அசுத்த ஆவிகள்

அசுத்த ஆவிகள்

 

இவற்றைப் பிசாசுகள், பேய்கள், பொல்லாத ஆமிகள், அசுத்த ஆவிகள் என்று அழைக்கிறோம். தேவன் நல்லவர். அசுத்தத்தையும் பொல்லாதவற்றையும் அவர் உருவாக்குவதில்லை. எனவே அகத்த ஆளிகள் உருவாக்கப்படும்போது அகத்தமாக உருவாக்கப்படவில்லை என்பது தெளிவு நன்கு ஆராய்ந்துபார்த்தால் தேவ தூதர்களாகப் படைக்கப்பட்டவர்கள் லூசிபரோடு சேர்ந்து தேவனுக்கு எதிராகப் புரட்சிசெய்து அவனோடு தள்ளப்பட்டபோது அசுத்த ஆவிகளாளார்கள் என்று புரிந்துகொள்ளலாம். எனவே பிசாககள், பேய்கள், அசுத்தஆவிகள், பொல்லாத ஆவிகள் என்கிற சொற்கள் யாவும் லூசிபரையும் அவனுடன் தள்ளப்பட்ட தூதர்களையும் குறிக்கின்றன. மரித்துப்போன மனிதனின் ஆவி அசுத்த ஆவியாக மாறுகிறது என்பதற்கு வேதத்தில் ஆதாரம் இல்லை, ஒரு மனிதன் மரித்ததும் அவனது ஆவி, ஆத்துமா அதற்கென்று தேவனால் தீர்மானிக்கப்பட்ட இடத்திற்குக் கொண்டுசெல்லப்படும். அவை பூமியில் அலைவதில்லை. இறந்துபோன ஒரு மனிதனின் ஆவி போன்று நடித்து மக்களை ஏமாற்றுவது அசுத்த ஆவிகளின் நெடுங்கால வழக்கமாகும். அவ்வாறு தங்களைப் பொய்யாகக் கூறுவதற்கு அவை தயங்குவதில்லை. அவற்றின் தலைவனான சாத்தான் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறாள் (யோவா.8:44). 1 சாமு.28:11-19 )

பிசாசுகள் பொல்லாதவை (நியா.9:23; 1 சாமு.18:9-10), ஞானமும் அறிவும் உள்ளவை (லூக்.4:41; அப்.16:16 18; 19:15). தனித்தனி நபர்களான பல பிசாசுகள் உண்டு (மாற்.5:9). பிசாசுகளுக்கு விசுவாசம் உண்டு (யாக்.2:19), உணர்ச்சிகள் உண்டு (மாற்.5:7), உபதேசங்கள் உண்டு (1 தீமோ.4:1), சுயவிருப்பப்படி நடக்கும் சுதந்திரம் உண்டு (மத் 12:43-45), ஆசைகள் உண்டு (மாற்.5:12). அநேக அசுத்த ஆவிகள் ஒரு மனிதனைக் கட்டுப்படுத்துவதுண்டு (மாற்.5:2-9). அப்படிப்பட்ட மனிதளிலிருந்து பிசாசுகளைத் துரத்தமுடியும். கிறிஸ்து துரத்தினார் (லூக்.11:14). சீடர்கள் துரத்தினார்கள் (லூக்.10:17). பவுல் துரத்தியதை அப்.16:16-18 இல் வாசிக்கிறோம். ஒவ்வொரு விசுவாசியும் பிசாசைத் துரத்தமுடியும் (மாற்.16:17). சத்துருவின் சகல வல்லமையையும் மேற்கொள்ளும் அதிகாரத்தைக் கிறிஸ்து விசுவாசிகளுக்குக் கொடுத்திருக்கிறார் (லூக்.10:19). கிறிஸ்துவுக்குள் இல்லாத ஒரு மனிதனை அல்லது பெண்ணை அசுத்த ஆவிகள் பிடித்துக்கொள்ளுதல் என்பது அவர்களை முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தலாகும். பல அசுத்த ஆவிகள் ஒரு நபரைப் பிடித்து ஆளுகை செய்யமுடியும். அந்த மனிதனை விட்டுப் போகவும் திரும்பி வரவும் அவற்றால் முடியும் (மத்.12:43-45). கிறிஸ்துவுக்குள் இருக்கும் விசுவாசியாகிய மனிதனைப் பிடிக்க அவற்றால் முடியாது. தாங்கள் புகுந்துள்ள மனிதன் அல்லது பெண் மூலமாக அசத்த ஆவிகள் பேசுவதுடன் (மாற்.1:23-25; 5:6-12; அப்.16:16-18; 19:15-16) அவர்களை அவை அலைக்கழிக்கின்றன (மாற்.1:25; 9:20,26). அவர்களைக் கொலைசெய்ய முயற்சி செய்கின்றன (மாற்.9:22). தாங்கள் பிடித்துள்ள மனிதனுக்குச் செவிடு, ஊமை, குருட்டுத்தன்மை ஆகிய பல உடல் ஊனங்களையும் (மாற்.9:25; மத்.12:22), பலவித சுகவீளங்களையும் பெலவினங்களையும் கொண்டுவரக்கூடும். மனிதனுக்கு நோய்களைக் கொண்டுவருவதில் அசுத்த ஆவிகளுக்குப் பெரும்பங்கு உண்டு என்றபோதிலும் எல்லா வியாதிகளுக்கும் அவைதான் நேரடியான பொறுப்பு என்று சொல்ல இயலாது. சிலசமயங்களில் அவை தங்களால் பிடிக்கப்பட்டுள்ள மனிதன் மூலம் ஆற்றல் மிகுந்த செயல்கள் புரிவதுண்டு (மாற்.5:2-5; அப்.19:14-16). மனிதனின் பலவித இச்சைகளைத் தூண்டிவிடுவதும் (யோவா.8:44) தவறான போதனைகளைக் கள்ளப்போதகர் மூலம் பரப்புவதும் (1 தீமோ.4:1-4) பொய் சொல்வதும் (1 இரா.22:21-24) அவற்றின் வழக்கம். தங்களை வணங்குவதை அவை ஏற்றுக்கொள்கின்றன (வேவி,17:7: 2 நா.11:15; 1 கொரி.10:20, வெளி, 9:20). இதைப்போன்ற பல தீய காரியங்களைச் செய்து மக்களைத் தேவளிடம் சேரவிடாமல் தடுத்து, மக்களின் சமாதானம், உடல்நலம் ஆகியவற்றைத் திருடி மக்களைக் கொல்வதும், இறுதியில் நாகத்திற்குச் செல்ள வழிநடத்துவதும் அவற்றின் நோக்கமாகும் களைகளை (யோவா.10:10). உலகில் (குறிப்பாக சபைக்குள்) விதைப்பது சாத்தானாலும் அவளது தூதர்களாகிய மற்ற பிசாககளாலும் நடைபெறுகின்றது (பத்.13:37-40), மத்.12:43-45  காண்க. 

அஞ்சனம் பார்த்தல்

சில அசுத்த ஆவிகள் ஒருசில மக்களோடு பழகும் தன்மை உடையவை. இவற்றைப் பழகும் ஆவிகள் என்று கூறுவர். இவற்றோடு தொடர்புகொண்டு பேசுதல், வருங்காரியங்களைக்குறித்துக் (அவைகள் ஊகித்துக் கூறுவதைக்) கேட்பது ஆகியவை அஞ்சனம்பார்த்தல் எனப்படும். இவ்வாறு செய்வதும் அசுத்த ஆவிகளுடன் தொடர்புகொள்வதும் கொடிய பாயங்கள் என்று வேதம் தெளிவாகக் கூறுகிறது. (லேவி.19:31; 20:6,27; உபா.18:10-11; 1 நாளா.10:13; சரசா.8:19). பழகிய பிசாசுகளை ஏவுவதின் மூலப் மற்றவர்களுக்குத் தீங்கிழைப்பது பில்லிருளியம் அல்லது குளியம் வைத்தல் அல்லது செய்வினை வைத்தல் எனப்படும். இவ்வாறு செய்கிறவர்கள் நரகத்தில் தள்ளப்படுவார்கள் (வெளி.21:8). 1 சாமு.28:3,11-19,11 

பிசாசுகளுக்குத் தெரிந்த உண்மைகள் 

பிசாசுகளுக்குத் தேவனையும் கிறிஸ்துவையும் கிறிஸ்துவின் உண்மையான தொண்டர்களையும் நன்கு தெரியும் (மாற்.123-25; 5:7-8; அப்.16:15-17; 19:15). காலம் வரும்பொழுது வேதனையடைவதற்காகத் தாங்கள் நாகத்தில் தள்ளப்படப்போவதும் அவற்றிற்குத் தெரியும் (மத்.8:28-29). அவற்றின் இறுதி முடிவு நித்திய அக்கினியாகிய நரகம் ஆகும் (மத்.25:41).

கட்டப்பட்டுள்ள பிசாசுகள்

தங்கள் ஆதி மேன்மையைக் காத்துக்கொள்ளாமல் தவறான உறவில் ஈடுபட்ட தேவதூதர்களின் ஒரு பகுதியினரைப் பாதாளத்தின் ஒரு பகுதியான டார்டாரஸ் என்ற இடத்தில் தேவன் கட்டிவைத்துள்ளார் (ஆதி.5:1 4; யூதா 6-7 குறிப்புகள் காண்க). இவற்றிற்கு விடுதலை கிடையாது. நேராக அக்கிளியும் சுந்தகமும் எரிகிற கடலாகிய நரகத்தில் தள்ளப்படும் நித்திய தண்டனையே உண்டு. இவைதவிர பாதாளத்தில் தற்சமயம் கட்டி வைக்கப்பட்டு, உபத்திரவ காலத்தின்போது சிலகாலம் பூமிக்கு வருவதற்கு அனுமதிக்கப்படும் ஆவிகள் உண்டு என்பதை வெளி.பி:1-11 இல் காண்கிறோம். மேலும் ஐபிராத்து என்னும் நதியண்டையில் கட்டி வைக்கப்பட்டுள்ள நான்கு தூதர்களைப் பற்றியும், வெளி.9:14-15 கூறுகிறது.

நமது கடமை

விசுவாசிகள் சாத்தானின் தந்திரங்களை அறிந்திருப்பதோடு (2 கொரி.2:11) அகத்த ஆவிகளைச் சோதித்தறியவேண்டும். அதற்காக 1 யோவா.4:1-3 ஐப் பயன்படுத்தலாம். ஆவிகளைப் பகுத்தறியும் வரம் இதற்கென்று தூய ஆவியானவரால் அருளப்படுகிறது (1 கொரி.12:10). இந்த வரத்திற்காக ஜெபித்து விசுவாசத்துடன் பெற்றுக்கொள்ளவேண்டும். அசுத்த ஆவிகளைத் துரத்துவது நமது அடையாளமாகும் (மாற்.16:17). இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் நாம் கொடுக்கும் கட்டளைகளுக்கு அசுத்த ஆவிகள் கீழ்ப்படியும் (லூக்.10:17). இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் விசுவாசத்துடன் அவற்றைத் துரத்தவேண்டும். அவற்றின் எல்லா வல்லமையையும் மேற்கொள்வதற்கான அதிகாரத்தைக் கிறிஸ்து நமக்கு அளித்துள்ளார். (லூக்.10:19). அவற்றால் நம்மைச் சேதப்படுத்த முடியாது (லூக்.10:19; 1 யோவா.5:18). இதை விசுவாசித்து தைரியத்துடன் அவற்றைத் துரத்துவோமாக. ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தாலும் நமது சாட்சியின் வசனத்தாலும் சாத்தானை நாம் வெற்றிகொள்வோம் (வெளி.12:11). வேதவசனத்தைப் பயன்படுத்தி பிசாசைத் தோற்கடிக்க நம்மால் முடியும் (மத்.4:1-11; 1 யோவா.2:14). பிசாசுக்கு இடங்கொடுக்காமல் நம்மைக் காத்துக்கொள்ளவேண்டும் (எபே.4:27). தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருத்தல், விழிந்திருத்தல், பிசாசுக்கு எதிர்த்து நிற்றல் ஆகியவை நமது கடமையாகும் (1 பேது 5:8-9). இதற்காக நாம் ஆவியின் சகல ஆயுதங்களும் உள்ளவர்களாக, பரிசுத்த ஆவியினாலே ஜெபம்பண்ணி விழித்துக்கொண்டிருக்கவேண்டும் (எபே.6:11-18). தேவனுக்குக் கீழ்ப்படிந்திருந்து பிசாசுக்கு எதிர்த்து நின்றால் அவன் நம்மை விட்டு ஓடிப்போவாள் (யாக்.4:7).

குறிப்பு: 

ஒளியின் தூதன் என்ற பெயருடைய அசுத்த ஆவி கிடையாது. சாத்தான் ஒளியின் தூதனுடைய (நல்ல தேவதூதருடைய) வேடத்தை அணிந்துகொண்டு மக்களை ஏமாற்ற முயற்சிப்பான் என்றும் அவ்வாறே கபடமுள்ள வேலையாட்களும் (சாத்தானின் ஊழியரும்) கிறிஸ்துவின் அப்போஸ்தலரின் வேடத்தையும் நீதிமின் ஊழியரின் வேடத்தையும் தரித்துக்கொண்டு ஏமாற்ற முயற்சிப்பார்கள் என்றும் வேதம் கூறுகிறது (2 கொரி.11:12 15). தன்னை ஒளியின் தூதன் என்று அசுத்த ஆவி பொய் சொல்லக்கூடும்.

 

Have any Question or Comment?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page