ஆதியாகமம் சுருக்கம்

ஆதியாகமம் – உள்ளடக்கத்தின் சுருக்கம்

அதிகாரங்கள் 1-11 முக்கிய நிகழ்ச்சிகள் 4

அ. படைப்பு (அதிகாரங்கள் 1-2)

 • ஆறு நாட்களில் கடவுள் வானத்தையும், பூமியையும், பெருங்கடலையும் அவற்றிலுள்ள யாவற்றையும் உண்டாக்கினார். 
 • கடவுள் தமது சாயலாக மனிதனையும் படைத்தார். 
 • கடவுள் மனிதனைப் படைத்த பின்….
 • ஏதேன் தோட்டத்தில் வைத்தார்
 • பூமியின் மீது ஆளுகை செய்ய உரிமையளித்தார் 
 • அவன் செய்வதற்கென நல்ல வேலையைத் தந்தார்
 • தான் சுதந்தரமாக வாழ உரிமையளித்தார். 
 • அவனுடைய கீழ்ப்படிதல் அவனது விருப்பப்படியானதெனக் காட்ட ஒரேயொரு கட்டுப்பாடு மாத்திரம் வைத்திருந்தார்.
 • ஏவாள் மூலம் மனிதனுக்கு ஏற்ற துணையைக் கொடுத்தார். 
 • ஆணையும், பெண்ணையும் திருமணத்தின் மூலம் ஒன்றாக்கினார்.
 • வலியச்சென்று அவர்களோடு ஐக்கியப்பட்டார்
 • அதிகாரம் 1-ல் படைப்பின் பொதுவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. 
 • ஆனால் அதிகாரம் 2-ல் ஆறாம் நாளில் மனிதன் படைக்கப்பட்டவிதம் முக்கியப்படுத்தப் பட்டுள்ளது. 
 • படைப்பின் வரலாற்றில் கடவுளின் உடன்படிக்கை பெயர் (யெகோவா, யாவே, ஆதி 2:4) பயன்படுத்தப்பட்டுள்ளது. 
 • படைப்பின் கிரியையை நினைவூட்ட ஓய்வு நாள் தத்துவம் கூறப்பட்டுள்ளது. 
 • ஏனெனில் கடவுள் எல்லாவற்றையும் படைத்த பின்பு நல்லது எனக் கண்டார். 

ஆ. வீழ்ச்சி (அதி. 3)

 • கடவுளின் வார்த்தைக்கு (கட்டளைக்கு) கீழ்ப்படியாதிருக்க, தங்களைக் கடவுளாக்க ஆதாம், ஏவாளை சாத்தான் சோதித்தான். 
 • கடவுளின் சட்டத்தை மீறி அவர்கள் பாவம் செய்தனர். 
 • இதன் விளைவாக அவர்கள் உடனே ஆவிக்குரிய மரணத்தையும் (கடவுளை விட்டுப்பிரிதல்) பின்னர் சரீர மரணத்தையும் (உடலிலிருந்து ஆவியும், ஆத்துமாவும் பிரிதல்) ஏற்றனர். 
 • கடவுள் மனிதன் மீதும் தம்முடைய படைப்பின் மீதும் தண்டனை விதித்தார். 
 • சபிக்கப்பட்ட உலகில் வாழும்படிக்கு ஆதாம் ஏவாளை ஏதேன் தோட்டத்திலிருந்து கடவுள் துரத்தினார். 
 • அதோடு கடவுள் கிருபையாக ஆதாம் ஏவாளின் பாவத்தை மூடி, அவரோடு ஐக்கியம் கொள்ள ஒரு வழியை உண்டாக்கினார்.

இ. வெள்ளம் (அதி. 4-9)

 • காயீன் தன் தம்பி ஆபேலைக் கொன்று போட்டான் (அதிகாரம் 4) 
 • காயீனின் வழி வந்தோர் கடவுளற்றோராகவும். தீமை செய்வோராகவும் இருந்தனர். 
 • மேசியா வருவதற்கென கடவுள் பக்தியுள்ள ஒரு சந்ததியை உருவாக்க, ஆதாம், ஏவாளுக்கு இன்னொரு மகனைக் (சேத் – அதிகாரம் 5) கொடுத்தார்.
 •  5-ஆம் அதிகாரத்தைப் பார்க்கும்போது, சேத். ஆதாமின் சாயலாகப் பிறந்தான் எனவும், மக்கள் யாவரும் கடவுள் வாக்களித்தபடி மடிய ஆரம்பித்தனர் எனவும் கானலாம்.
 • மனித வீழ்ச்சிக்குப் பின்னர், பெரு வெள்ளத்/பிரளயம்)திற்கு முன்பு மனிதர் அதிவேகமாகப் பெருகினர். 
 • கடவுள் இல்லாமல் தங்கள் வாழ்வில் ஒரு அர்த்தத்தையும் நோக்கத்தையும் தேடினர். 
 • இதனால் பாவம் அதிகமாகப் பெருகிற்று, கொடுமைகள் உலகிலே அளவுக்கதிகமாய் பெருகி விட்டபடியால் கடவுள் மனிதனுடைய பாவத்திற்குத் தண்டனையாக பூமியை பெருவெள்ளத் தால் தீர்மானித்தார், 
 • “நீதிமானாகிய” நோவாவும், அவரது மனைவி, மூன்று மகன்கள், மூன்று மருமக்கள் மாத்திரம் கடவுளால் ஒரு பேழையின் மூலம் அழிவினின்று தப்பினர். 
 • அப்பேழை பாவத்தின் சாபம், தண்டளையினின்று (ஆவிக்குரிய, சரீர மரணத்திலிருந்து) இரட்சிக்க கடவுள் கிருபையினாலும், இரக்கத்தினாலும் அருளிய ஈவைக் குறிக்கும் 
 • பெரு வெள்ளத்திற்குப் பின்னர், ஒரு புதிய ஆரம்பத்தை நோவாவின் மூலமாகவும், அவரது பிள்ளைகள் மூலமாகவும் கடவுள் தொடங்கிளார். 
 • பூமியிலுள்ள மக்கள் யாவரும் நோவாவின் மூன்று மகன்கள் மூலமாக வந்தவர்களே. 
 • பூமியை இனிமேல் வெள்ளத்தால் அழிக்கப் போவதில்லை என்பதை உறுதிப் படுத்தும் அடையாளமாக, அல்லது உடன்படிக்கையாகக் கடவுள் வானவில்லை ஏற்படுத்தினார்.

 ஈ மனித இனங்கள் (அதிகாரங்கள் 10-11)

பாவம் அழியவில்லை. வெகு விரைவிலேயே, மனிதன் கடவுளுக்கு எதிராகப் போராடவும், பெருமையினால் தன்னை உயர்த்தவும் ஒரு திட்டம் வகுத்தான். பாபிலோனியாவின் பகுதியில் வாழ்ந்த நிம்ரோத் என்கிற பெயருள்ள மனிதன், பாபேல் கோபுரத்தைக் கட்ட சாத்தானால் தூண்டிவிடப்பட்டு வழி நடத்தப்பட்டாள். 

இந்த பெருமைக்காகவும், அகந்தைக்காகவும் கடவுள் மனிதர் யாவருக்கும் தண்டனையளித்தார். ஒரே மொழி பேசி வந்த அவர்களைப் பல மொழிகள் பேச வைத்து குழப்பமுண்டாக்கி, பூமியின் மீதெங்கும் அவர்களைச் சிதறப் பண்ணினார்.. இதுவே இவ்வுலகில் பல்வேறு இனத்தவர் (இளம்/நாடு) தோன்ற வழியுண்டாக்கிற்று).

அதிகாரங்கள் 12-50. முக்கிய மக்கள் 4

அ. ஆபிரகாம் (அதிகாரங்கள் 12-24)

கடவுள் ஆபிரகாம் என்கிற ஒரு மனிதனை அழைத்தார். அவர் விசுவாசத்தினாலே கடவுளுக்கு பதிலளித்தார். கடவுள் ஆபிரகாமோடு ஒரு உடன்படிக்கைச் செய்தார். அதிலே அவர் வாக்களித்ததாவது:

 • அவரை மேன்மைப்படுத்தி, ஆசீர்வதித்தல் (ஆபிரகாமுக்குக் கொடுத்த தனிப்பட்ட ஆசீர்வாதம்)
 • அவரிலிருந்து ஒரு பெரிய இனத்தவரை உருவாக்கி, அவர்களுக்கென நிரந்தரமான ஒரு நாட்டைக் கொடுப்பது (இஸ்ரவேல் இனத்தவருக்குரிய ஆசீர்வாதம்)
 • அவரது சந்ததியார் மூலம் யாவருக்கும் ஆசீர்வாதம் அருளுதல் – (உலகிலுள்ள யாவருக்கும் ஆவிக்குரிய ஆசீர்வாதம்/இரட்சிப்பு)

விருத்தசேதன உடன்படிக்கை என்பது, ஆபிரகாமின் உடன்படிக்கையை உறுதிப்படுத்துவதற்கென ஏற்படுத்தப்பட்டது.

ஆபிரகாம் விசுவாசத்தினாலே கடவுளுக்கு முன்பாக நடந்தார். கடவுள் அவரைப் பெரிய மனிதனாக்கினார். ஆபிரகாம் கடவுளை நம்பினபோது இரட்சிப்படைந்தார். இது அவரது கணக்கில் நீதியாகக் கருதப்பட்டது (ஆதியாகமம் 15:6; இதை ரோமர் 4:3: கலாத்தியா 3,6-ம் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணலாம்). 

இவ்விதமாகக் கடவுளின் மீது விசுவாசம் வைப்பது. தனி நபர் இரட்சிப்படையபட்டு, அடிமைப் பெண்ணாகிய ஆகார் மூலம் ஒரு பிள்ளையைப் பெற்றனர். இந்தப் பிள்ளையின் பெயர் இஸ்மவேல் என்பது. அராபியரின் தகப்பன் இவை பின்னர் விசுவாசத்தினாலே செயல்பட்டு, ஆபிரகாமும், சாராளும் வாக்குத்தத்தின் பிள்ளையாகிய. ஈசாக்கைப் பெற்றனர். இவர் மூலமாக கடவுள் ஆபிரகாமின் வித்தாகிய இயேசுகிறிஸ்து வையும், அவரால் இரட்சிப்பையும் கொண்டு வர ஏதுவாயிற்று (கலாத்தியர் 3:10-18}

ஆபிரகாமை அழைத்ததின் மூலம் ஒரு தனி மனிதனையும், ஒரு இனத்தவரையும் (எபிரெயர் – யூதர்) தெரிந்து கொண்டு அவரால் மனுக்குலத்திற்கு இரட்சிப்பின் நோக்கம் நிறைவேற்ற வழியுண்டாயிற்று.

ஈசாக்கு (அதிகாரங்கள் 25-26)

ஈசாக்கு உடன்படிக்கையின் வாக்குத்தத்தத்தின்படி பிறந்த மகன் என்று கடவுள் உறுதிப்படுத்தினார். இவரது தகப்பனாகிய ஆபிரகாமுடன் செய்த உடன்படிக்கையின்படியே ரெபேக்காள் என்ற மனைவியை ஈசாக்கிற்குக் கொடுத்தார் (ஆதியாகமம் 26:1-6)

இ. யாக்கோபு (அதிகாரங்கள் 27-36) 

ஆபிரகாமுடன் செய்த உடன்படிக்கையின் வாக்குத்தத்தத்தின்படி தொடர்வதற்கென ஈசாக்கின் இரண்டு மகன்களில் கடவுள் ஏசாவைத் தள்ளி, யாக்கோபைத் தெரிந்து கொண்டார். (ஆதியாகமம் 28:10-15; ரோமர் 9:1-16) யாக்கோபு கடவுள் முன்பாக விசுவாசத்திலே நடந்தார். 

கடவுன் யாக்கோபின் பெயரை இஸ்ரவேல் என்று மாற்றினார். “கடவுளோடு போராடி மேற்கொண்டவர்” எனவும் “போராட்டத்தில் கடவுள் கூட இருக்கிறார்” என்றும் அர்த்தம் கூறலாம். யாக்கோபு 12 பிள்ளைகட்குத் தகப்பனானார். அவர்கள் வழி வந்தோரே இஸ்ரவேலரின் 12 கோத்திரத்தார்.

ஈ. யோசேப்பு) (அதிகாரங்கள் 37-50) 

யாக்கோபின் 11-ஆம் மகனாகிய யோசேப்பு. கடவுளால் களவுகளுக்குப் பொருள் கூறு திரம் பெற்றிருந்தார். பொறாமையினாலே அவரது உடன்பிறந்தோர், அவரை எகிப்திற்குப் போக அடிமையாக விற்றுப் போட்டனர். ஆனால் கடவுள் எகிப்திலே யோசேப்பை ஆசீர்வதித்தார். யோசேப்பு தன்னுடைய அரசாங்க அதிகாரத்தை பயன்படுத்தி யாக்கோபின் குடும்பத்தாரை (எபிரெய இனத்தை) பூமியெங்கும் நேரிட்ட பஞ்சத்தின் மரணத்தினின்று பாதுகாத்தார். 

யாக்கோபும் அவரது முழுக் குடும்பத்தாரும் (70 பேர்) யோசேப்புடன் இருப்பதற்கௌ எகிப்துக்கு குடியேறினர். இவ்விதமாக எபிரெயர் எகிப்திலே குடியேறி. 400 ஆண்டுகள் வாழ்ந்து கடைசியில் எகிப்தியருக்கு அடிமைகளாக மாறினர்.

மையப்பொருளும் நோத்தமும்

ஆதியாகமத்தில் படைப்பின்போது கடவுளின் செயல்கள், ஆபிரகாமுக்கு வந்த அழைப்பு, கடவுளின் கருவியாக இஸ்ரவேல் இனத்தவரைத் தெரிந்தெடுத்து, அவர்கள் மூலம் இவ்வுலக மக்களுக்குக் கடவுள் நிறைவேற்றப் போகும் இரட்சிப்பின் திட்டத்தை வெளிப்படுத்தல் போன்றவற்றை மோசே எழுதி வைத்துள்ளார்.

கடைப்பிடிக்க வேண்டிய செய்திகள்

இவ்வுலகில், நம்மைக் கொண்டு, சர்வ வல்ல, சிருஷ்டி கர்த்தாவான கடவுள் தமது நோக்கத்தை நிறைவேற்றுவதில் ஈடுபட்டுள்ளார் என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.

முக்கிய அதிகாரங்கள்

1. எல்லாவற்றையும் படைத்தல்

2. மனிதனின் படைப்பிள் விவரம் 

3. சாத்தான், பாவம், மனிதனின் வீழ்ச்சி. கடவுளின் தீர்ப்பு

6. பூமியெங்கும் வெள்ளம் 

9. புதிய ஆரம்பம், மரண தண்டளை

10-11. பாபேல் கோபுரம், மொழிகள் குழப்பம். இனங்கள் சிதறடிக்கப்படல் 

12. ஆபிரகாமுக்கு வந்த அழைப்பு, ஆபிரகாமின் உடன்படிக்கை விவரம்

15. ஆபிரகாமின் உடன்படிக்கை ஏற்பாடு 

17 ஆபிரகாமின் உடன்படிக்கை உறுதிப்படுத்தல்

32. யாக்கோபின் பெயர் இஸ்ரவேலாக மாறுதல் 

46. யாக்கோபும், குடுப்பதாரும் எகிப்தில் யோசேப்புடன் இணைதல்

முக்கிய பகுதிகள்

 • 1:1-31
 • 2:1-25
 • 3:1-24
 • 4:25-26
 • 5:1-5
 • 5:21-32
 • 6:1-22
 • 7:1-24
 • 8:13-22
 • 9:1-6
 • 9:7-19
 • 12:1-3
 • 15:1-5
 • 15:6
 • 15:7-21
 • 16:1-16 
 • 17:1-27
 • 21:1-13
 • 22:1-18
 • 26:1-6
 • 27:1-26
 • 28:10-22
 • 32:22-32
 • 41:41-57
 • 45:1-28
 • 49:8-10
 • 50:19-24 

முக்கிய போதனைகள்

 • கடவுள் சர்வவல்ல சிருஷ்டிகர். உலகைக் காக்கிறவர்
 • அவரோடு சரியாக உறவாடி, ஐக்கியம் கொள்ள, கடவுள் மனிதனைத் தமது ஆவிக்குரிய சாயலின்படியே படைத்தார்.
 • பாவம் சாவுக்கேதுவானது. 
 • பாவம் கேவலமான விளைவுகளைத் தரும் 
 • பாவம் எப்போதும் கடவுளின் தண்டனைக்குரியது. 
 • கடவுள் பாவத்திலிருந்து விடுபட ஒரு
 • வழியையும் உண்டாக்கியுள்ளார்.
 • கடவுள் மீட்பிற்கென ஒரு திட்டம் வைத்துள்ளார். 
 • அவர் அதை செயல்படுத்துவதில் ஈடுபட்டுள்ளார்.
 • இஸ்ரவேலருக்குக் கடவுள் அளித்த வாக்குறுதிகள் மாறாதவை: நிபந்தனையற்றவை,
 • மனிதன் உண்மையற்றவனாக இருப்பினும், கடவுள் எப்போதும் தமது வாக்குத்தத்தந்தில் உண்மையுள்ளவராயிருக்கிறார்.
 • கடவுளின் பண்புகள் மாறுவதேயில்லை.
 • அவரைப் பின்பற்றுவதோ, பின்பற்றாதிருப்பதோ அவரவர் விருப்பம் என்று தெரிந்து கொள்ளும் உரிமையைக் கடவுள் மனிதனுக்குக் கொடுத்துள்ளார். 
 • தம் பிள்ளைகள் மாம்சத்தின்படி நடவாமல் விசுவாசத்தின்படி நடக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார்.
 • கடவுள் தம்முடைய வாக்குறுதியை அவரது வழியில், அவர் வேளையில் நிறைவேற்றும் வரையில் அவரது பிள்ளைகள், அவரில் பொறுமையோடு காத்திருக்க வேண்டுமென கடவுள் விரும்புகிறார்.
 • சூழ்நிலைகளைக் கெடுத்து, அல்லது கடவுளின் சித்தம் நம்முடைய சொந்த பலத்தினால் செய்யப்பட முயல்வது என்பது நாம் விசுவாசத்தினால் நடக்கவில்லை என்பதைக் காட்டும் நிச்சயமான அடையாளமாகும்.
 • ஆவிக்குரிய ஆசீர்வாதமாகிய இரட்சிப்பு என்பது, ஆபிரகாமின் உடன்படிக்கையில் மூன்றாவதாக வருகின்றது.
 • தாம் உருவாக்கின யாவும் தன்னை ஆராதிக்க வேண்டுமென கடவுள் எதிர்பார்க்கிறார்.
 • நடைமுறையில் விதைப்பதும் அறுப்பதும் உலகக் கோட்பாடு என்றாலும் விளைவுகள் கொடூரமானவை.
 •  கடவுளின் வழிகள் மனித வழிகள் அல்ல.
 •  மூத்தவனுக்குப் பதிலாக இளையவனையும், பலமுள்ளவனுக்குப் பதிலாக பலவீனமானவனையும் கடவுள் அடிக்கடி தெரிந்து கொள்கிறார்.
 • கடவுள் இரக்கம், கிருபையின்படியே தெரிந்து கொள்கிறாரேயன்றி மனிதனுடைய தகுதியின் படியல்ல.
 • ஒரு மனிதன் கடவுளை எவ்வளவு நன்றாக அறிந்துள்ளான் என்பதைக் காட்டும் செயலே விசுவாசம் என்பது.
 • கடவுள் நம்முடைய கெட்ட சூழ்நிலைகளையும், அவரது நோக்கம் நிறைவேறவும், நம்முடைய நன்மைக்காகவும் திட்டமிட்டுப் பயன்படுத்துகிறார்.
 •  தம்மைக் கனம் பண்ணுகிறவர்களைக் கடவுள் கனம் பண்ணுகிறார்.
 • கடவுள் இருக்கிறார்!

சிறப்புக் கூறுகள்

 1. ஆதியாகமம் கீழ்க்கண்டவற்றைச் சிறப்பாக அறிந்து கொள்ள உதவுகிறது.
 2. ஆதியிலே இருந்த கடவுள். 
 3. கடவுள் வல்லாமையான படைப்பாற்றலுள்ளவர்.
 4. கடவுள் தனிநபருக்கும் ஆண்டவர்.
 5. மனிதன். உலகம் படைக்கப்பட்ட விதம். 
 6. மனிதன் கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்டவன்.
 7. திருமணம்.
 8. மனிதனுடைய “ஓய்வு நாள்”. 
 9. உலகில் பாவம் நுழைந்த விதம்.
 10. சாத்தானின் வஞ்சகமும், சோதனையும்.
 11.  பாவத்தின் தன்மையும், விளைவுகளும். 
 12. உலகம் முழுவதும் வந்த வெள்ளம்.
 13. வானவில் உடன்படிக்கை.
 14. சாத்தானின் வீழ்ச்சி – முன்னோட்டம்.
 15. பாபேல் கோபுரம்.
 16. பல்வேறு இனம், மொழிகளின் மாற்றம்.
 17. ஆபிரகாமின் உடன்படிக்கை..
 18. விசுவாசத்தினாலே இரட்சிப்பு.
 19. தம் நோக்கத்தை நிறைவேற்ற கடவுள் சூழ்நிலைகளைப் பயன்படுத்த வல்லவர்
 20. நீங்கள் நினைத்த தீங்கை கடவுள் நன்மையாக மாற்றினார்.
 21. கடவுள் இருக்கிறார்.
 22. கடவுளின் வாக்குறுதிகள்.
 23. விருத்தசேதன உடன்படிக்கை.
 24. யூதர் இனத்தந்தையாக ஆபிரகாம். 
 25.  வாக்குத்தத்தத்தின் மைந்தன் ஈசாக்கு.
 26. இஸ்ரவேலர் எகிப்தில் எவ்வாறு அடிமைகளாயினர்.

தெரிந்தெடுக்கப்பட்ட தொடர்புள்ள வேதபகுதிகள் – ஆதியாகமத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள பயன்படும் வசனங்களாக கீழ்க்கண்ட சில வேத பகுதிகள் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளன:

 • யாத்திராகமம் 20:11
 • சங்கீதம் 8
 • அப்போஸ்தலர் 17:22-28
 • ரோமர் 4:1-25
 • ரோமர் 8:18-25
 • எபிரெயர் 1:1-3
 •  2 பேதுரு 3:1-17
 • யோபு 38-42:6
 • ஏசாயா 40:12-31
 • ரோமர் 1:18-23
 • ரோமர் 5:12-21
 • கலாத்தியர் 3:6-25
 • எபிரெயர் 11:1-22

Leave a Reply