சரீர மரணம்

சரீர மரணம்

சரீர மாணத்தைப் பிராணன் போதல் (ஆதி.25:8), ஆவியை விடுதல் (மத் 27:50), நித்திரையடைதல் (1 தொ.4:13), ஆத்துமா எடுத்துக்கொள்ளப்படுதல் (நாக் 12:20). ஜீவான விடுதல் (அப்கக10) என்றும் வேதம் குறிப்பிடுகிறது. உடலிலிருந்து உள்ளான மனிதன் பிரிந்ததம் மனிதனின் உடல் மட்டுமே கெட்டுப்போகத் தொடங்கும். எனவே உடலை நாம் அடக்கம் செய்கிறோம். சிர் தானம் செய்கின்றனர். ஆவி ஆத்துமாலை நாம் அடக்கம்பண்ணவோ தகனம் செய்யவோ முடியாது. அவை ஏற்களவே மரணமடைந்த மனிதனை விட்டுப் பிரிந்துவிட்டன. கிறிஸ்துவின் இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்படுகிறவர்களைத் தவிர மற்ற எல்லர மனிதரும் மரணமடையவேண்டும் (எபி.9:27},

பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்களின் நிலை – பரதீசு

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்வரை மரணமடைந்த பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் (உள்ளான புனிதர்கள்) பாதாளத்தின் (எபிரெய மொழியில் ஷியோல் – Sheol, கிரேக்க மொழியில் ரேஹட்ஸ்-Hades) ஒரு பகுதியான பரதீசுக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். இந்த இடத்திற்கு ஆபிரகாமின் படி என்ற பெயரும் உண்டு. ஆபிரகாமும் அங்கு இருந்தார் (லூக்.16:23). இயேசு மரணமடைந்ததும் இங்கு சென்றார் என்பதையும் இயேகவுடன் சிலுவையில் அறையப்பட்டவர்களுள் ஒருவனும் இங்கு சென்றதையும் லூக்.23:43 இல் வாசிக்கிறோம். இந்த இடத்திற்கு இவர்கள் யாவரையும் தேவதூதர்கள் அழைத்துச்சென்றனர் என்பதை லூக்.16:22 இலிருந்து தெரிந்துகொள்கிறோம். இந்த இடத்தில் வேதனை இல்லை என்பதையும் இங்கிருந்தவர்கள் தேற்றப்பட்டனர் என்பதையும் லூக்.16:25 தெரிவிக்கிறது. இங்கு இவர்கள் யாவரும் இளைப்பாறினர் (தானி.12:13). இந்த இடம் பூமியின் நாழ்விடங்களில் (பூமிக்குக் கீழே) இருந்தது என்பதை எபே.49 இல் காண்கிறோம். பரதீக குறித்து லூக்.16:19-31 குறிப்புகள், தூக்.23:43 குறிப்பு காண்க. பாதாளம், கட்டுரை, விளக்கப்படம் காண்உ பக்கம் 1752.

இயேசுவின் மரணம்வரை மரணத்துக்கு அதிகாரியாகச் சாத்தான் செயல்பட்டாள் (எபி.2:14), இயேசு மரணமடைந்து பாதிகக்கு வந்தவுடன், மாணம் பாதாளம் ஆகியவற்றின் திறவுகோல்கள் இயேசுளிடம் வந்தன (வெளி.t18). இதன் விளைவாக, இயேசு மரணமடைந்தபோது பரிசுத்தவான்களின் கல்மறைகள் வெடிந்துத் திறந்தன என்பதை மத்-27-50-53 இல் காண்கிறோம். இவர்கள் உயிர்த்தெழும்பி நகரத்தியே (எருசலேமில்) அநேகருக்குக் காணப்பட்டனர். கிறிஸ்துதான் முதலாவது உயிர்த்தெழும்பியவர் என்பதால் (1 கொரி.15:20), இயேசு உயிர்த்தெழும்பிய பின்னர் இவர்கள் உயிர்த்தெழும்பினர் என்பதை அறிகிறோம். இவ்வாறு உயிர்த்தெழும்பிய யாவரையும் அழைத்துக்கொண்டு கிறிஸ்து பரலோகத்திற்குச் சென்றார் (சங்.58:18; எ4ே:8 10). எபே.4:6 குறிப்பு. 4:9-10 குறிப்பு காண்க. எனவே இந்தப் பரதீக இப்பொழுது காலியாக இருக்கிறது. பரலோகத்திற்குச் சென்ற இவர்கள் யாவரும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது அவரோடு வந்து ஆயிரம்

ஆண்டு அரசாளுவார்கள் (சக.15:5; தாளி.7:18,27). அதன்பின்னர் புதிய பூமியில் என்றென்றும் கிறிஸ்துவுடனேகூட அரசாளுவார்கள்.

 பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு கால நன்மார்க்கரின் நிலை 

ஆதாமிலிருந்து ஆயிரம் ஆண்டு ஆட்சியின் இறுதிவரையுள்ள காலமுழுவதிலும் உள்ள தும்மார்க்கச் மரணமடைந்ததும் அவர்களின் உள்ளான மனிதர்கள் பாதாளத்தின் இன்னொரு பகுதிக்குக் கொண்டு செல்லப்படுவர். இப்பகுதியையும் பாதாளம் (Sheol, Hades) என்று அழைப்பதுண்டு. இப்பகுதிக்குச் செல்வோர் அங்கு வேதனையடைந்துகொண்டிருப்பார்கள் (ஜாக்.16:22-24), அங்கிருப்போருக்கு அறிவு, ஞாபகசக்தி வருத்தம், வேதனை போன்ற உணர்வுகள் உண்டு, அங்கிருந்து பாதிசைப் பார்க்க முடியும். பரதீசில் பரிசுத்தவான்கள் இருந்த காலத்தில் அங்கிருந்தோருடன் பேசவும் முடிந்தது. ஆனால் பாதிசிற்கும் அவர்கள் இருந்த இடத்திற்கும் இடையே, யாரும் கடந்துசெல்லமுடியாத பெரிய பிளவு உண்டு. நக்.16:19-31 

உயிர்ப்பிக்கப்பட்டுத் தங்கள் செயல்களுக்குத் தக்கதாக நியாயத்தீர்ப்படைவார்கள் (வெளி.20;12-15). இவர்கள் யாவரும் நரகத்தில் தள்ளப்படுவார்கள் என்பதை வெளி.20:15 கூறுகிறது. 

புதிய ஏற்பாட்டு காலத்தில் கர்த்தருக்குள் மரணமடைந்தோரின் நிலை 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் மாணமடைகிறவர்கள் உடனடியாக அவருடைய பிரசன்னத்திற்குக் கொண்டுசெல்லப்படுகின்றனர் என்பதை பிலி.1:23; 2 கொரி.5:8; வெளி.6:9-11 என்ற பகுதிகளிலிருந்து அறிகிறோம். இரகசிய வருகையின்போது இவர்கள் இயேசுவுடன் வந்து சரீர் உயிர்த்தெழுதலடைவார்கள் (1 தெச.4:13-17 ). அச்சமயத்தில் உயிரோடு இருக்கும் கர்த்தருடைய பிள்ளைகள் மறுரூபமாக்கப்பட்டு (1 கொரி.15:51-54), உயிர்த்தெழும்பியவர்களுடன் சேர்ந்து, மேகங்கள்மேல் எடுத்துக்கொள்ளப்பட்டு கிறிஸ்துவுடன் செல்வார்கள். 

அங்கு ஆயத்தம் செய்யப்பட்டுள்ள இடங்களில் வசிப்பார்கள் (யோவா.14:2-3). இரகசியவருகை, கட்டுரை காண்க. பக்கம் 1837. அதன்பின்னர் உலகில் ஏழுஆண்டுகள் உபத்திரவகாலம் இருக்கும்.  உபத்திரவகாலம் முடிவடையும்பொழுது கிறிஸ்துவின் இரண்டாம் வருகை இருக்கும்.

ஏற்கனவே கிறிஸ்துவுடனே சென்றவர்கள் அவரோடு திரும்பி வந்து அதன்பின் அவரோடு ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார்கள் (சசு.14:5; வெளி.19:11-14; 20:4-6), இரசுசிய வருகைக்கும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கும் இடைப்பட்ட காலமான உபத்திரவகாலத்தில் கிறிஸ்துவுக்காக இரத்தசாட்சியாக மரணமடையும் மக்கள், கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது உயிர்த்தெழுப்பப்பட்டு, அரசாட்சியில் பங்கேற்பார்கள் (வெளி.20:4-5). இவர்கள் யாவரும் புதிய பூமியில் தொடர்ந்து அரசாட்சி செய்வார்கள்.

மரணம் ஜெயமாக விழுங்கப்படும்

கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தபோது மரணத்தின்மேல் வெற்றியடைந்தார். கிறிஸ்துவின் இரகசியவருகையின்போது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் உயிர்த்தெழும்புவதாலும் உயிரோடிருப்போர் மரணமடையாமல் எடுத்துக்கொள்ளப்படுவதாலும் மரணம் ஜெயமாக விழுங்கப்படும். 1 கொரி.15:51-57; 1 தெச.4:13-17 காண்க. மேலும் அந்திக்கிறீஸ்துவின் ஆட்சியின் காலத்தில் இரத்தசாட்சியாக மரித்தவர்கள் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது மரணத்தினின்று உயிர்ப்பிக்கப்படுவார்கள் (வெளி,20;4). பாவத்தில் மரித்திருந்த யாவரும் ஆயிரம் ஆண்டு அரசாட்சி முடிந்ததும் உயிர்ப்பிக்கப்படுவார்கள் (வெளி.20:12-13), மேலும் மரணம் என்பது முற்றிலும் அழிக்கப்படும் (வெளி.20:14). கிறிஸ்து மரணத்தை ஜெயமாக விழுங்குவார். அதன் பின்னர் மரணம் என்பதே இருக்காது (வெளி.21:4). அல்லேலூயார்

 

Leave a Reply