தோப்புக்கள் – GROVES (தோப்பு விக்கிரகம்)
தோப்புக்கள் என்பதற்கான எபிரெய வார்த்தை “அசேரா” (asherah) என்பதாகும். இதற்கு மரத்தினால் செய்த சிலை அல்லது மரத்தூண் என்று பொருள். பாகாலின் சிலையோடு அசேராவையும் வைத்திருப்பார்கள். இது பாகாலின் மனைவியாகக் கருதப்படுகிறது. வேதாகமத்தின் மொழிபெயர்ப்புக்களில் அசேரா “தோப்புக்கள்” (groves) என்றே மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
அசேரா என்னும் வார்த்தை “யசார்” (yashar) என்னும் வினைச்சொல்லிருந்து வந்திருக்கிறது. இதற்கு நேராக இருத்தல், நிமிர்ந்திருத்தல், நிறுத்துதல் என்று பொருள்.
இந்தத் தூண் தரையிலிருந்து ஒரு கொடிமரம்போல இருக்கும். இது தளிர்த்த மரமாகவும் இருக்கலாம். மரத்தின் உயரமான உச்சிப்பகுதி வெட்டப்பட்டிருக்கலாம். மரத்தின் தண்டில் ஒரு உருவம் செதுக்கப்பட்டிருக்கலாம். (உபா 16:21). இந்தத் தூணானது ஒரு உருவமாகவும் இருக்கலாம். இது தரையில் நேராக நிறுத்தப்பட்டிருக்கும். (1இராஜா 14:15; 1இராஜா 16:33; ஏசா 17:8). பொதுவாக இந்தத் தூண் மரத்தினால் செய்யப்பட்டிருக்கும். (நியா 6:26) சில சமயங்களில் கல்லாலும் செய்யப்பட்டிருக்கும். இந்தத் தூணைத்தான் வெட்டிப்போட வேண்டுமென்று தேவன் கட்டளை கொடுக்கிறார். (யாத் 34:13) அதைப் பிடுங்கிப்போடவேண்டும். (மீகா 514) சுட்டெரிக்கப்படவேண்டும். (உபா 12:3) உடைக்க வேண்டும். (2 நாளா 34:4). தோப்புக்கள் என்பது காடுகளிலுள்ள அடர்ந்த மரங்களல்ல. (2இராஜா 17:10) இவற்றைப் பச்சைமரத்திற்குக் கீழும் வைக்கமாட்டார்கள். மரத்தை ஜீவனுக்கு அடையாளமாகக் கருதி, புறஜாதியார் அதைத் தெய்வமாக ஆராதித்தார்கள்.
மரங்களை ஆராதிக்கும் வழக்கம் கானானிய தேசத்தில் ஆரம்பித்து, அதன் பின்பு பல தேசங்களுக்கும் பரவிற்று. தேவன் தம்முடைய மகிமையை மரத்திற்குக் கொடுக்கமாட்டார். வேறு எந்த விக்கிரகத்தோடும் அவர் தமது மகிமையைப் பகிர்ந்து கொள்வதில்லை. கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பதாகும். (யாத் 34:13-14; 1இராஜா 14:15; 1இராஜா 15:13; 1இராஜா 16:32-33; 2நாளா 3614).
கானானியர்கள் தங்களுடைய விக்கிரகாராதனையினால் அழிந்துபோனார்கள். தோப்பு விக்கிரகாராதனையைப் பற்றி எரே 5:7;எரே 7:30-31; எரே 19:4-5; எரே 32:34-35; ஓசி 4:12-14; ஆமோ 2:7-9 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கிறது. இவை தவிர தோப்புக்களைப் பற்றி மேலும் பல வசனங்களில் கூறப்பட்டிருக்கிறது. (யாத் 34:13; உபா 7:5; உபா 12:3; உபா 16:21; நியா 3:7; நியா 6:25-30; 1இராஜா 14:15,23; 1இராஜா 15:13; 1இராஜா 16:33; 1இராஜா 18:19; 2இராஜா 13:6; 2இராஜா 17:10,16; 2இராஜா 18:4; 2இராஜா 21:37; 2இராஜா 23:4-15; 2நாளா 14:3; 2நாளா 15:16; 2நாளா 17:6; 2நாளா 19:3; 2 நாளா 24:18; 2 நாளா 311; 2நாளா 33:3,19; 2நாளா 34:3-7; ஏசா 17:8; ஏசா 279; எரே 17:2; மீகா 5:14).
அசேரே என்னும் தோப்பு விக்கிரகத்தைப் பற்றி கூறப்படும் இடத்தில் கர்த்தர் தம்மை எரிச்சலுள்ளவராகக் காண்பிக்கிறார். வேதாகமத்தில் இந்த வசனத்தில் மட்டுமே கர்த்தருடைய பெயர் எரிச்சலுள்ளவர் என்று கூறப்பட்டிருக்கிறது.
அந்நிய தெய்வங்களை ஜனங்கள் சோரமார்க்கமாகப் பின்பற்றுகிறார்கள். வேசித்தனமும், விபசாரமும் அந்நிய தெய்வங்களின் ஆராதனையோடு கலந்திருக்கிறது. (யாத் 3415-16, லேவி 17:7; லேவி 20:5-6; உபா 31:6; நியா 2:17; நியா 8:27,33; 1நாளா 5:25; 2 நாளா 21:13; சங் 73:27; சங் 106:39; எரே 3:29; எரே 13:27; எசே 6:9; எசே 16:1-63; எசே 20:30; எசே 231-43; எசே 43:7-9; ஓசி 1:2; ஓசி 2:2-4; ஓசி 4:10-18; ஓசி 5:3-4; ஓசி 6:10; ஓசி 9:1)