யோபு 1:6-19 விளக்கம்

யோபு 1:1-19 விளக்கம் 

யோபு 1:6

 1) தேவ புத்திரர்-தேவதூதர்கள். 1:62:1; 38:4-7; ஆதி.6:1 4 ஆகியவற்றில் தேவதூதர்கள் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளனர். மனோளை நிலைமையைப்பற்றி ஆலோசிக்கவும் தங் செயல்களைக்குறித்து எடுத்துரைக்கவும் பரலோகத் தில் கர்த்தருக்கு முன்பாக தேவதூதர் வருவது 2 நாளா. 18:18-22 இலும் எழுதப்பட்டுள்ளது. தேவதூதனாயிருந்து விழுந்து போன சாத்தானுக்கு (ஆதி.3:1-6; ஏசா.14:12-15; எசே.28:12-19 குறிப்புகள் காண்க), இத்தகைய கூட்டங்களுக்குச் செல்ல அனுமதி உண்டு. உபத்திரவ காலத்தின் இடையில் இந்த அனுமதி நிரந்தரமாகப் பறிக்கப்படும் (வெளி.12:10). பரலோக உயிர்களும், தேவதூதர் களும், கட்டுரை காண்க. பக்கம் 1737.

2) ஒரு நாள்-உலகத்தின் நாள் (24 மணி நேரம்) என்று கருதலாம். விண்ணுலகின் கால அளவைக் குறிக்கும் சொல் என்றும் இதைக் கருதலாம். விண்ணுலகில் இரவு இல்லை என்றும் சிலரால் கருதப்படுகிறது.

யோபு 1:7 

தான் புரட்சி செய்யத் தொடங்கினதிலிருந்து சாத்தான் கர்த்தருக்கும் அவருடைய மக்களுக்கும் எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறான். மக்கள் எப்படியாவது கர்த்தரின் எதிரிகளாகவேண்டும், அவரை எதிர்த்துப் பேசவேண்டும் என்று செயல்படுகிறான். விசுவாசிகளை அழிக்க வாஞ்சையாயிருக் கிறான் (1 பேது.5:8-9). பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவது அவனுக்குக் கைவந்த கலை (ஆதி.3:1-6 குறிப்பு காண்க).

யோபு 1:8

1) தொல்லைகள் வந்தாலும் கர்த்தரை நேசிக்கிறவர்கள் உண்டு என்ற உண்மையை நிலைநிறுத்துவதற்குச் சான்றாக யோபைக் கர்த்தர் தெரிந்துகொண்டார். மேலும் பாடுகளின் மூலம் இன்னும் பரிசுத்தமாக்கவும் (23:10) யோபுக்கு முக்கியமான வெளிப்பாடுகளைத் தரவும் (19:25-27) மீண்டும் ஆசீர்வதிக்கவும் கர்த்தர் எண்ணினார். யோபின் நம்பிக்கையை வெளிப்படுத்தவும் கர்த்தர் தீர்மானித்தார் (13:15),

2) யோபு நீதிமானாக இருந்தான்’ என்பதை வேதம் தெளிவாகக் கூறுகிறது (எசே.14:14,20) நீதிமான் என்றால். கர்த்தருக்கு முன்பாகச் சரியான நிலையில் இருப்பவன் என்று பொருள் (A man who has right standing with God is called a righteous man). நீதிமான் என்பது பாவம் செய்யாத மனிதன் என்ற பொருள் ண்டதல்ல. தவறு பொருள் கொள்ளலாம். கொண்ட ஒப்புரவானவன் தவறுகள் நேரும்போது சரி செய்து கர்த்தருடன்

3) கர்த்தர் யோபுக்குக் கொடுத்த சான்றிதழ் இது. இவ்வளவு சிறந்த சான்றிதழ் உமக்குக் கிடைக்குமா? 1:1 குறிப்பு காண்க.

யோபு 1:9-12

 “மக்கள் இவ்வுலக நன்மைகளுக்காவே கர்த்தரைத் தேடுகிறார்கள், தொல்லைகள் வந்தால் அவரைத் தூற்றுவார்கள்’ என்பது சாத்தானின் கூற்று. “எல்லாரும் அவ்வாறு இல்லை, எந்த நிலையிலும் என்னை நேசிப்பவர்கள் உண்டு” என்று கர்த்தர் சாத்தானுக்குச் சவால் விட்டார். தன் கருத்தை நிறுவுவதற்காக யோபைச் சோதிப்பதற்குச் சாத்தானை அனுமதித்தார். இன்றும் போராட்டங்கள், சோதனைகள், பெருந்தொல்லைகள் மத்தியில் கர்த்தரை நேசிப்பவர்கள் உண்டு. எடுத்துக்காட்டாக கம்யூனிஸ்டு நாடுகளில் பயங்கர வேதனைகளின் மத்தியில் கர்த்தருக்காகக் கடைசிவரை நிலைத்திருந்த மக்கள் உண்டு. நாமும் அவ்விதம் இருக்க நம்மை ஒப்புக்கொடுப்போமாக.’

யோபு 1:6-12 

இப்பகுதியிலிருந்து சாத்தானைக் குறித்து நாம் பல குறிப்புகளை அறிந்துகொள்கிறோம். சாத்தான் என்று ஒருவன் உண்டு. தேவதூதர்களோடு தேவனுடைய சமுகத்திற்குச் செல்ல அவனால் முடியும் (சக.3:1-2; வெளி.12:10). அவள் ஒரு சமயத்தில் ஒரே இடத்தில்தான் இருக்க முடியும். (அவன் எங்கும் இருக்கிறவன் அல்ல, கர்த்தரே எங்கும் இருக்கிறவர்). பூமியெங்கும் உலாவி சுற்றித் திரிகிறவனாக நல்லவர்களுக்குத் தொல்லை தருவதற்கு முயற்சிக்கிறாள். மக்களைக் கர்த்தருக்கு முன்பாகக் குறைவாகப் பேசி குற்றம் சாட்டுகிறான். நமது எண்ணங்களையும் எதிர் காலத்தையும் அறிய அவனால் முடியாது. முடிந்திருந்தால் யோபு விழமாட்டார் என்று அறிந்து பல முயற்சிகள் செய்திருக்கமாட்டான். கர்த்தரின் அனுமதியின்றி அவனால் ஒன்றும் செய்யமுடியாது. சாத்தானின் செயல்களுக்குக் கர்த்தர் வரம்புகளை நியமிக்கிறார்.

யோபு 1:12 

கர்த்தர் மக்களைச் சோதிக்கிறவரல்ல. அநேகர் தங்களுக்கு வரும் துன்பங்கள், நோய்கள், விபத்துகள் போன்றவற்றிற்குத் தேவன்தான் காரணம் என்று கூறி அவரை அவதூறாகப் பேசுகின்றனர். தேவன் நல்லவர். அவர் யாருக்கும் தீங்கு செய்கிறவர் அல்ல. சாத்தானாலும் அவனது தூதர்களாலுமே இவை நேரிடுகின்றன. தேவன் இவை நடைபெறுவதற்கு அனுமதிக்கிறார் என்பது மட்டுமே உண்மை. இதைத் தேவன் சோதிக்கிறார்’ என்று கூறுவதுண்டு. ஆனால் அவர் குறிப்பிடும் வரம்பிற்குள்தான் சாத்தானால் சோதிக்கமுடியும். பேதுருவைச் சோதிக்கச் சாத்தானுக்குக் கிறிஸ்து அனுமதி அளித்ததும் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு (லூக்.22:31-32). நமக்குத் தொல்லைகள் வரும்பொழுது சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது (ரோம.8:28) என்ற உண்மையை நம்பி அவருக்கு நன்றி செலுத்தி வெற்றியடைவோமாக (1 தெச.5:18).மேலும் நமது ஆற்றலுக்கு மேற்பட்ட சோதனைகளைத் தேவன் அனுமதிக்கமாட்டார். (1கொரி.10:13).

யோபு 1:13-19 

கொள்ளைக் கும்பலை ஏவி பொருட்களைக் கொள்ளையடிக்கச் செய்யவும், வானத்திலிருந்து நெருப்பை அனுப்பி சொத்துகளையும் கால்நடைகளையும் சுட்டெரிக்கவும், சூறாவளிபோன்ற காற்றை உருவாக்கி வீடு இடிந்துபோவதால் அதில் இருப்பவர்களைக் கொல்லவும் சாத்தானால் முடியும். சாத்தான் தனது ஆற்றலாலும் தனக்குக் கீழுள்ள பிசாசுகளின் உதவியாலும் இவற்றைச் செய்வான். ஆனால் நமக்குள் இருக்கிறவர் சாத்தானைவிட மிகவும் பெரியவர். அவருடைய பிள்ளைகளுக்குச் சாத்தானின் சகல வல்லமையையும் மேற்கொள்ள அதிகாரம் உண்டு. கர்த்தருடன் நெருங்கி வாழ்ந்து அவர் தந்திருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்துகிறவர்களைச் சேதப்படுத்த சாத்தானால் முடியாது. ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது என்று கர்த்தர் கூறியிருக்கிறாரே (லூக்.10:19).

[su_heading size=”24″ align=”left” id=”H2″]Pdf file Download Section[/su_heading]

[su_button id=”download” url=”https://www.mediafire.com/file/fws0knj8z4dpq97/யோபு+1_1_19+விளக்கம்.pdf/file” target=”blank” style=”3d” size=”9″ wide=”yes” center=”yes” radius=”round” icon=”icon: download”]Download PDF Now[/su_button]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *