பழைய எற்பாடு வரலாற்று கண்ணோட்டம்

பழைய எற்பாடு வரலாற்று சுருக்கம்

கடவுள் யார். தன்னைப் படைத்த கடவுளோடு சரியான உறவு கொள்ள மனிதன் செய்ய வேண்டியது என்ன போன்றவற்றை பழைய ஏற்பாடு கூறுவதோடு கடவுளின் தெய்வீகத்தையும் படிப்படியான வெளிப்படுத்தலையும் கூறுகிறது. 

பழைய ஏற்பாட்டைத் தெளிவாகப் புரிந்து கொள்ள சிவ உண்மைகள் 

 1000 வருடங்களுக்கு மேல் எழுதப்பட்டது.

30 வெவ்வேறான மனிதர் எழுதினர்.

39 புத்தகங்கள் உண்டு.

முழுவதும் எபிரெய மொழியில் எழுதப்பட்டது. சில பகுதிகள் மட்டும் அராபிய மொழியில் எழுதப்பட்டுள்ளன.

மூலப்பிரதிகள் மிகுந்த கவனத்துடன், குறைவின்றி எபிரெய வேத பண்டிதரால் பார்த்து, கையினால் எழுதப்பட்டது.

இயேசு கிறிஸ்துவின் காலத்தில் பழைய ஏற்பாடு முழுவதும் ஒரே புத்தகமாக தம்முடைய வேதாகமத்தில் இருப்பதைப் போன்று தொகுக்கப்பட்டு முடிந்தது.

கி.மு.250-ல் எபிரெய மொழியிலிருந்து கிரேக்க மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்ட செப்துவஜின்ட் (Septuagint Lxx) என்ற மொழிபெயர்ப்பே முதலாவது முக்கியமான வேதாகம மொழிபெயர்ப்பாகும். 

இரண்டாவது முக்கிய மொழிபெயர்ப்பு லத்தீன் வல்கேட் (Latin Vulgate) (கி.பி.383-405) என்பதாகும். இதுவே 1000 வருடமாக கிறிஸ்தவர்களால் பயன்படுத்தப்பட்ட அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாகும்.

1384-ல் ஜான் விக்லிப் (John Wyccliff) என்பவரால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட வேதாகமமே முதல் ஆங்கிய வேதாகமமாகும். அதன் பின் 200 ஆண்டுகள் கழித்து 1611-ல் அரசு அங்கீகாரம் பெற்ற ஜேம்ஸ் மன்னர் (King James) மொழி பெயர்ப்பு வருவதற்கு இதுவே முன்னோடியாக இருந்தது. எனலாம்.

1947-ல் கும்ரான் (Qumran) என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பழைய சவக்கடல் சுருள்கள் (Dead Sea Scrolls) இன்று நம்மிடம் உள்ள பழைய ஏற்பாடு பிழையற்றதும், அதற்கு ஒப்பாகவும் உள்ளது என்று உறுதிப்படுத்தியுள்ளது.

கடவுளால் இந்த பழைய ஏற்பாடு அற்புத விதமாக 3000 ஆண்டுகளாக நன்றாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதில் ஐயமில்லை.

எபிரெய வேதாகமம் நம்மிடமுள்ள இன்றைய வேதாகமத்தைவிடச் சற்று வித்தியாசமாக அமைத்துள்ளது. நம்முடைய வேதாகமத்திலுள்ள பழைய ஏற்பாட்டின் 39 புத்தகங்களையும் 24 புத்தகங்களாக அமைத்துள்ளனர். அவை கீழ்க்கண்டவாறு மூன்று பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ளன.

எபிரெய பழைய ஏற்பாடு

I. நியாயப்பிரமாணம் (சட்டநூல்கள்)

  1. ஆதியாகமம்
  2. யாத்திராகமம்
  3. லேவியராகமம்
  4. எண்ணாகமம்
  5. உபாகமம் 

II. தீர்க்கதரிசளம் 

அ. முந்தினோர்

  1. யோசுவா
  2. நியாயாதிபதிகள்
  3. சாமுவேல் (2 நூல்கள்)
  4. இராஜாக்கள் (2 நூல்கள்) 

ஆ.  பிந்தினோர்

  1. ஏசாயா
  2. எரேமியா 
  3. எசேக்கியேல்
  4. 12 சிறிய தீர்க்கதரிசன ஆகமங்கள்

சங்கீதங்கள் 

(வேத எழுத்துக்கள்)

அ.  பாட்டாகமங்கள்

  1. சங்கீதம்
  2. நீதிமொழிகள்
  3. யோபு 

ஆ.  5 சுருள்கள்

  1. உன்னதப்பாட்டு
  2. ரூத்
  3. புலம்பல்
  4. பிரசங்கி
  5. எஸ்தர்

இ.  வரலாறு

  1. தானியேல்
  2. எஸ்றா 
  3. நெகேமியா 
  4. நாளாகமம் (2 நூல்கள்) 

குறிப்பு:

நியாயப்பிரமாணம் (சட்டநூல்) “மோசே”யின் ஆகமங்கள் (நூல்கள்) எனப்படும். “சங்கீதங்கள்” வேத எழுத்துக்கள் எனவும் கூறப்படும்.

சில இடங்களில் பழைய ஏற்பாடு, ‘மோசேயும், தீர்க்கதரிசி”களும் என்று கூறப்பட்டுள்ளது. 

பழைய ஏற்பாட்டின் அமைப்பு

நியாயப்பிரமாணம் 5 புந்தாங்கள்

  1. ஆதியாயமம்
  2. யாத்திராமம் 
  3. லேவியராகமம் 
  4. எண்ணாகமம் 
  5. உபாகமம்

வரலாற்று ஆகமங்கள் 12 புத்தகங்கள்

  1. யோசுவா
  2. நியாயாதிபதிகள்
  3. ரூத்
  4. 1சாமுவேல்
  5. 2சாமுவேல் 
  6. 1 இராஜாக்கள்
  7. 2 இராஜாக்கள்
  8. 1 நாளாகமம்
  9. 2 நாளாகயம் 
  10. எஸ்றா
  11. நெலேமியா 
  12. எஸ்தர்

பாட்டாகமங்கள் 5 புத்தகங்கள்

  1. யோபு
  2. சங்கீதம்
  3. நீதிமொழிகள்
  4. பிரசங்கி
  5. உள்தைப்பாட்டு

தீர்க்கதரிசன ஆகமங்கள் 17 புத்தகங்கள்

அ.  பெரியவை 5

  1. ஏசாயா
  2. ஏரேமியா
  3. புலம்பல்
  4. எசேக்கியேல்
  5. தானியேல்

ஆ.  சிறியவை 12

  1. ஓசியா
  2. யோவேல்
  3. ஆமோஸ்
  4. ஒபதியா 
  5. யோனா
  6. மீகா
  7. நாகூம்
  8. ஆபகூக் 
  9. செப்பனியா
  10. ஆகாய்
  11. சகரியா
  12. மல்கியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *