பழைய ஏற்பாட்டின் இறையியல்
வேதாகமத்தின் கோட்பாடுகள்பற்றிப் படிக்கும்போது நாம் இதைக்குறித்து இன்னமும் விரிவாகப் படிக்கலாம். இருப்பினும் சில முக்கிய கருத்துக்களை நீங்கள் மனதிற் கொள்வது நல்லது.
பழைய ஏற்பாடு கூறும் கடவுளும், புதிய ஏற்பாடு கூறும் கடவுளும் ஒருவரே! மல்கியா 3:6; யாக்கோபு 1:17; எபிரெயர் 13:8
கடவுளின் பண்புகளில் அன்பு மட்டுமல்லாது கோபமும் உண்டு என்று பழைய ஏற்பாடும், புதிய ஏற்பாடும் காட்டுகிறது.
உபாகமம் 4:37; நாகூம் 1:1-3; செப்பனியா 1:3; மல்கியா 1:2; யோவான் 3:16; யோவான் 3:36; ரோமர் 1:18; ரோமர் 5:8;
வெளிப்படுத்தல் 6:16-16
மனிதனுடைய அடிப்படையான மனிதத்தன்மை கடவுள் இல்லாத நிலையில் கடவுளுக்குத் தூரமாயுள்ளது.
ஆதியாகமம் 6:5; எபேசியர் 2:1-3
பாவம் என்பது பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் ஒரே மாதிரியாகவே உள்ளது.
ஆதியாகமம் 4:7: ஏசாயா 59:2; ரோமர் 6:12; கொலோசேயர் 1:21
கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்படுவதே கடவுளோடு
சரியான உறவு வைக்கும் ஒரே வழியாக உள்ளது. ஆதியாகமம் 15:6; ரோமர் 4:22-24; எபேசியர் 2:8-9
விசுவாச வழி நடப்பதே கடவுளை மகிழ்விக்கும் ஒரே வழி
எபிரேயர் 2:8; ரோமர் :17: எபிரெயர் 11:1-6
நினைவிருக்கட்டும். பழைய ஏற்பாட்டில் கடவுள் தம்மை வெளிப்படுத்திக்காட்டியிருப்பது ஒரு பகுதியேயன்றி முழுமை பெற்றதல்ல. ஆனால் புதிய ஏற்பாட்டில் கடவுள் தம்மை. பரிபூரணமும், நிறைவுமுள்ள கிறிஸ்துவில் முழுமையாக வெளிப்படுத்தியுள்ளார்.
கடவுளின் தன்மைகள் யாவும் எப்பொழுதும் சம நிலையில் கூறப்பட்டுள்ளது. அவர் வல்லமையுள்ளவர், அன்புள்ளவர்,
சங்கீதம் 61:11-12