசியரைப் பாவம் செய்வதற்குக் கர்த்தர் ஏன் அனுமதித்தார். என்பதை ஆதி.3:1-7 குறிப்பில் காண்க. சாத்தான் உருவாக்கப்பட்டதின் ஒரு முக்கியமான நோக்கம் கொலோ.1:16கொலோ.1:16 குறிப்பில் காண்க.
கொலோ 1:16 விளக்கம்
உருவாக்கப்பட்ட யாவும் கிறிஸ்துவைக்கொண்டு பிதாவால் உருவாக்கப்பட்டன. ஆவியானவரும் படைப்பில் செயல்பட்டார் (ஆதி.1:2). யாவும் கிறிஸ்துக்குள் அவரைக் கொண்டு அவருக் கென்று உருவாக்கப்பட்டன. அப்படியானால் சாத்தானும் அவருக் கென்று உருவாக்கப்பட்டவனா? ஆம். சாத்தானை லூசிபர் என்ற நல்ல தூதனாக தேவன் உருவாக்கினார். அவன் பெருமையடைந்து பாவத்தில் வீழ்ந்ததால் (அவ்வாறு நடக்கும்படி தேவன் அனுமதித்தார்) தீயசக்தியான சாத்தானாக அவன் மாறினான். சாத்தானையும் அவனது தூதர்களையும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தோற்கடிக்கும்பொழுது அவருடைய திருப்பெயருக்கு மகிமையும் புகழும் உண்டாகின்றன. இது சாத்தான் உருவாக்கப்பட்டதின் ஒரு நோக்கம் ஆகும். அதாவது நாம் வெற்றி பெற வேண்டுமானால் நம்மால் தோற்கடிக்கப்படுவதற்கு சிலர் தேவை. எனவே நம்மால் தோற்கடிக்கப்படுவதற்கென்று சாத்தானும் அவனது தூதர்களும் உருவாக்கப்பட்டுள்ளனர் என்பது சாத்தானின் படைப்பில் ஒரு முக்கியமான நோக்கம் ஆகும்.
தேவனைச் சந்திக்க அனுமதி
தள்ளப்பட்ட அவள் மனுக்குலத்தைப் பாவம் செய்யத் தூண்டினான். (ஆதி.3:1-7 குறிப்புகள் காண்க). பூமியனைத்திலும் சுற்றித்திரிவதற்குமட்டுமன்றி (யோபு 1:7; 2:2; 1 பேது.5:8) பரலோகத்தில் தேவனது பிரசன்னத்திற்குத் தேவதூதர்களோடு செல்லும் அனுமதி பெற்றுள்ளான் (யோபு 1:6; 2:1). ஒரு பொய்யின் ஆவி தேவபிரசன்னத்தில் இருந்ததை 1 இரா.22:21-22 இல் வாசிக்கிறோம். எனவே சாத்தானோடு தள்ளப்பட்ட தூதர்களும் பூமியில் இருப்பதற்கென்று தள்ளப்பட்டிருந்தபோதிலும் பரலோகத்தில் தேவபிரசன்னத்திற்குச் செல்ல அனுமதி பெற்றவர்கள் என்று அறிகிறோம். அந்திக்கிறிஸ்துவின் ஆட்சியின் நடுவில் இந்த அனுமதி நீக்கப்பட்டு சாத்தானும் அவனது தூதர்களும் பூமியில் தள்ளப்படுவார்கள் (வெளி.12:7-9). யோபு 1:6-19; 2:1 8 ).
சாத்தான் ஒரு நபர்
சாத்தான் என்பது ஒரு நபரைக் குறிக்கும் பெயராகும். அவன் கிறிஸ்துவோடு பேசினான் (மத்.4:1-11), தேவனிடம் அனுமதி பெற்று யோபைத் தொல்லைக்குட்படுத்தினான் (யோபு 1:6-12; 2:1-7), பிரதான ஆசாரியனாகிய யோசுவாவுக்குத் தீங்கு செய்ய அவனது வலதுபக்கத்தில் நின்றாள் (சக.3:1-3) என்பவை போன்ற பல நிகழ்ச்சிகளிலிருந்து அவன் ஒரு நபர் என்பது தெளிவு.
1). சாத்தான் எங்கும் நிறைந்தவன் அல்ல (Satan is not ommipresent).
அவனால் ஒரு நேரத்தில் ஒரு இடத்தில்தான் இருக்கமுடியும். அவனது சார்பில் இருக்கும் தூதர்கள் பல இடங்களில் இருக்கிறார்கள். தேவதூதர்களின் ஒரு சில பண்புகள் அவளிடம் இப்பொழுதும் உண்டு.
2). சாத்தானுக்குர் சர்வவல்லமை கிடையாது.
ஒரு தேவதூதனால் சாத்தானைச் சங்கிலியினால் கட்டமுடியும் (வெளி.20:1). சாத்தானின் எல்லா வல்லமையின்மீதும் நமக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது (லூக்.10.19).
3), சாத்தான் யாவற்றையும் அறிந்தவல் அல்ல, நமது எண்ணங்களை அவன் கண்டுபிடிக்க முடியாது.
சாத்தாளின் பண்புகள்
சாத்தான் ஆற்றலுள்ளவள், ஞானமும் அறிவும் உள்ளவள், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் அனுபவம் உள்ளவன், சாத்தானில் ஒரு நற்குணமும் இல்லை. அவன் கொடூரமானவள், தேவன்மீதும் மனிதர்மீதும் தீராத பகையுணர்ச்சியுள்ளவள். வஞ்சகமுள்ளவள்; ஏமாற்றுவதில் கைநேர்ந்தவள், கண்டுபிடிக்கமுடியாத நுணுக்கமாகச் செயல்படுகிறவள், கள்ளத்தனமாக நுழைகிறவன், நன்மை செய்கிறவள்போல் நடிப்பவன், பொய்யன், உண்மையுடன் பொய்யையும் கலப்படம் செய்து ஏமாற்றுகிறவன், எல்லாத் தீமைகளையும் செய்யக் கூடியவன்.
சாத்தானின் செயல்கள்
ஏதேன் நோட்டத்தில் அவன் செய்தவற்றை ஆதி.3:1-15 பகுதியிலும் அதிலுள்ள குறிப்புகளிலும் காண்க ஏதேன் தோட்டத்திலிருந்து பழைய ஏற்பாட்டுக் காலத்தின் இறுதிவரை அவன் பெண்ணின் வித்தாகிய கிறிஸ்து இவ்வுலகிற்கு வராமல் தடைசெய்வதற்காகப் பல காரியங்கள் செய்து வந்தான் (ஆதி.6:1-2 தேவகுமாரர் என்றால் யார்? என்ற குறிப்பு காண்க). கிறிஸ்து பிறந்ததும் பலதடவைகள் அவரை அழிக்க முயன்றான் (மத்.2:16-16; 8:23-27; 12:14; லூக்.4:28-30; யோவா.5:15-16; 7:30,44; 8:59; 10:31; 11:45-54; 13:2), இயேசு மரணமடைந்ததும் சாத்தானுக்கு இருந்த அதிகாரங்களில் ஒன்றான ‘மரணத்தின்மேல் அதிகாரம்’ அவனுடைய கையை விட்டுப் போய்விட்டது (எபி.2:14; வெளி.1:18).
தேவனை எதிர்ப்பதற்காகத் திட்டமிட்டுச் செயல்படுவதே சாத்தானின் வேலையாகும். மக்களை ஏமாற்றி. பாவத்தில் உழலவைப்பது அவளது வேலையின் ஒரு முக்கிய பகுதியாகும். மக்களின் சமாதானம், மகிழ்ச்சி, உடல்நலம் ஆகியவற்றைத் திருடுவதும் அவர்களைக் கொல்வதும் அவர்கள் நரகத்திற்குச் செல்வதற்கான செயல்களைச் செய்யத் தூண்டுவதும் அவர்களை ஏபாற்றுவதும் சாத்தானின் செயல்கள் (யோவா.10:10). அதாவது சாத்தானுக்கும் அவனுடைய தூதர்களுக்கென்றும் நியமிக்கப்பட்ட இடமாகிய நரகத்திற்கு (மத் 25:41) அநேக மக்கள் செல்வதற்கு வழிவகுப்பது சாத்தானின் திட்டமிட்ட செயலாகும். சாத்தானைத் தலைவனாகக் கொண்ட பிசாசுகளின் அரசு கட்டுக்கோப்பு உடையது (லூக்11:17-18).
சாத்தானின் தந்திரங்கள்
கவனமாகத் திட்டமிட்டுத் தாக்குவதில் சாத்தான் சிறந்தவன். ஒரே சமயத்தில் பல தொல்லைகள் தருவான் (யோபு 1:14-19). யாரேனும் அவனைச் சிறிது’ நம்பினாலும் பாவத்தில் விழச்செய்வான். நாம் பெலவீனமாயிருக்கும்போது தாக்குவான். நமது பெலவீனமான பகுதியில் தாக்குவான். நமது நண்பர்களையும் குடும்பத்தினரையும் பயன்படுத்தி சோதிப்பான். வேத வசனத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஏமாற்ற முயற்சிப்பான். நமது தேவைகளைச் சந்திப்பதற்குத் தவறான வழிகளைக் காட்டுவான். பாவத்தைக் கவர்ச்சியாகத் தோன்றும்படி செய்வான். இச்சைகளையும் பெருமையையும் தூண்டிவிடுவான். தேவனையும் அவருடைய வார்த்தையையும் சந்தேகிக்கச்செய்வாள். நமது கவனத்தைத் தேவளைவிட்டுத் திருப்ப முயற்சிப்பான். தேவனுக்குக் கீழ்ப்படியாமலிருக்கத் தூண்டுவாள். பாவம் செய்வதற்கும் பாவம் செய்தபின்பும் சாக்குப் போக்குகள் கற்பிப்பாள். தனது நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வான். ஆனால் நம்மோடு இருக்கிறவர் அவளிலும் பெரியவர் (1 யோவா.4:4) சர்வாயுதவர்க்கத்தை அணிந்தவர்களாக (எபே.6:11-18), தேவனுக்குக் கீழ்ப்படித்து, சாத்தாறுக்கு எதிர்த்து நின்று, அவன் ஓடிப்போவதைக் காண்போமாக (யாக்4:5), தேவனுடைய அனுமதியின்றி நம்மைத் தொட அவனால் முடியாது.-
சாத்தான் மீது நமக்கு அதிகாரம்
சாத்தானுக்கு எவ்வளவோ ஆற்றல் இருந்தபோதிலும் அவன் நம்முடைய அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனே. அவனது சகல வல்லமையையும் மேற்கொள்வதற்கு இயேசு நமக்கு அதிகாரம் அளித்துள்ளார். அவனால் நம்மை ஒருவிதத்திலும் சேதப்படுத்த முடியாது என்றும் கூறியுள்ளார் (லூக்.10:19), சர்வவல்லவரின் நிழலில் நமக்கு முழுமையான பாதுகாப்பு உண்டு (சங்.91:1-16). வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தர் தம்மைப் பாதுகாக்கிறார் (சங்.121:1-8).
சாத்தான் செய்யப் போகிறவை
கிறிஸ்துவின் இரகசிய வருகையில் கர்த்தருடைய பிள்ளைகள் எடுத்துக்கொள்ளப்பட்டபின் வெளிப்படும். அந்திக்கிறிஸ்து (2 தெச.2:7) விற்குச் சாத்தான் தனது பலத்தையும் ஆளுகையையும் மிகுந்த அதிகாரத்தையும் கொடுத்து அவன் மூலமாக உலகத்தை ஆட்சி செய்ய முயற்சி செய்வாள் (வெளி.13). உலகின் பல மக்களைச் சேர்த்து எருசலேமை அழிக்க முயற்சி செய்யும்பொழுது கிறிஸ்து உலகிற்கு வந்து சாத்தாளையும் அந்திக்கிறிஸ்துவையும் கள்ளத் தீர்க்கதரிசியையும் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த சேனைகளையும் தோற்கடிப்பார் (வெளி.19:11-21), அதைத் தொடர்ந்து நடக்கும் கிறிஸ்துவின் ஆயிரம் ஆண்டு அரசாட்சியின் போது சாத்தான் பாதாளத்தின் ஒரு பகுதியில் கட்டிவைக்கப்பட்டிருப்பான் (வெளி.20:1-2).
சாத்தானின் முடிவு
ஆயிரம் ஆண்டு அரசாட்சியின் இறுதியில் சிறிதுகாலம் சாத்தான் விடுதலையாகி, அப்பொழுது இருக்கும் மக்களில் பலரைத் தன்னுடன் சேர்த்து, தேவனுக்கு எதிரான இறுதிப் போராட்டத்தில் ஈடுபடுவான். அப்பொழுது தோல்வியைத் தழுவும் அவள் நெருப்பும் கந்தகமும் எரியும் கடலாகிய நரகத்திற்குள் தள்ளப்படுவான் (வெளி.20:3,7-10).