யாத்திராகமம் கண்ணோட்டம்

யாத்திராகமம் – கடவுளின் மீட்பும், வெளிப்படுத்தலும்

  • முன்னுரை – செய்திச் சுருக்கம்
  • அமைப்பும் முக்கிய பிரிவுகளும்
  • 40 அதிகாரங்கள்

3 முக்கிய பிரிவுகள்

அதிகாரங்கள் 1 – 11 அடிமைத்தளம்

  • எகிப்தில் எபிரெயர் 
  • இனப்பொருக்கம்
  • மோசே அழைக்கப்பட்டது 
  • 10 வாதைகள்
  • கடவுளின் வல்லமை

அதிகாரங்கள் 12 – 18 மீட்பு

  • சங்கார தூதன்
  • பஸ்கா
  • வெளியேறுதல்
  • செங்கடல் கடத்தல்
  • மேகம், 
  • அக்கினித் தூண் 
  • மன்னா

அதிகாரங்கள் 19 – 40 வெளிப்படுத்தல்

  • இஸ்ரவேலரின் உடன்படிக்கை மோசேயின் திருச்சட்டம்
  • ஓய்வுநாள்
  • 10 கட்டளைகள்
  • சமுதாய கூட்டம் 
  • ஆசரிப்புக் கூடாரம்
  • பொற்கன்றுக்குட்டி 
  • கடவுளின் மகிமை

முக்கிய மக்கள்

  • மோசே
  • ஆரோன்
  • பார்வோன்

முக்கிய வார்த்தைகள்

  • மீட்பு
  • வெளிப்படுத்தல்
  • நியாயப்பிரமாணம்

முக்கிய கருத்து

  • மீட்பராகிய கர்த்தர்
  • வெளிப்படுத்தல்
  • நியாயப்பிரமாணம்

உள்ளடக்கத்தின் சுருக்கம்

அதிகாரங்கள் 1-11 அடிமைத்தனம்

கடவுள் ஆபிரகாமுக்கு உடன்படிக்கை செய்தபோது, கனவில் தோன்றி, அவரது சந்ததியார் (இஸ்ரவேலர் அந்நிய நாட்டிலே, 400 ஆண்டுகள் அடிமைகளாக இருப்பர் எனவும், கடவுள் அவர்களை அடிமைத்தனத்தினின்று விடுவிப்பார் எனவும் கூறினார் (ஆதியாகமம் 15:12-14 வரை பார்க்க).

யாக்கோபின் குடும்பத்தார் எகிப்திலே, யோசேப்புடன் இருந்தார்கள் என்பதோடு ஆதியாகமம் முடிவடைகிறது. பஞ்சத்தின் பிடியிலிருந்து தப்ப எகிப்துக்குச் சென்றோர் எகிப்திலே அடிமைகளாக மாறினர். எகிப்திலே இருந்த 400 வருடங்களில் எபிரெயர் பெரிய இனமாக மாறினர். அதோடு பார்வோனின் அடிமைகளாகவும் தள்ளப்பட்டனர். 

அவர்கள் அடிமைகளாக மாறினது என்பது பாவத்திற்கு அடிமைகளாக மாறினதையும். எகிப்து என்பது உலகத்தையும், பாவத்தையும் குறிக்கும் அடையாளம். உபத்திரவத்திலே இருந்த எபிரெயர் கர்த்தரை நோக்கிக் கதறி அழுதனர். அவர் ஆபிரகாமுடன் செய்த உடன்படிக்கையை கனப்படுத்த, அம்மக்களை விடுவிக்க. 

விடுதலையாளர் ஒருவரை, மோசேயை எழுப்பினார் (யாத்திராகமம் 2:23-25) நாற்பது வருடம் வனாந்திரத்திலே பயிற்சியளித்த பின்னர், கடவுள் மோசேயை பார்வோனிடம். என் மக்களைப் போகவிடு என்று கேட்க அனுப்பினார். பார்வோன் மறுத்து. 

தன் இருதயத்தைக் கடினப்படுத்தினபோது, கடவுள் எகிப்தியரை வாதிக்கப் படிப்படியாக வேதனையை அதிகரிக்கும் 10 வகையான வாதைகளை அனுப்பி அவர்களது முதற்பேறான பிள்ளைகளையும் சாகடித்தார். எகிப்தியரின் தேவர்கள் மீதும், பார்வோன் மீதும் தனக்குள்ள மேலான் அதிகாரத்தைக் கடவுள் வெளிப்படுத்திக் காட்டுயள்ளார். பத்தாவது வாதையின்போது (மரணம்) பார்வோன், எபிரெயரைப் போக விட்டான்.

அதிகாரங்கள் 12-18 மீட்பு.

யாத்திராகமம் 12-இல் கடவுல் “பஸ்காவை நியமித்ததைக் காணலாம். அப்பொழுது 10-வது வாதையின்போது, அதன் விளைவைத் தவிர்க்க யாரெல்லாம் விசுவாசத்தினாலே, தங்கள் கதவு/நிலை மீது, அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியின் இரத்தத்தையும் பூசினார்களோ அவர்கள் வீடுகளை விட்டுச் சங்கார தூதன் கடந்து போனான். 

கீழ்ப்படிந்த யாவரும் காக்கப் பட்டனர் (எபிரெயர் 11:23-29 பார்க்கவும்). கடவுள் அற்புதமாக எபிரெயரை எகிப்தை விட்டு வெளியே கொண்டு சென்றார். இவ்விதமாக இஸ்ரவேல் இனத்தாரின் யாத்திரையின் ஆகமம் தொடர்ந்தது. சுமார் 20 இலட்சம் மக்கள் பயணப்பட்டனர்.

கடவுள் “செங்கடலைப் பிளந்து இஸ்ரவேலர் பத்திரமாகக் கடந்து செல்ல அனுமதித்தார். ஆனால் அவர்களைத் துரத்தி வந்த எகிப்தியரை மூழ்கடித்தார். மறு கரையிலே. வனாந்திர வழியாக அவர்களை பகலில் மேகத்தினாலும், இரவில் அக்கினித் தூண் கொண்டு நடத்தினார். இஸ்ரவேலரின் வரலாற்றில் சிறப்பாகக் கொண்டாடத்தக்கதாக கடவுள் தம் மக்களை விடுவித்த நிகழ்ச்சியான, இந்த யாத்திராகமம் ஓர் அடையாளமாயிற்று.

வனாந்தரத்தில் கடவுள் மன்னா, காடைகள் போன்றவற்றை உணவாகத் தந்து மக்களின் தேவைகளை நிறைவாக்கினார். அப்படியிருத்தும் மக்கள் இக்கட்டான சூழ்நிலையில் முறுமுறுத்துக் குறை கூற ஆரம்பித்தனர். இன்னும் சிலர் எகிப்துக்குத் திரும்பிப் போக விரும்பினர்.

அதிகாரங்கள் 19-20 வெளிப்படுத்தல்

இரண்டு மாதங்கட்குப் பின்னர் எபிரெயர்கள் சீனாய் மலைக்கு வந்து சேர்ந்தனர். அங்கே கடவுள் அவர்களுக்கு மோசேயின் உடன்படிக்கையைக் கொடுத்தார். அதிலே அந்த இனத்தவருக்கென தம் சட்டங்களையும், விதிகளையும் போதித்தார். மோசே 10 கட்டளைகளைப் பெற மலையின் மீதி ஏறினார். 

அங்கே சுடவுளின் மகிமையைக் கண்டனுபவித்தார். நியாயப்பிரமாணம் கடவுளின் பரிசுத்தத்தை வெளிப்படுத்துகிறது. மனிதனுடைய பாவத்தையும் வெளிப்படுத்தி ஒரு நீதியுள்ள வாழ்வுக்கென வழி நடத்துகிறது. மோசேயின் உடன்படிக்கைக்கு அடையாளமாக ஓய்வுநாள் கொடுக்கப்பட்டது. கடவுள் தம் மக்கள் ஒரு கூடாரத்தைக் கட்ட கட்டளையிட்டார். அங்கே அவரது மகிமை (பிரசன்னம்) தற்காலிகமாக இருக்கும். மக்கள், அவரை ஆராதித்துக் கடவுளின் ஆலோசனைகளைப் பெற்றுச் செல்வர்.

மோசே மலையின் மீது, கடவுளின் ஆலோசனைகளைப் பெற சென்றிருந்தபோது. ஆரோனின் தலைமையில் மக்கள் ஒரு கன்றுக் குட்டியைச் செய்து, சிலை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். இதனால் கடவுள் அவர்களை சுடுமையாகத் தண்டித்தார்.

இறுதியாக ஆசரிப்புக் கூடாரம் கட்டி முழுமையடைந்து கடவுளின் மகிமை அதை நிரப்பிற்று. கடவுளின் வெளிப்பாட்டைப் பெற எபிரெய மக்கள் ஏறத்தாழ ஓராண்டு காலம் சீனாய் மலையில் செலவிட்டனர். ஆபிரகாமுக்குக் கொடுத்த உடன்படிக்கை நிறைவேறும்படி 

அவர்கள் வாக்குத்தத்த நாட்டிற்குள் செல்ல ஆயத்தப்படுத்தப்பட்டனர்.

மையப்பொருள்/நோக்கம்

கடவுள் இஸ்ரவேல் மக்களை அற்புதமாக பாவத்திலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் மீட்டு, தம்மையும், தமது நீதியையும் வெளிப்படுத்தி தம்மை இரட்சகராக/மீட்பராகக் காண்பித்தார் என்று மோசே யாத்திராகமத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

பயன்பாட்டுக்குரிய செய்தி

கடவுளின் மீட்கும் வல்லமையானது நாம் தனிப்பட்ட முறையில் விசுவாசத்தினாலே கடவுளின் ஆட்டுக்குட்டியான கிறிஸ்து சிந்திய இரத்தத்தைக் கொண்டு. நம்மை பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கின்றது.

முக்கிய அதிகாரங்கள்

1. எகிப்தில் எபிரெய இனத்தார் பெருகுதல்

3. மோசேக்குக் கிடைத்த அழைப்பு/எரிகிற முட்புதர்

12. பஸ்கா நிறுவப்படல்

 14. செங்கடவைக் கடந்தது

16 மன்னா கொடுக்கப்பட்டது.

 20. நியாயப்பிரமாணம். 10 கட்டளைகள் கொடுக்கப்பட்டது

 24. மோசேயின் உடன்படிக்கை உறுதிப்படுத்தப்பட்டது

32. பொற்கன்றுக்குட்டி – சிலை வழிபாடு 

40. கடவுளின் மகிமை. ஆசரிப்புக் கூடாரத்தை நிரப்புதல்

முக்கியமான பகுதிகள்

  • 1:1-22
  • 2:23-25
  • 3:1-14
  • 4:10-12
  • 7:16-17
  • 8:16-19
  • 12:7, 13, 22, 23
  • 14:18-22
  • 18:13-27
  • 20:1-20
  • 25:10-22
  • 32:1-10
  • 40:32-38

முக்கிய போதனைகள்

  1. கடவுளை மட்டுமே ஆராதித்து, அவருக்கே ஊழியம் செய்ய வேண்டும். கடவுள் வாக்களித்ததின்படி செய்கிறார்.
  2. ஒரு மனிதனைக் கடவுள் ஊழியத்திற்கு அழைக்கும்போது, அவன் அதைச் செய்ய அவர் உதவுகிறார்.
  3.  கடவுளின் அழைப்பை புறக்கணிக்க, ஏற்றுக்கொள்ளத்தக்க நொண்டிச் சாக்குகள் ஏதுமில்லை.
  4. மக்கள் இருக்கிறவண்ணமாகப் படைக்கப்பட்ட விதத்திற்கு கடவுள்தாமே பொறுப்பேற்றுக் கொள்கிறார்.
  5. மனிதனுடைய “தேவர்களை” விட கடவுளின் வல்லமை மேலானது. 
  6. திறமையுள்ள, கடவுளுக்குப் பயந்த, நம்பிக்கைக்குரிய மக்களிடத்தே அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதும், பொறுப்புப் பங்கீடும் நல்லதென கடவுள் கருதுகிறார்.
  7. விசுவாசத்தினாலே ஏற்றுக் கொள்ளப்பட்ட பலியின் இரத்தத்தினால் மரணத்திலிருந்து இரட்சிப்பும், பாவத்திலிருந்து மீட்பும் கிட்டுகிறது.
  8. கடவுள் தம் மக்களின் ஒவ்வொரு அடிப்படைத் தேவைகளையும் நிறைவாக்குகிறார்.
  9. கடவுளின் சட்டங்கள் தூய்மையுள்ளவை. கீழ்ப்படிய வேண்டியன. மக்கள் தம்மோடும், மக்கள் ஒவ்வொருவரோடும் சரியான உறவுகொள்வதைக் கடவுள் எதிர்பார்க்கிறார்.
  10.  கடவுள் சிலை வணக்கத்தை வெறுக்கிறார். பாவத்திற்குத் தண்டனை தருகிறார்.
  11. கடவுள் தம் மக்களோடு வாசம் செய்து உறவாட விரும்புகிறார்.

தொடர்புள்ள தெரிந்தெடுக்கப்பட்ட வேத பகுதிகள்

  • நெகேமியா 9:9-21
  • சங்கீதம் 136:10-16
  • யோவான் 1:29
  • அப்போஸ்தலர் 7:1-36 
  • 1 கொரிந்தியர்  5:7
  • 1 கொரிந்தியர் 10:1-13
  •  2 கொரிந்தியர் 3:13-18
  • எபிரெயர் 11:23-29

நியாயப்பிரமாணத்தின் நோக்கம்

  1. (யாத்திராகமம் 19 – லேவியராகமம் – எண்ணாகமம் 10)
  2. இரட்சிப்புண்டாவதற்கென நியாயப்பிரமாணம் கொடுக்கப்படலில்லை.
  3. யாத்திராகமம், பஸ்கா வழியாக மீட்கப்பட்ட மக்களுக்காகவே நியாயப்பிரமாணம்
  4. அருளப்பட்டது. நியாயப்பிரமாணம் அருளப்பட்ட நோக்கம்
  5. கடவுளின் பரிசுத்தத்தை வெளிப்படுத்த மனிதனின் பாவம், அநீதியை வெளிப்படுத்த
  6. மீட்கப்(இரட்சிக்கப்)பட்ட ஒரு மனிதன் அன்றாட வாழ்வில் தன் விசுவாசத்தை வெளிப்படுத்த அருளப்பட்ட நீதியின் தரத்தைக் காட்டும் ஒரு வழிகாட்டி
  7. ஒரு மனிதன் கடவுளோடும், பிறரோடும் சரியான முறையில் எவ்வாறு உறவு
  8. கொண்டாட முடியும் எனக்காட்டுகிறது. கிறிஸ்துவிலுள்ள கடவுளின் நீதி மனிதனுக்குத் தேவை எனக்காட்டுவது.

நியாயப்பிரமாணம்

  • வெளிப்படுத்தும்
  • சீராக்கும்
  • மத்தேயு 5:17-20
  • ரோமர் 3:27-31
  • ரோமர் 4:13-17
  • ரோமர் 7:1-25
  • கலாத்தியர் 3:1-29

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *