பொய்க்குப் பிதா
யோவான் 8:44 விளக்கம்
நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப்பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.
சாத்தான் மனித கொலை பாதகன், உண்மையில்லாதவன், பொய்க்குப் பிதாவானவன், சொந்தமாகப் பல பொய்களை எடுத் துரைப்பவன் ஆவான். தேவதூதனாயிருந்தபோது இருந்த உண்மையில் நிலைத்திருக்காமல் விழுந்ததால் அவன் சாத்தானாக மாறினான். ஏசா.14:12-14; எசே.28:11-17 ஐ காண்க.
ஏசாயா 14:12-14
அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!
நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும்,
நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.
இப்பகுதி சாத்தானைக் குறிக்கின்றது. லூசிபர் (பிரகாசமானவன், விடிவெள்ளி) என்ற பெயர் கொண்ட கேரூப் (கேருப் குறித்து ஆதி.3:24 குறிப்பு காண்க) ஒருவனைப் பூமியில் ஆளும்படி தேவன் வைத்திருந்தார். அவன் தன் அழகினாலும் ஞானத்தினாலும் திறமையினாலும் தற்பெருமை கொண்டான் (எசே.28:12-19). தான் தேவனுக்கு ஒப்பாக வேண்டும், தன்னை யாவரும் வணங்கவேண்டும் என்று திட்டமிட்டு தேவதூதர்களில் ஒரு கூட்டத்தைத் தன் வசமாக்கி வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன், ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்தில் வீற்றிருப்பேன், உன்னதங்களில் ஏறுவேன், உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்று தன் இருதயத்தில் சொன்னான். தனது திட்டத்தை நிறைவேற்றும்படி தனது கூட்டாளிகளோடு சேர்ந்து அவன் முயற்சி செய்கையில் தோற்கடிக்கப்பட்டு அவர்களனைவரும் தள்ளப்பட்டனர். தள்ளப்பட்ட அவன் சாத்தான் எனவும் அவனோடு சேர்ந்த தேவதூதர்கள் அசுத்த ஆவிகள், பேய்கள், பொல்லாத ஆவிகள், பிசாசுகள் எனவும் அழைக்கப்படுகின்றனர். சாத்தான், கட்டுரை காண்க.
ஏசாயா 14:13
நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும்,
1) வானத்துக்கு ஏறுவேன் (வச.13) மேகங்களுக்கு மேலாக ஏறுவேன் (வச.14) என்று அவன் கூறியதால் அதற்குமுன் பூமியில் இருந்தான் என்பது தெளிவு. வானத்துக்கு ஏறுவேன் என்று மனிதனாயிருக்கும் எவரும் கூறியிருக்க முடியாது என்பதால் இப்பகுதி பாபிலோனின் அரசராயிருந்த மனிதனைக் குறிக்காமல் பூமியை ஒரு காலத்தில் ஆண்டு கொண்டிருந்த லூசிபரைக் குறிக்கிறது. ஆதி.1:1-3 காண்க.
2) ஆராதனைக் கூட்டத்தின் பர்வதம் வடபுறத்தில் இருக்கிறது என்பதால் தேவனின் சிங்காசனம் இருக்கும் பரலோகம் (மோட்சம் பூமிக்கு வடக்குத் திசையில் இருக்கிறது என்பது தெரிகிறது. சங். 75:6 காண்க. உலகின் நாடுகளின் படங்கள் யாவற்றிலும் வடதிசை மேலாக இருப்பதையும் கவனிக்க.