எண்ணாகமம் கண்ணோட்டம்

எண்ணாகமம்

இஸ்ரவேலரின் விசுவாச வீழ்ச்சி

அமைப்பும் முக்கிய பிரிவுகளும்

  • 36 அதிகாரங்கள்
  • 3 முக்கிய பிரிவுகள்

அதிகாரங்கள் 1-10 – போதனை – யாத்திராகமம் மக்களை ஆயத்தப்படுத்தல்

  •  மக்கள் தொகையிடல் 
  • பாளயமிறங்குதல்/முன்னேறிச் செல்லுதல்
  • மேகம்/ அக்கினி மூலம் கடவுளின் நடத்துதல்

அதிகாரங்கள் 11-21 – சோதனை/சிட்சை – யாத்திராகம மக்களின் விசுவாச வீழ்ச்சி

  • குறைகூறல்/முறுமுறுத்தல்
  • 40 பேர் வேவுபார்க்கச் செல்லுதல்
  • காதேஸ்பர்னேயாவில் அவிசுவாசம்
  •  கடவுளின் தீர்ப்பு/பழைய மக்கள் மடிதல்
  • 40 வருட வனாந்திர அலைச்சல் 
  • மோசேயின் பாவம்
  • மிரியாம்/ஆரோன் மரணம்
  • வெண்கல சர்ப்பம்

அதிகாரங்கள் 22-36 –  போதனை – கானானுக்குரிய மக்களை ஆயத்தப்படுத்தல்

  • பிலேயாமின் கழுதை
  • புதிய மக்கள் தொகையிடல்
  • சட்டங்களும் போதனைகளும் 
  • புதிய தலைவர் யோசுவா
  • ஆரம்ப வெற்றிகளும் நாட்டைப் பங்கிடுதலும்

முக்கிய மக்கள்

  • மோசே
  • ஆரோன்
  • மிரியாம்
  • கோரா
  • யோசுவா
  • பிலேயாம்

உள்ளடக்கத்தின் சுருக்கம்

அதிகாரங்கள் 1-10 – யாத்திராகம மக்களை ஆயத்தப்படுத்தல்

சீனாய் மலையில் இஸ்ரவேலர் இருந்தபோது, ஆசரிப்புக் கூடாரத்தில் ஆராதிப்பதற்குரிய

போதனைகளைப் பெற்றனர் என்று லேவியராகமம் கூறக் காணலாம். எபிரெயா, எகிப்தை விட்டு வெளியேறி பதின்மூன்று மாதங்கள் கடந்து விட்டன. யாத்தராகமம் நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து எண்ணாகமம் தொடங்குகிறது. இதில் எபிரெயரின் 40 வருட அலைச்சல்களையும், சீனாய் மலையிலிருந்து வாக்குத்தத்த கானான் நாடு செல்லும் வரையுள்ள விவரங்களைக் காணலாம்.

முதல் பத்து அதிகாரங்களும் மக்களை ஆயத்தப்படுத்துவதைக் கூறுகிறது. மக்கள் தொகையிடப்பட்டனர். 6,03,550 பேர் இருபது வயதுக்கும் மேலான ஆண்மக்கள். இது 20 இலட்சம் மொத்த மக்களைத் தவிர அதிகமானோர். பாளையத்தை அமைக்கும் முறை, வம்சவாரியாக முன்னேறிச் செல்லும் முறைகளைக் கடவுள் எடுத்துரைத்தார். லேவியர் யாவரும் ஆசரிப்புக் கூடாரத்தை அமைத்தல், பிரித்தெடுத்து, சுமந்து செல்லுதல் போன்றவற்றை எவ்வாறு செய்வது என்று போதிக்கப் பட்டனர். வேறு பல போதனைகளும் கொடுக்கப்பட்டு முதலாம் ஆண்டு பஸ்காப் பண்டிகை கொண்டாடப்பட்டது. பகலில் மேகத்தினாலும் இரவில் அக்கினித் தூண் மூலமாகவும் கடவுளின் பிரசன்னம் முன் சென்று வழிநடத்தினார். ஆசரிப்புக் கூடாரம் முன்னே செல்ல பயணம் தொடங்கிற்று.

அதிகாரங்கள் 11-21 – யாத்திராகமம் மக்களின் விசுவாச வீழ்ச்சி

பயணத்தில் ஏற்பட்ட உபத்திரவங்களும். மன்னா தவிர உண்பதற்கு வேறேதும் கிடைக்காமற் போனதினாலும் மக்கள் குறைகூறி, முறுமுறுத்து, வாய் முனுமுனுத்தனர். கடவுள் அவர்களுக்குக் காடைகளைக் கொடுத்து, அவர்கைளத் திருத்த வாதையையும் அனுப்பி, கலகத்திற்காகவும், நன்றியற்ற ஆவிக்காகவும் சிட்சித்தார். ஆரோனும், மிரியாமுங்கூட மோசேயின் தலைமைக்கு எதிராகப் போரிட்டு, கடவுளால் சிட்சிக்கப்பட்டனர். வாக்குத்தத்த கானான் நாட்டை நெருங்குகையில் நாற்பது நாட்கள் வேவு பார்த்து, அந்த நாட்டைப் பற்றியும் அதின் குடிகளையும் குறித்த விவரங்களை அறிய விரும்பினர். பன்னிரண்டு வேவுகாரர் அனுப்பப்பட்டனர். இவர்களில் பத்து வேவுகாரர் நாடு வளப்பமுள்ளதென்ற நல்ல செய்தியைக் கூறி, அவர்களது பட்டனங்கள் கோட்டை மதில் சூழ்ந்தது. அங்கு இராட்ஆர் வாழ்கின்றனர் என்கிற துர்ச்செய்தியைக் கூறினர். அந்த நாட்டை மேற்கொள்ள முயற்சி செய்ய வேண்டாம் என்பதே அவர்களது பரிந்துரையாகும். மற்ற இரண்டு வேவுகாரரான யோகவாவும், காலேபும் அந்த நாடு பாலும் தேனும் ஓடுகிற நாடு என்பதையும், பலமுள்ள மக்கள் வாழ்கின்றனர் என்கிற உண்மையை ஒப்புக் கொண்டாலும், கடவுளின் வல்லமையைக் கொண்டு, நாட்டை மேற்கொள்ள முடியும் என்று உறுதி கூறினர். விசுவாசமும், விசுவாசமின்மையுமே, இந்த வேறுபாட்டிற்குக் காரணம் மக்கள் அந்த பத்து வேவுகாரர் கூறிய செய்தியை நம்பி, மோசேக்கும், கடவுளுக்கும் எதிராக கலகம் செய்தனர்.

கடவுள் அவர்களது அவிசுவாசத்திற்கு விசுவாசமின்மை) தண்டனையளித்துக் கூறியதாவது 

  • அவர்கள் அந்த வனாந்தரத்தில் 40 வருடம் அலைவார்கள்
  •  20 வயதுக்கு மேற்ப்பட்ட ஆண்மக்கள் அந்த அலைச்சலின்போது மாண்டுபோவர்.

இதன்படி கடவுளின் தண்டனையாக எவ்வித குறிக்கோளுமின்றி வனாந்தரத்தில் 40 வருடம் அலைந்தனர். அவர்களது யுத்தவூரர் கடவுளின் தீர்ப்பின்படி மாண்டனர் (சங்கீதம் 90 பார்க்க) ஆரோனின் ஆசாரியத்துவத்துக்கு எதிராக கோராகு போராடினான் கடவுள் தமது வல்லமையின்படி அதைத் தண்டித்தார்.

இறுதியில், தன் மனக் கருத்தின்படி, கீழ்ப்படியாது மோசே பாவம் செய்தார். மிரியாமும், ஆரோனும் மரித்தனர். இந்தத் தலைவர்களில் ஒருவரும் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் செல்லவில்லை. அலைச்சலின் கடைசி வருடத்திலே முரட்டாட்டும் செய்த மக்களை கொள்ளிவாய் பாம்புகளைக் கொண்டு தண்டித்தார், கடவுளின் ஆணைப்படி வெண்கல சர்ப்பம் ஒன்று செய்யப்பட்டு கோலிலே தூக்கி வைக்கப்பட்டது. அதை விசுவாசத்துடன் நோக்கிப் பார்த்த மக்கள் குணமடைந்தனர். கிறிஸ்து இந்த நிகழ்ச்சியைத் தம்முடைய வாழ்வுடன் இணைத்துக் கூறினார் என்பதை யோவான் 3:14,15-இல் காணலாம்.

அதிகாரங்கள் 22-36 – கானானுக்குரிய மக்களை ஆயத்தப்படுத்துதல்

மேலும் அவர்களது பாவத்தினால் கடவுள் சிட்சித்ததை எண்ணாகமத்தின் கடைசி பகுதியில், விளக்கமாகக் காணலாம். இஸ்ரவேலர் கீழ்ப்படியாமற் போனாலும், அவர் பாலாக் அரசனின் விருப்பத்துக்கு மாறாரசு, தீர்க்கதரிசி பிலேயாம் மூலம் ஆசீர்வாதத்தைக் கூறினார். யாத்திராகமத்து பழைய ஆண்மக்கள் யாவரும் மடிந்தனர். அவர்களது இடத்திலே வந்த புதிய மக்களுக்கென கடவுளின் கட்டளைகளும், வழிகளும் மீண்டும் போதிக்கப்பட்டது.

புதிய மக்கள் தொகையின்படி 6.01.730 பேர் ஆண்மக்கள் இருந்தனர். யோசுவா – புதிய தலைவராகத் தெரிந்து கொள்ளப்பட்டார். அந்த நாட்டிற்குள் நுழையும் முன்னர் கடவுள் மேலும் போதனைகளைக்கூறி, நாட்டைப் பங்கிடும் முறையையும் கூறினர்.

அந்த நாட்டைக் கானானியருக்குக் கொடுத்துள்ள போதிலும், அவர்கள் அந்த நாட்டைப் போரிட்டுச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டுமென்று. கடவுள் இஸ்ரவேலருக்கு நினைப்பூட்டினார். கானானுக்குள் நுழையவிருந்த புதிய சந்ததியாருக்குக் கடைசியான ஆலோசனைகளையும். கட்டளைகளையும், நியாயப் பிரமாணத்தையும் கடவுள் கொடுத்தார். என்பதை நாம் உபாகமத்தின் மூலம் அறியலாம்.

மையப்பொருள்/நோக்கம்

விசுவாசமின்மை பயங்கரமான விளைவுகளைக் கொண்டுவரும் என்பதைக் காட்ட கடவுள் இஸ்ரவேலரை வனாந்திர அலைச்சல் மூலம் சிட்சித்தார் என்று மோசே, எண்ணாகமத்தில் எழுதி வைத்துள்ளார்.

பயன்பாட்டுக்குரிய செய்தி

தம் மக்கள் விசுவாசத்தின்படி நடப்பதைக் கடவுள் எதிர்பார்க்கிறார். அவர்கள் அவிசுவாசத்தின்படி செயல்படும்போது, கடவுள் அருளும் நல்ல ஆசீர்வாதங்கள். இழந்து தெய்வீக சிட்சையை ஏற்க நேரிடும் என்பது உறுதி.

முக்கிய அதிகாரங்கள்

  • 1 யாத்திகாலம மக்கள் தொகையிடப்படுதல்
  • 9 முதலாம் பஸ்கா ஆசரிப்பு/கடவுளின் வழி நடத்தல் 
  • 11 மக்களின் குறைகள் (முறுமுறுப்பு) கடவுளின் தண்டனை
  • 14 காதேஸ் பர்னேயாவில் முரட்டாட்டமும், அவிசுவாசமும், கடவுளின் தண்டனை – வனாந்தர அலைச்சல் 
  • 16 கோராகின் கலகம்
  • 20 மோசேயின் பாவம்
  • 21 வெண்கல சர்ப்பம்
  • 22-23 பிலேயாமும். கழுதையும்

முக்கிய பகுதிகள்

  • 6:22-26
  • 9:15-23
  • 11:1-13
  • 11:10-16
  • 12:1-9
  • 13:25-33
  • 14:1-44
  • 20:1-13
  • 21:4-9
  • 32:23

முக்கிய போதனைகள்

  • கடவுள் தம்மக்களிடமிருந்து. கீழ்ப்படிதலையும், நன்றியுணர்வையும் எதிர்ப்பார்க்கிறார். 
  •  கடவுளின் ஈவுகளைக் குறித்து முறுமுறுப்பும், குறைகூறுவதும் அவருக்கு எதிராகக் கலகம் செய்வதற்கு ஒப்பாகும்.
  • கடவுள் அமர்த்தின தலைவர்கட்கு எதிராகப் போராடுவது கடவுளின் தண்டளையைக் கொண்டு வரும்.
  • ஒரு தனிப்பட்ட பாவமும் குறிப்பான விளைவுகளைக் கொண்டுவரும், விசுவாமின்மை (விசுவாசக்குறைவு) என்பது முரட்டாட்ட பாவம் எனலாம்.
  • விசுவாசமின்றி கடவுளை பிரியப்படுத்துவது இயலாத செயல்.
  • நாம் நம் விசுவாசத்தை செயலில் காட்டாவிடில் (கடவுளை நம்பாவிடில் அவரது சிறப்பான ஆசீர்வாதங்களை இழந்து விடுவோம்.
  • நாம் கீழ்ப்படிந்து நடக்கக் கடவுள் நமக்கு உதவுகிறார். 
  •  கடவுள் தாம் வாக்களித்ததின்படி உண்மையாயிருந்தார். அவர் ஆசீர்வதிப்பேன் என்று கூறிய வாக்கின்படி நாம் அதை அடைவதற்கென சிட்சிக்கிறார்.

தெரிந்துகொள்ளப்பட்ட தொடர்பான வேதபகுதிகள்

  • நெகேமியா 9:12-21
  • சங்கீதம் 106:1-33
  • யோவான் 3:14-18
  • 1கொரிந்தியர் 10:1-13
  • எபிரெயர் 3:7-4:11

சிறப்புக் கூறுகள்

  • மக்கள் தொகையிடுதல்
  • ஒவ்வொருவருக்கும் முன்னேறிச் செல்ல விதிகள்
  •  உடன்படிக்கைப் பெட்டி முன்பாகச் செல்லுதல்
  • முறுமுறுத்தல்/குறைகூறுதல் பாவம் வேவுகாரரின் அறிக்கை
  • யோசுவாவும் காலேபும்
  • 70 மூப்பர் தெரிந்தெடுக்கபடல்
  •  காதேஸ் பர்னேயாவில் கலகம் 
  • வனாந்திர அலைச்சல்கள்
  • கோராகின் கலகம்
  • வெண்கல சர்ப்பம்
  • மோசேயின் பாவம்
  •  பிலேயாமும் கழுதையும்
  • அவிசுவாசத்தின் தீய விளைவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *