நாம் ஏன் பழைய ஏற்பாட்டைப் படிக்க வேண்டும்
1. பழைய ஏற்பாடு நமக்காகவும் எழுதப்பட்டதே
பழைய ஏற்பாடு குறிப்பாக ஆரம்பத்தில் கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட இஸ்ரவேலருக்கென்றே எழுதப்பட்டிருந்தாலும் நம்முடைய நன்மைக்கென்றும் எழுதப்பட்டுள்ளது. ஏனெனில் தம்மையும். தமது மனுக்குல மீட்பின் திட்டத்தினையும் வெளிப்படுத்தும் கருவியாக இஸ்ரவேலரை கடவுள் தெரிந்தெடுத்தார்.
பழைய ஏற்பாடு (பரிசுத்த வேதம்) நமக்கு முக்கியம் வாய்ந்தது ஏன் என்பதற்கான சிறப்பான காரணங்கள் பலவற்றை புதிய ஏற்பாட்டில் காணலாம்.
அவையாவன :
இரட்சிப்பிற்கென நம்மை கிறிஸ்துவினிடம் வழிநடத்தல்
(2தீமோ.3:15; லூக். 24:25-27: 44-45: ரோமர் 4:23-24)
நமக்கு நீதியைப் போதித்து, வழிநடத்தி, கடவுளின் பணிக்கென நம்மைத் தகுதிப்படுத்த
(2 தீமோ. 3:16-17)
பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதுகையில் 2 தீமோ. 3:15-16-ல் “வேத வாக்கியங்களெல்லாம், தேவ ஆவியால் அருளப்பட்டிருக்கிறது. பிரயோஜன முள்ளவைகளாயிருக்கிறது” என்கிறார். அவர் இங்கு அப்பொழுது நடைமுறையில் இருந்த பழைய ஏற்பாட்டை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். புதிய ஏற்பாடும் எழுதப்பட்ட பின்னர் வேதவாக்கியம் என அழைக்கப்பட்டது.
நமக்குப் போதிக்க, ஊக்குவிக்க, நம்பிக்கையளிக்க எழுதப்பட்டது
(ரோமர் 15:4)
நமக்கு அறிவுரை கூற, எச்சரிப்புக் கொடுக்க எழுதப்பட்டது
(1 கொரிந்தியர் 10:11-13)
நமக்குள்ளே நாம் வேதத்திற்கிசைந்த உலகபார்வை உருவாக்குதல்
பழைய ஏற்பாடு, வேதத்திற்கேற்ப நம் உலகப்பார்வையை உருவாக்குகிறது. அடுத்துவரும் அட்டவணையில் காணலாம்.
- (லேவி 16:1-5)
- (2 கொரிந்தியர் 102-6)