மரணங்கள்

மரணம் என்றால் பிரிக்கப்படுதல் என்று பொருள். வேதத்தில் மூன்றுவித பரணங்கள் கூறப்பட்டுள்ளன. 

1. ஆவிக்குரிய மரணம் (ஆத்தும மரணம்) 

மனிதனின் பாவத்தால் அவன் தேவனிடமிருந்து பிரிக்கப்படுதலை இது குறிக்கிறது (ஏசா.59:2; எசே.18:20; எபே.2:1; திமோ.5:6). இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருந்தபோதிலும் பாவத்தில் இருப்பவர்கள் ஆவிக்குரிய மாணபடைந்துள்ளனர். இவர்கள் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளும்பொழுது இம்மாணத்தினின்று உயிர்ப்பிக்கப்படுகின்றனர் (எபே.2:1-5),

2. சரீர மரணம் : 

சரீர மரணம் என்பது மனிதனின் சரீரத்திலிருந்து உள்ளான மனிதனான ஆவி, ஆத்துமா பிரிவதாகும் (லூக்.12:20). இதையே நாம் மரணம் என்று கூறுகிறோம். தமது கட்டளையை பீறினால் அன்றே மரணமடைவான் என்று தேவன் ஆதாமைப் பார்த்துக் கூறியது தேவனிடமிருந்து பிரிக்கப்படும் ஆத்தும மரணத்தைக் குறிப்பதாகும் (ஆதி.2:17). ஆதாம் பாவம் செய்த நாளில் இது நிறைவேறிற்று ஆகவே, அந்நாளிலிருந்து தேவள் ஆதாமோடு உவாவுவதற்கு வரவில்லை. ஆதாம் பாவம் செய்த பின்னரே, ‘நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்’ என்று தேவன் கூறினார் (ஆதி.3:19). இதன்படி ஆதாம் தனது 930 வயதில் சரீர மரணமடைந்தார் (ஆதி.5:5). மனிதனின் சரீரம் மட்டுமே மண்ணாலானது, எனவே மண்ணுக்குத் திரும்புவது மனிதனின் ஈரீரம் மட்டுமே. ஆவி, ஆத்துமாவான உள்ளான மனிதன் மண்ணாலானவளல்ல. எனவே உள்ளான மனிதன் மண்ணுக்குத் திரும்புவதில்லை. உள்ளான மனிதன் எங்கு செல்கிறான் என்பது சரீர மரணம் என்ற அடுத்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

3. இரண்டாம் மரணம் : 

ஜீவபுத்தகத்தில் பெயரெழுதப்படாதவர்கள் இறுதியாக தேவளைவிட்டுப் பிரிக்கப்பட்டு அக்கிளியும் கந்தகமும் எரிகிற கடலாகிய நாகத்தில் பங்கடைவதை இரண்டாம் மரணம் என்று வேதம் அழைக்கிறது (வெளி.20:15; 21:8). நாகத்தில் தன்னப்பட்டவர்கள் அங்கு என்றென்றும் கொடிய வேதனைகளை அனுபவிப்பார்கள் என்பதை வேதம் பலநடவைகள் தெளிவாகக் கூறுகின்றது. (மாற்.3:29; 9:43-48; தாளி.12:2; மத்.18:8; 25:41,46), இரண்டாம் மரணத்துக்குத் தப்பித்துக்கொள்ள வேண்டுமெனில் இவ்வுலகில் வாழும்பொழுதே தேவனுடைய கிருபைரைமான நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளவேண்டும் (ரோம.6:23). சரீர மரணத்துக்குப் பின்னர் இதற்கு வாய்ப்பு இல்லை. நியாயத்தீர்ப்புதான் உண்டு (எபி.9:27). மரணமடையும் கிறிஸ்தவர்கள் உத்திரதலம் (Purgatory) என்ற இடத்திற்குச் சென்று சில பாடுகள் பட்டபிள்பு பரலோகம் செல்கின்றனர் என்பது வேதத்தில் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *