பாதாளம்
பொதுவான வழக்கின்படி பழைய ஏற்பாட்டு மக்கள் மரணமடையும் பொழுது அவர்களின் உ மனிதர்கள் சென்ற இந்த இடம் பாதாளம் (எபிரெயு-Sheol, கிரேக்கு-Hades) ஆகும். இதில் குறைந்தது நான்கு பகுதிகள் உண்டு.
1) பாவத்தில் வாழ்ந்து மரணமடைந்தோரின் உள்ளான மனிதர் வைக்கப்பட்டுள்ள வேதனையுள்ள இடம், இதையும் பாதாளம் என்று அழைப்பது வழக்கம். லூக்.16:19-31
2) மரணமடைந்த பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களின் உள்ளான மனிதர்கள் இருந்த இடமாகிய பரதீசு. இதை ஆபிரகாமின்மடி என்றும் அழைக்கலாம். லூக்.16:19-31; 23:43
3). பாவம் செய்த தூதர்கள் அந்தகாரத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ள இடமாகிய டார்டாராஸ் – Tartarus (2 பேது 2:4; யூதா 6).
4) பல அசுத்த ஆவிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அபிஸ் – Abyss-Bottomless pit கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது போரில் தோற்கடிக்கப்படும் சாத்தான் இந்த இடத்தில் கட்டி வைக்கப்படுவான்.
எபிரெய மொழியில் இது அபதான் – Abaddon என்பதற்கு இனையானது. யோபு 3112 நீதி.15:11 2720; லூக்.8:31; வெளி.பி:1-3,11; 11:7; 17:8; 20:1-3 காண்க.
சாத்தானும் அசுத்த ஆவிகளும் பாதாளத்தில் ஆட்சி செய்கின்றனர் என்று எண்ணுவது தவறு, அங்கு சிலகாலம் அடைத்து, கட்டி வைக்கப்பட்டிருப்பார்கள் என்பதே உண்மை.
பாதாளம் தற்காலிகமானது. கிறிஸ்துவின் ஆயிரம் ஆண்டு அரசாட்சி முடிவடைந்ததும் நடைபெறும் நியாயத்தீர்ப்பின்போது பாவத்தில் மரணமடைந்த யாவரும், அசுத்த ஆவிகளும், சாத்தானும் அக்கிளியும் சுந்தகமும் எரியும் கடல் என்றழைக்கப்படும் நரகத்தில் தள்ளப்படுவார்கள். அங்கு என்றென்றும் வேதனை அனுபவிப்பார்கள். வெளி.20:10-15 காண்க. அதன்பின் பாதாளம் அழிக்கப்படும்.
நரகம்
நரகம் என்பது சாத்தானுக்கும் அவனது தூதர்களுக்கும் என்றென்றுமாகத் தண்டனையளிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இடமாகும் (மத்.25:41). இத்தண்டனையைத் தொடங்குவதற்கு தேவன் ஒரு காலத்தை நியமித்துள்ளார். தாங்கள் இவ்வாறு தண்டனையடையப்போவது சாத்தானுக்கும் அவனது தூதர்களுக்கும் தெரியும் (பத்.8:29; வெளி.12:12}. சாத்தானும் அசுத்த ஆவிகளும் நரகத்தில் ஆட்சி செய்வார்கள் என்பதும் நரகத்தில் தள்ளப்படும் மனிதருக்குத் தொல்லைகள் தருவார்கள் என்பதும் தவறான கருத்துகள் ஆகும். சாத்தானும் அசுத்த ஆவிகளும் நரகத்தில் தண்டனை அனுபவிப்பார்கள் என்பதே உண்மை.
நரகத்தைப் புறம்பான இருள், அக்கினிக்கடல், அக்கினியும் கந்தகமும் எரிகிற கடல் என்று வேதம் அழைக்கிறது (மத்.25:30; வெளி.20:10,14). நரகத்தில் தள்ளப்படுவதை இரண்டாம் மரனாத்தில் பங்கடைதல் என்று வேதம் கூறுகிறது (வெளி.20:14; 21:8). பாதாளத்தைப் போன்று தற்காலிகமாக இல்லாமல் நரகம் நிரந்தரமாகத் தண்டனை அனுபவிக்கும் இடம் (மத் 18:8: 25:41,46; மாற்.3:29; யோவா.5:26-29; 2 தெச.1:10; எபி.6:2; வெளி.14:9-11; 20:10), கண், கை, கால் ஆகிய உடலின் உறுப்பை இழப்பதைவிட நரகத்தில் தள்ளப்படுவது மிகவும் கொடியது (மத் 5:29-30). நரசுத்தில் பல அளவுள்ள தண்டனைகள் உண்டு (மத்.10:15; 11:22; 23:14; மாற்.6:11; லூக்.10:13-14).
துன்மார்க்கரும் தேவனை மறக்கிற மக்களினங்களும் நரகத்தில் தள்ளப்படுவார்கள் (சங்.9:17). ஜீவபுத்தகத்தில் பெயரெழுதப்படாத யாவரும் நரகத்திற்குள் தள்ளப்படுவார்கள் (வெளி.20:15). வெளி.20:10 காண்சு.