நீடிய பொறுமை

நீடிய பொறுமை LONG SUFFERING, FORBEARANCE

இரக்கம் அல்லது பொறுத்துக்கொள்ளுதல் என்று இந்த வார்த்தைக்கு பொருள் கூறலாம். மனுஷன் தன்னுடைய பாவத்தினால் தண்டனைக்கு பாத்திரவானாக இருக்கிறான். தேவன் தம்முடைய நீடிய பொறுமையினால் மனுஷனை உடனே தண்டித்து விடாமல் அவன் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பை கொடுக்கிறார் (ரோம 2:4).

“நீடிய பொறுமை என்பதற்கான கிரேக்க வார்த்தை – makrothymia என்பதாகும். – 

மனுஷன் பாவியாகவும், துன்மார்க்கனாகவும் இருக்கின்றபோதிலும் தேவன் அவனோடு பொறுமையோடிருந்து கிரியை நடப்பித்து வருகிறார் (யாத் 34:6). மனுஷர் மனந்திருந்த வேண்டுமென்பதே தேவனுடைய நீடியபொறுமையின் நோக்கமாகும் (ரோம 2:4; 2பேது 3:9,15). தேவன் நீதியுள்ளவர். அவரால் பாவத்தை பொறுமையோடு தாங்கிக்கொள்ள முடியாது. 

மனந்திரும்பாதவர்களையும், இரட்சிப்புக்கான தங்களுடைய நம்பிக்கையை தேவனிடத்தில் வைக்காதவர்களையும் அவர் ஆக்கினைக்குள்ளாக தீர்க்கிறார் (2தெச 1:5-10). 

விசுவாசிகள் பரலோக பிதாவைப்போல நீடிய பொறுமையுள்ளவர்களாக இருக்கவேண்டும் (1கொரி 13:4-5). தேவன் நம்மீது பொறுமையோடிருக்கிறார் (எபே 4:31-32), பழிவாங்குதல் கர்த்தருக்கே உரியது (ரோம 12:19).

“ஆவியின் கனியோ அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்” (கலாத்தியர் 5:22).

“இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும், தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள்” (2பேதுரு 1:6-7).

ஆவியின் கனியின் முதல் பண்புகள் அன்பு, சந்தோஷம், சமாதானம் என்பவை. இவையனைத்தும் நமது உள்ளான ஆவிக்குரிய ஜீவியத்தில் மிகவும் முக்கியமான அம்சமாகும். தேவனோடு நாம் தனிப்பட்ட முறையில் தொடர்பு பெற்றிருக்கும்பொழுது, இவை நமக்குள் வளர்க்கப்படுகிறது. நமது இருதயங்களில் இம்மூன்று பண்புகளும் வளமை பெறுகின்றன. ஆவியின் கனியின் மற்ற மூன்று பண்புகளில் முதலாவது பண்பு நீடிய பொறுமையாகும். நாம் மற்றவர்களோடு கொண்டுள்ள உறவுகளில், நம்மிடமுள்ள சந்தோஷம், சமாதானம் ஆகிய பண்புகள் வெளிப்படையாக கிரியை நடப்பிக்கின்றன.

கிரேக்க மொழியில் “மக்ரோதுமியா” (makrothumia) என்னும் சொல் தமிழ் மொழியில் “நீடிய பொறுமை” என்று தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. “மக்ராஸ்” என்பதற்கு “நீடிய பொறுமை” என்றும், “துமியா” என்பதற்கு “பொறுமை” என்றும் பொருள். இந்தச் சொல்லுக்கு நீடிய பாடுகளை அனுபவித்தல்,தெய்வீக காரியங்களில் சோதிக்கப்படும்பொழுது பொறுமையோடு உறுதியாக தரித்திருத்தல் ஆகிய பொருளும் உண்டு. அதாவது பரிசுத்த ஆவியானவர் ஒரு நபருக்குள் பொறுமையின் கனியை வளப் படுத்தும்பொழுது, அவர் தனது நம்பிக்கையை இழந்து போகாமல், கர்த்தருடைய சமூகத்தில் காத்திருப்பார். தனது தோல்விகளை ஒத்துக்கொள்வார். தான் தோல்வி அடைந்ததாக எண்ணமாட்டார். உணர்வுகளை கோபம் ஆளுகை செய்ய அனுமதிக்க மாட்டார். தனது

நீடிய பொறுமை ஆவியின் கனியில் ஒரு பங்காகும். இந்தப் பண்பை உடையவர் சோதிக்கப்படும்பொழுது, நீடிய பொறுமையோடு தன்னைக் காத்துக்கொள்வார். எதற்கும் அவசரப்படமாட்டார். யாரையும் அவசரப்பட்டு குறை கூறவோ, கடிந்து கொள்ளவோ, தண்டிக்கவோ மாட்டார். அதேவேளையில் மிகவும் கடினமான சூழ்நிலைகளிலும், வேதனையுடைய சோதனை காலத்திலும் இவர் வீழ்ந்து போகவும் மாட்டார்.

நீடிய பொறுமை பொதுவாக பாடுகளை அனுபவிப்பதோடு தொடர்புகொண்டிருக்கும். நீடிய பொறுமையானது உறுதியாக நிலைத்திருப்பதினாலும் விடாமுயற்சியின் விளைவினாலும் வருகிறது. நம்மிடம் நீடிய பொறுமை இல்லையென்றால், நாம் சோர்வடைந்து விடுவோம். நமது சோதனைக் காலங்களிலெல்லாம் நமக்குள் ஆவியானவரின் நீடிய பொறுமை நமக்குள் வளப்படுத்தப்படுகிறது. நீடிய பொறுமை நமக்குள் அதிகம் அதிகமாய் வளரும்பொழுது நாம் கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக வளர்ச்சி பெறுகிறோம்.

“இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும், ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும், தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள். இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது” (2பேதுரு 1:5-8).

பொறுமையும் பாடும்

எல்லோருடைய வாழ்விலும் ஏதாவது ஒரு அளவிற்கு வேதனையும் பாடுகளும் இருக்கும். இது நாம் பள்ளியில் சென்று படிக்கும் அனுபவத்தைப் போன்றது. சங்கீதக்காரர் இதைப்பற்றி இவ்வாறு கூறியுள்ளார். “நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக் கொள்ளுகிறேன்” (சங்கீதம் 119:71). ஆட்டு மந்தைகளை கவனிப்பதற்கு மேய்ப்பர்கள் நாய்களை வளர்ப்பார்கள். கிறிஸ்தவர்களுடைய வாழ்க்கையில் சோதனைகள் மந்தையிலுள்ள நாய்களின் செயலுக்கு ஒப்பானவை. ஆடுகள் மேய்ப்பரை விட்டு எங்கும் விலகி ஓடிவிடாதவாறு, இந்தநாய்கள் ஆடுகளை அருகிலேயே வைத்திருக்கும்.

நம்மை நேசிக்கும் பரலோகப்பிதா, நம்மை கட்டுப்படுத்துவதற்காக ஒழுங்குசெய்வதற்காக, நாம் சோதிக்கப்படுவதை அனுமதிக்கிறார். அவருடைய பரிசுத்தத்தில் நாமும் பங்குபெற வேண்டுமென்று அவர் விரும்புகிறார். எபிரெயர் 12:7-11 ஆகிய வசனங்களில் இந்தக் கருத்து இவ்வாறு விளக்கி எழுதப்பட்டுள்ளது.

கிறிஸ்துவைப் பின்பற்றுவதில் சிலுவையை சுமக்கும் அனுபவமும் அடங்கியுள்ளது. வேதாகமத்தின் வசனங்கள் இதை வலியுறுத்திக் கூறுகின்றன. சான்றாக பல அப்போஸ்தலர் பேதுரு இது குறித்து இவ்வாறு எழுதியுள்ளார். “இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின் வைத்துப்போனார்” (1பேதுரு 2:21). இது தொடர்பாக மத்தேயு 10:38; 16:24; மாற்கு 8:34; லூக்கா 9:23; 14:27 ஆகிய சுவிசேஷ நூல்களில் இயேசு கிறிஸ்து கூறியுள்ள வசனங்களையும் வாசிக்கவும்.

ஆவிக்குரிய காரியங்களில் மிகவும் முரண்பாடான உலகத்தில் நாம் ஜீவித்து வருகிறோம். ஆகையினால் பல சமயங்களில் நாம் நமது விரோதிகளைத் தோல்வி காணச் செய்யவேண்டும். பிலாத்துவின் கரங்களில் இயேசு பாடுகளை அனுபவித்தார். இந்த உலகத்திலுள்ள ஒருசில ஜனங்கள் மிகவும் கோபமாக இயேசுவின் மீது பாய்ந்தார்கள். இவையெல்லாம் ஆவிக்குரிய உலகத்திற்கு புறம்பானவர்களிடமிருந்து வந்த பாடுகள் ஆகும். அதேவேளையில் இயேசுகிறிஸ்து தம்மோடு உடன் இருந்த, விசுவாசமில்லாத யூதாஸின் மூலமாகவும் பாடுகளை அனுபவித்தார். நாம் இந்த உலகத்தின் நடுவிலோ, அல்லது கிறிஸ்தவ ஐக்கியத்தின் நடுவிலோ, பல சமயங்களில் பாடுகளை அனுபவித்து, நீடிய பொறுமையைக் கற்றுக்கொள்ள வேண்டியது வரலாம். இவை இரண்டிலுமே நமக்கு முன்மாதிரியாக இருப்பவர் இயேசுகிறிஸ்துவே. இவரையே சாத்தான் சோதித்தான். சிலுவையில்லாமல் சிம்மாசனத்தை பெற்றுக்கொள்ளும் வழியை இயேசு ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்துவிட்டார். (மத்தேயு 4:1-11). தமக்கு முன்பாக இருக்கும் பாடுகளை அவர் நினைத்து பார்த்தார். சிலுவையில்லாமல் சிம்மாசனத்தை ஏற்றுக்கொள்ளும் கருத்தை அவர் புறக்கணித்துவிட்டார். (யோவான் 16:7-33).

ஆவில்லா செயிண்ட் தெரஸா என்பவர் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்பேனிஷ் கிறிஸ்தவர். பாடுகள் மத்தியில் நீடிய பொறுமையோடு இருந்ததற்கு செயிண்ட் தெரஸாவை நல்லதொரு எடுத்துக்காட்டாகக் கூறலாம். இந்த அம்மையார் வாலிப வயதாக இருந்தபொழுது, அவரை ஒருநோய் தாக்கியது. இதனால் அவர் மரித்துவிடும் தருவாயில் இருந்தார். இந்த நோயின் விளைவினால் இவருக்கு இருதய வலி ஏற்பட்டு, பக்கவாத நோய் வந்துவிட்டது. இதன்பின்பு சுமார் 3 ஆண்டுகள் பாதிக்கப்பட்டிருந்தார். கொஞ்சம் இவர் பக்கவாத நோயினால் கொஞ்சமாக தனது கரங்களையும் கால்களையும் மறுபடியும் இயக்கும் வலுவைப் பெற்றுக்கொண்டார். தன்னுடைய முடமான கைகளினாலும் கால்களினாலும், தரையில் தவழ்ந்து சென்று பழகினார். கர்த்தர் என்னை இந்த நிலைமையிலேயே விட்டுவிட்டாலும், நான் தேவனுடைய சித்தப்படி செயல்படுவேன் என்று மன அமைதியோடு கூறினார். இவர் மரிப்பதற்கு முன்பாக ஒரு கடிதம் எழுதி அதில் இவ்வாறு எழுதியுள்ளார். “என்னுடைய ஆத்துமா கண்டுகொண்ட சமாதானத்தையும், சந்தோஷத்தையும், நான் தெளிவாக விவரிக்க விரும்புகிறேன், சிலவேளைகளில் எனக்கு உள்ளான சுகம் எதுவும் இல்லாமல், பாடுகளை அனுபவிப்பதற்கு தேவன் அனுமதித்தார். அப்படிப்பட்ட சூழ்நிலையில்கூட தேவனுடைய சித்தத்தை எனது சித்தம் உதறி ஒதுக்கித் தள்ளிவிடவில்லை.”

நாம் கடிதத்தை எழுதி முடிக்கும்பொழுது, நமது பெயரை அழகாக எழுதுவோம். ஆனால் இவரோ, இப்படிக்கு “இயேசுவின் தெரஸா” என்று இந்தக் கடிதத்தின் இறுதியில் எழுதி கையொப்பம் இட்டார். 

நீடிய பொறுமையும் விடாமுயற்சியும்:

வேதாகமத்தை மொழிபெயர்ப்பவர்களில் பலர், நீடிய பொறுமை, விடாமுயற்சி ஆகிய இரண்டு சொற்களையும் ஒரே சொல்லுக்கே பயன்படுத்துவார்கள். விடாமுயற்சி என்பது உறுதியாக நிலைத்திருப்பதைக் குறிப்பிடும். என்ன நடைபெற்றாலும் நமது விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருப்பது விடாமுயற்சி அல்லது நீடிய பொறுமை என்று கூறலாம். கிரேக்க மொழியின், மக்ராதுமியா (makrothumia) என்னும் சொல்லுக்கு, பாடுகளின் மத்தியிலும் அன்போடும் பொறுமையாகவும் காத்திருப்பது என்று பொருள். பொறுமையோடு நாம் எவ்வாறு நிலைத்திருக்கவேண்டும் என்பது கொலோசெயர் 1:9-11 இல் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.

“இதினிமித்தம் நாங்கள் அதைக் கேட்ட நாள் முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம் பண்ணுகிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும், சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத்தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும், சந்தோஷத்தோடே கூடிய எல்லாப் பொறுமையும் நீடிய சாந்தமும் உண்டாவதற்கு, மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம்.”

பொறுமை, சந்தோஷம், நம்பிக்கை:

ஆகிய ரோமர் 5:3-4 ஆகிய வசனங்கள் உபத்திரவம், பொறுமை, பரீட்சை, நம்பிக்கை நான்கும் இணைத்து கூறப்பட்டுள்ளன. “அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிற தென்று நாங்கள் அறிந்து, உபத்திர வங்களிலேயும் மேன்மை பாராட்டுகிறோம். கிறிஸ்துவ வளர்ச்சியில் உபத்திரவமும், பொறுமையும், பரீட்சையும் ஒவ்வொன்றாக நடைபெற்று, அதனால் நம்பிக்கை பெருகும். ஒருசில காரியங்கள் நாம் எதிர்பார்த்தபடி நடைபெறும். இந்தக் காரியங்களில் பொறுமையாகக் காத்திருப்பது அதாவது நம்பிக்கையோடு காத்திருப்பது நமக்கு கடினமானது அல்ல. அதேவேளையில் நமது உபத்திரவங்கள்கூடி, நாம் எதிர்பார்க்கும் காரியங்கள் எதுவுமே நடைபெறவில்லை யென்றால், பொறுமையாகக் காத்திருப்பது இயலாத காரியமாக இருக்கும். நாம் நினைத்த காரியம் நடைபெறவில்லையென்றால், நமது இயல்பான சுபாவத்தின் நாம் நம்பிக்கை படி யற்றவர்களாகவும் விரக்தியுடையவர்களாகவும் இருப்போம். நீடிய பொறுமை ஆவியின் கனியாகும். இது மிகவும் சோகமான கனி அன்று. சோதனை வரும் பொழுது நாம் பொறுமையாக இருந்தால், கவலைப்பட மாட்டோம். கர்த்தரிடத்தில் முழுமையாக நம்பிக்கை வைத்திருப்போம். நமது ஜீவியத்தில் கர்த்தர் செய்வதை ஏற்றுக்கொண்டு, நாம் சந்தோஷத்தினால் நிறைந்திருப்போம். “நானோ, கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; 

நீரோ என் தேவன் என்று சொன்னேன். என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது; என் சத்துருக்களின் கைக்கும் என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் என்னைத் தப்புவியும்” (சங்கீதம் 31:14-15). நாமும் சங்கீதக்காரரைப் போன்று இவ்வாறு கூறலாமே. 

நீடிய பொறுமையும் ஞானமும்:

நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான். முற்கோபியோ புத்தியீனத்தை விளங்கப் பண்ணுகிறான்” (நீதிமொழிகள் 14:29). பொறுமையுள்ள நபர் ஒரு பிரச்சனையின் எல்லா அம்சங்களையும் புரிந்துகொள்ள முயற்சிபண்ணுவார். ஒரு பிரச்சனையைப்பற்றி முடிவுக்கு வருவதற்கு முன்பாகவும், பிரச்சனையைக் குறித்து தன் தீர்ப்பை முடிவு பண்ணுவதற்கு முன்பாகவும் இவர் அந்தப் பிரச்சனையின் எல்லா சரத்துக்களையும் புரிந்துகொள்ள முயற்சி செய்வார். பெற்றோரிடம் இப்படிப்பட்ட பண்பு இருக்குமென்றால், தங்களுடைய பிள்ளைகளுக்கு ஞானமாக பயிற்சி கொடுக்க இந்தப் பண்பு அவர்களுக்கு உதவிபுரியும். கிறிஸ்துவின் சரீரத்தில் இந்தப் பண்பு சமாதானத்தை ஏற்படுத்தும். நமது அன்றாட வாழ்வில், மற்றவர்களோடு நாம் ஏற்படுத்தியுள்ள உறவுகளில், நாம் நல்லமுறையில் பழகுவதற்கு இந்தப் பண்பு நமக்கு உதவிபுரியும்.

நீடிய பொறுமையும் சமாதானமும்:

சமாதானம் ஆவியின் கனி ஆகும். அமைதியான சூழ்நிலை ஏற்படவேண்டு மென்றால் அங்கு சமாதானம் இருக்க வேண்டும். நீதிமொழிகள் 14:18 இதை இவ்வாறு கூறுகிறது. “பேதையர் புத்தியீனத்தைச் சுதந்தரிக்கிறார்கள்; விவேகிகளோ அறிவினால் முடிசூட்டப்படுகிறார்கள். நாம் எல்லோருமே சமாதானம் பண்ணுகிறவர்களாக இருக்க வேண்டும். பொறுமையுள்ள மனிதன், தன் கோபத்தினால் ஆளுகை செய்யப்படமாட்டான். தன் செயல்கள், வார்த்தைகள், சிந்தனைகள் ஆகியவை அனைத்திலுமே தேவனுடைய சமாதானத்தை வெளிப்படுத்துவான்.

நீடிய பொறுமையும் பெலனும்:

இந்த உலகத்தில் வலிமையென்று நாம் பொதுவாகக் குறிப்பிடுவது, திடகாத்திரமான சரீரத்தைத் தானே. ஒரு நபர் எந்த அளவுக்கு பாதுகாக்கப்படுகிறார் என்பதுவும் அவரது வலிமையே! இது குறித்து நீதிமொழிகள் 16:32 நமக்கு இவ்வாறு கூறுகிறது. “பலவானைப் பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்”. ஆவிக்குரிய உலகத்தில் பொறுமையான நபரே வலிமையான நபராவார்.

நீடிய பொறுமையும் மன்னிப்பும்:

ஒருவரோடொருவர் சுமுகமாக பழகுவதற்கும், அன்போடு ஒருவரையொருவர் மன்னிப்பதற்கும், நமக்கு நீடிய பொறுமையின் கனி தேவை. கொலோசெயர் 3:12-13 இல் அப்போஸ்தலர் பவுல் சபைக்கு இவ்வாறு அறிவுரை கூறியுள்ளார்.

“ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு, ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக் கொருவர் மன்னியுங்கள்.

இயேசுகிறிஸ்து தமது சீஷர்களுக்கு மன்னிக்கக் கற்றுக்கொடுத்தபொழுது, ஒரு முதலாளி தன் வேலையாட்களை மன்னியாததை உவமையாகக் கூறியுள்ளார் (மத்தேயு 18:21-35). ராஜா தன்னிடம் கடன் வாங்கினவனை மன்னிக்கவில்லை. இதற்கு பதிலாக தான்பட்ட கடனை கொடுத்து தீர்க்குமாறு அவனைக் காவலில் போடுவித்தான். இதைப்பற்றி இயேசு மேலும் கூறும்பொழுது “நீங்களும் அவனவன் தன்தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரம பிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார்” (மத்தேயு 18:35) என்றார்.

கோபமுள்ள மனிதர்களுக்கு மன்னிப்பதற்கு கடினமாக இருக்கும். ஆவியின் கனியாகிய நீடிய பொறுமை மன்னிப்பதற்கு அடிப்படையான பண்பு ஆகும். நீடிய பொறுமையும் பாடுகளை அனுபவிப்பதும் மன்னிக்கும் ஆவியாகும். அன்பு பொறுமையுடையது. எளிதில் சினம் அடையாது. தவறுகளை சிந்தித்துப் பார்க்காது. எப்பொழுதும் நீடிய பொறுமையாக இருக்கும் என்று 1கொரிந்தியர் 13 ஆம் அதிகாரத்தில் நாம் வாசிக்கிறோம். ஆவிக்குரிய பொறுமையின் எல்லா அம்சங்களும் இந்தப் பகுதியில் விளக்கப்பட்டுள்ளன.

விசுவாசமும் நீடிய பொறுமையும்:

கிறிஸ்தவர்களுக்கு நீடிய பொறுமை மிகவும் முக்கியமானது. ஏனெனில் நீதிமான் விசுவாசத்தினால் பிழைப்பான். அதேசமயத்தில் விசுவாசமும் சுத்திகரிக்கப்படவேண்டும். விசுவாசமும் நீடிய பொறுமையும் இருக்கும்பொழுது நம்மால் சோதனைக்கு எதிர்த்து நிற்கமுடியும். விசுவாசம், நீடிய பொறுமை, தேவனுடைய வாக்குத்தத்தங்கள் ஆகியவை அனைத்தும் எபிரெயர் 6.11-12 ஆகிய வசனங்களில் இவ்வாறு தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. “நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்து கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுபவர்களாயிருந்து, உங்களுக்கு நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவு பரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம்.”

தேவனுடைய பொறுமை

தேவனுடைய பொறுமையை நாம் முதலாவது சிந்தித்துப்பார்க்கவேண்டும். ஆவியின் கனியில் பொறுமை முக்கியமானது. தேவனுடைய தன்மை நீடிய பொறுமையானது என்று கலாத்தியர் 5:22 இல் நாம் வாசிக்கிறோம். மோசேயிடம் தேவன் தம்மைப்பற்றி வெளிப்படுத்தியபொழுது இவ்வாறு கூறியுள்ளார். (யாத்திராகமம் 34:6). “கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும் சத்தியமுமுள்ள தேவன்”.

மனிதனோடு தேவன் ஏற்படுத்தியுள்ள உறவில் தெய்வீக பொறுமை வெளிப்படுகிறது. இந்த வசனத்தில் ஒவ்வொரு விளக்கமும் இதையே தெளிவுபடுத்துகிறது.

வேதாகமம் முழுவதிலும் தேவனுடைய பொறுமை திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது. இதற்கு நாம் ஒருசில எடுத்துக்காட்டுகளைக் காணலாம். 

1. நோவாவின் நாட்களில் வாழ்ந்த ஜனங்கள் மிகப்பெரிய பாவிகளாக இருந்தார்கள். (ஆதியாகமம் 6:1-12). ஆயினும் அப்போஸ்தலர் பேதுரு இதைப்பற்றி இவ்வாறு கூறியுள்ளார். “அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற் போனவைகள். அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர் மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள்.” (1பேதுரு 3:20). தேவனுடைய பொறுமை மிகப் பெரியது. நோவாவும் அவனுடைய குடும்பத்தாரும் பேழைக்குள் நுழைந்தனர். தேவன் பெருமழையை அனுப்புவதற்கு முன்பாக, பேழைக்குள் அவர்கள் நுழைந்த பிறகும், ஏழு நாட்கள் காத்திருந்தார் (ஆதியாகமம் 79-10), ஆயினும் பாவமான ஜனங்கள் இந்தப் பேரழிவில் இருந்து தப்பித்துக்கொள்வதற்கு, தங்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

2. இஸ்ரவேல் ஜனத்தாரிடம் தேவன் நடப்பித்த கிரியைகள் தேவனுடைய நீடிய பொறுமையை நமக்கு திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கூறுகின்றன. வனாந்தரத்தில் இஸ்ரவேல் ஜனத்தார் முரண்டு பிடித்தார்கள். எகிப்துக்கு திரும்ப போக வேண்டுமென்று விரும்பினார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், மோசே இஸ்ரவேல் ஜனத்தாருக்காக, தேவனுடைய சமூகத்தில் பரிந்துபேசினார். கர்த்தர் தம்மைப்பற்றி கூறியதையே தேவனுக்கு நினைவுபடுத்தினார். “ஆகையால் கர்த்தர் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவர் என்றும், அக்கிரமத்தையும், மீறுதலையும் மன்னிக்கிறவர்கள் என்றும், குற்றமுள்ளவர்களைக் குற்றமற்றவர்களாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் விசாரிக்கிறவர் என்றும், நீர் சொல்லியிருக்கிறபடியே, என் ஆண்டவருடைய வல்லமை பெரிதாய் விளங்குவதாக”. (எண்ணாகமம் 1437 18). லேவியராகமம் 27 ஆவது அதிகாரத்தில் இஸ்ரவேல் ஜனத்தாருக்கு கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தம் எழுதப்பட்டுள்ளது. கீழ்ப்படிந்தால் அவர்களுக்கு வெகுமதி கிடைக்கும். கீழ்ப்படியவில்லையென்றால், அவர்கள் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அதே சமயத்தில் கர்த்தருடைய பொறுமை கீழே கொடுக்கப்பட்டுள்ள வசனத்தில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. “அவர்கள் எனக்கு விரோதமாகத் துரோகம் பண்ணி நடப்பித்த தங்கள் அக்கிரமத்தையும், தங்கள் பிதாக்களின் அக்கிரமத்தையும் அறிக்கையிடுகிறதுமின்றி, அவர்கள் எனக்கு எதிர்த்து நடந்தபடியினால் நானும் அவர்களுக்கு எதிர்த்து நடந்து, அவர்களுடைய சத்துருக்களின் தேசத்திலே அவர்களைக் கொண்டு போய்விட்டதையும் அறிக்கையிட்டு, விருத்தசேதனமில்லாத தங்கள் இருதயத்தைத் தாழ்த்தி, தங்கள் அக்கிரமத்துக்குக் கிடைத்த தண்டனையை நியாயம் என்று ஒத்துக்கொண்டால், நான் யாக்கோபோடே பண்ணின என் உடன்படிக்கையையும், ஈசாக்கோடே பண்ணின என் உடன்படிக்கையையும், ஆபிரகாமோடே பண்ணின உடன்படிக்கையையும் நினைப்பேன்; தேசத்தையும் நினைப்பேன்” (லேவியராகமம் 26:40-42).

3. தாவீது ராஜா மிக மோசமான பாவங்கள் சிலவற்றை செய்துவிட்டான். மரணம் ஏதுவானது என்பதை அவன் புரிந்துகொண்டான். “அப்பொழுது தாவீது தனக்கு நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன் என்றான். நாத்தான் தாவீதை நோக்கி; நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச்செய்தார்” என்றான். (2சாமுவேல் 12:13). அதே சமயத்தில் தேவனுடைய சமூகத்திற்கு முன்பாக கதறி அழுது, அவருடைய இரக்கத்தையும் நீடிய பொறுமையையும் தாவீது நாடினான். தேவனுடைய மன்னிப்பை பெற்றுக்கொண்டான். கர்த்தருடைய பொறுமையும் அவருடைய மன்னிப்பும் சங்கீதங்கள் பலவற்றில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

“தேவனே, உம்முடைய நீதி உன்னதமானது, பெரிதானவைகளை நீர் செய்தீர்; தேவனே, உமக்கு நிகரானவர் யார்? அநேக இக்கட்டுகளையும் ஆபத்துக்களையும் காணும்படி செய்த என்னை நீர் திரும்பவும் உயிர்ப்பித்து திரும்பவும் என்னைப் பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறப்பண்ணுவீர், என் மேன்மையைப் பெருகப்பண்ணி, என்னை மறுபடியும் தேற்றுவீர். என் தேவனே, நான் வீணையைக்கொண்டு உம்மையும் உம்முடைய சத்தியத்தையும் துதிப்பேன்; இஸ்ரவேலின் பரிசுத்தரே, சுரமண்டலத்தைக் கொண்டு உம்மைப் பாடுவேன்” (சங்கீதம் 7119-22).

இஸ்ரவேல் ஜனத்தாரின் வரலாற்றையும், வனாந்தரத்தில் அவர்கள் நடந்துகொண்ட விதத்தையும், தேவன் அவர்களுக்காக செய்த கிரியைகளையும் நாம் வாசித்து பார்க்கும் பொழுது, தேவன் அவர்கள் மீது எந்த அளவுக்கு நீடிய பொறுமையாக இருந்தார் என்பது தெளிவாகும்.

5. அப்போஸ்தலர் பேதுரு தான் எழுதியுள்ள இரண்டாவது நிருபத்தில் கர்த்தருடைய பொறுமையைக் குறித்து எழுதியுள்ளார். “தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக் குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப் போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்” (2பேதுரு 3.9). “மேலும் நம்முடைய கர்த்தரின் நீடிய பொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள்” (2பேதுரு 3:15).

கிறிஸ்தவரும் பொறுமையும்

நீடிய பொறுமை பரிசுத்த ஆவியானவரின் கனியாகும். இது அகத்திலும் புறத்திலும் கிரியை நடப்பிக்கிறது. புறத்தில் நமது சக விசுவாசிகளோடும் மற்ற மனிதர்களோடும் கிரியை நடப்பிக்கும். அதிலும் குறிப்பாக நாம் சிட்சையில் இருக்கும்பொழுது, நீடிய பொறுமை நமக்கு பெருமளவில் உதவிபுரியும். நாம் சிட்சையை பொறுமையோடு சகித்துக்கொள்ள வேண்டும். நம்மை சீஷராக்குவதற்கு தேவன் நம்மை சிட்சிக்கிறார் என்று நாம் எண்ணவேண்டும். நாம் தேவனுக்கு கீழ்ப்படிய வேண்டும். நமக்கு கற்றுக்கொடுக்க தேவன் சிட்சைகளைப் பயன்படுத்துகிறார். நாம் சிட்சையை சகித்துக்கொள்ளும் பொழுது, நமக்குள் கிறிஸ்துவைப் போன்ற பண்பு வளருகிறது.

குடும்ப உறவில் பொறுமை மிகவும் அவசியமானது. பொறுமையின் கனியை நமது குடும்ப வாழ்வில் தாராளமாகப் பயன்படுத்த வேண்டும். நமது பொறுமையை சோதித்துப் பார்க்கும் களம் குடும்பம் தான். நமது பிள்ளைகளுக்கு அன்போடு பயிற்சி கொடுக்கவும், அவர்களை அன்போடு திருத்துவதற்கும் நமக்கு நீடிய பொறுமை தேவைப்படுகிறது. கணவனும் மனைவியும் தங்களது இல்லற உறவை அன்போடு நீடித்த நாட்கள் காத்துக்கொள்ள வேண்டுமென்றால், அவர்கள் இருவருமே நீடிய பொறுமையோடு இருக்கவேண்டும்.

பாடுகளை அனுபவித்தல், கோபப்படுவதற்கு தாமதித்தல், சகித்துக் கொள்ளுதல், விடாமுயற்சி, மன்னிக்கும் பண்பு ஆகியவை அனைத்துமே நீடிய பொறுமையின் அம்சங்களாகும். இந்தப் பண்புகளை பரிசுத்த ஆவியானவர் நமக்குள் ஏற்படுத்துகிறார். மற்றவர்களோடு நாம் கொண்டுள்ள உறவுகளில், இந்தப் பண்புகளை நாம் வெளிப்படுத்தி காண்பிக்கவேண்டும். நமக்கு பொறுமை தேவைப்படும் சூழ்நிலைகளில் நாம் பரிசுத்த ஆவியானவரின் உதவியை தேடி அவரை நோக்கிப் பார்க்கவேண்டும்.

1தெசலோனிக்கேயர் 5.14 இல் “எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்” என்று எழுதப்பட்டுள்ளது. இதன் பொருள் என்னவெனில் நாம் நமது குடும்பத்திலுள்ள எல்லா அங்கத்தினர்களோடும் நீடிய சாந்தமாக இருக்க வேண்டும். நமது சபையிலுள்ள அனைவரோடும் நீடிய சாந்தமாக இருக்கவேண்டும். அத்துடன் நமது அன்றாட வாழ்வில், நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபருடனும் நாம் நீடிய சாந்தத்துடன் இருக்கவேண்டும், நமது சொந்த சுபாவத்தினால் எல்லா சூழ்நிலைகளிலும் எல்லாரோடும் நீடிய சாந்தத்தோடு இருப்பது என்பது இயலாத காரியம். பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய தன்மையை நமக்குள் பரிபூரணமாக ஏற்படுத்துகிறார்: நாம் பரிசுத்த ஆவியானவரால் பரிபூரணமடையும்பொழுது, நம்மால் எல்லோரோடும் நீடிய சாந்தத்துடன் இருக்கமுடியும்.

ஊழியமும் பொறுமையும்

சுவிசேஷ ஊழியம் செய்யும் ஊழியர்களுடைய வாழ்விலும் ஊழியத்திலும் ஆவியின் கனியாகிய நீடிய பொறுமை மிகவும் தேவை. ஜெபம் பண்ணுதல், வேதம் வாசித்தல், பயிற்சிபெறுதல், ஆயத்தமடைதல், ஆவிக்குரிய ரீதியாக வளர்ச்சி பெறுதல் என்று ஒவ்வொரு காரியத்திலும் சுவிசேஷ ஊழியருக்கு நீடிய சாந்தம் தேவைப்படுகிறது. தலைமைத்துவப் பொறுப்பில் உள்ளவர்களுக்கும். மற்றவர்களுக்கு ஊழியம் செய்பவர்களுக்கும், நீடிய சாந்தம் அவசியம் தேவை. ஆகையினால் தான் அப்போஸ்தலர் பவுல் பொறுமையோடு ஊழியம் செய்யவேண்டுமென்று தீமோத்தேயுவிற்கு ஆலோசனை கூறியுள்ளார்.

“நான் தேவனுக்கு முன்பாகவும், உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னமாகுதலையும் அவருடைய இராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது: சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணு: எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கந்துகொண்டு. புத்தி சொல்லு. நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று” (2தீமோத்தேயு 4:1-2,5),

அதாவது ஊழியக்காரர் பிரசங்கம் பொழுது, கண்டனம் பண்ணும்பொழுதும், உபதேசம் பண்ணும் பண்ணும்பொழுதும், கடிந்து கொள்ளும் பொழுதும், புத்தி சொல்லும்பொழுதும், நீடிய சாந்தத்தோடு அதைச் செய்யவேண்டும்.

நீடிய சாந்தமானது ஒரு நபரிடத்திலிருந்து மற்றொரு நபருக்கு தொற்றிக்கொண்டு வந்துவிடுவதில்லை. ஜெபத்தினாலோ, எண்ணையை வைத்து அபிஷேகம் பண்ணுவதினாலோ, கரங்களை தலையின் மீது வைப்பதினாலோ, அல்லது இதை போன்ற வேறு செயல்களினாலோ ஒரு நபரிடத்திலிருந்து மற்றொரு நபருக்கு பொறுமை தொற்றிக் கொண்டு செல்வதில்லை. நமக்குள் கிறிஸ்துவின் சாயலை ஏற்படுத்துவதற்கு நாம் பரிசுத்த ஆவியானவரை அனுமதிக்கும் பொழுது, ஆவியானவர் நமக்குள் நீடிய சாந்தம் என்னும் பண்பை கொடுக்கிறார். நமக்கு ஏற்படும் ஒவ்வொரு தாமதமும், பரிசுத்த ஆவியானவர் நமக்குள் பொறுமையின் கனியை உற்பத்தி பண்ணுவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்.

பொறுமைக்கு எடுத்துக்காட்டு

கிறிஸ்துவைப் போன்ற மனப்பாங்கு நம்மிடம் இருக்கவேண்டும். இந்த மனப்பாங்கு நம்மிடம் குறைவுபடுமென்றால், அல்லது முழுவதுமாக காணப்படவில்லையென்றால் என்ன நடைபெறும்? மிகவும் விபரீதமான விளைவுகள் ஏற்படும். பொறுமை இல்லையென்றால் என்ன நடைபெறும் என்பதற்கு வேதாகமத்திலிருந்து ஒரு காண்போமாக! சில சான்றுகளைக்

ஆபிரகாம்: 

ஆபிரகாமின் வித்து ஒரு பெரிய தேசமாகும் என்று தேவன் அவரோடு வாக்குத்தத்தம் பண்ணினார் (ஆதியாகமம் 15:5). ஆனால் ஆபிரகாமிடமோ பொறுமை இல்லை. தேவனுடைய வாக்குத்தத்தம் நிறைவேற ஆபிரகாம் காத்திருக்கவில்லை. தன்னுடைய சூழ்நிலைகளை தானே சமாளித்துக்கொள்ள வேண்டுமென்று முடிவு பண்ணினார். இதன் விளைவாக இஸ்மவேல் ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் ஈசாக்குக்கும் பல பிரச்சனைகளைக் கொடுத்தான். இன்றும் கூட இந்த உலகத்தில் இஸ்மாவேலின் சந்ததியாருக்கும் ஈசாக்கின் சந்ததியாருக்கும் பல பிரச்சனைகளும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

யாக்கோபு: 

யாக்கோபு ஒரு தலைவர் ஆவார் என்று கர்த்தர் அவருக்கு வாக்குத்தத்தம் பண்ணினார். ஆனால் இந்த வாக்குத்தத்தம் நிறைவேறும் வரையில் இந்த வாலிபன் பொறுமையோடு காத்திருக்கவில்லை (ஆதியாகமம் 25:23). தனது தந்தையின் ஆசீர்வாதத்தை பெறுவதற்காக தன் தந்தையை ஏமாற்றினான். இந்த வரலாறு ஆதியாகமம் 27ஆவது அதிகாரத்தில் விவரமாக எழுதப்பட்டுள்ளது. தம்மை கர்த்தர் தலைவராக்கும் வரையிலும் யாக்கோபு பொறுமையாகக் காத்திருக்கவில்லை. இவனுடைய பொறுமையின்மையால் இவன் வேற்று நாட்டிற்கு தப்பியோடி பல பாடுகளை அனுபவித்தான். இவன் அனுபவித்த பாடுகள் அனைத்தும் பார்வோன் ராஜாவுக்கு முன்பாக தனது இருதயத்தை திறந்து கூறிய ஒரே வாக்கியத்தில் அடங்கியுள்ளது. “என் கொஞ்சமும் சஞ்சலமுள்ளதுமாயிருக்கிறது” (ஆதியாகமம் 47:9)

சவுல்: 

இஸ்ரவேலின் முதலாவது ராஜாவாக சவுல் அபிஷேகிக்கப்பட்டான். அப்பொழுது அவன் தாழ்மையான மனதையுடையவன். பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப் பட்டிருந்தான். ஆனால் சவுலுக்கோ பொறுமை இல்லை. சாமுவேல் திரும்பி வந்து என்ன செய்ய வேண்டுமென்று அவர் கூறும் வரையிலும் சவுல் ஏழு நாட்கள் காத்திருக்கவேண்டும். இது கர்த்தர் சவுலுக்குக் கொடுத்திருந்த கட்டளை. ஆனால் காத்திராமல் கர்த்தருடைய கட்டளைக்கு கீழ்ப்படியாமல் போய்விட்டான். அவனது பொறுமையின்மையால் ஆசாரியர்களுடைய வேலையை அவனே செய்தான். தூப பலிகளை அவனே செலுத்தினான். இதன் விளைவாக சவுல் தனது ராஜ்யத்தையே இழந்துவிட்டான் (வாசிக்கவும் 1 சாமுவேல் 10:8-10; 12:3-14).

யோனா 

யோனா பொறுமை இல்லாதவன். நினிவே பட்டணத்தின்மீது கர்த்தர் நீடிய பொறுமையோடும் மன உருக்கத்தோடும் இருந்தார். இதனால் யோனா கர்த்தர்மீது கோபம் கொண்டான். “கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணி: ஆ கர்த்தாவே, நான் என் தேசத்தில் இருக்கும்போதே நான் இதைச் சொல்லவில்லையா? இதினிமித்தமே நான் முன்னமே தர்ஷிசுக்கு ஓடிப்போனேன்; நீர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமான தேவனென்று அறிவேன்” (யோனா 4:2) என்று யோனா கர்த்தரோடு கோபமாக கூறினான். நினிவே பட்டணத்தின் மீது கர்த்தருக்கு இருந்த நீடிய பொறுமையும் மன உருக்கமும் யோனாவுக்கு இல்லை.

தாவீதூ கர்த்தருடைய சமூகத்தில் காத்திருப்பது எவ்வளவு முக்கியமானது என்பதை சங்கீதக்காரர் புரிந்து வைத்திருந்தார். சங்கீதம் 37:7இல் தாவீது இவ்வாறு எழுதியுள்ளார். “கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; காரியசித்தியுள்ளவன் மேலும் தீவினைகளைச் செய்கிற மனுஷன் மேலும் எரிச்சலாகாதே” இதன் பின்பு சங்கீதம் 40.1இல் தாவீது இவ்வாறு சாட்சியாக கூறியுள்ளார். “கர்த்தருக்காகப் பொறுமையுடனும் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்”.

பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் இவர்களைக் குறித்து யாக்கோபு 5.10இல் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. “என் சகோதரரே, கர்த்தருடைய நாமத்தினாலே பேசின தீர்க்கதரிசிகளைத் துன்பப்படுதலுக்கும் நீடிய பொறுமைக்கும் திருஷ்டாந்தமாக வைத்துக் கொள்ளுங்கள்” எலியா, எலிசா, அழுகையின் தீர்க்கதரிசி ஆகிய எரேமியா மேலும் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் பலரையும் சிந்தித்துப் பாருங்கள். முரட்டாட்டமான ஜனங்களுக்கு மத்தியில் தேவனுடைய வார்த்தையை, தேவனுடைய சார்பாக இவர்கள் பொறுமையோடு பேசினார்கள். தேவனுடைய பரிசுத்தவான்களிடம் ஆவியானவர் கொடுத்திருந்த பொறுமை இருந்தது.

யோபு: 

பொறுமைசாலிக்கு யோபு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு ஆவார். யாக்கோபு 5.11இல் யோபுவின் பொறுமை சிறப்பாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. எல்லா விதத்திலும் யோபு பல பாடுகளை அனுபவித்தார். சரீரப் பிரகாரமாகவும், அவருடைய உணர்வுகளிலும் அவருக்கு பல பாடுகள் இருந்தன. அவர் தனது சொத்துக்களையும் குடும்பத்தையும் இழந்து விட்டார். ஆயினும் அவர் நீடிய பொறுமையோடும் இருந்தார். தனக்கு ஏற்பட்ட எல்லா பாடுகளிலும் அவர் பொறுமையோடு இருந்தார். தனக்கு ஏற்பட்ட எல்லா பாடுகளிலும் அவர் பொறுமையோடு இருந்து கர்த்தரைக் குறித்து மிகவும் சாந்தத்தோடு இவ்வாறு கூறியுள்ளார். அவர் என்னைக் கொன்று போட்டாலும் அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன் ஆனாலும் என் வழிகளை அவருக்கு முன்பாக ரூபகாரம் பண்ணுவேன் (யோபு 13:15).

எபிரெயருக்கு நிருபம் எழுதியுள்ள ஆசிரியர் கீழே காணப்படும் வார்த்தைகளை எழுதி நமக்கு ஒரு அறைகூவல் விடுத்துள்ளார். “ஆகையால், மேகம் போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஒட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்; அவர் தமக்கு முன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய (எபிரெயர் 12:1-12). சிங்காசனத்தின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்”

கிறிஸ்துவின் இரண்டாம் வருகை

கிறிஸ்து பரமேறிய பொழுது, தாம் மறுபடியும் வரப்போவதாக நமக்கு ஒரு வாக்குத்தத்தம் பண்ணியுள்ளார். இந்த வாக்குத்தத்தம் நமக்கு கொடுக்கப்பட்டு பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் இந்த வாக்குத்தத்தம் நிறைவேற சபை இன்னும் ஆவலோடு காத்திருக்கிறது. நமது நம்பிக்கை ஜீவனுள்ள நம்பிக்கை. நாம் பொறுமையோடு காத்திருப்பதன் அவசியத்தை யாக்கோபு நமக்கு நினைவுபடுத்தியுள்ளார். “இப்படியிருக்க சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான். நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே” (யாக்கோபு 5:7-8). கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தை காத்துக் கொள்வார். தமது ஜனங்கள் தங்களுடைய பாவங்களிலிருந்து மனந்திருந்தவும் இரட்சிக்கப்படவும் நமக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பதற்காகவும் கர்த்தர் தமது வருகையை தாமதப்படுத்தி வருகிறார் (2பேதுரு 3:9,15),

வெளிப்படுத்தின விசேஷத்தில், கர்த்தர் ஏழு சபைகளுக்கும் கூறியுள்ள வார்த்தைகளின் இறுதியில், “ஜெயம் கொண்டிருக்கிறவர்களுக்கு நான் கொடுப்பேன்” என்று வாக்குத்தத்தம் பண்ணியுள்ளார். ஜெயங்கொள்ளுகிறவர் பொறுமையுள்ளவராக இருப்பார். பொறுமைக்கு நித்திய வெகுமதி கொடுக்கப்படும். இந்த வெகுமதி விலை மதிப்பற்றது. மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப் படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்” (2கொரிந்தியர் 4:17-18).

நீடியபொறுமையோடு காத்திருப்போம்

பொறுமை கடலினும் பெரிது. பொறுத்தார் பூமியாள்வார். பதறாத காரியம் சிதறாது. இவை தமிழ் முதுமொழிகள்.

நீடிய பொறுமை மிகவும் முக்கியமானது. குணமாதல், மீட்பு, பயிற்சி, வழிநடத்துதல் ஆகியவை அனைத்திற்கும் நீடிய பொறுமை மிகவும் அவசியம் ஆயினும் இந்தக் காரியங்களில் நீடிய பொறுமையோடு இருப்பது எளிதான விஷயம் அல்ல. எல்லா காரியங்களும் இப்பொழுதே உடனடியாக நடந்துவிட வேண்டுமென்று நாம் விரும்புகிறோம். கால தாமதத்தை நாம் விரும்புவது இல்லை.

நாம் ஒருவருடைய வருகைக்காக காத்திருக்கும் பொழுது, நமக்கு பொழுதே போகாது. அதுபோலவே நாம் விரும்பும் ஒரு காரியம் நடைபெற காத்திருக்கும் பொழுது நமக்கு நேரமே போகாது. எல்லா காரியங்களிலும் நாம் நீடிய பொறுமையோடு இருக்க வேண்டும்.

ஒரு நபர் படித்து மருத்துவத் துறையில் தேர்ச்சி பெற்று டாக்டர் ஆகவேண்டுமென்றால், அவர் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் பொறுமையோடு படிக்க வேண்டும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு ஒரே பாடத்தை திரும்பத் திரும்ப பொறுமையோடு கற்றுக் கொடுக்க வேண்டும். அப்பொழுது தான் பிள்ளைகள் படிப்பார்கள்.

நமக்கு மிகவும் முக்கியமான பொருளை விலைகொடுத்து வாங்குகிறோம். இதற்குரிய பணத்தை சம்பாதிப்பதற்கு நாம் நீண்டகாலம் கடினமாக உழைத்து பணத்தை சேமித்து வைக்கவேண்டும். ஆவியினால் நிரப்பப்பட்டுள்ள கிறிஸ்தவர் கிறிஸ்துவின் பண்புகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால், அவர் முதலாவதாக நீடிய பொறுமையின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள வேண்டும். நீடிய பொறுமையை அவர் தனக்குள் வளப்படுத்திக் கொள்ளவேண்டும்.

யோபுவின் நீடிய பொறுமையைக் குறித்து கிறிஸ்தவர்கள் பரவலாக பேசிக் கொள்வது இயல்பு. யோபு நீண்ட காலம் பாடுகளை அனுபவித்தார். தனது சரீரம் குணமாவதற்கும், தனது குடும்பத்தையும் சொத்துக்களையும் மறுபடியும் பெற்றுக்கொள்வதற்கும், அவர் கர்த்தருடைய சமூகத்திற்கு முன்பாக பொறுமையோடு காத்திருந்தார்.

கர்த்தருடைய ஊழியத்தில் வல்லமையாக பயன்படுத்தப்படுவதற்கு முன்பாக, மோசே பொறுமையின் கலாசாலையில் 40 ஆண்டுகள் பயிற்சி பெற்றுக்கொண்டார்.

“நீங்களும் நீடியபொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே” (யாக்கோபு 5:8) கிறிஸ்துவைப் போன்ற பண்புகளை நாம் பெற்றுக்கொண்டு, நமது ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர்ச்சிபெற வேண்டுமென்றால், நமக்குள் நீடிய (காண்க 2பேதுரு 1:5-8).

இந்த நூலில் நீடிய பொறுமையின் முக்கியத்துவம் வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது. பரிசுத்த ஆவியானவர் நமக்குள் நீடிய பொறுமை என்னும் இந்தக் கனியை உற்பத்தி பண்ணும்பொழுது, நாம் அவரோடு ஒத்துழைக்க வேண்டும். நீடிய பொறுமை விடாமுயற்சியின் கனி ஆகும். நாம் நமது விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருக்க வேண்டும். நம்மால் எதுவுமே செய்ய முடியாத சூழ்நிலைகளில், நமது விசுவாசத்தை உறுதியாகப் பற்றிக் கொண்டு, கர்த்தருடைய சமூகத்தில் காத்திருப்போமாக.

One thought on “நீடிய பொறுமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *