லேவியராகமம் – பரிசுத்த கடவுளின் பரிசுத்த விதிகள்
அமைப்பும்:-
27 அதிகாரங்கள்
2 பெரும் பகுதிகள்
முக்கிய பிரிவுகள்:-
பலிகள் – அதிகாரங்கள் 1-10 – கடவுளை ஆராதித்தல்.
5 பலியின் காணிக்கைகள், காணிக்கைக்குரிய விதிகள், விலங்குகள் பலியிடல், ஆரோனின் ஆசாரித்துவம்
பரிசுத்தமாகுதல் – அதிகாரங்கள் 11-27 – கடவுளோடு நடத்தல்
சுத்தம்/அசுத்தம் பற்றிய விதிகள், பாவநிவாரண நாள், இரத்த பலிகள், தூய வாழ்க்கை, இஸ்ரவேலின் 7 பண்டிகைகள்
முக்கிய வார்த்தைகள்
- பிரிக்கப்படுதல்
- பரிசுத்தமாகுதல்
- பாதுகாக்கப்படுதல்
“ஆராதனைக்கும் ஐக்கியத்திற்கும் வழிகாட்டும் கடவுளின் கையேடு லேவியராகமம்”.
உள்ளடக்கத்தின் சுருக்கம்
அதிகாரங்கள் 1-10 – பலிகள்/கடவுளை ஆராதித்தல்
வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நாட்டிற்கு செல்லும் முன்பு, கடவுள் இஸ்ரவேலருக்குத் தெளிவாக, ஆசரிப்புக் கூடாரத்தில் (பின்னர் ஆலயம்) மிருக பலிகளை மையமாக வைத்து முறைப்படி எவ்வாறு ஆராதிக்கப்பட விரும்புகிறார் என்று கூறியுள்ளார். கடவுள் பரிசுத்தராக இருப்பதினாலே, தம்மை வணங்கும் மக்களும் பரிசுத்தமாக இருக்க விரும்புகிறார். ”பரிசுத்தம்” என்பது தூய்மை. பாவத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட முற்றிலும் மாறுபட்ட வாழ்வு போன்றவற்றைக் குறிக்கும் (லேவியராகமம் 15:31; லேவியராகமம் 18:1-5),
அதிகாரங்கள் 1-5-இல் கடவுள் ஐந்து வேறுபட்ட பலிகளைக் கொடுத்துள்ளார். அதிலே முதல் மூன்றும் விரும்பிச் செலுத்துவது. கடவுளுக்கு நேராக ஏறெடுக்கப்படுவது, தனிப்பட்ட ஒப்படைத்தலுக்கும், முழுதுமான ஒப்புவித்தலுக்குமேற்ப அமைக்கப்பட்டது. இந்த முதல் மூன்றும், தகனபலி, போஜனபலி, சமாதான பலிகளாகும். சமாதானபலி என்பது நன்றி கூறும் பொருட்டு, பொருத்தனைக்காக அல்லது விரும்பிச் செலுத்தப்படுதல் போன்ற ஏதேனும் ஒருவகைப்படும். இவை யாவும் ஆராதனையை மையமாகக் கொண்டு, கடவுள் யாரென்பதை அங்கிகரிப்பதற்காக செலுத்தப்பட்டன. இந்த பலிகள் யாவும் இரட்சிப்படைவதற்காக அல்ல. பரிசுத்தமுள்ள கடவுளுடன் உள்ள ஐக்கியத்தைக் காத்துக்கொள்வதற்கானவை. குறிப்பாக ஒரேயொரு பலி மாத்திரம், ஒரு பங்கு பெற்று பலியிடுவோர் சாப்பிட அனுமதிக்கப்பட்டது. சமாதான பலிமட்டுமே எனலாம்.
கடைசி இரண்டு பலிகளும் பாவம். குற்றம், மன்னிப்பைக் காட்டுவன. இவை கட்டாயமானவை. இவை குற்ற நிவாரண பலியாகக் கூறப்படுகிறது. இவை அறியாமையினால் செய்த பாவத்தின் மன்னிப்பிற்காகச் செலுத்தப்படுவது. இவை இரண்டும் இரத்தப் பலிகள், பாவ நிவாரண பலியுடன் கூட, தன் தவறினால் உண்டான நஷ்டத்தையும் தர வேண்டும்.
ஆராதிப்போர், கடவுளின் பரிசுத்தத்தையும், பாவம் பரிகரிக்கப்பட்டு விட்டது. நம்முடைய மன்னிப்பிற்காக, நம்முடைய இடத்தில் இரத்தம் சிந்தப்படுதல் அவசியம் என்பதை நினைவுகூரும் வகையில் இந்தப் பலிகள் யாவும், வடிவமைக்கப்பட்டன. அதிகாரங்கள் 6.7-இல் பல்வேறு வகையான பலிகளுக்குரிய விதிகள் விளக்கப்பட்டுள்ளன. எபிரெயர் 13:15,16: ரோமர் 12:1-இல் கிறிஸ்தவர்களுக்கான “பலிகளை” புதிய ஏற்பாடு கூறியுள்ளதைக் காணலாம்.
மேலும் அதிகாரங்கள் 8, 9-இல் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஆரோனின் ஆசாரியத்துவ முறைமையைக் காணலாம். அவர்களுங்கூட ஆசரிப்புக் கூடாரத்தில் பணிவிடை செய்ய, மக்களின் பாவத்திற்காக, கடவுள் முன்பாகச் செல்லும்போது, அவர்கள் தங்களைத் தாங்களே முதலாவது சுத்திகரித்துக் கொள்ள வேண்டும். கடவுள் தம்முடைய சமூகத்தில் பரிசுத்தமே இருக்க வேண்டும் என்பதை நிரூபித்துக்காட்ட, அதிகாரம் 10-இல் நாதாப், அபியூதின் மரணங்கள் கூறப்பட்டுள்ளன.”
அதிகாரங்கள் 11-27 – பரிசுத்தமாக்கபடல்/கடவுளோடு நடத்தல்
இந்த அதிகாரங்களில், சுத்தமான, அசுத்தமான பொருட்கள். மற்ற இனத்தவரை விட்டுப் பிரிந்து இஸ்ரவேலர் எவ்வாறு, பரிசுத்தமான வாழ்வு வாழ வேண்டும் போன்ற பல ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளன. பரிசுத்தமான வாழ்விற்கான அழைப்பு இது. அதிகாரங்கள் 11-15 வரை ஆரோக்கியம், சுகாதாரம் தொடர்பான விதிமுறைகள் உள்ளன. இவைகள் யாவும், இஸ்ரவேலரை, பாவமுள்ள, தவறான பழக்கமுள்ள அவர்களைச் சுற்றி வாழ்ந்த இனத்தவரிடமிருந்து பிரித்து வைப்பதற்கென கூறப்பட்டவை எனலாம். அவைகள் பாதுகாப்பிற்கும், பரிசுத்தத்திற்குமுரியன. இந்த விதிகள் அகத்தமான உணவு போன்றவற்றைக் காட்டும், இவைகள் யாவும் கிறிஸ்துவினால் ஒன்றுமில்லாமையாக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டன (எபேசியர் 2:14-18; கொலோசெயர் 2:13-15; எபிரேயர் 9:9,10).
அதிகாரம் 16 முக்கியமான பாவநிவர்த்தி நாள் பற்றி விளக்கம் கூறுகிறது. வருடம் ஒருமுறை பிரதான ஆசாரியன் மகா பரிசுத்த ஸ்தலததில் நுழைந்து தன் மக்களின் பாவங்களுக்கென நிவர்த்தி (மூடுதல்) செய்ய வேண்டும். நிவர்த்தி என்பது, நமக்குப் பதிலாள், பாவத்தை இடம் மாற்றுதல் (அடையாளங் கானல்) பலி போன்றவற்றைக் காட்டும். இது கிறிஸ்து சிலுவையில் நிறைவேற்றவுள்ள. பதிலாளாக பலியாகவுள்ளதை முன்னடையாளமாகக் காட்டியுள்ளது. இவை கிறிஸ்துவின் மரணத்திற்கு முன்பு, பாவத்தைப் பரிகரிக்கக் கொடுக்கப்பட்டத் தற்காலிகமான வழியாகும். பாவமன்னிப்புக்கென இரத்தம் சிந்தப்பட வேண்டும் என்பதை அதிகாரம் 17 கூறுகிறது. காளை, ஆட்டுக் கடாக்களின் இரத்தத்தினால் பாவமன்னிப்பைப் பெற இயலாது. கிறிஸ்துவின் இரத்தமே அதற்குத் தேவை என்று எபிரெயர் சுட்டிக் காட்டுகிறது. விலங்குகளின் இரத்தம் நிரந்தரமான பரிகாரம் அல்ல. அவை முன்னடையாளம். பழைய ஏற்பாட்டிலே பாவமன்னிப்புகென கிறிஸ்துவின் இரத்தத்தைக் கொண்டு பழைய உடன்படிக்கையின்படியே பாவங்களை மன்னித்தார் (எபிரெயர் 9:15),
அதிகாரங்கள் 18-27 வரை பிரித்தெடுக்கப்பட்ட வாழ்வுக்கென பல ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளன. இது நாம் வாழ்வின் பல்வேறு பகுதிகளிலுள்ள பாவத்திலிருந்து குறிப்பாக ஒழுக்கச் சீர்கேடு, ஓரினச் சேர்க்கை போன்றவற்றிலிருந்து கடவுளுக்கென பிரிந்து வாழ்வதைக் குறிக்கும். இஸ்ரவேலரின் பண்டிகைகளும், பரிசுத்த நாட்களும் குறித்த விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரவேலரின் ஏழு பண்டிகைகளின் நோக்கமாவது;
- ஒரு பழைய நிகழ்ச்சியின் நினைவாக
- தற்கால ஆசீர்வாதத்தைக் கொண்டாட
- எதிர்காலத்தே நிறைவேறப் போகிற ஒன்றை எதிர்பார்த்துச் செய்வது
லேவியராகமத்திலுள்ள நியமங்கள் யாவும் இன்றைய கிறிஸ்தவர்களுக்குப் பொருந்தாது.
ஆயினும் பரிசுத்த வாழ்விற்கு அடிப்படையான லேவியராகம கோட்பாடுகள் யாவும் புதிய ஏற்பாட்டுக்கு இசைந்தவையாகவுள்ளன (1 யோவான் 1:5-9),
மையப்பொருள்/நோக்கம்.
பாவமன்னிப்புக்கென இரத்தம் சிந்தப்பட (பலி) வேண்டும். கடவுள் தம் மக்களிடம் பரிசுத்தமான வாழ்வை எதிர்பார்க்கிறார் என்று மோசே, சீனாய் மலையில் கடவுளால் வெளிப்படுத்தப்பட்டவை இஸ்ரவேல் மக்களுக்காக எழுதி வைத்துள்ளார்.
பயன்பாட்டுக்குரிய செய்தி
பரிசுத்தமுள்ள கடவுள், தம்மை ஆராதித்து. தம்மிடம் ஐக்கியம் கொள்ளும் மக்கள், பண்பிலும், நடக்கையிலும் பரிசுத்தமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறார்.
முக்கிய அதிகாரங்கள்.
- 1-5 16 – ஐவகை பலிகள்
- 16 – பாவநிவாரண நாள்
- 17 – பாவமன்னிப்புக்கான இரத்தப்பலி
- 18,19 நடைமுறையில் பரிசுத்த வாழ்வு
- 23 இஸ்ரவேலரின் ஏழு பண்டிகைகள்
முக்கிய பகுதிகள்
- 1:1-5:17
- 10:1-3
- 11:44,45
- 12:1-8
- 16:1-28
- 17:10-12
- 18:1-5
- 18:6-29
- 19:1-2
- 19:18; 26-37
- 20:22-26
- 24:16-23
முக்கிய போதனைகள்
கடவுள் பரிசுத்தமானவர், அவரோடு தொடர்புள்ள யாவும், யாவரும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.
பரிசுத்தம் என்பது தூய்மை, பிரித்தெடுக்கப்பட்டவாழ்வு, முற்றும் மாறுபட்ட தன்மை போன்றவற்றின் தொகுப்பாகும்.
ஒரு மனிதன் கடவுளோடு சரியான உறவு அல்லது ஐக்கியம் கொண்டு, அவரை ஆராதிக்கும் முன்னர், பாவத்தை அறிக்கை செய்து மன்னிப்புப் பெற வேண்டும்.
பாவமன்னிப்பு என்பது ஏற்றுக்கொள்ளப்பட் பதிலியான பலியின் இரத்தத்தின்
மூலமும் கிட்டுகிறது. விசுவாசமும், கீழ்ப்படிதலும் இல்லாத பலி அரத்தமற்றது.
இஸ்ரவேலரின் பலிமுறையை இரட்சிப்பிற்காக கொடுக்கப்படாமல், கடவுளின் உடன்படிக்கை மக்கள், அவரோடு ஐக்கியம் கொள்ள வடிவமைக்கப்பட்ட முறையாகும்.
கிறிஸ்துவின் சிலுவை பலியை இந்த பலிகள் யாவும் முன்னதாக படம்பிடித்துக் காட்டுபவை எனலாம். கடவுளின் பரிசுத்தம், நம்மை பரிசுத்தமாக வாழ எதிர்பார்க்கிறது.
பரிசுத்தம் என்பது வாழ்வின் ஒவ்வொரு பகுதிக்கும் உரியது.
தெரிந்தெடுக்கப்பட்ட தொடர்புள்ள வேதப்பகுதிகள்
- சங்கீதம் 24:1-4
- மாற்கு 7:14-23
- அப்போஸ்தலர் 5:1-11
- அப்போஸ்தலர் 11:1-18
- யோவான் 1:29
- ரோமர் 14:17
- 1கொரிந்தியர் 6:14-7:1
- எபிரெயர் 7:1-10, 18
- 1பேதுரு 1:14-16
- 1 யோவான் 1:5-9
சிறப்புக் கூறுகள்
- பலியிடும் முறைகள்
- கடவுளின் பரிசுத்தம்/நடைமுறை வாழ்வில் பரிசுத்தம்
- கடவுள் பரிசுத்தராக இருப்பதினால் பரிசுத்தமாயிருங்கள்
- பாவ நிவாரண நாள்
- பதிலியாகும் பலி
- இரத்தம் சிந்துதலினால் பாவமன்னிப்பு
- இரத்தத்தில் உயிர் உள்ளது
- உன்னைப் போல் பிறனையும் நேசி
- ஓரினச் சேர்க்கைக்குரிய தண்டனை
- மரணதண்டனை உறுதிபடல்