பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்குமுள்ள உறவு

பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்குமுள்ள உறவு

கி. பி. இரண்டாம் நூற்றாண்டிலேதான் வேதாகமத்தின் முதல் 39 புத்தகங்கள் பழைய ஏற்பாடு எனவும் அதின் கடைசி 27 புத்தகங்கள் புதிய ஏற்பாடு எனவும் அழைக்கப்படலாயிற்று.

”பழைய ஏற்பாடு” (உடன்படிக்கை) என்கிற பதம், எகிப்தை விட்டுப் புறப்பட்ட பின்பு. வாக்குத்தத்த நாட்டிற்குள் நுழையும் முன்பு சீனாய் மலையில் கடவுள் இஸ்ரவேலரோடு செய்த (மோசேயின்) உடன்படிக்கையைக் குறிப்பதாகும். யாத்திராகமம் 20-24; உபாகமம் 28-30; எரேமியா 31:32; கலாத்தியர் 3:6-26; எபிரெயர் 9:15-22. இந்தப் பழைய உடன்படிக்கையை உடைத்ததினாலேதான் இஸ்ரவேலர் கி. மு. 722-ல் அசீரியர் கைகளிலும், கி. மு. 586-ல் யூதர் பாபிலோனியர் கைகளிலும் சிறைபிடிக்கப்பட்டனர்.

பழைய ஏற்பாடு என்பது வெறும் “நியாயப்பிரமாணம்” மட்டுமல்லாது. கடவுளின் இரட்சிப்பின் திட்டத்தில் உடன்படிக்கை மக்களாகிய யூதருக்குரிய பங்கு மட்டுமின்றி, புறஜாதியருக்குரிய பங்கையும் பற்றிக்கூறும் இறையியல் வரலாறு எனலாம். சுவிசேஷங்களில் கிறிஸ்து கூறியுள்ள, இரத்தத்தினாலாகிய “புதிய உடன்படிக்கை” என்கிற வார்த்தைகளை மையமாகக் கொண்டதே புதிய ஏற்பாடு (உடன்படிக்கை) என்பதாகும். (லூக்கா 22:14-20; எபிரெயர் 9:15; 2 கொரிந்தியர் 3:3-9) புதிய ஏற்பாடு முற்றிலும் புதியதல்ல. ஏனெனில் அது கீழ்க்கண்டவற்றையும் தொடர்பு படுத்தியுள்ளது.

ஆபிரகாமின் உடன்படிக்கையின்படி எல்லா இனத்தவருக்கும் கிட்டும் ஆவிக்குரிய வாக்குத்தத்தின்படியான ஆசீர்வாதம் (ஆதியாகமம் 12:3-4, கலாத்திய 3:6-17), இதின்படி விசுவாசிகள் யாவருக்கும் இரட்சிப்பு கிட்டுகிறது (ரோமர் 4:1-25),

புதிய உடன்படிக்கை இஸ்ரவேலருக்காகவும் வாக்களிக்கப்பட்டது எனலாம். எரேமியா 31:31-37; எசேக்கியேல் 36:22-36; எபிரெயர் 8:6-13

பழைய ஏற்பாட்டிற்கும். புதிய ஏற்பாட்டிற்குமுள்ள வேறுபாடுகளை அடுத்து வரும் அட்டவணையில் காணலாம்.

சில வேளைகளில், பழைய ஏற்பாடு “நியாயப்பிரமாணம்” எனவும், புதிய ஏற்பாடு கிருபை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது (யோவான் 1:14-18), ஆயினும் அவை குறுகின நோக்கமுடையன எனலாம். ஏனெனில் பழைய ஏற்பாட்டில் நியாயப்பிரமாணத்தின் கீழே கிருபையும், புதிய ஏற்பாட்டிலே கிருபைக்குள் நியாயப்பிரமாணமும் இருக்கக் காணலாம் (2 சாமுவேல் 12:13-14; யோவா 14:15),

நாம் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்கிற பதங்களைப் பயன்படுத்தும்போது. வேதாகமம் ஒரே புத்தகமாக இணைக்கப்பட்டுள்ளது; அது முழுமையும் தெய்விகமானது; கடவுளின் மீட்பின் வெளிப்பாட்டை வகைவகையாகவும், படிப்படியாகவும் வெளிப்படுத்தியுள்ளது என்பதை நினைவிற் கொள்க (எபிரெயர் 1:1-3)

ஆகவே கீழ்க்கண்ட பழைய ஏற்பாட்டிற்கும், புதிய ஏற்பாட்டிற்கும் இடையேயுள்ள உறவு குறித்த உண்மைகளை அறிந்து வைத்திருப்பது நல்லது.

பழைய உடன்படிக்கை

நியாயப்பிரமாணம் – வெளிப்படையானது.

கடவுளோடு உறவு கொள்வது –

ஆசாரியர்கள் மூலமாக மட்டும் 

போதிக்கிறவர்கள் மூலம் மட்டுமே கடவுளைப் பற்றிய அறிவு கிட்டினது

பாவத்திற்கு நிரந்தரமற்ற பரிகாரம்

உதவியற்ற நிலை

கடவுளின் பரிசுத்தத்தையும் மனிதனின் பாவத்தையும் காட்ட வடிவமைக்கப்பட்டது

கீழ்ப்படிதல் விசுவாசத்தை

வெளிப்படுத்தினது கூட்டானது

கிறிஸ்துவின் மரணத்தில் முடிவடைந்தது

எபிரெயப் பதம் = BERITH (உடன்படிக்கை, ஒப்பந்தம், ஏற்பாடு)

புதிய உடன்படிக்கை

நியாயப்பிரமாணம்- உள்ளானது. 

கடவுளுடன் நெருங்கிய தனிப்பட்ட

உறவு

உள்ளாக வாசம் செய்யும் ஆவியானவர். வசனத்தின் மூலம், கடவுளைப்பற்றிய அறிவு

பாவத்திற்கு நிரந்தரமான பரிகாரம்

தெய்வீக உதவி (ஊக்குவித்தல், பலமளித்தல்)

இரட்சிப்படையவும், கிறிஸ்துவில் கடவுளின் பரிசுத்தத்தையும் காட்ட. வடிவமைக்கப்பட்டது

விசுவாசம் கீழ்ப்படிதலை வெளிப்படுத்திற்று தனிப்பட்டது

கிறிஸ்துவின் மரணத்தில் ஆரம்பமாயிற்று. 

கிரேக்கப் பதம் = DIATHEKE (உயில், ஏற்பாடு, மரணசாசனம்)

கடவுளின் உடன்படிக்கைகளில் பொதுவான பண்புகள்

1) தரத்தில் வேறுபட்ட, சமனற்ற குழுக்களிடையே ஏற்பட்டது.

2) ஒரு பக்கமானது (கடவுளால் மட்டுமே தொடங்கப்பட்டு உருவாக்கப்பட்டது),

3) வாக்குத்தத்தங்களின்படி நிபந்தனையற்றது.

4) மாறாத் தன்மையுள்ளது – மாற்றவோ, குலைக்கவோ முடியாது. ஏற்றுக் கொள்ளலாம் அல்லது தள்ளிவிடலாம்.

5) ஏற்றுக்கொள்ளுதல் உறவை ஏற்படுத்தும்.

6) சில ஆசீர்வாதங்கள் கீழ்ப்படிதல் என்கிற நிபந்தனையுடன் கூடியது.

புதிய உடன்படிக்கை =

இது கிறிஸ்துவின் சிந்தப்பட்ட இரத்தத்தினால், கடவுள் கிருமையாக ஏற்படுத்தினது (நோக்கத்துடன் கூறப்பட்டது). இதன்மூலம், விசுவாசத்தைக் கொண்டு, பாவ பரிகாரத்தின் ஆசீர்வாதங்களையும், தன்மைகளையும் ஏற்றுக்கொள்ளும் யாவருக்கும் நிபந்தனை ஏதுமின்றி இரட்சிப்பை அருகுவதாக வாக்களித்துள்ளார்.

பழைய ஏற்பாடு

கடவுளின் வெளிப்பாட்டுடன் தொடங்கினது

கிறிஸ்துவை மேசியாவாக

முன்னுரைத்தது

இரட்சிப்புக்கு விசுவாசம் தேவை

விசுவாச வாழ்க்கை தேவை 

கடவுளின் தீர்க்கதரிசன திட்டத்தை

முன்னுரைத்தல்

கடவுளையும் அவரது வழிகளையும் பற்றிய அறிவைக் கொடுக்கிறது.

கடவுளின் சத்தியங்களையும், கோட்பாடுகளையும் பற்றி கூறுகிறது

புதிய ஏற்பாடு, மறைமுகமாகப் பழைய ஏற்பாட்டில் உள்ளது

புதிய ஏற்பாடு இல்லாமல் பழைய ஏற்பாடு முழுமையடையாது

கடவுள், மனிதன், பாவம். இரட்சிப்பு போன்றவற்றின் உண்மைகளை உறுதிப்படுத்துகின்றது.

புதிய ஏற்பாடு

கடவுளின் வெளிப்பாட்டுடன் முடிகிறது

மேசியாவாகிய கிறிஸ்துவை முன்

வைக்கிறது

இரட்சிப்புக்கு விசுவாசம் தேவை

விகவாச வாழ்க்கை தேவை

கடவுளின் தீர்க்கதரிசன திட்டத்தை

முன்பாக காட்டுதல்

கடவுளையும், அவரது வழிகளையும் பற்றி மேலும் அதிக அறிவைத் தருகிறது

கடவுளின் சத்தியங்களையும், கோட்பாடுகளையும் மறுபடியும் வலியுறுத்துகிறது.

புதிய ஏற்பாட்டில், பழைய ஏற்பாடு வெளிப்படுத்தப்படுகிறது

பழைய ஏற்பாடு இல்லாமல் புதிய ஏற்பாட்டைப் புரிந்துகொள்வது கடினம்

கடவுள், மனிதன், பாவம், இரட்சிப்பு போன்ற சத்தியங்களை உறுதிபடுத்திக் கூறுகிறது

* புதிய ஏற்பாடு இல்லாமல் பழைய ஏற்பாடு முழுமையடையாது. ஆனால் அதன் நிறைவேறுதலுக்கும். முழுமையடைவதற்கும் புதிய ஏற்பாட்டையே எதிர் நோக்கியுள்ளது *

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *